Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,அமோகம்!:பேரூராட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி

Posted: 16 Dec 2016 08:41 AM PST

மும்பை:மஹாராஷ்டிராவில் நடந்த இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலிலும், ஆளும், பா.ஜ., அமோக வெற்றிபெற்றுள்ளது.

பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்ற அறிவிப்புக்கு பின், அடுத்தடுத்து கிடைத்து வரும், தேர்தல் வெற்றி பா.ஜ., வுக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந் திர பட்ன விஸ் தலைமையில், பா.ஜ., - சிவ சேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, உள் ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. பேரூராட்சிகளுக்கு, சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., பெரும் வெற்றி பெற்றது; பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளில், 893 இடங் களை அக்கட்சி ...

புயல் பாதித்த மாவட்டங்களில் நோய் தடுப்பு பணி குழுக்கள்

Posted: 16 Dec 2016 08:52 AM PST

சென்னை: புயல் பாதித்த மாவட்டங்களில், நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, மருத்து வக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அக்குழுக்களின் பணியை, முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று துவக்கி வைத்தார். நோய் தடுப்பிற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 161 நடமாடும் மருத்துவ குழு; 50 உணவு பாதுகாப்பு குழு; 50 குடிநீர் சுத்திகரிப்பு குழு; 51 கொசு ஒழிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை மாநகராட்சியில், 80; காஞ்சிபுரம், 39;
திருவள்ளூர் மாவட்டத்தில், 42 என, மொத்தம், 161 நடமாடும் மருத்துவக் குழுக்கள், நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு ...

பார்லி., கூட்டத்தொடர் முடிந்தது: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Posted: 16 Dec 2016 09:18 AM PST

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத் தால், தொடர்ந்து முடங்கிய, பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து, மறு தேதி குறிப்பிடாமல், இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

பார்லி., குளிர்கால கூட்டத் தொடர், நவ., 16ல் துவங்கியது. முதல் நாளில் இருந்தே, செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. ராஜ்ய சபாவில் மட்டும், முதல் நாளில், இந்த பிரச்னை குறித்த விவாதம், சிறிது நேரம் நடந்தது.
அதன்பின், பிரதமர் மோடி நேரில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக் கைகளை வைத்து, ...

'காங்கிரசுக்கு சுயநலமே முக்கியம்'

Posted: 16 Dec 2016 09:34 AM PST

புதுடில்லி:''அரசின் ஊழலுக்கு, மோசடிக்கு எதி ராக எதிர்க்கட்சிகள், இதற்கு முன், போராட்டம் நடத்தின; தற்போது, ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்க, அரசு எடுத்துள்ள நடவடிக்கையை, காங்., எதிர்ப்பது விந்தையாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம், டில்லியில், நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:பார்லி., செயல்பட விடா மல், எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளது வேதனை அளிக்கிறது. அரசின் மோசடி, ஊழல் நடவடிக் கைகளுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பார்லிமென் டிலும், வெளியிலும் போராட்டங்கள் நடத்துவது வழக்கம். தற்போது, கறுப்புப் ...

விவசாயிகள் பிரச்னையை கவனிங்க! மோடியை சந்தித்து ராகுல் கோரிக்கை

Posted: 16 Dec 2016 09:36 AM PST

புதுடில்லி:காங்., துணைத் தலைவர், ராகுல் தலைமையில், அக்கட்சி மூத்த தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என, வலியுறுத்தினர்.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., துணைத் தலைவர் ராகுல், கடும் விமர்சனங் களை முன்வைத்து வருகிறார். இந்த விவகாரத் தால், பார்லி., முடங்கியுள்ளது.இந்நிலையில், பிரதமர் மோடியை, ராகுல் உள் ளிட்ட தலைவர்கள், நேற்று திடீரென சந்தித் தனர். அப்போது, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என் றும், பயிர்க்கடன்களை ...

'டிபாசிட்' செய்தால் வெள்ளை ஆகாது : கறுப்பு பணத்துக்கு கடைசி வாய்ப்பு

Posted: 16 Dec 2016 09:39 AM PST

புதுடில்லி:கறுப்புப் பண பதுக்கல்காரர்களுக்கு கடைசி வாய்ப்பாக, இதுவரை கணக்கில் காட்டாத பணத்தை, அடுத்த ஆண்டு மார்ச் வரை, தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, நவ., 8ல் மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக் கும் வகையில், பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.வரி மற்றும் அபராதத்துடன், இதுவரை கணக் கில் காட்டாத பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் இந்த திட்டத்துக்காக, வருமான வரிச் சட்டத்தில் ...

அரசியல் கட்சிகளின் கணக்கில்'டிபாசிட்' செய்தால் வரி விலக்கு

Posted: 16 Dec 2016 09:45 AM PST

புதுடில்லி:அரசியல் கட்சிகளின் வங்கி கணக் கில், செல்லாத ரூபாய் நோட்டுகளை செலுத்தி னால், அதற்கு வரி பிடிக்கப்பட மாட்டாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

டில்லியில் நிருபர்களிடம் வருவாய்த்துறை செயலர், அஷ்முக் ஆதியா கூறியதாவது: அரசியல் கட்சிகளின் வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய் யப்படும், செல்லாத ரூபாய் நோட்டு களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தனிப் பட்ட ஒருவரின் கணக்கில், டிபாசிட் செய்யப்படும் பணத்துக்கு, வருமான வரி பிடிக்கப் படும்.சம்பந்தப்பட்ட,அரசியல் கட்சி,வரவு செலவு கணக்கை முறையாக பராமரித்து, அதை ஆடிட்டர் ஒருவர் ...

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டு: கட்சியினரை குஷிப்படுத்த விஜயகாந்த் 'ரூட்டு'

Posted: 16 Dec 2016 09:48 AM PST

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை, தே.மு.தி.க., பெற்றது. தொடர்ந்து வந்த உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க.,வை ஜெயலலிதா கழற்றி விட்டார். அதன்பிறகு, நடந்த தேர்தல்களில், தே.மு.தி.க., படுதோல் வியை சந்தித்து வருகிறது. இதனால், விரக்தி அடைந்து, கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.சமீபத்தில் நடந்த, மூன்று சட்டசபை தொகுதி தேர்தலிலும், தே.மு.தி.க.,வால், 2 சதவீத ஓட்டு ...

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி...சுகவீனம்! 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சையில் உள்ளதாக தகவல்

Posted: 16 Dec 2016 10:54 AM PST

திடீர் சுகவீனம் காரணமாக, தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நுரையீரல் தொற்று, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, 'டிராக்கியோஸ் டமி' எனப்படும், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுவ தாக, மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.தி.மு.க., தலைவர், கருணாநிதிக்கு, நவ., 25ல், ஒவ்வாமை நோய் காரணமாக, உடலில் கொப் பளங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்து வமனையில், டிச., 1ல், அவர் அனுமதிக்கப் பட்டார். ஒரு வார ...

ஓடி ஒளிவது எதிர்க்கட்சிகள்தான், மத்திய அரசு அல்ல: பிரதாப் ரூடி

Posted: 16 Dec 2016 12:22 PM PST

கோல்கட்டா: பார்லிமென்டில் விவாதத்திற்கு அஞ்சி ஓடி ஒளிவது எதிர்க்கட்சிகள்தான்; மத்திய அரசு அல்ல என்று மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் இதுகுறித்து ரூடி பேசியதாவது:கருப்புப் பணத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவாக உள்ளனர்.
இடையூறு
பார்லிமென்டின் இரு சபைகளை முடக்க வேண்டும் என்று தனது கட்சி எம்.பி.க்களிடம் மம்தா ...

தமிழ்நாட்டைப்போலவே ராஜஸ்தானிலும் அம்மா உணவு திட்டம்

Posted: 16 Dec 2016 02:16 PM PST

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, நேற்று முன் தினம்(15-12-2016)அம்மாநிலத்தில், அண்ணபூர்ணா ரசோய் திட்டத்தை துவக்கிவைத்தார். இதனமூலம், காலை சிற்றுண்டி ரூ.5க்கும் மதியம் மற்றும் இரவு உணவுகள் ரூ.8 க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகத்தை பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

12 நகரங்களில் துவக்கம்
முதல்கட்டமாக 12 நகரங்களில் தொடங்கப்படுகிறது. 6 மாதங்களில் மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஸ்ரீசந்த் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™