Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உங்கள் கணினி சரியாக வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா?

Posted: 16 Nov 2016 08:48 AM PST

சினிமா,தொலைக்காட்சி,இப்படி எல்லா அசைவுகளும் படங்களாக-frames- கொடுக்கப்படுகின்றன.வினாடிக்கு எத்தனை படங்கள் என்பதைப் பொறுத்து அதன் அசைவு தெளிவு அமையும். இந்தப் படங்களை கண்கள் ஏற்று மூளைக்கு அனுப்புகின்றன. அதைத் தொகுத்து அவற்றின் அசைவுகளை மூளை புரிந்து கொள்கிறது.பொதுவாக 24 fps-frames per second- மனிதக் கண்கள் ஏற்றுக் கொண்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவை வேறுபடுகின்றன. குறைந்த அளவு படங்கள் -frames- மெதுவாக தெளிவற்று காட்சி தருகிறது.அளவு -fps-கூடும் போது அந்தப் படங்கள் எந்த அளவில்-fps- எடுக்கப்பட்டதோ ...

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Posted: 16 Nov 2016 08:26 AM PST

உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ...

பஞ்சாப் அழகி ருஷானி ஷர்மா

Posted: 16 Nov 2016 08:12 AM PST

- மும்பை, ஆந்திரா, கேரள வரவுகளே தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். நமீதா, ரிச்சா கங்கோபாத்யாய் உள்ளிட்ட ஒரு சிலரே அவ்வப்போது பஞ்சாபிலிருந்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் இறக்குமதியாக தமிழுக்கு வந்திருக்கிறார் ருஷானி ஷர்மா. பஞ்சாபில் இசை ஆல்பங்களில் நடித்து வருபவரும், மாடல் அழகியுமான ருஹானி ஷர்மா "கடைசி பெஞ்ச் கார்த்தி' படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வருகிறார். வட நாட்டு ஹீரோயின் என்றதும் பாலிவுட் நடிகைகளை தேர்வு செய்யும் வழக்கத்துக்கு மத்தியில், ...

ஜல்லிக்கட்டின் அவசியம் உணர்த்தும் படம் இளமி…

Posted: 16 Nov 2016 08:11 AM PST

- * ஜல்லிக்கட்டின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உருவாகி வரும் படம் "இளமி.' 18-ஆம் நூற்றாண்டின் பின்னணியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இத்திரைக்கதை, ஜல்லிக்கட்டு வீரன் ஒருவனின் வீரம், காதல் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாகி வருகிறது. யுவன், அனுகிருஷ்ணா, "கல்லூரி' அகில், கிஷோர், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜூலியன் பிரகாஷ் கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். ——————————————— -ஜி.அசோக் திரைக்கதிர்

தற்போதைய சினிமினி செய்திகள்...

Posted: 16 Nov 2016 08:10 AM PST

சைத்தான் படம் நவம்பர் 17ல் திரைக்கு வருகிறது… - - * "நான்', "சலீம்', "இந்தியா பாகிஸ்தான்', "பிச்சைக்காரன்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அடுத்த படம் "சைத்தான்.' தலைப்பு தொடங்கி திரைக்கதை வரை அனைத்திலும் வித்தியாசம் காட்டுவது இவரது தனி பாணி. இவர் நடித்து, தயாரித்த அனைத்துப் படங்களுமே வசூலிலும் தனி ரகம். இப்போது "சைத்தான்' படத்தின் டிரெய்லரும், டீசர் மற்றும் பாடல்களும் இந்த படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் ...

புத்தகம்

Posted: 16 Nov 2016 07:34 AM PST

ராஜமுத்திரை சாண்டில்யன் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே!

டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!

Posted: 16 Nov 2016 06:43 AM PST

- படம்- மாலைமலர் ------------------------------------------------- கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தன்வீர் விழா மேடையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பதவி விலக வலியுறுத்தி வருகின்றன. - கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தன்னுடைய மொபைல் ...

சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்

Posted: 16 Nov 2016 06:38 AM PST

உலக சி.ஓ.பி.டி., தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் புதன்கிழமைகளில் கடைபிடிக்கப்படுகிறது. இது சி.ஓ.பி.டி., குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக 2002ல் உருவாக்கப் பட்டது. சி.ஓ.பி.டி., என்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். உலகம் எங்கும் 200 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3 மில்லியன் மக்கள் ஆண்டு தோறும் இறக்கின்றனர். தற்போது சி.ஓ.பி.டி., ஆறாவது உயிர்க்கொல்லி நோயாக உள்ளது. இது 2020ல் மூன்றாவது இடத்திற்கு இருதய நோயை பின் தள்ளி முன்னே ...

நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம்

Posted: 16 Nov 2016 06:33 AM PST

- 2011 – தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் விளைவு வடிவேலுவுக்குப் படங்கள் இல்லாமல் போனது. அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது மட்டும் காரணமல்ல, வடிவேலுவின் சம்பளமும் முக்கியக் காரணம் என்று சொல்லப் பட்டது. அவர் கேட்கும் சம்பளத்தை சின்ன படங்களை எடுப்பவர்களால் கொடுக்கமுடியாது, பெரிய கதாநாயகர்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க யாரும் விரும்பவில்லை. இதனால் படங்கள் இல்லாமலே இருந்தார். மணிக் கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடித்தவர், சுமார் ஐந்து ...

ரூ500 கோடி ஆடம்பர திருமணம்.....

Posted: 16 Nov 2016 06:13 AM PST

ரூ500 கோடி ஆடம்பர திருமணம்... சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியை ஏன் கைது செய்யவில்லை? - காங். கேள்வி ஆடம்பர திருமணத்தை நடத்திய ஜனார்த்தன ரெட்டியை ஏன் பாஜக அரசு கைது செய்யவில்லை என காங். கேள்வி எழுப்பியுள்ளது. - டெல்லி: ரூ500 கோடி ஆடம்பர திருமணம் நடத்திய சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியை ஏன் மத்திய பாஜக அரசு கைது செய்யவில்லை என ராஜ்யசபாவில் காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார். ராஜ்யசபாவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம் தொடர்பான விவாதத்தில் ஆனந்த் ...

என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!

Posted: 16 Nov 2016 06:10 AM PST

5 வருடங்களுக்குப் பிறகு மளிகைக் கடையில் ஒரு குண்டக்க மண்டக்க (கற்பனை) :: எல்லா பொருட்களுக்கும் சேர்த்து எவ்வளவு ஆச்சு? : மொத்தம் 450 ரூபாய் ஆச்சு. :: இந்தா 500 ரூபாய். மீதம் 50 ரூபாய் குடு. (இது புதிய 500 ரூபாய்) : இந்த நோட்டு கிழிஞ்சிருக்குபா. வேற நோட்டு குடு. :: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு. அதுல எது வேணும்? : இது என்னப்பா கேள்வி? ரெண்டும் 500 ரூபாய் நோட்டுதானே?... கிழியாம இருந்தா எதையாவது குடு. எனக்கு வேற நோட்டு வேணும் அவ்வளவுதான். :: சரி இந்தா 500 ரூபாய்... ...

ஜல்லிக்கட்டு தடை சரியல்ல

Posted: 16 Nov 2016 04:55 AM PST

ஜல்லிக்கட்டு தடை சரியல்ல. நாட்டாமை தீர்ப்பை மாற்று. ஒரு தனி மனித சமுதாயத்தை அழிக்கும் செயல். நாஸ்ட்ராடாமோஸ் என்பவர் குறித்து சொன்னது, இந்தியா வல்லரசாகும், தமிழன் ஆட்சி செய்வான். அன்று சொன்னது.  இன்று வரை தமிழன் மீது பலவகை தாக்குதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாடும் தமிழனால் வளர்ச்சி அடைந்ததை மறந்து விட்டு, தமிழன் அழிக்கும் செயல்களை செய்கின்றனர்.  முதலில் பலவகை போர்கள், தமிழர் உடமைகள் கொள்ளை செய்தனர் (உ.ம். திருச்சி ஸ்ரீரங்கம் - சுமார் 600 டன் தங்கம் கோயில் சொத்து கொள்ளை) பலவித மத மாற்றங்கள் ...

ரூ.6000 கோடியை ஒப்படைக்கவில்லை: குஜராத் வைர வியாபாரி லால்ஜிபாய் மறுப்பு

Posted: 16 Nov 2016 04:40 AM PST

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் ரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்ததாக வெளியான செய்திக்கு குஜராத் வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். வைர வியாபாரியான இவர், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் எதிரொலியாக, தன்னிடமிருந்த கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் கோடியை அரசிடம் அண்மையில் ஒப்படைத்ததாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து லால்ஜிபாய் படேலுக்கு தொழில் அதிபர்கள் ...

ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி என்பதில் சிறிய மாற்றம்: கணக்கை முடிக்க எஸ்பிஐ செய்த வியூகம்

Posted: 16 Nov 2016 04:38 AM PST

புது தில்லி: தாங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க மனமில்லாத மிகப்பெரிய 'கோடீஸ்வரர்'களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. - ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை என்றும், ஒரு தொழில்நுட்ப வார்த்தையை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த புரளிக்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது. - வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை விட்டு தப்பியோடிய 'தொழிலதிபர்' விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 ...

புத்தகம் தேவை..

Posted: 16 Nov 2016 02:26 AM PST

சாண்டில்யன் அவர்களின் ராஜயோகம், ராஜமுத்திரை புத்தகங்கள் கிடைத்தால் பதிவிடுங்கள் நண்பர்களே!

குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே வங்கிப் பணியில்......1!!

