Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


வைரம் போன்றவர் ஜெயலலிதா: ரஜினி புகழாரம்

Posted:

சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ரஜினி பேசியதாவது:
ஆணாதிக்கம்மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். பொதுவாழ்க்கையில் அவர் வைரம் போன்றவர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ...

தமிழ் ஹீரோவை இயக்க தயாராகும் தயன் சீனிவாசன்..!

Posted:

முதன்முதலாக மலையாளத்தில் இயக்குனராகும் ஒருவர் அதில் தமிழ் நடிகர் ஒருவரைத்தான் ஹீரோவாக நடிக்கவைக்க இருக்கிறார் என்பது உண்மையிலேயே ஆச்சர்யம் தான்.. அவர் வேறு யாருமல்ல, தற்போது இளம் நடிகராக நடித்துக்கொண்டு இருக்கும் தயன் சீனிவாசன் தான். பிரபல மலையாள நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்ட சீனிவாசனின் இளைய மகன் தான் இவர்.. ...

பைக் ரைடர் ரீட்டா;அமலாபாலின் புது அவதாரம்..!

Posted:

விவாகரத்து முடிவை எடுத்தபின் தான் அமலாபால் நடிப்பில் விஸ்வரூபம் எடுக்கிறார் என்றே தோன்றுகிறது.. அதற்கேற்ற மாதிரி தமிழில் சில படங்களில் வரிசையாக ஒப்ந்தமாகியுல அமலாபால், மலையாளத்திலும் நடிகர் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் 'அச்சாயன்ஸ்' என்கிற பத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.. 'இந்த வருட ஆரம்பத்தில் ...

ஆர்வத்தை தூண்டிய ஜெயசூர்யாவின் சந்தனமும் திருநீறும்..!

Posted:

பொதுவாக ஒரு படத்தின் ட்ரெய்லர் என்பது அந்தப்படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கவேண்டும்.. அனால் இயக்குனர் சித்திக்கின் படங்களை பொறுத்தவரை ட்ரெய்லர்களே தேவியில்லை, திஎட்டருக்க் சென்றால் இரண்டு மணி நேர சிரிப்பும், சுவாரஸ்யமான அனுபவமும் நிச்சயம் என்பது எழுதிவைக்கப்பட்ட ஒன்று.. ஆனாலும் தற்போது அவர் ஜெயசூர்யாவை ...

மோகன்லாலின் கௌரவ கர்னல் பதவிக்கு சிக்கல்..?

Posted:

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ராணுவத்தில் இருந்ததில்லை. ஆனால் ராணுவத்திற்கு பெருமைசேர்க்கும் விதமாக நிறைய ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் மோகன்லாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அவருக்கு கௌரவ ராணுவ கர்னல் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியது. இதனால் மோகன்லாலும் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு ...

'புலி முருகன்' கதாசிரியருக்கு இயக்குனர் சங்கம் பாராட்டு விழா..!

Posted:

மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாசிரியாக மாறிவிட்டார் உதயகிருஷ்ணா.. 'புலி முருகன்' என்கிற ஒரே படம் இவரது வேல்யூவை ஓஹோவென உயரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டது. தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான். ...

அமீர்கானுக்காக டப்பிங் பேச ரஜினி மறுப்பு

Posted:

பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் அமீர்கான் தனியிடத்தை பிடித்தவர். தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடித்து வெளிவர இருக்கும் ‛டங்கல்' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அமீர்கான் ‛டங்கல்' படத்தின் ...

‛பெபிகர்' படத்தை புகழும் கரண்ஜோகர்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். ரன்வீர் நடிப்பில் தற்போது வெளியாகி வசூலை குவித்து வரும் படம் ‛பெபிகர்'. இப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இப்படத்தை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு ...

ஜெயலலிதா மறைவு: நடிகர் நடிகைள் நினைவஞ்சலி

Posted:

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலக முன்னணி நடிகர், நடிகைள் திரண்டு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். என்றாலும் பலர் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததாலும், வெளிநாட்டில் இருந்ததாலும் கலந்து கொள்ள முடியவில்லை. இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ...

