Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்

Posted: 11 Dec 2016 07:30 AM PST

புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் முறையிலும், எலக்ட்ரானிக் முறை யிலும் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்ப தில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என, அரசு நம்புகிறது.இந்நிலையில், டிஜிட்டல் முறையில், பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கும்படி, என். பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணம் செலுத்து தல் கழகத்திடம், அரசுக்கு ...

23 சதவீத 'ஜன்தன்' கணக்குகள் 'காலி'

Posted: 11 Dec 2016 07:36 AM PST

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் புக்கு பின், 'ஜன்தன்' வங்கிக் கணக்குகளில், 'டிபாசிட்' செய்வது பலமடங்கு அதிகரித்துள்ள நிலையிலும், ஒரு ரூபாய் கூட இருப்பு இல்லாத ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து, 23 சதவீதமாக உள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:ஏழை, எளிய மக்களுக்கும் வங்கிக் கணக்கு துவக்கும் வகை யில், ஜன்தன் திட்டம் கொண்டு வரப்பட்டது; அதன்படி, நாடு முழுவதும், 25.8 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டன.
இருப்பு இல்லை:
இந்நிலையில், செல்லாத ரூபாய் நோட்டு ...

போதிய நிதியில்லாததால் பயணிகள் ரயில் கட்டணம்...உயரும்?: பாதுகாப்பு பணிகளுக்கு நிதி திரட்ட ரயில்வே திட்டம்

Posted: 11 Dec 2016 07:41 AM PST

புதுடில்லி:ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, நிதி அமைச்சகம் மறுத்துள்ள நிலையில், இந்தப் பணிகளுக்கு நிதி ஆதாரத்தை திரட்டும் வகையில், பயணிகள் ரயில் கட்ட ணத்தை உயர்த்த, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், பல்வேறு அரசு மானியங் களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது உள்ளிட்ட வற்றால், இவற்றில் இதுவரை நடந்து வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. உரியவர் களுக்கு மட்டுமே மானியம் அளிக்க வேண்டும் என்பதிலும், ...

தேர்தலில் மக்களால் ஒதுக்கப்பட்டோர் பார்லி.,யை முடக்குகின்றனர்: மோடி

Posted: 11 Dec 2016 07:44 AM PST

பஹ்ரையாச்:''தேர்தலில் மக்களால் ஒதுக்கப் பட்டோர், செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத் தில், பார்லிமென்டின் இரு சபைகளையும் முடக்கி வருகின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகி லேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்ட சபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, உ.பி., சென்றுள்ள, பிரதமர், நரேந்திர மோடி, பஹ்ரை யாச் மாவட்டத்தில் நடக்கும் கூட்டத்திற்கு, லக்னோவில் இருந்து, இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டார். மோசமான வானிலையால், லக்னோ வில் இருந்தபடியே, மொபைல் போன் ...

விஜயகாந்த் 'எஸ்கேப்':தொண்டர்கள் ஏமாற்றம்

Posted: 11 Dec 2016 09:30 AM PST

ஈரோடு:ஈரோட்டுக்கு நேற்று திடீரென வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கட்சியி னரை சந்திக்காமல் கிளம்பிச் சென்றதால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னை யில் இருந்து காரில், நேற்று முன் தினம் இரவு திடீரென ஈரோடு வந்தார். பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, ஓட்டல் ஒன்றில் தங்கினார்.நேற்று காலை, 8:00 மணிக்கு தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்பட்டது. இதனால், கட்சி நிர்வாகிகள், 7:45 மணியளவில் ஓட்டலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால்,அதிகாலையே விஜயகாந்த், காரில் கிளம்பி விட்டார்.ஈரோடு மாவட்டத்தில் மதியம், 12:00 மணி வரை ...

