Tamil News | Online Tamil News |
- மாநிலங்கள் இடையே நதிநீர் பிரச்னைக்கு விரைவில்...தீர்வு!:நிரந்தர நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு திட்டம்
- அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள்3.50 லட்சம்! அதிகரிப்பு:பணி சுமையை குறைக்க அவசர நடவடிக்கை தேவை
- கறுப்பு பணம் பதுக்கலில் தமிழகம் முதலிடம் : 8 மாதங்களில் ரூ.2,262 கோடி சிக்கியது
- ---'வனத்துக்குள் திருப்பூர் --2' திட்டம் நிறைவு! * 'டாலர் சிட்டி'யில் பசுமை புரட்சி
- வருகிறது 'டிஜிட்டல் கரன்சி' மத்திய அரசு திட்டம்
- தமிழக அரசியலில் துளிர் விடும் புது நாகரிகம்!
- தி.மு.க., தலைவர் மருத்துவமனையில் இருப்பதால் தொண்டர்கள்... பதற்றம்!: 20ம் தேதி பொதுக் குழு கூட்டம் ரத்தானது குறித்து கவலை
- நாடு முழுவதும் சி.பி.ஐ., வருமான வரித்துறை அதிகாரிகள்...வேட்டை!:முறைகேட்டில் ஈடுபட்ட ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சிக்கினர்
- நிழல் நிஜமாகிறது ஜெ., இடத்தில் சசிகலா; எல்லாமே இனி சிக்கலா
- துடிப்போடு உள்ளது இந்திய பொருளாதாரம் :அருண் ஜெட்லி
- கருப்பு பண ஒழிப்பு பயனை விரைவில் அடையப் போகிறோம்: பியூஸ் கோயல்
- மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மோசமானது அல்ல: சுப்பிரமணியசாமி
| Posted: 17 Dec 2016 05:26 AM PST மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்னை களுக்கு, விரைவில் தீர்வு காணும் வகையில், தேசிய அளவில், நிரந்தர நதிநீர் நடுவர் மன்றம் ஒன்றை, 2017ல் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், காவிரி உட்பட பல்வேறு நதிநீர் பிரச்னைகளுக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. மொழிவாரி மாநிலங்கள், 1956ல் அமைக்கப் பட்ட பின், மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிநீரை பங்கிடுவது தொடர்பாக, பிரச்னைகள் தீவிரமடைந்தன. தமிழக - கர்நாடக இடையி லான, காவிரி நதிநீர் பங்கீடு, இன்னமும் தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இதையடுத்து, மாநிலங்களுக்கு இடையே, நதிநீர் ... |
| அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள்3.50 லட்சம்! அதிகரிப்பு:பணி சுமையை குறைக்க அவசர நடவடிக்கை தேவை Posted: 17 Dec 2016 06:38 AM PST தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதன் மூலம், அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்கு ஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர்.தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் ... |
| கறுப்பு பணம் பதுக்கலில் தமிழகம் முதலிடம் : 8 மாதங்களில் ரூ.2,262 கோடி சிக்கியது Posted: 17 Dec 2016 08:42 AM PST கறுப்புப் பண களஞ்சியமாக, தமிழகம் விளங் குவதை உணர்த்தும் விதமாக, தமிழகத்தில், எட்டு மாதங்களில், 2,262 கோடி ரூபாய் அள விற்கு, பதுக்கல் சொத்துக்கள் கணக்கில் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த ஆண்டில், கறுப்புப் பண பதுக்கலில், நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ரூ.63 ஆயிரம் கோடி : கறுப்புப் பண பதுக்கலை வெளியே கொண்டு வருவதற்காக,மத்திய அரசு, பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரி விக்கும் திட்டம், செயலுக்கு வந்தது. அதன் மூலமாக, நாடு முழுவதும், 63 ஆயிரம் கோடி ரூபாய், கணக்கில் காட்டாத ... |
| ---'வனத்துக்குள் திருப்பூர் --2' திட்டம் நிறைவு! * 'டாலர் சிட்டி'யில் பசுமை புரட்சி Posted: 17 Dec 2016 09:25 AM PST திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் --2' திட்டம் நிறைவு விழா நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகளை நட்டு, இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து பராமரிக்கும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'வெற்றி' அமைப்பின் இம்முயற்சியில், 'தினமலர்' நாளிதழும் கரம்கோர்த்துள்ளது. கடந்தாண்டு, 1.35 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவை, தொழில் நிறுவனங்கள் வழங்கிய, 30 டிராக்டர்கள் மூலம், நீர் விட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்தாண்டு, இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு ... |
| வருகிறது 'டிஜிட்டல் கரன்சி' மத்திய அரசு திட்டம் Posted: 17 Dec 2016 09:28 AM PST புதுடில்லி:''செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 15 லட்சம் கோடி ரூபாய் முழுவதும், புதிய நோட்டுகளாக வெளியிடப்படாது; இதில் ஏற்படும் இடைவெளியை, 'டிஜிட்டல் கரன்சி' பூர்த்தி செய்யும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார். டில்லியில் நேற்று, தொழில்துறை சம்மேளனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி பேசியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான, நவ., 8ம் தேதி வரை, 1,716 கோடி, 500 ரூபாய் நோட்டுகளும், 685 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன. இவற்றின் ... |
| தமிழக அரசியலில் துளிர் விடும் புது நாகரிகம்! Posted: 17 Dec 2016 09:31 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும், சென்னை, காவேரி மருத்துவமனை யில், நேற்று நடந்த காட்சிகள், தமிழக அரசிய லில், புதிய நாகரிகம் துளிர் விட துவங்கியுள் ளதை உணர்த்தின. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலம் வரை, சட்டசபையில், எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங் கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடக்கும்; சபை முடிந்ததும், இரு தரப்பினரும், சுமுகமாக பேசிக் கொள்வது உண்டு.கடந்த, 1991ல், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த தும், இந்த காட்சிகள் மாறின; கட்சி, இரும்புக் கோட்டை போல் ஆனது. அ.தி.மு.க.,வினர், எதிர்க்கட்சியினருடன் பேசுவதில்லை; பரஸ்பரம் நலம் விசாரிப்பதும் நின்று ... |
| Posted: 17 Dec 2016 09:36 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி, மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருப்பதால், அக்கட்சி தொண்டர் கள் பதற்றம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில், ஸ்டாலினுக்கு செயல் தலை வர் பதவி வழங்குவதற்காக, கூட்டப்பட விருந்த கட்சி பொதுக் குழுக் கூட்டம் ரத்தா னது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மட்டத்தில், கவலையை ஏற்படுத்தி உள்ளது.கருணாநிதியின் உடல் நிலை காரணமாக, பொருளாளராக உள்ள ஸ்டாலினை, தலைவராக அறிவிக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்; அதை, கருணாநிதி தள்ளிப்போட்டு வந்தார்.அவரது ... |
| Posted: 17 Dec 2016 09:48 AM PST புதுடில்லி:மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கறுப்புப் பண பதுக்கலிலும், முறைகேட்டிலும் ஈடுபடுவோருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த வேட்டையில், இரண்டு கோடி ரூபாய் செல் லாத நோட்டுகளை மாற்றித் தந்த, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என, கடந்த மாதம், 8ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின், கறுப்புப் பண முதலை கள் ... |
| நிழல் நிஜமாகிறது ஜெ., இடத்தில் சசிகலா; எல்லாமே இனி சிக்கலா Posted: 17 Dec 2016 09:53 AM PST அது ஓர் ஆபத்தான மலைப்பாதை. இப்போது தான், அந்த பேருந்து, தன் பயணத்தைத் துவக்கி இருக்கிறது. போக வேண்டிய துாரம் நிறைய இருக்கிறது. அதை நம்பி, பேருந்து முழுக்க பயணிகள் இருக்கின்றனர். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுனர், பழுத்த அனுபவம் உடையவர். வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிகிறார் அவர். வாகனம் நிலை தடுமாறி, அபாயகரமான வளைவில் நிற்கிறது.நடத்துனர் முன்னே வருகிறார்; பயணிகள் மத்தியில் பேசுகிறார்...'யாரும் பயப்படாதீங்க; நான் அந்த டிரைவரோட 30 வருஷமா வேலை பார்க்கிறேன்; இந்த வண்டியை எப்படி ஓட்டணும்னு எனக்குத் தெரியும்; ... |
| துடிப்போடு உள்ளது இந்திய பொருளாதாரம் :அருண் ஜெட்லி Posted: 17 Dec 2016 11:19 AM PST புதுடில்லி: துடிப்போடு உள்ளது இந்திய பொருளாதாரம் என்றும் ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு துணிச்சலானது என பாராட்டியுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இது ஒரு நல்ல தொடக்கம் என்று தெரிவித்துள்ளார். ரொம்ப காலம் பிடிக்காது டில்லியில் நேற்று நடைபெற்ற இந்திய தொழில், வர்த்தக சபை ஆண்டு விழா கூட்டத்தில் அருண் ஜெட்லி பேசுகையில் , ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு நல்ல தொடக்கம், இது முன்கூட்டியே செய்திருக்கப்பட வேண்டியது. ரூபாய் தட்டுப்பாடு நீங்க ரொம்ப காலம் பிடிக்காது.இந்திய பொருளாதாரம் சவால்கள் நடுவே துடிப்போடு ... |
| கருப்பு பண ஒழிப்பு பயனை விரைவில் அடையப் போகிறோம்: பியூஸ் கோயல் Posted: 17 Dec 2016 12:43 PM PST பெங்களூரு: கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் அதன் பயனை விரைவில் அடையப்போகிறோம். கருப்பு பண ஒழிப்பின் ஆதாயம் ஏழை மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்படும் என மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். பெங்களூரு ஐ.ஐ.எம்.மில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மின்சார துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை முழுக்க, முழுக்க நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் எடுக்கப்பட்டது. நாம் கருப்பு பணத்தை ஒழித்த பயனை விரைவில் அடையப் போகிறோம். கருப்பு பண ... |
| மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மோசமானது அல்ல: சுப்பிரமணியசாமி Posted: 17 Dec 2016 03:01 PM PST புதுடில்லி: கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மோசமானது அல்ல.பொதுமக்கள் பணம் எடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் எடுக்கவேண்டும் என பா..ஜ.,தலைவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார், இதுபற்றி பா..ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:பண மதிப்பை நீக்குவதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மோசமானது அல்ல. சரியானதுதான். இது நிச்சயம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு கிடைத்த பலத்த அடி. என்றபோதிலும் இதனை நடைமுறை படுத்திய விதம், சில சக்திகள் தங்களுக்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 18,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |