Tamil News | Online Tamil News |
- தமிழகத்திற்கு மீண்டும் கிருஷ்ணா நீர்? : பொதுப்பணி துறையினர் முயற்சி
- நாடு முழுவதும் அதிரடி சோதனை : பல கோடி கறுப்பு பணம் சிக்கியது
- நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடுங்கள் : மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- 'புதிய பணத்தை கொடுங்க; அப்புறம் எடுங்க'
- அமளியால் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்...வீண்!: அலுவல்கள் நடக்காததால் மசோதாக்கள் தேக்கம்
- 'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்துவோருக்கு... ஜாக்பாட்: முதல் பரிசாக 1 கோடி ரூபாய் என மத்திய அரசு அறிவிப்பு
- அரசு ஊழியர் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்வு
- ஜெ.,க்கு அளித்த சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை: ஸ்டாலின்
- 10 ஆயிரம் மின் கம்பங்கள் ஆந்திராவில் இருந்து வரவழைப்பு
- கவுரவ கொலையை தடுக்க விரைவில் சட்டம்: ஐகோர்ட்
- ஐ.டி., துறை அதிகாரிகளுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு
- நீதிபதிகளின் சம்பளம் உயருகிறது
| தமிழகத்திற்கு மீண்டும் கிருஷ்ணா நீர்? : பொதுப்பணி துறையினர் முயற்சி Posted: 15 Dec 2016 08:42 AM PST தமிழகத்திற்கு மீண்டும் கிருஷ்ணா நீரை பெற, பொதுப்பணித் துறையினர், ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு, ஒரு சொட்டு நீர் கூட வழங்கவில்லை. இந்தாண்டு, 2 டி.எம்.சி., நீர் வழங்க உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. ஆனாலும், இருமுறை நிறுத்தப் பட்டது. தமிழக .பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய பேச் சுக்குப் பின், மீண்டும் நீர் திறக்கப் பட்டது.இருப்பினும், 'வர்தா' புயலால், 12ம் தேதி முதல், தமிழகத்திற்கு ... |
| நாடு முழுவதும் அதிரடி சோதனை : பல கோடி கறுப்பு பணம் சிக்கியது Posted: 15 Dec 2016 08:50 AM PST புதுடில்லி: செல்லாத, பழைய, 500 ரூபாய் நோட்டை, குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்த வழங்கப்பட்ட வாய்ப்பு நேற்று முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் நடந்த அதிரடி சோதனையில், கறுப்பு பணம் பதுக்கும் கும்பலி டம் இருந்து, பல கோடி ரூபாய் சிக்கியது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிரான வேட்டை, நாடு முழுவதும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள, 'ஆக்சிஸ்' வங்கி ... |
| நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடுங்கள் : மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 15 Dec 2016 08:56 AM PST புதுடில்லி: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை களில் உள்ள, மதுக்கடைகளுக்கு தடை விதித் துள்ள சுப்ரீம் கோர்ட், 'தற்போது வழங்கியுள்ள லைசென்ஸ்களை, 2017 மார்ச்சுக்கு பின் புதுப் பிக்கக் கூடாது' என, அனைத்து மாநிலங்களுக் கும் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. 'சாலை விபத்துகளில், அதிகமானோர் உயிரி ழப்பதற்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்; அதனால், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ... |
| 'புதிய பணத்தை கொடுங்க; அப்புறம் எடுங்க' Posted: 15 Dec 2016 09:06 AM PST புதுடில்லி: 'மக்களிடம் தேங்கியுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்வது அதிகரித்தால் தான், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' என, நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வது அதிகரித்துள்ளது. இதற்கான காலக்கெடு இம் மாதத்துடன் முடிவடைய உள்ளது. பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்காக, வங்கி களில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும், ஏ.டி.எம்.,களில், ஒரு நாளில் ... |
| அமளியால் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்...வீண்!: அலுவல்கள் நடக்காததால் மசோதாக்கள் தேக்கம் Posted: 15 Dec 2016 09:40 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத் தால், பார்லிமென்ட் தொடர்ந்து முடக்கப்பட்ட தால், நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் வீணடிக் கப்பட்டு உள்ளது. லோக்சபாவில், 15 சதவீதம், ராஜ்யசபாவில், 19 சதவீதம் மட்டுமே அலுவல்கள் நடந்துள்ளன. இதனால், ஜி.எஸ்.டி., தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தேக்க மடைந்துள்ளன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், நவ., 16ல் துவங்கியது; கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது. செல்லாத ரூபாய் நோட்டு விவகா ரம் குறித்து விவாதம் நடத்துவது தொடர்பாக, ஆளும், பா.ஜ., தரப்புக்கும், காங்கிரஸ் ... |
| Posted: 15 Dec 2016 09:45 AM PST 'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் அதன் மூலம் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு, குலுக்கலில், ஒரு கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவிக்கின்ற னர். வங்கிகளிலும், ஏ.டிஎம்.,களிலும், மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர்.இதனால், 'ரொக்கமில்லாமல், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு முறையில், பரிவர்த் தனை செய்ய வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இதை ஊக்குவிக்கும் வகையில், ஏற்கனவே, பல்வேறு சலுகைகள் ... |
| அரசு ஊழியர் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்வு Posted: 15 Dec 2016 10:02 AM PST சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி, முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்றுள்ள, மத்திய அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், 2 சதவீதம்; திருத்திய ஊதியம் பெறாத, மத்திய அரசு அலுவலர்களுக்கு, 7 சதவீதம் என, அகவிலைப்படியை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர் கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, அகவிலைப் படி,ஜூலை, 1 முதல், 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். அதன்படி, ... |
| ஜெ.,க்கு அளித்த சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை: ஸ்டாலின் Posted: 15 Dec 2016 10:12 AM PST 'ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஸ்டாலின்: அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, அரசு, எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சுகாதா ரத்துறை அமைச்சரும், செயலரும், எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா வுக்கு அடுத்த நிலையில் இருந்த, ஓ.பன்னீர் செல்வமும் அறிக்கை வெளியிடவில்லை.அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மட்டுமே, அவ்வப்போது அறிக்கைகள், அதுவும் முரண் படாக வெளியிடப்பட்டன. எனவே, |
| 10 ஆயிரம் மின் கம்பங்கள் ஆந்திராவில் இருந்து வரவழைப்பு Posted: 15 Dec 2016 11:01 AM PST ஆந்திராவில் இருந்து, 10 ஆயிரம் மின் கம்பங்களை, மின் வாரியம் வரவழைத்து உள்ளது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங் களில், 'வர்தா' புயலால், 19 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் உள்ள மின் வாரிய கிடங்கு களில், 3,000 கம்பங்கள் உள்ளன. இதனால், மதுரை, கோவை, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 17 ஆயிரம் மின் கம்பங்கள் கொண்டு வரப்படுகின்றன. தென் மாவட்டங்களில் இருந்து, மின் கம்பங் களை கொண்டு வர தாமதம் ஆகிறது. அதனால், ஆந்திராவில் இருந்து, மின் வாரியம், 10 ஆயிரம் மின் கம்பங்களை வரவழைத்து உள்ளது.இது குறித்து, ... |
| கவுரவ கொலையை தடுக்க விரைவில் சட்டம்: ஐகோர்ட் Posted: 15 Dec 2016 12:05 PM PST
சென்னை : 'கவுரவ கொலையை தடுப்பதற்கான சட்டம், விரைவில் வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த வாராகி தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், கவுரவ கொலைகள் நடக்கின்றன; ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதை தடுக்க, சட்டம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றம், சில வழக்குகளில் வழிமுறைகள் வகுத்தது போல, கவுரவ கொலையை தடுக்கவும் வழிமுறைகள் வகுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கவுரவ கொலையை தடுப்பதற்கான சட்டம் இம்மனு, தலைமை ... |
| ஐ.டி., துறை அதிகாரிகளுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு Posted: 15 Dec 2016 01:40 PM PST
நியூயார்க்: மைரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா உட்பட, தகவல் தொழில்நுட்ப நிறுவன உயரதிகாரிகளை, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள, டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டி யிட்ட, டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார்; ஜனவரியில், அவர் பதவி ஏற்க உள்ளார். அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசி வருகிறார். அமெரிக்காவில், சிலிகான்வேலி பகுதியைச் சேர்ந்த, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன உயரதிகாரிகளை, நேற்று அவர் சந்தித்து பேசினார். ... |
| நீதிபதிகளின் சம்பளம் உயருகிறது Posted: 15 Dec 2016 02:53 PM PST
புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, அரசு பரிசீலித்து வருகிறது; இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 16,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |