Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'வர்ட்டா...!' சென்னையிடம் 'சொல்லி'ச் சென்றது 'வர்தா' புயல்... 3,000 மரங்களை சாய்த்து 20 செ.மீ., மழை கொடுத்தது ரூ.1,000 கோடிக்குச் சேதம் ஏற்படுத்திச் சீரழித்தது ஆந்திராவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கடந்தது

Posted: 12 Dec 2016 09:01 AM PST

ஒரு வாரமாக, வங்க கடலை மிரட்டிய, 'வர்தா' புயல், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. சென்னை மாநகரம் உள்பட தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு, 'வரட்டுமா...' எனக் கூறியது போல், மாலை 6:30 மணிக்கு கரையை கடைந்தது.வங்க கடலை மிரட்டிய, 'வர்தா' புயல், சென்னை அருகே, நேற்று பிற்பகலில் கரையை கடக்கும் என, நேற்று முன்தினம், வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த அவசர அறிவிப்பை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசுத் துறைகள் மேற்கொண்டன. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மிதமான மழை
இந்நிலையில், ...

கடைசி வாய்ப்பு ...! அபராத வரியை செலுத்தினால் ஆபத்து இல்லை: புதிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்ப்பு

Posted: 12 Dec 2016 09:06 AM PST

புதுடில்லி, :கணக்கில் காட்டாத பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள், 50 சதவீத வரி செலுத்தி, அதுகுறித்த விபரத்தை தெரிவிப்பதற்கு, மீண்டும் ஒரு சலுகையை, இந்த வார இறுதியில் அறிவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை, மத்திய அரசு, கடந்த மாதம் வெளியிட்டது. பொதுமக்கள், தங்களிடம் உள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய்களை, வங்கிகளில் மாற்றவும், டிபாசிட் செய்யவும், அவகாசம் அளிக்கப்பட்டது. ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வோர், தங்களிடம் உள்ள கணக்கில் காட்டாத ...

உ.பி.,யை வளைக்க பா.ஜ., வியூகம் பிற கட்சி வேட்பாளர்களுக்கு தூண்டில்

Posted: 12 Dec 2016 09:08 AM PST

லக்னோ, :கடந்த சட்டசபை தேர்தலைப் போல இல்லாமல், வரவிருக்கும் தேர்தலில், அதிக எண்ணிக்கையில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றிக்கனியை பறிக்க திட்டமிட்டுள்ள, பா.ஜ., அதற்காக, பிற கட்சி கூடாரங்கள் மீதும் கண் வைத்துள்ளது.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு உள்ளது. வரும், 2017, பிப்ரவரி - ஏப்ரலுக்குள், அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.மொத்தம், 403 சட்டசபை தொகுதிகளில், கடந்த, 2012 தேர்தலில், 398 வேட்பாளர்களை, பா.ஜ., நிறுத்தியது.ஆனால், அவர்களில், 229 பேர், ...

யார் முதலில் பேசுவது: புதிய சிக்கலில் பார்லி.,

Posted: 12 Dec 2016 09:17 AM PST

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நிலவி வந்த முட்டுக்கட்டைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, இருதரப்பும் முன்வந்த போதிலும், புதிய இழுபறி ஏற்பட்டுள்ளது; இதனால், சிக்கல் தீருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குளிர்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட், கடந்த மாதம் 16ல் துவங்கியது; ஆனால், செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளதால், ஒருநாள் கூட, உருப்படியான அலுவல்கள் நடத்த முடியாமல், கூட்டத் தொடர் முடங்கியுள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்தில், அரசு தரப்பு இறங்கி வரத் தயாரில்லை. எதிர்க்கட்சிகளும், தங்கள் பிடிவாதத்தை, தளர்த்த ...

ஜெ., நினைவிட கட்டுமான வடிவமைப்பு: பொதுப்பணி துறையினர் எதிர்பார்ப்பு

Posted: 12 Dec 2016 09:36 AM PST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான வடிவமைப்பு பணியை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நாள்தோறும், நுாற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த இடத்தில், ஜெயலலிதாவிற்கு, 15 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைப்பதற்கு, அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு அனுமதி
மெரினா கடற்கரையில் கட்டுமானப் பணிகளை ...

