Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முலாயம் - அகிலேஷ் மீண்டும் மோதல்

Posted: 13 Nov 2016 07:59 AM PST

லக்னோ: சமாஜ்வாதி கட்சியில், அடுத்த ராஜ்ய சபா தலைவர் யார் என்பதில் கட்சித் தலைவர் முலாயம், அவரது மகன் அகிலேஷ் யாதவ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகி லேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ளது.கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது சகோதரர் சிவ்பால் யாதவ் மற்றும் கூடிய உயர்நிலை குழு கூட்டம், லக்னோவில், முலாயம் தலைமையில் நடந்தது. இதில் சிவ்பால், அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கட்சியின் ராஜ்யசபா தலைவராக இருந்த முலாயம் சிங் யாதவின் ...

கவலை வேண்டாம்! வங்கிகளில் போதிய பணம் உள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி :ஏ.டி.எம்., களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய அவசியமில்லை

Posted: 13 Nov 2016 08:48 AM PST

மும்பை:'வங்கிகளில் போதிய பண இருப்பு உள்ளது; மக்கள் கவலைப்படத் தேவை யில்லை; அடிக்கடி ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, பழைய நோட்டுகளை மாற்ற வும், வேறு நோட்டுகளை பெறவும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களுக்கு, பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.பல சமயங்களில், ஏ.டி.எம்., களில் பணம் கிடைக்காததால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி ...

கறுப்பை வெள்ளையாக்க பண முதலைகள்... தந்திரம்!:மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நோட்டுகள் மாற்றம்? :கண்காணிப்பு வளையத்துக்குள் ௮௦ லட்சம் வங்கி கணக்குகள்

Posted: 13 Nov 2016 09:33 AM PST

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், விழி பிதுங்கியுள்ள பண முதலைகள், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் தந்திரத்தில் ஈடு பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் உள்ள, 80 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கிக் கணக்குகளும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.

மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள சாமானிய மற்றும் நடுத்தர மக்களிடம் பலத்த வர வேற்பை பெற்று உள்ளது. 'குறைந்த விலை யில், வீடு, மனை வாங்கலாம்; விலைவாசி அடியோடு குறையும். பல நலத்திட்டங்களை மத்திய அரசு ...

பினாமி பெயரில் சொத்தா தப்ப முடியாது என்கிறார் மோடி

Posted: 13 Nov 2016 09:39 AM PST

பனாஜி:''கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக் கைகளுக்காக மிரட்டப்படுகிறேன்; நாட்டின் நலனுக்காக உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அடுத்ததாக, பினாமி பெயரில் சொத்து சேர்த்துள்ளவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார்.கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒடுக்குவதற்காக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். இந் நிலையில்,அடுத்த ஆண்டு சட்டசபை தேர் தலை சந்திக்கும் கோவாவில், நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:லோக்சபா தேர்தல் ...

செல்லாத நோட்டு அறிவிப்பால் ஏழைகளுக்கு பெரும் நிம்மதி ராகுல் மீது மோடி மறைமுக தாக்கு

Posted: 13 Nov 2016 09:44 AM PST

பெலகாவி:"சுரங்கம், '2 ஜி' முறைகேட்டில், கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தவர்கள், 4,000 ரூபாய்க்கு வீதியில் நின்றனர்," என, பெலகாவியில் நடந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை மறைமுகமாக தாக்கினார்.

கர்நாடகா பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் பலர் இருந்தாலும், நமக்கு பிடித் தது சிலர் மட்டுமே. லோக்மான்ய திலகர், கிராந்தி யோகி பசவன்ன ரின் கருத்துகளால்,கர்நாடக லிங்காயத்து கல்வி குழுமங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இக்குழுமத் தில் படித்த பலரும், நாட்டின் வெவ்வேறும் இடங்களில் ...

அதிகாரிகளின் பணித்திறன் அறிக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய அனுமதி

Posted: 13 Nov 2016 09:47 AM PST

புதுடில்லி:அரசு அதிகாரிகளின் பணித்திறன் குறித்த அறிக்கைகளை, அடுத்தாண்டு முதல், ஆன்லைனில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.

மத்திய உள்துறை, வனம் மற்றும் பருவநிலை மாற்றம், பொது நிறுவனங்கள் துறை, நிதிச் சேவைகள் துறை போன்றவற்றுக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, சமீபத்தில் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், அரசு அதிகாரிகளின்பணித்திறன் தொடர்பான அறிக்கைகளை, அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் தாக்கல் செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 17ம் தேதி, அரசு துறைகளின் பிரதிநிதிகள் ...

'மறுபிறவி எடுத்துள்ளேன்': முதல்வர் ஜெ., உருக்கம்

Posted: 13 Nov 2016 09:50 AM PST

சென்னை:'மக்களின் பிரார்த்தனை, வழிபாடுக ளால் மறுபிறவி எடுத்துள்ளேன்' என, முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், செப்., 22 முதல், சென்னை, அப்பல்லோ மருத் துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று வெளியிட்ட அறிக்கை:என் மீது மிகுந்த அன்பும், பற்றும், அக்கறையும் கொண்டு, தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும், நீங்கள் செய்த பிரார்த்தனைகளாலும், வழிபாடுகளாலும், ...

பா.ஜ., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் திடீர் ஆலோசனையால் பரபரப்பு

Posted: 13 Nov 2016 09:53 AM PST

கரூர:அரவக்குறிச்சி தொகுதி, பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., வேட்பாளர்கள், திடீரென சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் நேற்று, , அரவக்குறிச்சியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் பிரபு, தே.மு.தி.க., வேட்பாளர் முத்து ஆகியோர் பிரசாரம் செய்தனர். அப்போது, தாதம்பாளையம் அருகே இருவரும் சந்தித்து, வணக்கம் வைத்து கொண்டனர். பின், இருவரும் பிரசார வாகனத்தை விட்டு இறங்கி, தனியாக சென்றனர். தொடர்ந்து, 15நிமிடங்கள் ஆலோசனை நடத்திய அவர்கள், பின் பிரசாரத்தை துவக்கினர். எதிரும் புதிருமாக, அவரவர் கட்சி ...

வெறிச்சோடி கிடக்கும் பார்லி., வங்கிகள்

Posted: 13 Nov 2016 09:54 AM PST

புதுடில்லி:செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, தலைநகர் டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாக வங்கி களில் மாற்றுவதற்கு, கூட்டமில்லை; ஆனால் வெளியாட்களுக்கு தான் அனுமதியில்லை.

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும், வங்கி கிளைகளையும், ஏ.டி.எம்.,களையும் மக்கள் மொய்த்து வருகின்றனர்.அதே நேரத்தில், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வங்கிகளில் பணத்தை மாற்றவும், எடுக்கவும் அதிக கூட்டமில்லை. பார்லி., வளாகத்தில், எஸ்.பி.ஐ., வங்கியின் இரண்டு கிளைகள் உள்ளன; ...

ஐ.ஏ.எஸ்., நுழைவு தேர்வு; ஒப்புகை சீட்டு கிடையாது

Posted: 13 Nov 2016 10:09 AM PST

புதுடில்லி : 'ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு, இனி காகித வடிவில், ஒப்புகை சீட்டு வழங்கப்படாது' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., தேர்வுகள்:
இது குறித்து, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்டவற்றுக்கு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ...

ரயில் நிலையங்களில் வரலாற்று படைப்புகள்

Posted: 13 Nov 2016 11:05 AM PST

புதுடில்லி: சென்னை, மும்பை உட்பட, நாடு முழுவதும் உள்ள, 28 முக்கிய ரயில் நிலையங்கள், ராமாயணம், முகலாய பேரரசர் அக்பர் உள்ளிட்ட, வரலாற்று படைப்புகளை குறிக்கும் வகையில், மாற்றி அமைக்கப்பட உள்ளன.
ரயில்வே நடவடிக்கை:
பல்வேறு புதிய வசதிகளுடன், ரயில் நிலையங்களின் புறத்தோற்றத்தையும் மேம்படுத்த, ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 400 ரயில் நிலையங்களை நவீன மயமாக்கும் திட்டம் நடைமுறைபடுத்தப் பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 14 ரயில்வே கோட்டங்களில் உள்ள, 28 ரயில் நிலையங்களில், வரலாற்று படைப்புகளை விளக்கும் வகையில், ...

பலுசிஸ்தான் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 52ஆக உயர்வு

Posted: 13 Nov 2016 12:44 PM PST

பலுசிஸ்தான்: பலுசிஸ்தான் மாகாணத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 52ஆக உயர்ந்தது.

குண்டுவெடிப்பு:
பாகிஸ்தானின் பலுசிஸ்தானிலுள்ள ஷா நுாரானி எனப்படும் வழிப்பாட்டு தளம் அருகே கடந்த சனிக்கிழமை பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கண்டனம்:
பாக்., அதிபர் மம்னூன் ஹுசைன் மற்றும் ...

டிரம்ப் அமைச்சரவையில் பாபி ஜிண்டால்?

Posted: 13 Nov 2016 02:54 PM PST

வாஷிங்டன் : அமெரிக்க அமைச்சராக தேர்வாகியுள்ள டிரம்பின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் இடம் பெறக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இந்திய வம்சாவளியினர்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டு பின் விலகியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால்(45). அமெரிக்காவில் மாகாண கவர்னராக பதவி வகித்த முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்நிலையில் டிரம்பின் அமைச்சரவையில் பாபி ஜிண்டால் இடம் பெறக்கூடும் என்ற தகவல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™