Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'மை' வைப்பதில் மாற்றம் இல்லை :வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

Posted: 16 Nov 2016 07:58 AM PST

'வங்கிகளில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றுவோருக்கு, வலது ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் வங்கி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: * வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு, அழியாத அடையாள மையை, இந்திய வங்கி கள் அமைப்பு சப்ளை செய்யும். முதலில், சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில், இது அறிமுகம் செய்யப்படும். பின், தேவைக்கேற்ப, மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் * ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும், ஐந்து லிட்டர் மை வழங்கப்படும். வங்கி காசாளர் அல்லது ...

செல்லாத நோட்டு விவகாரத்தில் ரகசியம் கசியவில்லை!:ராஜ்யசபாவில் மத்திய அரசு விளக்கம்

Posted: 16 Nov 2016 08:19 AM PST

புதுடில்லி:'புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு, முன் கூட்டியே கசியவில்லை;நாட்டு நலன் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது' என, ராஜ்ய சபாவில், மத்திய அரசு தெளிவாக தெரிவித்தது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு களை தடுக்கவும், புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள், விமர்சனங்களுக்கு பதில் அளித்து, மத்திய மின் துறை அமைச்சர் ...

பிரச்னைகளை பேசி தீர்க்கலாம் : பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

Posted: 16 Nov 2016 08:58 AM PST

புதுடில்லி: ''அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க, அரசு தயாராக உள்ளது. பார்லி மென்ட் குளிர்கால கூட்டத் தொடர் சிறப்பாக நடக்க, அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்கு, காங்., -- திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.
இதையொட்டி, பார்லிமென்டுக்கு வெளியே, ...

விஜய் மல்லையா வாங்கிய ரூ.1,200 உட்பட ரூ.7,016 கோடி ஏப்பம்!:கடனை தள்ளுபடி செய்தது 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'

Posted: 16 Nov 2016 09:02 AM PST

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கி யிருந்த, 1,200 கோடி ரூபாய் உட்பட, 63 பெரும் பணக்காரர்களின், 7,016 கோடி ரூபாய் கடனை, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' தள்ளு படி செய்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நாட்டின் பெரிய பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தங்களிடம் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாத, 100 பெரும் பணக்காரர் களின் பட்டியலை தயாரித்துள்ளது. அதில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் உண்டு.
வாராக்கடன்
எஸ்.பி.ஐ., உட்பட, 17 ...

அவதூறு வழக்கில் ராகுலுக்கு ஜாமின்

Posted: 16 Nov 2016 09:04 AM PST

தானே: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடர்ந்த அவதுாறு வழக்கில், காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு, நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.

முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமை யிலான, பா.ஜ., அமைந்துள்ள மஹாராஷ்டிரா வில், 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் பட்டதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தொடர்பு உள்ளது' என, காங்., துணைத் தலைவர் ராகுல் பேசினார். இதை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, ராஜேஷ் குந்தே, மஹாராஷ்டிர மாநிலம் பிவாண்டி கோர்ட்டில், ராகுல் மீது அவதுாறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி, ராகுலுக்கு, ...

ஜல்லிக்கட்டு மீண்டும் மறுப்பு: தமிழக அரசின் மனு தள்ளுபடி

Posted: 16 Nov 2016 09:05 AM PST

புதுடில்லி:தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன் னிட்டு நடத்தப்படும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது.இதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.
ஏற்க ...

சுஷ்மா சுவராஜுக்கு 'டயாலிசிஸ்' சிகிச்சை

Posted: 16 Nov 2016 09:07 AM PST

புதுடில்லி: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக் காக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை, அவரே தெரிவித்து உள்ளார்.

வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், 64, இம்மாதம், 7ல், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார்; எந்த வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது உள்ளிட்ட விபரங்கள்தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, சுஷ்மா சுவராஜ், சமூக வலைதளமான டுவிட்டரில் கருத்து ...

இது எடைத்தேர்தல்: ஸ்டாலின் பிரசாரம்

Posted: 16 Nov 2016 09:14 AM PST

தஞ்சாவூர்:''நான்கு தொகுதிகளிலும் நடப்பது, இடைத்தேர்தல் அல்ல; ஆட்சியை எடை போடும் எடைத்தேர்தல்,'' என, தஞ்சையில் நேற்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து, அவர் பேசியதாவது: தஞ்சாவூரில், கடந்த பொது தேர்தலில், வேட் பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, தி.மு.க., தொண்டர்கள் யாரும் சிக்கவில்லை. ஆளுங்கட்சியினர் தான் முழுமையாக, ஆறு கோடி ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்த தற்கான ஆதாரங்களை, தேர்தல் ஆணையம் தெளிவாக வெளியிட்டுள்ளது.இதேபோல, அரவக்குறிச்சியிலும் அமைச்சர் கள், பினாமிகளிடம் இருந்து பணம் மற்றும் அவற்றை ...

தமிழ்நாடு இல்லத்தில் நடந்த பல கோடி ரூபாய் கையாடல்:பெரும் தலைகளை தப்ப விட்டு கமுக்க தீர்வு காண முயற்சி

Posted: 16 Nov 2016 09:19 AM PST

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் நடந்த, கோடிக் கணக்கான ரூபாய் கையாடல் விவகாரத்தில், 'மெமோ' வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, ஓராண்டு ஊதிய உயர்வை ரத்து செய்து, கமுக்க தீர்வு காணப்பட்டுஉள்ளது.

டில்லியில், தமிழக அரசின் அடையாள சின்ன மாக அமைந்துள்ளது தமிழ்நாடு இல்லம். இங்கு, பல ஆண்டுகளாக வரவேற்பு பிரிவில் கை யாடல் நடந்து வந்த விவகாரம் அம்பலமானது.
மர்மங்கள்
குமார் என்ற டெலிபோன் ஆப்ரேட்டரின் ரகசிய கைது, பேரம், போலீஸ் விசாரணை, ஜாமின் என, மர்மங்கள் நீண்டு, தற்போது அவரது விவகாரம் கோர்ட்டில் உள்ளது. 'நான் மட்டுமா தவறு செய்தேன்; என்னை பலிகடா ...

இந்தியா வருகிறார் பாக்., பிரதமரின் ஆலோசகர்

Posted: 16 Nov 2016 10:48 AM PST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். உரி சம்பவத்துக்குப் பின், பாக்., அரசின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியா வர உள்ளது இதுவே முதல்முறை.
சார்க் புறக்கணிப்பு:
காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த செப்., 10ம் தேதி, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. பாக்., பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் செயலுக்கு கண்டனம் ...

அமர் சிங் மீது வழக்கு பதிவு

Posted: 16 Nov 2016 12:37 PM PST

அசம்கர்: பிரதமரை அவதுாறாக விமர்சித்த வீடியோ பதிவில், சிரித்தபடி போஸ் கொடுத்த, சமாஜ்வாதியை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., அமர் சிங் மீது, முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவமதிப்பு:
உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்த, பிரதமர் நரேந்திர மோடியை, அவமதிக்கும் வகையிலான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிரித்தபடி போஸ்:
இதில், ...

'சிசுவின் பாலினம் அறியும் விளம்பரம் இணையதளத்தில் இடம்பெறக்கூடாது'

Posted: 16 Nov 2016 12:42 PM PST

புதுடில்லி: பிறக்கப்போகும் சிசுவின் பாலினத்தை அறிந்து கொள்வது தொடர்பான தகவல்களை நீக்கும்படி, 'கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட்' போன்ற தேடுபொறிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிறக்கப்போகும் சிசுவின் பாலினத்தை அறிந்து கொள்வதை தடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், சாபு மேத்யூ ஜார்ஜ் சார்பில், வழக்கறிஞர் சஞ்சய் பரீக், பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'பிறக்கப்போகும் சிசுவின் பாலினத்தை தெரிந்து கொள்வது தொடர்பான தகவல்கள், இணையதளங்களில் இடம்பெறக்கூடாது என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ...

ஊழல் இரு மடங்காக அதிகரிக்கும்: சீதாராம் யெச்சூரி

Posted: 16 Nov 2016 03:27 PM PST

புதுடில்லி : புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டினால் ஊழல் இருமடங்காகும் என மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
மாற்று ஏற்பாடு இல்லை:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறப்பட்டது குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: இன்னும் 50 நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என மோடி கூறியுள்ளார். ஆனால், மக்களுக்கு பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளைக் கொடுக்க சரியான மாற்று ஏற்பாடுகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™