Tamil News | Online Tamil News |
- இந்திய - இலங்கை மீனவர் பிடிவாதம் : டில்லி பேச்சில் பலனில்லை?
- மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் பாக்.,
- முதல்வரின் குடும்ப நிறுவனம் குறித்து இன்ஜி., கல்லூரி தேர்வில் கேள்வி
- எம்.பி.,க்கள் சம்பளம், சலுகைகள், ஓய்வூதியம்... இரட்டிப்பு!: குளிர்கால கூட்ட தொடரில் மசோதா தாக்கல்?
- சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான 11 மாடி கட்டடம் இடிப்பு...!:பலரின் சொந்த வீடு கனவும் மூன்று வினாடிகளில் தகர்ந்தது ;பார்வையிட ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு
- காங்., துணை தலைவர் ராகுல் 'டிராமா' 'மாஜி' ராணுவ வீரர் தற்கொலையால் டில்லியில் பதற்றம்
- தேர்தல் பிரசாரம் விஜயகாந்த் குழப்பம்
- சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் திட்டம் கேரளாவுக்கு அளித்த அனுமதி நிறுத்தம்
- அசம்பாவித சூழ்நிலைகளை கையாள போலீசுக்கு வழிமுறைகள் அவசியம்: ஐகோர்ட்
- அதிபராகும் தகுதி டிரம்புக்கு இல்லை: ஹிலாரி சாடல்
- மோசூலுக்கு வெளியே ஈராக் படை காத்திருப்பு
- மவுலிவாக்கம் கட்டடம் நீர்நிலை ஆக்கரமிப்புக்கு உதாரணம்: தமிழிசை
- 10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வு; இன்று 'ரிசல்ட்'
| இந்திய - இலங்கை மீனவர் பிடிவாதம் : டில்லி பேச்சில் பலனில்லை? Posted: 02 Nov 2016 09:37 AM PDT டில்லியில், மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த, இந்திய -- இலங்கை மீனவர்களுக்கு இடையி லான பேச்சில், இருதரப்புமே தங்கள் கோரிக்கை களில் உறுதியாக இருந்ததால், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சு, நேற்று, டில்லியில் உள்ள, வெளியுறவு துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள நேரு பவனில் நடந்தது.மத்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த பேச்சு, இருதரப்பு மீனவ பிரதிநிதிகளுக்கு இடையில் மட்டுமே நடந்தது. அரசு ... |
| மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் பாக்., Posted: 02 Nov 2016 09:47 AM PDT ஜம்மு: ''ஜம்மு - காஷ்மீர் எல்லையில், மக்கள் வசிக்கும் பகுதிகளில், பாக்., எல்லை பாதுகாப்பு படையினர்,அந்நாட்டு ராணுவத்தின் ஒத்து ழைப்புடன், திட்டமிட்டு, பீரங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர்,'' என, பாதுகாப்புப் படை, ஐ.ஜி., டி.கே.உபாத்யாய் குற்றஞ்சாட்டி உள்ளார். ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம் மாநிலத்தில், சில வாரங்களாக, எல்லை பகுதி களில், பாக்., ராணுவத்தினர் அடிக்கடி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில்,பொதுமக்கள் பலியாகி வருவதால், ... |
| முதல்வரின் குடும்ப நிறுவனம் குறித்து இன்ஜி., கல்லூரி தேர்வில் கேள்வி Posted: 02 Nov 2016 09:59 AM PDT இன்ஜினியரிங் கல்லுாரி தேர்வில், ஆந்திர முதல்வரின் குடும்ப நிறுவனம் பற்றிய கேள்வி இடம் பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சி யடைந்து உள்ளனர். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, காக்கிநாடாவில், ஜே.என்.டி.யு.கே., என்ற ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலை உள்ளது. அதன் இன்ஜி.,கல்லுாரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், இரண்டாம்ஆண்டு மாணவர்களுக்கு, முதல் பருவத்தேர்வு நடக்கிறது. நேற்று முன்தினம், பொருளியல் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மைக்கான தேர்வு நடந்தது. அதில், சரியான பதிலை ... |
| எம்.பி.,க்கள் சம்பளம், சலுகைகள், ஓய்வூதியம்... இரட்டிப்பு!: குளிர்கால கூட்ட தொடரில் மசோதா தாக்கல்? Posted: 02 Nov 2016 10:06 AM PDT புதுடில்லி:பார்லிமென்ட் உறுப்பினர்களின், சம்பளத்தை இரட்டிப்பாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது; வரும், 16ல் துவங்க வுள்ள,பார்லி., குளிர்கால கூட்ட தொடரில்,இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லோக்சபாவில், 545 எம்.பி.,க்கள் உள்ளனர்; ஆங்கிலோ-இந்தியன் பிரிவைசேர்ந்த இரண்டு பேரை,ஜனாதிபதி, எம்.பி.,யாக நியமிக்கலாம். ராஜ்யசபாவில், 245 உறுப்பினர் கள் உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த, 12 பேரை, ராஜ்ய சபா எம்.பி.,யாக மத்திய அரசு நியமிக்கலாம். மொத்தம், 804 பேர், எம்.பி.,க்களாக ... |
| Posted: 02 Nov 2016 10:36 AM PDT சென்னை, மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, 11 மாடி கட்டடம், வெடிமருந்து வைத்து, நேற்று மாலை தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கட்டடத்தில், வீடு வாங்கிய பலரது கனவும், மூன்று வினாடிகளில் தகர்ந்து போனது. கட்டட இடிப்பை காண, ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால், அப்பகுதி முழுவதும் நேற்று பரபரப்பு நீடித்தது.சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த, 11 மாடி கட்டடம், 2014 ஜூன், 28ல், திடீரென பெய்த இடியுடன் கூடிய மழையில் இடிந்து விழுந்தது; இதில், 61 பேர் பலியாகினர். அந்த இடத்தின் அருகே, அபாயகரமான நிலையில் ... |
| காங்., துணை தலைவர் ராகுல் 'டிராமா' 'மாஜி' ராணுவ வீரர் தற்கொலையால் டில்லியில் பதற்றம் Posted: 02 Nov 2016 10:40 AM PDT புதுடில்லி:'ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்' விவகாரம் தொடர்பாக, தற்கொலை செய்த, முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை, டில்லி மருத்துவமனைக்கு சென்று பார்க்க முயன்ற, காங்., துணைத் தலைவர் ராகுலை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன் பின், நேற்று மாலையிலும், தடையை மீறி செல்ல முயன்ற ராகுலை, தடுத்து நிறுத்திய போலீசார், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால், டில்லியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டம் தொடர்பாக, முன்னாள் ராணுவ வீரர் கிஷண் கிரவால், 70, நேற்று முன் தினம் நள்ளிரவு தற் கொலை செய்து கொண்டது, ராணுவ வீரர்கள் மத்தியில் ... |
| தேர்தல் பிரசாரம் விஜயகாந்த் குழப்பம் Posted: 02 Nov 2016 10:42 AM PDT மூன்று தொகுதிகளுக்கு பிரசாரம் செய்ய செல்வதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விஜயகாந்த், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். வழக்கமான வாகன பிரசாரம் தவிர்த்து, மேடை பிரசாரத்தில் ஈடுபட்டார்; ஆனால், எடுபடவில்லை.அவரின் மேடை பேச்சையும், பேச்சின் போது அவர் நடந்து கொண்ட விதத்தையும், சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர். தேர்த லில், தே.மு.தி.க., தோல்வி அடைந்ததற்கு, விஜயகாந்த் பிரசாரம் எடுபடாமல் போனதும், ஒரு காரணம் என, அக்கட்சியின் கூறினர்.இந்நிலையில், ... |
| சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் திட்டம் கேரளாவுக்கு அளித்த அனுமதி நிறுத்தம் Posted: 02 Nov 2016 10:45 AM PDT தமிழக அரசின் முயற்சியால், சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடி பள்ளத்தாக்கில், கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பவானி ஆற்றின் துணை ஆறான சிறுவாணி ஆறு, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத் தில் உற்பத்தியாகிறது; அட்டப்பாடி பள்ளத் தாக்கு வழியாக, கோவை மாவட்டத்திற்குள் நுழைந்து, மேட்டுப்பாளை யம் அருகே, பவானி ஆற்றுடன் கலக்கிறது. சிறுவாணி ஆறு, கோவை, திருப்பூர் மாவட்டங் களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது.மீண்டும் துவக்கியது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, ... |
| அசம்பாவித சூழ்நிலைகளை கையாள போலீசுக்கு வழிமுறைகள் அவசியம்: ஐகோர்ட் Posted: 02 Nov 2016 10:49 AM PDT சென்னை:அசம்பாவித சூழ்நிலைகளை கையாள, போலீசாருக்கு வழிகாட்டும் வகையிலான ஆவணங்கள் கிடைப்பதற்கு, அரசாணை பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ம.க., தலைவர் மணி தாக்கல் செய்த மனு:சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 2013 ஏப்ரலில், 'சித்திரை முழு நிலவு இளைஞர் விழா' நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களை, ஒரு கட்சியினர் தடுத்தனர்; கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், எங்கள் கட்சியை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். குண்டர் சட்டத்தில்சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை கோரி, பா.ம.க., தலைவர் ராமதாஸ் ... |
| அதிபராகும் தகுதி டிரம்புக்கு இல்லை: ஹிலாரி சாடல் Posted: 02 Nov 2016 10:56 AM PDT சான்போர்ட்: ''அமெரிக்க அதிபர் பதவிக்கு, டிரம்ப் தகுதியற்றவர்; அதிபராக, அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை,'' என, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கடுமையாக சாடினார். அதிபர் தேர்தல் : அமெரிக்க அதிபர் தேர்தல், வரும், 8ல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும், பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீண் தம்பட்டம்: புளோரிடா மாகாணத்தில் நடந்த ... |
| மோசூலுக்கு வெளியே ஈராக் படை காத்திருப்பு Posted: 02 Nov 2016 01:12 PM PDT காக்ஜாலி: மேற்காசிய நாடான ஈராக்கின் மோசூல் நகரை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கும் நடவடிக்கை, மோசமான வானிலையால் தடைபட்டுள்ளது. ஈராக் படைகள் முன்னேற்றம்: ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, உலகெங்கும் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.எஸ்., அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில், ஈராக் படைகள் ஈடுபட்டுள்ளன. அதன்படி, மிகவும் முக்கியமான மோசூல் நகரை நோக்கி, ஈராக் படைகள் முன்னேறி ... |
| மவுலிவாக்கம் கட்டடம் நீர்நிலை ஆக்கரமிப்புக்கு உதாரணம்: தமிழிசை Posted: 02 Nov 2016 01:45 PM PDT சென்னை : மவுலிவாக்கம் கட்டடம் நீர்நிலை ஆக்கரமிப்புக்கும், ஊழல் நிர்வாகத்திற்கும் உதாரணம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். துரோகம் இழைக்காது: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: கட்டுமான பணிகளில் ஊழலற்ற நிலைப்பாட்டுடன் அனைவரும் செயல்படவேண்டும். மவுலிவாக்கம் கட்டடம் நீர்நிலை ஆக்கரமிப்புக்கும், ஊழல் நிர்வாகத்திற்கும் உதாரணம். நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்காது. இவ்வாறு அவர் ... |
| 10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வு; இன்று 'ரிசல்ட்' Posted: 02 Nov 2016 03:16 PM PDT
சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று(நவ.,3) வெளியாகின்றன. துணைத் தேர்வு: பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். பின், ஜூன் - ஜூலையில் சிறப்பு உடனடி துணைத் தேர்வும்; செப்., - அக்., மாதங்களில், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வும் நடக்கும். செப்டம்பரில் நடந்த, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 10 மணிக்கு மேல்.. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 03,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |