Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கண்களைக் கலங்க வைத்த காணொளி-குறும்படம்.

Posted: 10 Nov 2016 09:34 AM PST

முன்னர் இந்தக் காணொளி வந்ததா எனத் தெரியவில்லை.வந்திருந்தால் பதிவிட்டதற்கு மன்னிக்கவும்.நிக்கி விடலாம்.



பசி எல்லாருக்கும் பொதுவானது.அனைவரையும் மதிப்போம்.

நான் இரசித்த பாடல் - 8

Posted: 10 Nov 2016 09:28 AM PST

சிவாஜி கணேசனின் முதல் படம் பராசக்தி. இதில் புதுப் பெண்ணின் மனத்தை தொட்டு..... என்ற பாடலை எம்.எஸ்.இராஜேஸ்வரி பாடியுள்ளார். இந்தப் பாடல் தொடக்கத்தில் வரும் நீரோ மன்னன் பற்றிய வசனம் தவறானது. ரோம் வரலாற்றில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததாகக் கூறப்படவில்லை. அதுமட்டுமல்ல அப்போது பிடில் என்ற வாத்தியம் வரவும் இல்லை. இதை அப்போது நீரோ மன்னனுடன் வாழ்ந்த அரசவை செனட்டரும் வரலாற்று ஆசிரியருமான டாசிட்டஸ்(Tacitus) தனது நூலில்  குறிப்பிட்டிருக்கிறார்.அதுபற்றி அவர் குறிப்பிடும் போது நீரோ மன்னனுக்கு எதிரான ...

புன்னகைக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி…

Posted: 10 Nov 2016 07:57 AM PST

இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?" "ஐந்து வருஷமா இருக்கேங்க!" "நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை" "தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?" "என்ன சார் சொல்றாங்க?" "மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் ...

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Posted: 10 Nov 2016 07:35 AM PST

1. மின்சாரம் இல்லாமலேயே மினு மினுப்பவன்… இது என்ன? - 2. தானும் சுற்றுவான், தனக்குப் பெரியவரையும் சுற்றுவான்… யார் இவன்? - 3. இரவில் மட்டும் வருவான்… திருடன் அல்ல… - 4. சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை என்று கணக்கற்ற சட்டை போட்டிருப்பான், ஆனாலும் இவனுக்கு வியர்க்காது… யார் இவன்? - 5. உள்ளேயே இருந்தால் உல்லாசமாகச் சுற்றிச் சுற்றி வருவான்…. வெளியில் வந்துவிட்டாலோ தவித்து, அடங்கிப் போவான்… - 6. நீரிலிருந்து வெளியே வந்த பாறை, பாறை அல்ல… நான்கு கால்கள் உண்டு… யானையும் அல்ல.. ...

ரூ.500, ரூ.1000 வாங்க மாட்டோம்... ஆனா காசு கொடுக்காம சாப்பிடலாம்... நெல்லையில் 'அடடே' ஹோட்டல் !

Posted: 10 Nov 2016 07:30 AM PST

ரூ.500, ரூ.1000 வாங்க மாட்டோம்... ஆனா காசு கொடுக்காம சாப்பிடலாம்... நெல்லையில் 'அடடே' ஹோட்டல் ! நெல்லை : ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மாட்டோம். ஆனா காசில்லாம சாப்பிடலாம். முடிஞ்சா அப்புறம் பணம் கொடுங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை," என அறிவித்து சேவையாற்றி வருகிறது நெல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்று. நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் பணம் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அத்துடன், நேற்று ஒருநாள் வங்கிகள் மூடப்பட்டதுடன், ஏ.டி.எம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 10 Nov 2016 07:28 AM PST


-

-
-

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Posted: 10 Nov 2016 07:26 AM PST

பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்…!!

Posted: 10 Nov 2016 04:27 AM PST


-
-
தொடரும்....

லண்டனில் டிராம் வண்டி தடம்புரண்டு விபத்து: 7 பேர் சாவு

Posted: 10 Nov 2016 02:53 AM PST

லண்டனில் டிராம் வண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள். லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள க்ராய்டான் இடத்தில் டிராம் வண்டி இன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராம் வண்டியில் பயணித்த பயணிகளில் 7 பேர் பலியானார்கள். 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணமான டிராம் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். ...

பட்டதாரி: (கவிதை)- சசி எழில்மணி

Posted: 10 Nov 2016 02:46 AM PST

- வெளிநாட்டு மோகத்தில் உற்றார் உறவினர் அனைத்தையும் துறந்து பிறந்து வளர்ந்த தாய்திரு நாட்டையும் மறந்து பொறாமை குணத்தை மனதிலே வளர்த்து படித்த புத்தகத்தை மனனம் செய்து போட்டி தேர்வில் மதிப்பெண் ஒன்றையே கருத்தினில் வைப்பார் – மெத்தப் படித்த மேதாவி என்று நினைப்பை வளர்த்திடுவார் தான் என்ற அகந்தையை மனதிலே சுமந்திடுவார் நிலைமைகள் மாறிட வேதனையில் துடிப்பார் – அனுபவ அறிவை ஏளனம் செய்வார் பாமர அறிவும் இல்லாத பட்டதாரி – ———————- நன்றி- கவிதைமணி படம்-இணையம்

போஸ்ட் மார்ட்டத்துக்கு சார்ஜ் கம்மிதான்…!

Posted: 10 Nov 2016 12:40 AM PST

வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போல்..

Posted: 10 Nov 2016 12:18 AM PST

படம்: அன்பே ஆருயிரே இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா வரிகள்: வாலி – ———————— போ போ போ போ – வருகிறாய் தொடுகிறாய் என்னை வெந்நீர் போலே சுடுகிறாய் வருகிறாய் தொடுகிறாய் என்னை வெந்நீர் போலே சுடுகிறாய் போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய் போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய் – வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன் வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன் நீ போ போ என்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய் – போ போ – வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய் காதல் ...

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை

Posted: 10 Nov 2016 12:17 AM PST

படம்: பீமா இசை: ஹாரீஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி – ——————————– – சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே – சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே நீ தூரப்பச்சை என் நெடுநாள் இச்சை ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே – தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா (சிறு பார்வையாலே..) – உதைக்கும் ...

ஆசையா…மோகமா…அதையும் தாண்டி காதலடி…!!

Posted: 10 Nov 2016 12:12 AM PST

பட்டதாரி -(கவிதை)- வ.இசக்கிராஜூ

Posted: 10 Nov 2016 12:09 AM PST

- பட்டதாரி கல்யாணச் சந்தையிலே விலை போக வேண்டி எனை விலை பேசி விட்டு வந்தார் கல்விச் சந்தையிலே – அப்பப்பா ! – அடி மாட்டுக் கூட்டத்திலே நானுமொரு அடி மாடாய் கல்லூரி யெனும் கெட்டிலிலே. – படித்த எனக்கும் புரியவில்லை பாடம் எடுத்தவனுக்கும் விளங்கவில்லை ஆனாலும் நான் பட்டதாரி – கணக்கு பார்க்க ஒரு கூட்டம் காசு பார்க்க ஒரு கூட்டம் கடை தெருவில் விழி பிதுங்கி நிற்பதென்னவோ கல்வி மட்டும் தான். – அறிவுப் பசி மேல் எழும்ப வயிற்றுப் பசி கீழ் இழுக்க வறுமைக் கோட்டில் மயங்கிச் சாயும் அவல ...

அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை

Posted: 10 Nov 2016 12:09 AM PST

- கவுதாரி பறவைகள் (கோப்புப் படம்) – கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங் களில் முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் பரவலாகக் காணப் படுகின்றன. சாதாரண நாட்டுக் கோழிகளைப் போன்ற உடல் அமைப்புடன் பருத்த உடல் அமைப்பைக் கொண்ட இந்தப் பறவைகள், இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன. 30 சதவீதம் அழிந்துவிட்டன விவசாயத்தில் பூச்சிக்கொல்லி ...

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும்: நிதித்துறை செயலாளர்

Posted: 09 Nov 2016 11:47 PM PST

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்று வியாழக்கிழமை (நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து விநியோகம் செய்து வருகின்றன. - இந்நிலையில், வங்கிகள் விநியோகம் செய்யப்படும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500 மற்றும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை என தகவல்கள் வெளியானது. - இதையடுத்து நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் ...

