Tamil News | Online Tamil News |
- ரூபாய் நோட்டு செல்லாதா? : சுப்ரீம் கோர்ட் விசாரணை
- இன்று முதல் ஏ.டி.எம்.,களில் ரூ.2,000 நோட்டு வினியோகம்! பெட்ரோல் பங்க்குகள், ரயில், பஸ் நிலையங்களில் 24ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றலாம்
- கறுப்பு பணத்தை ஒழிக்கும் முடிவில் மாற்றமில்லை திட்டவட்டம் ..! எதிர்க்கட்சிகளுக்கு பணியமாட்டேன் என மோடி ஆவேசம்
- அரசுக்கு எதிராக இணையும் எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் நெருக்கடி கொடுக்க திட்டம்
- கரன்சி வினியோகம் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 'லீவ்' எடுக்க தடை
- ஓட்டுக்காக மட்டும் ஜெ., அறிக்கை : ஸ்டாலின் கேள்வி
- பெட்ரோல் 'பங்க்'களுக்கு எச்சரிக்கை; பழைய 1,000, 500 ரூபாய் வாங்க மறுத்தால் நடவடிக்கை
- சத்தமின்றி 'வெள்ளை' ஆனது போக்குவரத்து கழக வங்கி கணக்கில் ரூ.100 கோடி பழைய நோட்டுகள்
- ஜெ., அறிக்கையால் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., உற்சாகம்
- சீனாவிடம் நீர்மூழ்கி கப்பல் வாங்கியது வங்கதேசம்
- 'அனல்' ஆண்டு: ஐ.நா., எச்சரிக்கை
- ‛நல்லுறவுக்கு அதிக முக்கியத்துவம்'; டிரம்ப்-ஜீ ஜின்பிங் உரையாடல்
| ரூபாய் நோட்டு செல்லாதா? : சுப்ரீம் கோர்ட் விசாரணை Posted: 14 Nov 2016 09:07 AM PST
புதுடில்லி: பழைய, 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற, மத்திய அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட், இன்று விசாரிக்கிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு கள்செல்லாதென, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்களை, தலைமை நீதிபதி,டி.எஸ்.தாக்கூர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு, இன்று விசாரணை செய்ய உள்ளது. மத்திய அரசின் திடீர் முடிவால், மக்களிடையே ... |
| Posted: 14 Nov 2016 09:11 AM PST 'தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும்' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வரும், 24 வரை, பெட்ரோல் பங்க், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்போரின் எண்ணிக்கை அதிகம். அதை கருத்தில் வைத்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தலைமையில், நாட்டில் உள்ள நான்கு பெரிய வங்கிகளின் அதிகாரிகள், நிதி மற்றும் உள்துறை அதிகாரிகள் அடங்கிய அதிரடிப் படையை, மத்திய அரசு அமைத்துள்ளது. அவர்கள், ... |
| Posted: 14 Nov 2016 09:14 AM PST புதுடில்லி,:''கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்த, மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது; இந்த விஷயத்தில், எதிர்க்கட்சிகளிடம் பணிந்து போகத் தேவையில்லை. அரசின் முடிவில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, யாரும் எதிர்பாராத வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்தார்.இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ... |
| அரசுக்கு எதிராக இணையும் எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் நெருக்கடி கொடுக்க திட்டம் Posted: 14 Nov 2016 09:19 AM PST புதுடில்லி: பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதை, பார்லி.,யில் கூட்டாக சேர்ந்து எதிர்ப்பது குறித்து, டில்லியில் நேற்று, காங்., - திரிணமுல் காங்., கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், நாளை துவங்க உள்ளது. இந்த தொடரின்போது, ரூபாய் நோட்டு செல்லாததாக ... |
| கரன்சி வினியோகம் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 'லீவ்' எடுக்க தடை Posted: 14 Nov 2016 09:33 AM PST புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் வினியோக பணி தீவிரம் அடைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஊழியர்கள், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது: வங்கிகளில், 10ம் தேதியில் இருந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், பணம் எடுப்பதற்காகவும், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதனால், சனி, ஞாயிறு நாட்களிலும் வங்கிகள் செயல்பட்டன. அந்த வங்கிகளுக்கு, பணம் வினியோகிக்கும் பணியில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால், ரிசர்வ் வங்கி ஊழியர்களும் ஞாயிற்றுக் கிழமை பணியாற்றினர்.நிபந்தனை மேலும், மற்ற ... |
| ஓட்டுக்காக மட்டும் ஜெ., அறிக்கை : ஸ்டாலின் கேள்வி Posted: 14 Nov 2016 09:36 AM PST சென்னை,: 'முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை, அவரே வெளியிட்டது என்றால் மக்கள் படும் அவதிகளை பற்றி கவலைப்படாமல், ஓட்டுகளை மட்டும் எதிர்பார்க்கிறார் என்பதையே உறுதிப்படுத்துகிறது' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால், மக்கள் தவிக்கின்றனர். அவர்களின் துன்பத்தை துடைக்கும் வகையில் உருப்படியான அறிவிப்போ, சிறு ஆறுதலோ இல்லாத வகையில்,இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்; அதற்கு, ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது. கவலைப்படவில்லை அவரது பெயரில் அறிக்கை ... |
| பெட்ரோல் 'பங்க்'களுக்கு எச்சரிக்கை; பழைய 1,000, 500 ரூபாய் வாங்க மறுத்தால் நடவடிக்கை Posted: 14 Nov 2016 09:45 AM PST பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்காத பெட்ரோல் 'பங்க்' மீது, கடும் நடவடிக்கை எடுக்க போவதாக, எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, பெட்ரோல் 'பங்க், காஸ்' ஏஜென்சிகளில் மாற்றி கொள்ள, மத்திய அரசு நேற்று வரை அவகாசம் வழங்கி இருந்தது. தற்போது, அந்த அவகாசத்தை, 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனவே, பழைய ரூபாய் நோட்டு வாங்காத, பெட்ரோல் பங்க் மீது, கடும்நடவடிக்கை எடுக்க இருப்பதாக, எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.கடும் நடவடிக்கை இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில்லரை தட்டுப்பாடு என்ற ... |
| சத்தமின்றி 'வெள்ளை' ஆனது போக்குவரத்து கழக வங்கி கணக்கில் ரூ.100 கோடி பழைய நோட்டுகள் Posted: 14 Nov 2016 09:53 AM PST சென்னை,: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 9ம் தேதி முதல் நேற்று வரை, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக, 100 கோடி ரூபாய் வரை வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போக்குவரத்து கழகத்தினர் கூறியதாவது: கடந்த, 8ம் தேதி நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் அறிவித்தார். அரசு பேருந்துகளில், 9ம் தேதிக்கு பின், 500, 1,000 ரூபாய் வாங்கப்படவில்லை. ஆனால், 9 முதல், போக்குவரத்து கழகங்களின் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகணக்குகளில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளாகவே செலுத்தப்படுகின்றன.100 கோடி |
| ஜெ., அறிக்கையால் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., உற்சாகம் Posted: 14 Nov 2016 10:04 AM PST ஜெ., அறிக்கையால் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், செப்., 22ம் தேதி, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோய் தொற்று குணமடைந்து விட்டதாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட பின், முதல்வரை பார்க்க முடியாததாலும் அவர் அறிக்கை எதுவும் வெளியிடாததாலும், அ.தி.மு.க.,வினர் சோர்வடைந்தனர். மகிழ்ச்சி அதனால், தஞ்சாவூர்,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலம், ... |
| சீனாவிடம் நீர்மூழ்கி கப்பல் வாங்கியது வங்கதேசம் Posted: 14 Nov 2016 12:01 PM PST
தாகா : வங்கதேசம் கப்பல்படையில் முதன்முறையாக நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட உள்ளது. இதற்காக சீனாவிடம் இருந்து 2 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியுள்ளது. ரூ.1,370 கோடி செலவில்.. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், வங்க கடல் பகுதியில் அதிகளவு சர்வதேச கடல் எல்லையை மியான்மர் நாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கு பாதுகாப்பை பலப்படுத்த கப்பல்படையில் நீர்மூழ்கி கப்பலை சேர்க்க திட்டமிட்டது. இதற்காக முதல்கட்டமாக சீனாவிடம் இருந்து 1,370 கோடி ரூபாய் செலவில் இரு நீர்மூழ்கி கப்பலை வாங்கியுள்ளது. ... |
| 'அனல்' ஆண்டு: ஐ.நா., எச்சரிக்கை Posted: 14 Nov 2016 01:03 PM PST
மரக்கேஷ் : கடந்த ஆண்டை விட 2016 வெப்பமான ஆண்டாக அமையும் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை: கடந்த ஜன., முதல் செப்., வரை பதிவான உலக வெப்பநிலையின் அடிப்படையில், 2015ஐ விட, 2016 வெப்பமான ஆண்டாக அமையும் என உலக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பதோலி என்ற இடத்தில் கடந்த மே மாதம் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை. கூடுதல் வெப்பம் : நேற்று உலக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் 'கடந்த ஆண்டு பதிவை விட, சராசரியாக ... |
| ‛நல்லுறவுக்கு அதிக முக்கியத்துவம்'; டிரம்ப்-ஜீ ஜின்பிங் உரையாடல் Posted: 14 Nov 2016 03:10 PM PST
பெய்ஜிங் : அமெரிக்காவுடனான நல்லுறவுக்கு சீனா அதிக முக்கியத்துவம் தருவதாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப்பிடம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார். டிரம்புக்கு வாழ்த்து: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும், சீன அதிபர் ஜீ ஜின்பிங் டிரம்புக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். பின் மீண்டும் நேற்று(நவ.,14) டிரம்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஜீ ஜின்பிங் பேசியதாக சீன அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. உறவு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 15,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |