Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கறுப்பு பணத்தை ஒழிக்க கட்சிகளுக்கும் கட்டுப்பாடு

Posted: 18 Dec 2016 08:35 AM PST

புதுடில்லி:'கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நட வடிக்கையின் ஒரு பகுதியாக, அரசியல் கட்சி களுக்கான நன்கொடை உள்ளிட்டவற்றில் பல் வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பரிந்துரைகள்:அரசியல் கட்சிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை அளிப்பவர்கள், அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டிய தில்லை என்ற விதிமுறை உள்ளது. இதை மாற்றி, 2,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் குறித்த விபரங்களை கட்டாயமாக்க வேண்டும். கட்சிகளுக்கு ...

ராணுவ தளபதி நியமன விவகாரத்தில் சர்ச்சை!:'சீனியாரிட்டி' மீறப்பட்டதாக போர்க்கொடி

Posted: 18 Dec 2016 08:49 AM PST

புதுடில்லி:மூத்த அதிகாரிகளை ஓரங்கட்டி, ராணுவ தளபதியாக, பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்., இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரத் தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டில், ராணுவ தளபதிகளின் பதவிக் காலம் முடிவடைவதற்கு, 60 நாட்களுக்கு முன்பே, அடுத்த தளபதியாக யார் நியமிக்கப் படுவார் என்ற அறிவிக்கப்படும் நடைமுறை உள்ளது.தற்போதைய ராணுவ தளபதி தல்பீர் சுஹாக், விமானப் படை தளபதி அரூப் ராஹா ஆகியோர் பதவிக்காலம், இம்மாத இறுதியில் முடிவடைகிறது.ஆனாலும், நேற்று முன்தினம் மாலை வரை, அடுத்த தளபதி யார் என்ற அறிவிப்பு வெளியாக ...

தேர்தலில் சீட் வேண்டுமா? 5 கி.மீ., நடக்கணும்: காங்., அதிரடி அறிவிப்பு

Posted: 18 Dec 2016 08:52 AM PST

டேராடூன்:அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்பவர்களுக்கு புது விதமான நிபந்தனை களை விதித்துள்ளது உத்தரகண்ட் மாநில, காங்கிரஸ்.

முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வினோதமான நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி விதித்துள்ளது.'சீட் கேட்பவர்கள், ஐந்து கி.மீ., துாரத்துக்கு நடக்க வேண்டும்; அந்தத் தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேச வேண்டும். அதைத் தவிர, தொகுதியில் ...

முதல்வர் பன்னீரை ஓரங்கட்ட அரசியல் சதுரங்கம் ஆரம்பம்!:மந்திரி உதயகுமார் மூலம் சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி:துதி பாடிகளின் கச்சேரி துவங்கியதாக தொண்டர்கள் கொதிப்பு

Posted: 18 Dec 2016 09:21 AM PST

'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர்.

'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, ...

மருத்துவமனையில் இருந்தபடி சுஷ்மா வேலையில் அசத்தல்

Posted: 18 Dec 2016 09:24 AM PST

புதுடில்லி:சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் நிலையிலும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கிருந்தபடியே, ஏழை குடும் பத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக, உடனடியாக உறுதியளித்து அசத்தியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், 64, சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்; அவருக்கு,சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சை நடந்து, தற்போது மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.பதவி ஏற்றது முதலே, அவர், வெளிநாடு வாழ் இந்தி யர்கள் சந்திக்கும் பிரச்னையில், ...

மீண்டும் இந்திய திரைப்படங்களை திரையிட பாக்., தியேட்டர்கள் முடிவு

Posted: 18 Dec 2016 09:28 AM PST

புதுடில்லி:இந்திய திரை படங்களை திரையிடுவ தில்லை என்ற தற்காலிக முடிவை விலக்கி கொள்ள, பாகிஸ்தான் தியேட்டர் உரிமையாளர் கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று முதல், பாகிஸ்தான் தியேட் டர்களில், இந்தியப் படங்கள் மீண்டும் திரையிடப்பட உள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும் தாக்கு தல் உட்பட பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. ...

