Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பஞ்சாப் - ஹரியானா நீர் பங்கீட்டு பிரச்னை அரசியலானது!: காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 42 பேர் ராஜினாமா

Posted: 10 Nov 2016 08:33 AM PST

சண்டிகர்:'சட்லஜ் - யமுனை இணைப்பு கால் வாய் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையில், பஞ்சாப் அரசு இயற்றிய சட்டம் செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள்,தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையி லான அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், சட்லஜ் - யமுனை இணைப்பு கால்வாய் திட்டம் தொடர்பான ...

அதிபர் ஒபாமாவை சந்தித்தார் டிரம்ப்

Posted: 10 Nov 2016 10:26 AM PST

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அதிபர் தேர்தல் :
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் தேதி(நவ.,8) நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர்.
டிரம்ப் வெற்றி:
மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில், 270 ...

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பொதுமக்கள் படையெடுப்பு!:ரூபாய் நோட்டுகளை மாற்ற பெரும் தள்ளு முள்ளு

Posted: 10 Nov 2016 09:20 AM PST

மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்ததால் தவித்த பொதுமக்கள், நாடு முழுவதும் நேற்று, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு படையெடுத்தனர். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முற்பட்ட போது, பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஏ.டி.எம்., மையங்கள், இன்று செயல்படும் என்பதால், சிக்கல் ஓரளவு தீரும்.

நாட்டில், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகை யிலும், கள்ள நோட்டு புழக்கத்தை ஒடுக்கும் வகையிலும், '500, 1,000 ரூபாய் நோட்டுகள், நவ., 8 இரவு முதல், செல்லாது' என, பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக, வேறு, 500 ரூபாயும், புதிதாக, 2,000 ரூபாயும் அறிமுகம் செய்யப்படும் ...

மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து; டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 10 Nov 2016 09:24 AM PST

தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயி களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 'மீத் தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப் படுகிறது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங் களில், 691 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள நிலக்கரிப் படுகையில் இருந்து, மீத்தேன் எரிவாயு எடுக்கும் ஒப்பந்தம், ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த, 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.
நிலத்தடி நீர் பாதிப்பு
கடந்த, 2010ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத் தின்படி, டெல்டா ...

ஆறு மாதமாக அடி எடுத்து வைத்து...

Posted: 10 Nov 2016 09:27 AM PST

மும்பை:'கடந்த, 7, திங்கட்கிழமை, ரிசர்வ் வங்கியிடமிருந்து அழைப்பு. அனைவரும் சென்றோம். 'டபுள்லாக்' செய்யப்பட்ட பெட்டிகள் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டு, 'நாங்கள் சொல்லும் வரை, இவற்றைத் திறக்கக் கூடாது; யாரிடம் சொல்லவும் கூடாது' என, அறிவுறுத்தல்; அலுவலகம் திரும்பினோம்.

'அடுத்த நாள், அதாவது, 8ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முன்பாக, மறுபடி ரிசர்வ் வங்கியிட மிருந்து அழைப்பு, உடனடியாக அங்கு வரும் படி... சரியாக, 7:00 மணிக்கு அங்கு கூடினோம். 8:00 மணி வரை, நெருக்கடியில் சிக்கியுள்ள சொத்துக்களை, நிலையான கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான விவாதங்களை நடத்தினோம். ...

அதிரடி தொடரும் பிரதமர் மோடி உறுதி

Posted: 10 Nov 2016 09:31 AM PST

புதுடில்லி:'கறுப்புப் பணத்தை ஒழிப்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது; அது தொடர் பான அரசின் நடவடிக்கைகள் தொடரும்' என, பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்'தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள கருத்துப் பதிவு:கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது; அது தொடர்பான நடவடிக்கைகள் தொடரும். நாடு, வளர்ச்சிப் பாதை யில் செல்கிறது.அதன் பலன், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வரை, மத்திய அரசு ஓயாது. புதிய கரன்சிகளை பெறுவதில், மூத்த ...

தி.மு.க., அறக்கட்டளை ரூ.72 லட்சம் வரி பாக்கி

Posted: 10 Nov 2016 09:33 AM PST

சென்னை:அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள, தி.மு.க., அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டடங்களுக்கு, 73 லட்சம் ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும், 72 லட்சம் ரூபாய் வரியை, அறக்கட்டளை நிலுவை வைத்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில், தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவால யம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், 'கலைஞர் அரங்கம்' உட்பட, பல்வேறு கட்டடங் கள் உள்ளன. இந்த கட்டடங்களுக்கு, சொத்து வரி குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக, புகார் எழுந்தது.இதையடுத்து, அப்போதைய மேயர் சைதை துரைசாமி உத்தரவின்படி, அறிவாலய வளாகத்தில் உள்ள, தி.மு.க., ...