சாவித்ரியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை

Posted:

தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகையர் திலகம் சாவித்ரி. முதன் முதலில் விலை உயர்ந்த கார் வாங்கியவர், பங்களா கட்டியவர், அதிக சம்பளம் வாங்கியவர். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தவர் அவர்தான். முதன் முறையாக சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, போதை பழக்கத்துக்கு அடிமையாக கொடூரமாக மரணம் அடைந்தவரும் அவர்தான். அவரது ...

சினிமா படப்பிடிப்புக்கு உதவும் மாநிலங்களுக்கு ஒரு கோடி பரிசு: மத்திய அமைச்சர் அறிவிப்பு

Posted:

மாநில தகவல் தொடர்பு அமைச்சர்களின் 28வது மாநாடு புதுடெல்லியில் நடந்தது. இதில் நேற்று பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
நமது நாட்டில் சினிமா படப்பிடிப்புக்கு சிறந்த முறையில் உதவும் மாநிலங்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதும், சான்றிதழும் வழங்கி வருகிறோம். படப்பிடிப்புகளை ...

வனமகன் ஆனார் ஜெயம்ரவி

Posted:

தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு போகன் படத்தில் நடித்து முடித்து விட்ட ஜெயம்ரவி தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை சாயாஷா சைகல் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். திங் பிக் ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் ...

வெளிவருகிறது ஸ்கின் டிரேட்

Posted:

புரூஸ் லீ, ஜெட் லீ, ஷாக்கிசான் வரிசையில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சீன நடிகர் டோனி ஜா. அவர் நடித்த ஓங் படத்தின் 3 பாகங்களும் தமிழ்நாட்டில் தமிழில் வெளியாகி வசூலை குவித்திருக்கிறது. டோனி ஜா இப்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். அவர் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் ஸ்கின் டிரேட்.

அவருடன் ஹாலிவுட் நடிகர் டோல்ப் ...

பாரதியாருக்கு டுவிட்டரில் கமல் புகழஞ்சலி

Posted:

மகாகவி பாரதியாரின் 124 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், மாடிப்படியில் தவறி விழுந்த நடிகர் கமல், சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்து வந்தார். சுமார் 2 மாத ஓய்விற்கு பிறகு, தற்போது மீண்டும், ...

விமானத்தில் பாலியல் தொல்லை: தினா தத்தா பரபரப்பு புகார்

Posted:

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும், குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து வருகிறவர் தினா தத்தா. சமீபத்தில் வித்யா பாலன் நடித்த பிரனீதா, ஐஸ்வர்யராய் நடித்த ஜோக்கர் பாலி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தினா நேற்று முன்தினம் மும்பையில் இருந்து இருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் ...

ஜெயலலிதா நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

Posted:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 7-ஆவது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ...

புதுயுகம் வினா விடை வேட்டையில் 300 பள்ளிகள் பங்கேற்பு

Posted:

புதுயுகம் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி வினா விடை வேட்டை. இதன் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரகமாக நடந்து முடிந்தது. கடைசியாக நடிகை கஸ்தூரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தற்போது வினா விடை வேட்டை ஜுனியர்ஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்கி உள்ளது. இதனை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்குகிறார். தமிழ்நாடு ...

35 ரூபாயில் தயாரிக்கப்பட்ட முதல் படம்

Posted:

இது தமிழ் சினிமாவின் நூற்றாண்டு. தமிழ்நாட்டில் தயாரான முதல் சலனப் படம் கீசக வதம். தஞ்சாவூரைச் சேர்ந்த மூப்பனார் என்பவர் வெளிநாடு சென்று விட்டு வரும்போது ஒரு சினிமா கேமராவை வாங்கி வந்தார். அதனை அவருக்கு இயக்கத் தெரியவில்லை. அதனால் சென்னையில் கார் கம்பெனி நடத்தி வந்த ஆர்.நடராஜ முதலியாரிடம் கேமராவை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக ...

ரஜினி படத்தில் சிரஞ்சீவி?

Posted:

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் இந்தி நடிகர் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. 2017ம் ஆண்டு ...

டபுள் ஹீரோ கதைகளை சிவகார்த்திகேயன் தவிர்ப்பதற்கு இதுதான் காரணமாம்!

Posted:

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம், ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™