'டிஜிட்டல்' முறையில் கொள்முதல் எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு

Posted: 11 Dec 2016 09:32 AM PST

புதுடில்லி:டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், தேவை யான பொருட்கள், கருவிகளை, 'ஆன் - லைன்' மூலமாக வாங்குவது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான, 'எய்ம்ஸ்' முடிவு செய்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதை தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்வது பல மடங்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில், ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் அள வுக்கு மருத்துவக் கருவிகள், சாதனங்களை கொள் முதல் செய்யும் எய்ம்ஸ் மருத்துவமனை, டிஜிட்டல் முறையில் பொருட்களை ...

தி.மு.க., பொருளாளர் பதவி: 'மாஜி'க்கள் கடும் போட்டி

Posted: 11 Dec 2016 09:34 AM PST

தி.மு.க., பொதுக் குழுவில் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால், அவர் வகித்து வரும் பொருளாளர் பதவியை பிடிக்க, இரு, 'மாஜி' அமைச்சர்கள் இடையே போட்டி நிலவுகிறது.

தி.மு.க., தலைவர், கருணாநிதி, வயது முதிர் வால், கட்டாய ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. பொருளாளராக உள்ள ஸ்டாலினை, செயல் தலைவராக்க முயற்சிகள் நடக்கின்றன.
டிச., 20ல் நடக்கும், கட்சி பொதுக்குழுவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, கூறப் படுகிறது.இதனால், ஸ்டாலின் வசம் உள்ள, பொருளாளர் பதவியை கைப்பற்ற, 'மாஜி' அமைச்சர்கள் நேரு, ஏ.வே.வேலு ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது; இவர்கள், ...

பாக்., 10 துண்டுகளாகும்!ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Posted: 11 Dec 2016 09:34 AM PST

புதுடில்லி:''அண்டை நாடான பாக்., பயங்கர வாதத்தை கோழைத்தனமாக ஆதரித்து, இந்தி யாவை சீர்குலைக்க சதி செய்கிறது; பயங்கர வாதத்தை ஆதரித்தால், பாக்., 10 துண்டுகளாக சிதறும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ள, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், கதுவா மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:காஷ்மீர் மாநிலம் யூரியில், நம் வீரர்களுக்கு எதி ராக,பாக்.,கிலிருந்து வந்த பயங்கரவாதிகள், கோழைத்தனமாக தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி தரும் வகையில், நம் வீரர்கள் ...

வருகிறது 'வர்தா!' :80 கி.மீ., வேகத்தில் இன்று மதியம் சென்னையை கடக்கிறது:காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை:மற்ற பகுதிகளுக்கு மழை இப்போது இல்லை என அறிவிப்பு

Posted: 11 Dec 2016 09:52 AM PST

வங்க கடலை மிரட்டும், 'வர்தா' புயல், இன்று சூறாவளியுடன், சென்னை வழியே கரையை கடக்கிறது.

துறைமுகங்கள், அனல் மின் நிலையங்களுக் கும் கடும் ஆபத்து உள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலுார், வேலுார் மாவட் டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் மழை இப்போது இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.வங்க கடலில், கடந்த, 7ல், உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப் பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானால் வைக்கப்பட்ட, 'ரோஜா மலர்' என்ற பொருளில், 'வர்தா' என, பெயரிடப்பட்டு உள்ளது. நான்கு ...

500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு நடவடிக்கையில் புத்தியை இழந்து விட்டார் மம்தா: பா.ஜ.,

Posted: 11 Dec 2016 02:08 PM PST

கோல்கட்டா:500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு மம்தா தனது புத்தியை இழந்து விட்டார் என்று மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் கூறியுள்ளார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்..

இது தொடர்பாக டில்லி மற்றும் பீகார் சென்று ஆதரவு திரட்டினார். இதுகுறித்து அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் ...

ஜி.எஸ்.டி அமலுக்கு வருவது எப்போது? அருண் ஜெட்லி

Posted: 11 Dec 2016 03:26 PM PST

புதுடில்லி:புதுடில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில் ஜி.எஸ்.டி. எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில்
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை மேற்கொள்ளும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரும் நோக்கில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஜி.எஸ்.டி. வரி விகிதம், இழப்பீடு கொள்கை உள்ளிட்ட அம்சங்களை இறுதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™