தமிழகம் பொருளாதார நெருக்கடியில் உள்ளதா? அரசு செயலர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted: 10 Nov 2016 09:36 AM PST

சென்னை:'தமிழகம், பொருளாதார நெருக்கடி யில் உள்ளதாக, அரசு அறிவிக்கப் போகிறதா' என்பதற்கு பதிலளிக்கும்படி, நிதித்துறை செயலருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக நீதித்துறைக்கு, நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, 2002ல், வழக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். மேலும் நீதித்துறைக்கு தேவையான உட் கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவரும் மனு தாக்கல் செய்தார். அத்துடன், சார்பு நீதிமன்றங்களுக்கு மரத்தி லான பொருட்கள் வாங்குவது ...

விஜயகாந்த் பிரசாரம் கைகொடுக்குமா? தே.மு.தி.க.,வினர் கவலை

Posted: 10 Nov 2016 09:38 AM PST

மூன்று தொகுதிகளில், விஜயகாந்த் பிரசாரம் செய்யவுள்ள நிலையில், அது கைகொடுக்குமா என, தே.மு.தி.க.,வினர் கவலையில் உள்ளனர்.

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ல் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், தே.முதி.க., வும் களமிறங்கி உள்ளது. வெற்றி பெற முடியா விட்டாலும், அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு அடுத்த இடத்தை பெறவும், பா.ஜ., - பா.ம.க., வை பின்னுக்கு தள்ளவும், தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. இதற்காக, அ.தி.மு.க., - தி.மு.க., பாணியில், அனைத்து மாவட்டதே.மு.தி.க.,வினரும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ...

எரிப்பார்களா புதைப்பார்களா?

Posted: 10 Nov 2016 10:47 AM PST

ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இனி, செல்லாது' என்ற, அறிவிப்பால், பாதாளத்தில் விழுந்தது போன்று பதறுகின்றனர், கறுப்பு பண பதுக்கல்காரர்கள். இவர்கள், தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

அரசியல், அதிகார மட்டத்தில் செல்வாக்கு மிகுந்த நபர்களை தொடர்பு கொண்டு, உதவி கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத பண பரிமாற்றங்களை வருமான வரித்துறையினர், தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், அதையும் மீறி சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, ...

1,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக எரிப்பு

Posted: 10 Nov 2016 12:26 PM PST

லக்னோ: உ.பி., மாநிலத்தில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; கறுப்பு பணம் எரிக்கப்பட்டதா என, ரிசர்வ் வங்கி விசாரணையை துவக்கியுள்ளது.
கட்டுக்கட்டாக..
நேற்று முன்தினம், ஏ.டி.எம்., மையங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்ததால், கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள், அன்றாட தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாமல், கடுமையாக அவதிப்பட்டனர். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ள, உ.பி., மாநிலம், பரேலி நகரில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ...

‛அடடே புரட்சிகரமான முடிவா இருக்கே': மோடிக்கு அன்னா ஹசாரே பாராட்டு

Posted: 10 Nov 2016 01:16 PM PST

புதுடில்லி: 500 ,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்பு துணிச்சலான, புரட்சிகரமான முடிவு என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.கறுப்புபணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்துக்கட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 7-ம் தேதி இரவு தடலாடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கையில் வைத்திருக்கும் பழைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து டிச.30-ம் தேதிக்குள் பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தார். இதனால் நேற்று முதல் மக்கள் வங்கியில் குவிந்த வண்ணம் ...

டில்லியில் காற்று மாசு: நீதிபதிகள் வேதனை

Posted: 10 Nov 2016 02:03 PM PST

புதுடில்லி: 'நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத அரசியல்வாதிகள், வெறும் ஓட்டு வங்கியாகவே பொதுமக்களை பார்க்கின்றனர்' என, டில்லி ஐகோர்ட் குற்றம் சாட்டியுள்ளது.
புகை மூட்டம் :
டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. தீபாவளியை முன்னிட்டு, மக்கள் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட புகை, அண்டை மாநிலமான பஞ்சாபில், விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள புகை ஆகியவற்றால், டில்லியில், பெரும் புகை மூட்டம் நிலவுகிறது. இதனால், மக்களுக்கு மூச்சுத்திணறல் ...

குப்பையில் கிடந்த 1,000 ரூபாய் நோட்டுகள்

Posted: 10 Nov 2016 03:10 PM PST

புனே : மஹாராஷ்டிர மாநிலம், புனேயில், குப்பையுடன் வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பையில், 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 1,000 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
குப்பையில்...
புனே நகரில் உள்ள சட்டக்கல்லுாரி சாலையில், குப்பையுடன் கொட்டி கிடக்கும், பழைய பேப்பர்கள் மற்றும் கழிவு பொருட்களை சுத்தம் செய்வதற்காக, நேற்று பெண் சுகாதார ஊழியர் சாந்தா ஓவ்ஹல் சென்றுள்ளார். அப்போது குப்பையில் கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து பிரித்து பார்த்துள்ளார். அதில் ஏராளமான, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
52 ஆயிரம் ரூபாய் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™