வெள்ளம் வடிந்தாலும் அலட்சியம் வேண்டாம்: பொதுமக்களுக்கு அரசு அறிவுரை

Posted: 12 Dec 2016 09:51 AM PST

புயல் மழையால், பல இடங்களில், மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. எனவே, வெள்ளம் வடிந்த பின், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விபரங்களை, அரசு வெளியிட்டுள்ளது.

அவற்றின் விபரம்:* பாதுகாப்பான நிலை திரும்பும் வரை, வெள்ளம் வடிந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வெள்ளம் வடிந்தாலும், ஆற்றங்கரை அருகே செல்ல வேண்டாம்* வெள்ளம் புகுந்த கட்டடத்திற்குள் செல்லும் முன், அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தை சுற்றி, வெள்ள நீர் இருந்தாலோ அல்லது கட்டடத்திற்குள் இருந்தாலோ, உள்ளே நுழையக் கூடாது* கட்டடத்தில் ...

முடங்கியது புயல் எச்சரிக்கை மைய இணையதளம்: தேசிய பேரிடர் குழு, தனியார் வலைபக்கம் உஷார்!

Posted: 12 Dec 2016 10:02 AM PST

'வர்தா' புயல் பாதிப்பை தெரிந்து கொள்ள, லட்சக்கணக்கானோர் போட்டி போட்டதால், வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மைய, இணையதளம் செயலிழந்தது. தனியார் இணையதளங்கள் போட்டி போட்டு தகவல் அளித்தன.

வர்தா புயல் நேற்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் இரவு முதலே, பொதுமக்கள் புயலின் தன்மை, கடக்கும் நேரம், துாரத்தை அறிய முற்பட்டனர். காலை, 11:00 மணிக்கு, மின் வினியோகம் நிறுத்தப்பட்டதால், மக்கள், 'டிவி' பார்க்க முடியவில்லை.
முடங்கியது
'

சேகர் ரெட்டி வீடுகளில் 'ரெய்டு' நிறைவு : புயலால் ஆய்வு தள்ளி வைப்பு

Posted: 12 Dec 2016 10:06 AM PST

மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை முடிந்தது. பறிமுதல் செய்தவற்றை மதிப்பிடும் பணி, புயலால், ஒத்தி வைக்கப்பட்டது.

அ.தி.மு.க., பிரமுகரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த, சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகளில், டிச. 7 முதல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அவரது சொந்த ஊரான, வேலுார் மாவட்டம் காட்பாடி, காந்தி நகரில் உள்ள வீட்டிலும், சோதனை நடந்தது.
செல்வாக்கு
அவர், தமிழக அரசின் பல துறைகளில், கான்ட்ராக்ட் அடிப்படையில், பணிகளை செய்து வந்தவர். அதனால், ...

'மம்தா குடுமியை பிடித்து தூக்கி எறிந்து விடுவோம்'

Posted: 12 Dec 2016 10:29 AM PST

கோல்கட்டா,: 'மத்தியில் எங்கள் ஆட்சி தான் நடக்கிறது; மம்தா டில்லிக்கு சென்றால், அவரது குடுமியை பிடித்து துாக்கி எறிவோம்' என, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு அறிவித்த, செல்லாத ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்புக்கு, மம்தா பானர்ஜி, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
மனநிலை பாதித்து விட்டது
கோல்கட்டாவில் உள்ள தலைமைச் செயலகத்திலேயே, இரவு, பகலாக அமர்ந்து, போராட்டம் நடத்தினார்; ...

ஐ.நா., பொதுச்செயலராக பதவியேற்றார் ஆன்டோனியோ கட்டரஸ்

Posted: 12 Dec 2016 12:37 PM PST

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச்செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் மாஜி பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
13 வேட்பாளர்கள் போட்டி
மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய ...

இந்தோனேசியா மிகவும் முக்கியமான நட்பு நாடு: பிரதமர் மோடி

Posted: 12 Dec 2016 02:03 PM PST

புதுடில்லி: இந்தோனேசியா இந்தியாவின் கிழக்கு கொள்கையில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ டில்லி வந்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்குபெற்று அவரை வரவேற்றார்.இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜோகோ விடோடோ இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து அறிக்கை வெளியிட்டனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™