'டிராக்கியோஸ்டமி'யை தொடர்ந்து கருணாநிதிக்கு நரம்பியல் சிகிச்சை

Posted: 18 Dec 2016 09:33 AM PST

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சையை தொடர்ந்து, தற்போது, நரம்பியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, திடீரென சுக வீனம் அடைந்ததால், டிச., 16ல், சென்னை ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு, சுவாச கோளாறு, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்புகளை சரி செய்ய, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சு திணறல் இருந்ததால், செயற்கையாக சுவாசிக்க, தொண்டையில் துளையிட்டு, குழாய் மூலம் சுவாசிக்கும் வகையில், ...

ரூ.749 கோடி சொத்து முடக்கம்; ஜெகனுக்கு பின்னடைவு

Posted: 18 Dec 2016 09:35 AM PST

புதுடில்லி:ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார்.

இங்கு, எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அவர் மனைவி மற்றும் சிலருக்கு எதிராக, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை,
அமலாக்கத்துறை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், 749 கோடி ரூபாய் சொத்துக் களை முடக்கியது அமலாக்கத் துறை. இது தொடர்பான வழக்கு, டில்லியில் உள்ள சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடை சட்ட சிறப்புக் கோர்ட்டில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பு:அமலாக்கத் துறை நடத்திய ...

புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை

Posted: 18 Dec 2016 09:41 AM PST

புதுடில்லி:தமிழகத்தில், 'வர்தா' புயலால் ஏற் பட்ட கடுமையான பாதிப்புகளை மதிப்பிட, மத் திய உள்துறை இணைச் செயலர் தலைமையி லான குழு, ஓரிரு நாட்களில் தமிழகம் வரவுள்ளது.

தமிழகத் தலைநகர், சென்னையை, 12ல், வர்தா புயல் தாக்கியதில், கணக்கிலடங்கா மரங்கள் பெயர்ந்து விழுந்தன. சென்னை மற்றும் அதை யொட்டிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அதிக நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், இன்று ...

மைதானத்தில் ஹெலிபேடா? சாதனை மாணவர் வாக்குவாதம்

Posted: 18 Dec 2016 10:37 AM PST

மும்பை : கிரிக்கெட் மைதானத்தில் ஹெலிபேட் அமைப்பது தொடர்பாக, மும்பையை சேர்ந்த சாதனை மாணவன், போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதனை :
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவின் மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ் தன்வாடே. கிரிக்கெட் வீரரான தன்வாடே, இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், ஆட்டமிழக்காமல், 1,009 ரன்கள் குவித்து, கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்கள் குவித்த சாதனையை ...

சீனாவின் நிபந்தனையை ஏற்கப் போவதில்லை; டிரம்ப் பாய்ச்சல்

Posted: 18 Dec 2016 11:53 AM PST

நியூயார்க் : தென் சீனா கடல் பகுதியில் அமெரிக்க கப்பல் உளவு பார்த்ததாக, புகார் கூறி வரும் சீனாவுக்கு, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீனா எதிர்ப்பு :
ஆசிய நாடுகளில் ஒன்றான சீனா, தென் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இதற்கு, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன; அந்நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. அந்த கடல் பகுதியில், அமெரிக்க கப்பல் படை கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து ...

பார்லி., குழுவில் விளக்கமளிக்கிறார் ஆர்.பி.ஐ., கவர்னர்

Posted: 18 Dec 2016 12:58 PM PST

புதுடில்லி : ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பார்லி., குழுவிடம், ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளிக்க உள்ளார்.
கறுப்பு பண ஒழிப்பு :
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவ.,8ம் தேதி அறிவித்தது. மேலும் புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இது குறுகிய கால சிரமம் எனவும், 50 நாட்கள் அவகாசம் வழங்கும்படியும் பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
விளக்கம் ...

தேர்தலுக்காக உ.பி., அரசின் கண்துடைப்பு நாடகம்: மாயாவதி

Posted: 18 Dec 2016 03:09 PM PST

லக்னோ : உ.பி., அரசு சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கடைப்பிடிப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்காக நாடகம் :
இதுகுறித்து லக்னோவில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்ததாவது: உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ், சிறுபான்மையினர் தினம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, நாடகம் நடத்துகிறார்; முதலில் அவர், பா.ஜ.,வுடனான, ரகசிய கூட்டணியை முறிக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல், தற்போது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™