Tamil News | Online Tamil News |
- மின் கட்டணம் செலுத்த அவகாசம்
- ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?
- பழைய 'கரன்சி' மீது வரி உண்டா? : அருண் ஜெட்லி புது குண்டு
- தமிழகத்தில் காளைகளை பயன்படுத்தும் ஜல்லிக்கட்டு... விளையாட்டல்ல!: 'கம்ப்யூட்டரில் விளையாடுங்க' சுப்ரீம் கோர்ட் விமர்சனம்
- பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல்... மாற்றலாம்! :வங்கி, தபால் அலுவலகங்களில் புதிய நோட்டு பெறலாம் :ஏராளமானோர் குவிவர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் :சனி, ஞாயிறும் வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு
- மோடியின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
- இன்று ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
- பொருளாதார குற்றங்கள் தடுக்கப்படும்: ராம்தேவ்
- வல்லரசை வளைத்த சகலகலா வல்லவன்
- தேர்தல் தோல்வி வேதனை அளிக்கிறது: ஹிலாரி
- மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்!
- இந்திய, அமெரிக்க உறவு என்ன ஆகும்?
- எண்ணுார் அனல் மின் நிலையம் விரைவில் மூடல்: ஊழியர்கள் மாற்றம்
- பணபட்டுவாடாவுக்கு சிக்கல் இல்லை; அரசியல்வாதிகள் 'தெனாவெட்டு'-
| Posted: 09 Nov 2016 08:16 AM PST சென்னை: மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாததால், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த, மின் வாரியம், கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: மத்திய அரசின் அறிவிப்பில், மின் வாரியம் வராததால், 500, 1,000 ரூபாய் நோட்டுகள், வாங்கப்பட மாட்டாது. தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள், நவ., 9 முதல், 30 வரை என இருப்பின், அந்த இறுதி நாள், ஒரு வாரத்துக்கு சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்படுகிறது. அதாவது, அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த கடைசி நாள், ... |
| ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா? Posted: 09 Nov 2016 08:47 AM PST பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை, வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி ... |
| பழைய 'கரன்சி' மீது வரி உண்டா? : அருண் ஜெட்லி புது குண்டு Posted: 09 Nov 2016 09:18 AM PST புதுடில்லி: ''மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி விதிப்பில் இருந்து தப்பாது; அந்த பணத்தின் வருவாய் ஆதாரம் தொடர்பாக, சட்டம் தன் கடமையை செய்யும்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, நேற்று முன்தினம் அறிவித்தார்; அவற்றை, வங்கியில் டிசம்பர், 30க்குள் 'டிபாசிட்' செய்யலாம் என அறிவிக்கப் பட்டது. இந்த பணத்துக்கு வரிவிதிக்கப்படுமா என்பது குறித்து, பொதுமக்கள் மத்தியில் ... |
| Posted: 09 Nov 2016 09:38 AM PST 'தமிழகத்தில் காளைகளை பயன்படுத்தும் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டல்ல; விளை யாட வேண்டுமானால், கம்ப்யூட்டரை பயன் படுத்துங்கள்' என, சுப்ரீம் கோர்ட் விமர்சனம் செய்துள்ளது. தமிழர்களின், பாரம்பரியமிக்க வீர விளை யாட்டான, ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா வின் போது நடத்தப்படுவது வழக்கம். காளை களை காட்சி விலங்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ், ஜல்லிக்கட்டுக்கு, சுப்ரீம் கோர்ட், 2014 மே மாதம் தடை விதித்தது. இதனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கள் நடைபெறவில்லை.'ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்க ... |
| Posted: 09 Nov 2016 09:42 AM PST மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம். சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் நலன் கருதி, சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இதனால், நாடு ... |
| மோடியின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு Posted: 09 Nov 2016 02:41 PM PST புதுடில்லி : 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால், பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.500 கோடி இழப்பு: நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இந்த அதிரடி அறிவிப்பால் பயங்கரவாதிகள் மற்றும் போலி இந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தி உள்ளது. நிதி ... |
| இன்று ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி Posted: 09 Nov 2016 03:21 PM PST புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று(நவ.,10) ஜப்பான் செல்கிறார். அவரது இப்பயணத்தில் இருநாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு முறை பயணம்: பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று ஜப்பான் செல்கிறார். அங்கு நடைபெறும் இருநாடுகள் இடையிலான வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவருடன் அதிகாரிகள் குழுவும் செல்கிறது. ஜப்பான் மன்னர் அகிடிடோவை மோடி சந்திக்கிறார். ... |
| பொருளாதார குற்றங்கள் தடுக்கப்படும்: ராம்தேவ் Posted: 09 Nov 2016 04:07 PM PST ஜெய்ப்பூர் : பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெறுவதன் மூலம் பொருளாதார குற்றங்கள் தடுக்கப்படும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். சிறந்த முடிவு : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விவசாய தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்ட யோகா குரு ராம்தேவ் பேசியதாவது: ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அறிவித்தார். மிகச்சிறந்த முடிவான இது, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் பொருளாதார குற்றங்கள் தடுக்கப்படும். அத்துடன் நக்சல் பயங்கரவாதத்துக்கான ... |
| Posted: 09 Nov 2016 09:57 AM PST அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் களத்தில் குதித்தார்.இந்திய நேரப்படி, நேற்று காலை, அமெரிக்க தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தது; உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் துவக்கத்தில் சில இடங்களில் ஹிலாரி முன்னிலையில் இருந்தார்; ஆனால், அடுத்தடுத்து, பல இடங்களில், ... |
| தேர்தல் தோல்வி வேதனை அளிக்கிறது: ஹிலாரி Posted: 09 Nov 2016 10:14 AM PST
வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் கிடைத்த தோல்வி வேதனை அளிக்கிறது என அதிபர் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். டிரம்ப் வெற்றி : அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழத்தி அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றினார். வேதனை தந்த தோல்வி ... |
| மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்! Posted: 09 Nov 2016 10:15 AM PST செல்லாத நோட்டு செய்தியை கேட்ட உடனேயே, என் மனதில்;1. பஞ்சாப், உ.பி., தேர்தலுக்கு பா.ஜ.,வை தயார் பண்ணிட்டாங்க2. சொந்த வீடு கனவு நனவாவதற்கு இன்னும் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்பவை தான், உடனடியாக தோன்றிய விஷயங்கள். தேர்தல் அரசியல் தீவிரவாதத்தையும், கறுப்பு பணத்தையும் மையப்படுத்தி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக, பிரதமர் அறிவித்திருந்தாலும்; அதில் உ.பி., பஞ்சாப் தேர்தல்களும் உடனடி காரணிகள் என்பதில் ஐயம் இல்லை. பஞ்சாப் தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. உ.பி., தேர்தல் மார்ச் மாதம் நடக்கலாம் என, ... |
| இந்திய, அமெரிக்க உறவு என்ன ஆகும்? Posted: 09 Nov 2016 11:11 AM PST 'அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதால், இந்திய உறவில் மாற்றம் ஏற்படாது' என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப்பின் பிரசாரத்தின் போது, இந்திய, சீன நாட்டினருக்கான வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு,அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, உறுதியளித்தார். எனவே,தற்போது இந்தியர்களின் நிலை;இந்திய நட்புறவு என்ன ஆகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இதுகுறித்து, சென்னை பல்கலையின், அரசியல் அறிவியல், பொது நிர்வாக துறை ... |
| எண்ணுார் அனல் மின் நிலையம் விரைவில் மூடல்: ஊழியர்கள் மாற்றம் Posted: 09 Nov 2016 11:25 AM PST எண்ணுார் மின் நிலையத்தில், விரைவில் நிரந்தரமாக உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதால், அங்குள்ள ஊழியர்களை, வேறு இடங்களுக்கு மாற்ற, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, அனல் மின் நிலையம் உள்ளது. இது துவங்கி,46 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், மின் உற்பத்தியின்போது, அடிக்கடிபழுது ஏற்படுகிறது. இதையடுத்து, அந்த மின் நிலையத்தில், 2017 மார்ச் மாதத்துடன், நிரந்தரமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. அதற்கு பதில், எண்ணுார் மாற்று என்ற பெயரில், 660மெகாவாட் திறன் உடைய, புதிய அனல் மின் ... |
| பணபட்டுவாடாவுக்கு சிக்கல் இல்லை; அரசியல்வாதிகள் 'தெனாவெட்டு'- Posted: 09 Nov 2016 11:34 AM PST 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்துள்ளதால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என, அரசியல்வாதிகள் தெரிவித்தனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், வரும், 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, அ.தி.மு.க., -- தி.மு.க., உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 'ஒரு வார்டுக்கு இத்தனை பொறுப்பாளர்கள்' என, திட்டமிட்டு, அக்கட்சி நிர்வாகிகள் பணியாற்றிவருகின்றனர்.கறுப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 10,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |