ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எல்லாம் விளையாட்டாப் போச்சு!
- ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
- திருமணம் – ஒரு பக்க கதை
- பேல்பூரி – கேட்டது
- பேல்பூரி – கதிர்
- பேல்பூரி – கண்டது (தினமணி கதிர்)
- சமையல் – ஒரு பக்க கதை
- சாதுரியம் – ஒரு பக்க கதை
- நட்புமொழி – கவிதை
- காலடியில் கிடக்கிறான் சிவன்!
- குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்
- படத்துடன் செய்தி - தொடர் பதிவு
- 3,500 கிலோ அரிசியில் தயாரான சாதம் - கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிஷேகம் : 10 சதவீதம் மீன்களுக்கு வழங்கப்பட்டது
- அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.
- 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
- விலை உயர்ந்தது..
- எனது அறிமுகமும் பதிவுகளும்.
- இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
- புத்தகம் வேண்டும்
- நீர் பயணம்
- மொழிப்பெயர்ப்பு - மலையாளத்திலிருந்து தமிழில் கவிஞர் சம்பீரிதா - மொழிபெயர்ப்பாளர் ஜா.கிரிஜா
- நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும்.
- ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
- புத்தம் புது காலை பொன்னிற வேளை…
- விளக்கம் வேண்டும்
- துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ …
- இன்று தெரியும் சூப்பர் மூன்.
- ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
- பணம்...பணம்...!!
- சின்னி ஜெயந்த் மறுபிரவேசம்!
- செய்வீர்களா மோடி செய்வீர்களா ?
- மான்கள் – சிறுவர் பாடல்
- சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
- பூனை – சிறுவர் பாடல்
- குடியரசு தினம் என்றால் என்ன?
- சன்னி லியோனுக்கு, ‘டப்பிங்’ரம்யா நம்பீசன்!
- மாக்சிம் கார்க்கி - தாய்
- திருவாசகம்!
- நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு
| Posted: 14 Nov 2016 04:04 PM PST ![]() |
| ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி? Posted: 14 Nov 2016 03:26 PM PST புதுடில்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ஒருவர் கணக்கில் காட்டாத 6000 கோடி ரூபாயை அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடியின் அதிரடி: கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான போரின் துவக்கமாக, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமரின் இந்த நடவடிக்கை மிக அவசியமானது என பொருளாதார வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தற்காலிகமாக சிரமங்களை சந்தித்து ... |
| Posted: 14 Nov 2016 01:19 PM PST தனது மகளின் திருமணத்திற்கு அறுசுவை விருந்து படைக்க சமையல்காரர் சாமிநாதனை புக் செய்தார் சார்லஸ். ''திருமணப் பந்தியில சாப்பாடு பரிமாற ஆட்கள் ஏற்பாடு பண்ணணுமா?'' என்று கேட்டார் சாமிநாதன். ''வேண்டாங்க… எங்க சொந்தக்காரங்க இருக்காங்க.. நாங்களே பார்த்துக்கறோம்!'' ''என்னங்க… பந்தியில உணவு பரிமாற நம்ம சொந்தக்காரங்கள விட்டா கடைசி வரைக்கும் பரிமாற மாட்டாங்க, பசிக்குதுன்னு சாப்பிட உட்கார்ந்திடுவாங்க. அப்புறம் பரிமாற ஆட்கள் இல்லாம அவஸ்தைப்படணும்!'' அவரது மனைவி ரீட்டா மறுத்தாள். ''பரவாயில்ல… ... |
| Posted: 14 Nov 2016 01:06 PM PST - கேட்டது – • (திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இருவர்) – "டேய் மாமு… என் வீட்ல ரூமுக்கு ஒரு கடிகாரம் இருக்கு. அதை விட்டுட்டு என் பொண்டாட்டி போன் பண்ணி இப்ப மணி என்னன்னு கேட்குறாடா?" "ஃபீல் பண்ணாத மச்சான்… வீட்டுக்குப் போனதும் உனக்கு நேரம் சரியில்லைன்னு அர்த்தம்" – எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல். – —————————————— – • (நாகர்கோவில் பெருவிளை சாலையில் இளைஞர்கள் இருவர்) "மாப்ளே… ஐநூறு ரூபாய்க்கு சேஞ்ச் இருக்கா?" "நான் இருக்குதுன்னு சொன்னா, 300 ரூபாய் கடன் கேட்பே. உன்னைப் பத்தி தெரியாதா ... |
| Posted: 14 Nov 2016 01:05 PM PST எஸ்எம்எஸ் – துணியை வாங்கிவிட்டு விலையைப் பார்ப்பவன் பணக்காரன். விலையைப் பார்த்துவிட்டு துணியை வாங்குபவன் ஏழை. – ஆர்.ஜனனி ரமணன், ராசிபுரம். – ——————————— யோசிக்கிறாங்கப்பா! – வேம்பு ஷாம்பா இருக்கு. சோப்பா இருக்கு. பேஸ்ட்டா இருக்கு. ஆனால்… மரமாத்தான் இல்லை. – ————————– எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி. |
| பேல்பூரி – கண்டது (தினமணி கதிர்) Posted: 14 Nov 2016 01:03 PM PST கண்டது • (இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் ஓர் ஆட்டோவின் பின்புறம்) – உன் வழி எங்கே? என் வழி அங்கே. – முத்தூஸ், தொண்டி. – —————————————- – • (கிருஷ்ணகிரி காந்திநகரில் புறவழிச்சாலை அருகே உள்ள உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனத்தின் பெயர்) – ஸ்ரீ எட்டுக்கை அம்மன் – ராஜசிம்மன், கிருஷ்ணகிரி. – —————————————— – • (திருச்சி – நாமக்கல் சாலையில் ஒரு சிற்றூரின் பெயர்) – மான் பிடி மங்களம் – ஆர்.செபாஸ்டிகிரேஸ் மேரி, உய்யகொண்டான் திருமலை. — ———————————————- – • (அரியலூர் மாவட்டம் ... |
| Posted: 14 Nov 2016 01:02 PM PST - ''பெண்ணின் பெயர் ஸ்வப்னா. ஐ.டி. கம்பெனியில வேலை செய்யறா. நல்ல சம்பளம். இரண்டு பெண்கள். மூத்தவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இவள் இளையவள்'' என்று சொல்லிக் கொண்டே போன தெய்வசிகாமணியின் கையிலிருந்த போட்டோவை வாங்கிப் பார்த்த சுலோச்சனா முகம் மலர்ந்தாள். ''மூர்த்திக்கு பொருத்தமா இருக்கும். வெள்ளிக்கிழமை போய் பார்த்துட்டு வரலாங்க..''என்று கணவனிடம் சொன்னாள் சுலோச்சனார் பெண்ணை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. பெண்ணின் தகப்பனார் தயங்கியபடி மாப்பிள்ளையைப் பார்த்தார். ''கோவிக்காதீங்க தம்பி. ... |
| Posted: 14 Nov 2016 01:01 PM PST - அழைப்பு மணிச் சத்தம் அடித்தது. சமையலறையிலிருந்து ஓடிவந்து கதவைத் திறந்தாள் குணவதி. பக்கத்து வீட்டு ரேணுகா கையில் துணிப் பையுடன் நின்றாள். ''வா ரேணு! அதிசயமா இந்தப் பக்கம் வந்திருக்கே'' என்று புன்னகைத்தவாறு வரவேற்றாள் குணவதி. ''சும்மாதான்… உங்களைப் பார்த்துட்டு அப்படியே உங்க வீட்ல வேலை செய்ற மரகதத்துக்கு என்னுடைய பழைய புடவைகளைக் கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்க்கா'' என்றாள். 'அவள் வீட்டிலும் வேலைக்காரி இருக்கிறாள். அவளுக்குப் புடவைகளைக் கொடுக்காம நம்ம வீட்ல வேலை செய்ற மரகதத்துக்கு ... |
| Posted: 14 Nov 2016 01:00 PM PST - * அடுத்த ஆணிடம் கைபேசி எண் கேட்டுப் பதிவு செய்கிற பெண்ணைப் பார்த்து பதட்டப் படாதவன் நண்பன் – * சம்மதிக்க வைத்துப் படுத்து எழுந்தும் விடலாம் ஆனால் நிமிரவே முடியாது – * உடல் பார்க்கக் கூப்பிடும் காமம் கடல் பார்க்கக் கூப்பிடும் நட்பு – * எனக்குத் தேவை என்னோடு விவாதிக்க ஒரு மூைள அது ஆண்பாலில் இருந்தால் என்ன பெண்பாலில் இருந்தால் என்ன மூன்றாம் பாலில் இருந்தால் என்ன – * சப்பானிய நண்பனை ஊருக்கு அழைத்திருக்கிறேன் அவனுக்கு வேட்டி சட்டை வாங்கப் போயிருக்கிறார்கள் அப்பா அம்மா – ————————- -அறிவுமதி ஓவியம்: ... |
| Posted: 14 Nov 2016 12:59 PM PST - என் முறிந்த காலில் தாண்டவமாடுகிறான் சிவன் உடைந்த எலும்புத் துண்டுகளில் அதிர்கிறது சிவன் நர்த்தனம் உயிர் நொறுக்கும் வலியில் ஓங்காரமிடுகிறது சிவன் எக்காளம் கோடி ஊசி குத்தும் வலியில் குந்திக் கெக்கலிக்கிறான் சிவன் – உருக்குலைந்த கால் எலும்பை மாலையாக்கினான் குருதித் துளியை ருத்ராட்சமாக்கினான் வலியைச் சாம்பலாக்கினான் – பூசலார் நாயனாருக்கு நெஞ்சில் ஆண்டாள் நாயனாருக்குக் கணுக்காலில் கும்பாபிஷேகம் இப்போது அவன் மூலவன் நான் உற்சவி சிவனுக்குள் கரையச் சென்றேன் எனக்குள் கரைந்தான் ... |
| குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் Posted: 14 Nov 2016 12:57 PM PST - * ''டெல்லியின் மாசு சூழலைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் ஆச்சரியமாகவும், கேலிக்குரிய ஒன்றாகவும் இருக்கிறது'' என ஃபீலாகியிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. - ------------------------ என் கடைசி மூச்சு வரை நடித்துக் கொண்டே இருப்பேன்.'' என சமீபத்தில் மனம் திறந்திருக்கிறார் த்ரிஷா. - ------------------ * 'அனிமல்ஸை தத்து எடுங்க.. விலை கொடுத்து வாங்காதீங்க'னு 'பீட்டா'வுக்காக பூனைக்குட்டியை கையில் ஏந்தி சொன்ன எமி ஜாக்சன் இப்போது, 'சிக்கன் சாப்பிடாதீங்க. வெஜிடேரியனுக்கு மாறுங்க' என சொல்ல ... |
| படத்துடன் செய்தி - தொடர் பதிவு Posted: 14 Nov 2016 12:45 PM PST - சீக்கிய குரு, குருநானக்கின் 548வது பிறந்த நாளான நேற்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில், வழிபாடு நடத்த குவிந்த சீக்கியர்கள். - ---------------------------- |
| Posted: 14 Nov 2016 12:43 PM PST பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 3,450 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தால், அன்னா பிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் உடையது. இங்கு, ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில், அன்னாபிஷேகம் ... |
| அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம். Posted: 14 Nov 2016 12:41 PM PST நேற்றைய தினம் 60 Minutes தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தன் குடும்பத்தினருடன் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது 2-3 மில்லியன் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்,குற்றச்சாட்டுகள் உடைய வெளி நாட்டவர்களும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், அமெரிக்க- மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டப்படும் அதற்கு மெக்சிக்கோ அரசு பணம் தர வேண்டும் என்றும் கூறினார். தேர்தலில் தந்த வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார். ஆனாலும் பல வாக்குறுதிகளில் பின்வாங்கி விடடார். ஹிலாரியை சிறையில் அடைப்பது ... |
| 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு Posted: 14 Nov 2016 12:35 PM PST சென்னை: 2017-ம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தலைமை செயலாளர் ராம மோகன ராவ் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். - இதன்படி அரசு அறிவித்திருக்கும் விடுமுறை நாட்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - மொத்தமுள்ள 22 விடுமுறை நாட்கள் வருமாறு: - விடுமுறை நாட்களின் பட்டியல் 1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை 2.பொங்கல் ... |
| Posted: 14 Nov 2016 10:55 AM PST - இதை விட அது உயர்ந்தது, அதை விட இது உயர்ந்தது என, ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே, மனம் ஈடுபட்டு, உயர்ந்தவைகளை ஒதுக்கி, உதவாதவைகளைத் தேர்ந்து எடுப்பது மனித இயல்பு. ராவணன் முடிவிற்கு பின், விபீஷணர், இலங்கை மன்னராக பொறுப்பேற்று, ஆட்சி செலுத்திய நேரம் அது! ஒவ்வொரு ஏகாதசியன்றும் திருவரங்கம் வந்து, அரங்கநாதரை பூஜிப்பதை வழக்கமாக வைத்திருந்தார், விபீஷணர். அவ்வாறு வந்து போவதை அறிந்த அடியார் ஒருவர், ஒருநாள், விபீஷணர் வருகையை எதிர்பார்த்து, காத்திருந்தார். அப்போது கோவிலுக்கு வந்த விபீஷணர், ... |
| Posted: 14 Nov 2016 10:53 AM PST எனது பெயர் Pranav Jain. 40 வயதாகிறது. சுய தொழில் செய்து வருகிறேன். சமூக மாற்றத்தில் அதிக ஆர்வம் உள்ளது. முகப்புத்தகம் போன்ற சமூக இணையதளங்களில் எழுதுவதைவிட தமிழ் கருத்துக்களங்களில் எழுதுவதால் நமது கருத்துக்கள் என்றும் நிலைத்திருக்கும் என்று நண்பர்கள் அறிவுறுத்தியதால் இங்கு எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். நன்றி. எனது முதல் பதிவு: http://www.eegarai.net/t133561-500#1227094 பதிவு 2: http://www.eegarai.net/t133569-topic#1227107 |
| இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!! Posted: 14 Nov 2016 10:38 AM PST இன்று (நவம்பர்-14) கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள். என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாக கரண்ட் பில் கட்டுவதற்காக சென்றபோது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க முடியாது என்று திருப்பியனுப்பிவிட்டனர். அதனால் ATM ல் டெபாசிட் செய்ய முயன்றபோது கூட்டம் அலைமோதியதால் ஒரு நாள் காலதாமதமானது. அதன் பிறகு வங்கியில் மாற்றலாம் என்று வங்கிக்கு சென்றபோது அங்கும் அதே நிலைதான். மறுநாள் மீண்டும் ஈ.பி ஆபீஸிற்கு சென்று நிலைமையை எடுத்து சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் உள்ள 1000 ... |
| Posted: 14 Nov 2016 10:13 AM PST N.சொக்கன் அவர்கள் எழுதிய மொஸாட் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே! |
| Posted: 14 Nov 2016 09:18 AM PST நீர் பயணம் கார்கொண்டல் மஞ்ஞை தென்றல் தாலாட்டில் அகமகிழ அமிழ்த முத்துகளைக் கழங்காடுகிறது மகிழ்ச்சியின் எதிரொலிப்பு தொடர்கிறது ஆட்டம் ஆட்டத்தின் நளினம் கட்டமைப்புக்குள் பாறை மலைச்சாரல் மேடு பள்ளம் என குளிர்ச்சி அழிக்கிறது இதமாய் கண்களுக்கு தடயம் மாற விளைவுகள் எதிரொலிக்கின்றன ரணங்களாய்! இரத்த ஓட்டம் பெருக்கெடுக்க எமன் வாசல்கதவைத் தட்டுவதைப் போல் பச்சைப்பட்டாடை கம்பளம் மேகத்திற்குக் கைக்கொடுக்கும் அடுக்குகள் எனத் தாவுகிறது ஒவ்வொன்றுக்குள் தாவும் இடங்களுக்குள் பச்சோந்தியாய்… நுழைகிறது ... |
| மொழிப்பெயர்ப்பு - மலையாளத்திலிருந்து தமிழில் கவிஞர் சம்பீரிதா - மொழிபெயர்ப்பாளர் ஜா.கிரிஜா Posted: 14 Nov 2016 09:16 AM PST சகாத்திய அகாடமி விருது பெற்ற மலையாளக் கவிதைத்தொகுப்பான "நீற்றெழுத்து" என்னும் தொகுப்பிலிருந்து 4 கவிதைகள் மட்டும் நீற்றெழுத்து ஆசிரியர் : முனைவர் சம்பிரிதா மொழி : மலையாளம் மொழிபெயர்ப்பாளர் : ஜா.கிரிஜா கொலுசுத் தீவு வெயில் வெள்ளி கரைத்த கடலில் கொலுசு தேடிப் போன பெதும்பைப்பெண் தீவாய்க் கடல் நடுவில் தோன்றினாள். கரையேறாக் கப்பல்கள் எண்ணெய் வார்த்த மாலை வேளைகளில், அந்திப் பொழுதுகளின் வாகைப்பூ வீழ்ந்த கடல் மேற்பரப்பில் அவளுடைய பச்சைநிற பாவாடை. அவள் திரைகளுக்குள் ... |
| நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Posted: 14 Nov 2016 09:14 AM PST பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென்று அறிவித்ததால் அப்பாவிப் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டையும் வெளியிட்டு நடைமுறைப் படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நடைமுறை என்பது ஒரே நாளிலோ, ஒரே இரவிலோ நடக்கக் கூடிய விஷயம் அல்ல. மேலும் இதை மோடி மட்டும் செய்யவில்லை. ரிசர்வ் வாங்கிதான் புதிய 2000 ரூபாய் நோட்டை அச்சடித்து வெளியிட்டிருக்கிறது. எனவே ... |
| Posted: 14 Nov 2016 09:12 AM PST ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக) முன்னுரை பெண் இயங்குத்தளம் சமுதாயக்கட்டுக்குள் அடங்கியது. பெண்ணானவள் தன் நிலை சார்ந்து விருப்பத்துடன் செயலாற்ற இச்சமுதாயம் அனுமதிக்கவில்லை. சமுதாய கட்டமைப்புக்குள் அடங்கிச் செயல்படும் பெண், அதிலிருந்து விடுபட நினைக்கும் பெண் இவ்வாறு பெண்களின் மன உணர்வு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதினைக் கவிஞர் ஸர்மிளா ஸைய்யித் கவிதைத்தொகுதிகளான சிறகு முளைத்த பெண், ஒவ்வா இவற்றின் ஊடாக வெளிப்படுத்துகிறது ... |
| புத்தம் புது காலை பொன்னிற வேளை… Posted: 14 Nov 2016 08:27 AM PST — படம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்: S ஜானகி பாடலாசிரியர்: வைரமுத்து – ———————– – புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் (புத்தம்…) – பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் (புத்தம்….) – வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ வயதில் ... |
| Posted: 14 Nov 2016 07:32 AM PST வணக்கம் நண்பர்களே! எனக்கு ஒரு சந்தேகம் இச்சாதாரி நாகம் என்பது உண்மையா பொய்யா? |
| துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Posted: 14 Nov 2016 07:30 AM PST படம் : ஓர் இரவு (1951) பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா பாடலாசிரியர் : பாரதிதாசன் இசை :சுதர்சனம் – ————————— – துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? – அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? – வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க – எம் வாழ்வில் உணர்வு சேர்க்க ... |
| Posted: 14 Nov 2016 06:32 AM PST நாளை (இன்று 14.11 ) தெரியும் சுப்பர் மூன். |
| ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு Posted: 14 Nov 2016 05:00 AM PST ரூ.500, 1000 நோட்டுகள் நவ.24 வரை செல்லும்: 1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும். 2. காஸ் சிலிண்டர் வாங்கலாம். 3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம். 4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம். 5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். 6. நாடு முழுவதும் மைக்ரோ ... |
| Posted: 14 Nov 2016 04:47 AM PST முதலைகளை விட்டு விட்டு மீன்களை வேட்டையாடுகிறார்கள். * கோடீஸ்வரர்கள் பாராட்டுகிறார்கள் தொழிலாளிகள் சபிக்கிறார்கள். * ரூ.2000/- சாதாரண மக்கள் நோட்டு அல்ல * செலவழிப் பணமில்லாமல் அலைகிறார்கள் மக்கள். * அவர்கள் திறமையை அவர்களே பாராட்டிக் கொள்கிறார்கள். * ரூ.1/-, 10/-, 100/- க்கே சில்லறை கொடுக்க மாட்டேங்கறாங்க. பஸ்கள்லே.. ரூ.2000/- க்கு எப்படி கொடுக்கப் போறாங்க. ந.க.துறைவன். |
| Posted: 14 Nov 2016 04:47 AM PST - தமிழ் சினிமாவில், 30 ஆண்டுகளாக காமெடி மற்றும் குண சித்திர வேடங்களில் நடித்து வரும் சின்னி ஜெயந்துக்கு, சமீபகாலமாக படங்கள் இல்லை. இந்நிலையில், ரூபாய் என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து, மறுபிரவேசம் செய்திருக்கும் அவர், 'ஒரு காலத்தில் சினிமாவில், 'பிசி'யாக இருந்தேன்; ஆனால், இப்போது சினிமா என்னை மறந்து விட்டது. புதுவரவு இயக்குனர்கள், என்னை கண்டு கொள்வதே இல்லை. ஆனால், நான் சினிமாவை விட்டு விலகவில்லை; இப்போதும், சினிமாவிற்குள் தான் இருக்கிறேன். என்னையும், அவர்கள் ஒரு கலைஞனாக ... |
| செய்வீர்களா மோடி செய்வீர்களா ? Posted: 14 Nov 2016 04:27 AM PST செய்வீர்களா மோடி செய்வீர்களா ? நன்றி முகநூல் ரமணியன் |
| Posted: 14 Nov 2016 03:07 AM PST - ![]() |
| சிட்டுக்குருவி – சிறுவர் பாடல் Posted: 14 Nov 2016 03:07 AM PST - ![]() |
| Posted: 14 Nov 2016 03:04 AM PST - ![]() |
| Posted: 14 Nov 2016 02:15 AM PST - நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப் பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது ... |
| சன்னி லியோனுக்கு, ‘டப்பிங்’ரம்யா நம்பீசன்! Posted: 14 Nov 2016 02:10 AM PST - - பீட்சா மற்றும் சேதுபதி படங்களில், விஜயசேதுபதியுடன் நடித்தவர், ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான இவருக்கு, தமிழில், பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், பல தமிழ் படங்களில், பின்னணி பாடி வருகிறார். இந்நிலையில், சன்னி லியோன் நடித்த, ராகினி எம்.எம்.எஸ்., என்ற இந்தி படம், தற்போது, தமிழில், ராத்திரி என்ற பெயரில், 'டப்' செய்யப்பட உள்ளது. இப்படத்திற்காக, சன்னி லியோனுக்கு, 'டப்பிங்' வாய்ஸ் கொடுக்கிறார் ரம்யா நம்பீசன்.'கிக்' கலந்த குரலில் பேச வேண்டும் என்பதற்காக, ரம்யா ... |
| Posted: 14 Nov 2016 01:36 AM PST மாக்சிம் கார்க்கி - தாய் நூல் அறிமுகம் - http://www.eegarai.net/t128795-டொபிக் நூல் தரவிறக்கம் - https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9d/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf |
| Posted: 14 Nov 2016 12:31 AM PST - – உழி தரும் காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் இழி தரு காலம் எக்காலம் வருவது வந்ததற்பின் உழி தரு காலத்த உன் அடியேன் செய்த வல்வினையைக் கழி தரு காலமும் ஆய் அவை காத்து எம்மைக் காப்பவனே! – விளக்கம்: - காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம் உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க வல்ல காலத்தை ஆளும் இறைவா… என் கொடிய வினையை நீக்கி, அருளுக! – ———————- |
| நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு Posted: 13 Nov 2016 09:34 PM PST குணசித்ர நடிகராகும் பிரகாஷ்ராஜ்!- - - பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட், 'டவுனாகி' விட்டது. அதனால், பிரியதர்ஷன் இயக்கியுள்ள, சில சமயங்களில் என்ற படத்தில், குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன், யாக்கை உள்ளிட்ட தான் வில்லனாக நடித்துள்ள படங்களில், நகைச்சுவை வில்லனாகியிருக்கும் பிரகாஷ்ராஜ், அழுத்தமான அப்பா வேடங்களில் நடிப்பதிலும், ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார். – ——————————————– — சினிமா பொன்னையா. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


.jpg)
.jpg)