Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கேள்விக்குறியாகும் 'ஸ்மார்ட்' கார்டு : மந்திரிக்காக அதிகாரிகள் காத்திருப்பு

Posted: 21 Nov 2016 08:33 AM PST

ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நடத்தாததால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணியில், இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், புழக்கத்தில் உள்ள காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்படுகிறது.
ஆய்வு கூட்டம்
ரேஷன் வினியோகம் தொடர்பாக, மாதம் தோறும், உணவு துறை அமைச்சர் காமராஜ்
தலைமையில், ஆய்வு கூட்டம் நடக்கும். அதில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் உட்பட, பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அடுத்த மாதத்திற்குள், ...

பழைய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டம்?

Posted: 21 Nov 2016 08:52 AM PST

பொதுமக்களின் தேவைக்கேற்ப, போதிய ரூபாய் நோட்டு களை, 'சப்ளை' செய்ய முடியாததால், அழுக்காகி, ஒதுக்கி வைக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, மீண்டும் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளது.

மீண்டும் புழக்கத்தில்
செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக,
புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள், அரசின் அச்சகத்தில் ஓய்வின்றி அச்சிடப்பட்டு வருகின்றன.இருப்பினும், நாடு முழுவதும், மக்களின் தேவைக்கேற்ப, புதிய நோட்டுகளை அச்சிட முடியாமல் திணறும் சூழல் காணப்படுகிறது.
இதையடுத்து, அழுக்கானதாக ஒதுக்கி ...

ஓரணி! செல்லாத நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக 10 கட்சிகள்... எதிரெதிர் காங்., - தி.மு.க., - கம்யூ.,க்கள் திடீர் கைகோர்ப்பு பார்லி.,யிலும், வெளியிலும் இணைந்து போராட போகின்றனராம்

Posted: 21 Nov 2016 08:52 AM PST

புதுடில்லி, :செல்லாத நோட்டு விவகாரத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., கம்யூனிஸ்ட் என, 10 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

பார்லி மென்ட் உள்ளேயும், வெளியிலும் இணைந்து போராட, இந்தக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இம்மாதம், 16ல் துவங்கிய பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரிலும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு ...

கடன் தவணையை செலுத்த இரண்டு மாத அவகாசம் சலுகை ..! பண புழக்கம் குறைந்ததால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Posted: 21 Nov 2016 08:54 AM PST

புதுடில்லி:பணப் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து வகை கடன்களையும் செலுத்துவதற்கு, கூடுதலாக, 60 நாட்கள் அவகாசம் அளிப்பதாக, ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக, மக்கள் வங்கிகளில் வரிசை கட்டி நிற்கின்றனர்.மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கூடுதலாக, 60 ...

ராஜ்யசபாவை மீண்டும் முடக்கிய எதிர்க்கட்சிகள் :இரங்கலிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சி

Posted: 21 Nov 2016 08:57 AM PST

ரூபாய் நோட்டு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, சபையில், இரங்கல் தெரிவிக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, அரசு ஏற்காததால், ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் மூன்று நாட்களுமே, ரூபாய் நோட்டு விவகாரத்திற்காக கடும் அமளியை சந்திக்க நேர்ந்தது. வார விடுமுறைக்கு பின், நேற்று பார்லிமென்ட் மீண்டும் கூடியது.
ராஜ்யசபா கூடியதும், சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி, கான்பூர் ரயில் விபத்து குறித்து இரங்கல் உரை வாசித்தார். அனைவரும் மவுன அஞ்சலி செலுத்திய பின், எதிர்க்கட்சிகள் சார்பில் புதிய ...

கருணாநிதிக்கு அலர்ஜி ஏன்? லண்டன் டாக்டர் பரிசோதனை

Posted: 21 Nov 2016 09:08 AM PST

தி.மு.க., தலைவர் கருணாநிதியை, லண்டர் டாக்டர் பரிசோதித்து, அலர்ஜி பாதிப்பு நீங்க, மருத்துவ ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில், 45 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
காய்ச்சல், இருமலுக்கு மாத்திரை சாப்பிட்டதில் அலர்ஜி ஏற்பட்டு, உடலில் வேனல் கட்டிகள் ஏற்பட்டன. அதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பார்வையாளர்கள், வெளியாட்கள் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை.
காரணம்
கருணாநிதியின் குடும்பத்தினரான, அழகிரி, செல்வி, ஸ்டாலின், துணைவி ...

தி.மு.க., தலைவர் யார்? விஜயகாந்த் கேள்வி

Posted: 21 Nov 2016 09:10 AM PST

சென்னை,: 'தனக்கு பின்னால், தொண்டர்கள் இல்லை என்பதை உணர்ந்து, கூட்டம் சேர்க்க, மாற்று கட்சியினரை ஸ்டாலின் இழுக்கிறார்' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:
ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு கொள்கை உண்டு. கட்சிக்கு தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்வு செய்யும் அதிகாரம், கட்சி உறுப்பினர்களுக்கு உள்ள உரிமை. தி.மு.க.,வில், பொருளாளர் ஸ்டாலினைபுகழ்ந்தவர்கள் தான், இன்று அக்கட்சியில் உயர் பதவியில் உள்ளனர்.
மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதை, மக்கள் அறிவர். தனக்கு பின்னால், தி.மு.க., ...

கடன் தவணையை செலுத்த இரண்டு மாத அவகாசம் சலுகை ..! பண புழக்கம் குறைந்ததால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Posted: 21 Nov 2016 09:40 AM PST

கடந்த, 10ம் தேதி முதல், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. அதனுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட, 500 ரூபாய் நோட்டுகள், முழு அளவில் வினியோகிக்கப்படவில்லை.

100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருப்பதால், 2,000 ரூபாய் நோட்டுக்கு யாரும் சில்லரை தருவதில்லை.அதனால், அந்த நோட்டுகளை வாங்க பொதுமக்களும், வணிகர்களும் தயங்குகின்றனர். இப்பிரச்னைக்கு, புதிய, 500 ரூபாய் வெளியாவதே தீர்வாக அமையும் என்பதால், அதற்காக காத்திருக்கின்றனர். இதற்கிடையே, மும்பை, போபால் போன்ற இடங்களில், புதிய, 500 ரூபாய் நோட்டுகள், மற்ற மாநில வங்கிகளுக்கு வந்தன; தமிழகத்திற்கு வராமல் ...

நகை வாங்கியோருக்கு விரைவில் 'நோட்டீஸ்!' பட்டியல் தயாரிக்கிறது வருமான வரித்துறை

Posted: 21 Nov 2016 09:48 AM PST

நகைக் கடைகளில், நவ., 8ம் தேதி இரவு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கிய, நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்ப முடிவு செய்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, 'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, பிரதமர் மோடி, நவ., 8ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு அறிவித்தார்.
அது, ஏராளமான பணத்தை, வருமான கணக்கில் காட்டாமல் இருந்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. அதனால், தங்களிடம் உள்ள பணத்தை உடனே மாற்ற, வழி தேடினர்.
நள்ளிரவு வரை
அவர்களில் பலர், இரவோடு இரவாக, தங்களிடம் உள்ள பழைய, 500 ...

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை நீக்குங்கள்! லோதா குழு பரிந்துரை

Posted: 21 Nov 2016 10:56 AM PST

புதுடில்லி: பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என, லோதா குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி, லோதா குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. இவற்றை வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் அவகாசம் வழங்கியது. ஆனால், இதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பி.சி.சி.ஐ., காலம் தாழ்த்தி வருகிறது. இதையடுத்து, பி.சி.சி.ஐ., மற்றும் மாநில சங்கங்கள் பண பரிவர்த்தனை செய்ய ...

'சிறிசேனவுக்கு ஆபத்தில்லை: பிரதமர் மோடி காப்பாற்றுவார்'

Posted: 21 Nov 2016 11:25 AM PST

கொழும்பு: ''இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அரசை கவிழ்க்க, ராணுவம் சதி செய்தால், இந்தியப் பிரதமர் மோடி உடனடியாக உதவிக்கு வருவார்,'' என, இலங்கை அமைச்சர் திசநாயகே கூறினார்.

ஆட்சியை பிடிக்க முயற்சி :
இலங்கை பார்லிமென்டில், சமீபத்தில் பேசிய, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் பார்லிமென்ட் தலைவர் தினேஷ் குணவர்த்தனே, 'சிறிசேன அரசு ஜனநாயகத்தை நசுக்கி வருகிறது. இதை பொறுக்க முடியாத ராணுவம், அதிபரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது' என்றார்.
மோடி உதவுவார் :
இது ...

ஒடிசா வங்கியில் ரூ.1 கோடி கொள்ளை

Posted: 21 Nov 2016 01:06 PM PST

புவனேஸ்வர்: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒடிசாவில் உள்ள ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழைய நோட்டுகள் :
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, தென்கனல் மாவட்டத்தில், ஒடிசா கிராமிய வங்கியின் கிளை உள்ளது.மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு பெரிய பெட்டியில், இங்கு வைக்கப்பட்டிருந்தன; இவற்றின் மதிப்பு, 8 கோடி ரூபாய்.
பெட்டியை உடைத்து கொள்ளை ...

அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு

Posted: 21 Nov 2016 02:27 PM PST

கோல்கட்டா: ''மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

ரொக்கமாக...
செல்லாத நோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என, நேற்று அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான ...

கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுமதி வழங்க கோரிக்கை

Posted: 21 Nov 2016 03:10 PM PST

பெங்களூரு : கூட்டுறவு வங்கிகளில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஏற்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

துணிச்சல் முடிவு :
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேவகவுடா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கறுப்பு பண ஒழிப்புக்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக நீங்கள் அறிவித்தது துணிச்சலான முடிவு. இதனை மக்கள் வரவேற்று, சிறு சிரமங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நேரத்தில் பெங்களூருவில் பா.ஜ., பிரமுகரின் நடந்த ஒரு ஆடம்பர திருமணம் மக்களின் மனதில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™