Posted: 16 Nov 2016 01:57 AM PST

நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த நண்பர் கேட்டார் 'உங்க குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்' - என் மூத்த மகன் SBI-,ல, அவன் மனைவிICICI - ல இரண்டாவது மகன் HDFC-ல, அவன் மனைவி , Canara Bank- இளைய மகளுக்கு இன்னும் திருமணம் ஆகலை, அவள் AXIX BANK-ல,... - ஓ....எல்லோரும் வெல் செட்டிலாகி வங்கி பணியில் இருக்காங்கன்னு சொல்லுங்க....!! - தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க....அவங்க எல்லோரும் வங்கியில் பணம் எடுக்க க்யூவில நிற்கிறாங்கன்னு சொல்ல வந்தேன்...!!! - --------------------------------- வாட்ஸ் ...

ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி? - ஆதாரம் வெளியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால்

Posted: 16 Nov 2016 12:05 AM PST

-- பிரதமர் மோடி லஞ்சம் பெற்றார் என, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதாரம் வெளியிட்டுள்ளர். - பிரதமர் மோடி, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்த போது, பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. - இதற்காக ஒரு ஆதாரத்தை, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2013ம் ஆண்டு பிர்லா நிறுவனத்தில், வருமானத்துறையினர் சோதனை நடத்திய போது, இந்த ஆதாரம் கிடைத்ததாக கூறப்படுகிறது. - இந்த ...

பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்

Posted: 15 Nov 2016 10:44 PM PST

இன்றைய உலகில் வாட்ஸ் என்பது மனிதனின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், வெறும் நண்பர்களிடன் அரட்டைக்கு மட்டும் பயன்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தகவல் அனுப்ப, ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ள என டெக்னாலஜியை சரியாக பயன்படுத்த தொடங்கிவிட்டன சமீபத்தில் வாட்ஸ் அப் கொடுத்த வீடியோ அழைப்பு வசதி, பயனாளிக்கு பெரும் உதவியாக உள்ளது. தங்கள் உணர்வுகளையும், தகவல்களையும் முகத்தை பார்த்தே பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்துள்ளதால் ஒவ்வொரு வாட்ஸ் அப் ...

என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராக சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை

Posted: 15 Nov 2016 10:08 PM PST

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினாவதற்கு முட்டுக்கட்டைப் போடும் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகள் இணைவதற்கான எங்களது இரு நிபந்தனைகளை நிறைவு செய்தால் மட்டுமே, கூட்டமைப்பில் ...

நடிகர் விஜய்க்கு பி.ஜே.பி அட்வைஸ்

Posted: 15 Nov 2016 09:05 PM PST

- .ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், - ''ஏழை, எளிய மக்கள் என்றுமே ஏழைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் இந்த நாட்டின் கவுரவம் மிக்க குடிமக்கள். அவர்களும் மற்றவர்களைப் போல இந்த நாட்டின் அனைத்து சவுகரியங்களையும் பயன்படுத்த உரிமை இருக்கிறது. - ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஏழை மக்களை, ஏழைகளாகவே வைத்துவிட்டார்கள். ஏழைகளின் வேதனை இனி துடைத்தெறியப்படும். அதற்காகத்தான் 'ஜன்தன் வங்கி கணக்கு', 'மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல்' என்று பல்வேறு திட்டங்களை ...

திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்!

Posted: 15 Nov 2016 08:52 PM PST

திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! - - உலக இயக்கத்திற்கு காரணியாக இருப்பது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் வாயிலாக உலகை இயங்கச் செய்து, ஈசன் திருநடனம் புரிகின்றார். இறைவனின் அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்கள் எடுத்துரைக்கும் உண்மை. எனவேதான் 'அவனின்றி அணுவும் அசையாது; சிவனின்றி எதுவும் இசையாது' என்று சொல்லி வைத்தார்கள். சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்கள், ஈசன் ...

பழைய நோட்டுகளை மாற்றினால் விரலில் மை: மோடி அரசின் அடுத்த அதிரடி

Posted: 15 Nov 2016 08:36 PM PST

அழியாத மை தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: சில வங்கிகள் பல நபர்கள் மீண்டும் மீண்டும் வந்து பழைய பணத்தை மாற்றிச் செல்வதாகவும், ஒரே நபர் வெவ்வேறு வங்கிகளுக்குச் சென்று பணத்தை மாற்றி வருவதாகவும் மத்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது. கருப்புப் பணம் வைத்திருப்போர், குழுக்களாக நபர்களை நியமித்து இந்த முறையில் தங்கள் கருப்புப் பணத்தை மாற்றி வருவதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கும் வகையில் பழைய ...

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்

Posted: 15 Nov 2016 08:30 PM PST


-

பிப்.,1-ம் தேதி மத்திய பட்ஜெட்

Posted: 15 Nov 2016 04:52 PM PST

புதுடில்லி: மத்திய பட்ஜெட் இனி வரும் ஆண்டுகளில் பிப்.28-ம் தேதிக்கு பதில் பிப்.,1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. - பிப்1-ம் தேதி பட்ஜெட் - மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் துவங்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட மாட்டாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது பட்ஜெட் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி மாலை நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 16 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™