ரிடையர்மெண்டுக்குப் பிறகு …

Posted: 09 Nov 2016 11:14 PM PST

- ரிடையர்மெண்டுக்குப் பிறகு; என்னென்னவோ செய்யலாம்? மனமுவந்தும், மனத் திருப்தியோடும் செய்வதற்கு எத்தைனையோ விசயங்கள் இருக்கின்றன. - ஆனால் அவையெல்லாம் அவரவர் மனதளவில் நின்று போகின்றன. பின்பு நடப்பதெல்லாம்; - ஆண்கள்/ பெண்கள் என்ற வேறுபாடின்றி ரிடையர்டு ஆன எல்லோருமே ஒரு குறுகிய வாழ்க்கை வட்டத்தில் சிக்குண்டு மீள முடியாதவர்களாகிப் போகிறார்கள் கூட்டுக் குடும்பம் எனில் பேரன் பேத்திகளை பள்ளிக்கு கொண்டு விட்டு, திரும்ப அழைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கிறார்கள். - ஆண்கள் மாதா மாதம் ...

கடி ஜோக்ஸ்

Posted: 09 Nov 2016 11:07 PM PST

காடுகள் அமைத்து சாலையோர சிற்றுண்டி விடுதிகள், பூங்காக்கள் வைத்தார். நீச்சல் குளங்கள் வெட்டி, ஜிம் அமைத்து அடுக்குமாடி வீடுகள் கட்டினார்". "என்னடா இது?" ""நியூ ஹிஸ்டரி!" ஏ.நாகராஜன், – —————————————– * "லண்டன் போய் சுத்தி பார்க்கலாம்னு இருக்கேன்" ""சுத்தியை பார்க்கவா லண்டன் வரை போகிறாய்?" சீ.பிரவீன், – ——————————————– – "நாங்க அண்ணன் தம்பி மூணு பேர். மூணு பேரும் பஸ் கண்டக்டரா இருக்கோம்!" "அப்போ "ரைட்' சகோதரர்கள்னு சொல்லுங்க!" – நெ.இராமன், – ———————————————

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

Posted: 09 Nov 2016 10:20 PM PST

- நவீன போர்க்களத்தின் அத்தியாவசிய ஆயுதமாகிவிட்ட ஏவுகணைகளுக்கு பிற நாடுகளைச் சார்ந்திராமல், நமக்கு நாமே சுயசார்புடன் இருப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (Defence Research and Development Organization- DRDO) மேற்கொண்டுள்ள ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தின் (IGMDP) சூத்திரதாரி, இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அதேபோன்று, அப்துல் கலாமினால் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான ...

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Nov 2016 07:03 PM PST

நவம்பர் 10 - சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர்கள் என 85 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கவுள்ள ...

நீ சிந்திய ‘பூ’ நகை!

Posted: 09 Nov 2016 06:57 PM PST


-
குறுகிய தருணந்தான்
மனத்தைப் பறித்தது
ஒரு 'குறுங்கவிதை'
நீ சிந்திய
'பூ' நகை!
–

அ.இனியவன்
–
——————————

அங்கே வேண்டாம் மறதி…

Posted: 09 Nov 2016 06:49 PM PST

ஒரு முறை சென்னை தியாகராய நகரில் இராமாயணத் தொடர் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் நிறைவு விழாவிற்குக் கல்கி கிருஷ்ணமூர்த்தி அழைக்கப்பட்டிருந்தார். கல்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு விழாவிற்கு வந்துவிட்டார். ஆனால், சொற்பொழிவு நிகழ்த்தும் பாகவதர் தாமதமாகத்தான் வந்தார். அவ்வாறு தாமதமாக வந்ததுடன், "தான் சரியான நேரத்திற்குப் புறப்பட்டு வந்ததாதவும், சொற்பொழிவுக்காக எழுதி வைத்திருந்த குறிப்புகளை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாகவும், மீண்டும் வீட்டுக்குச் சென்று எடுத்து வந்ததால் தாமதமாகி விட்டதாகவும்' ...

கடி ஜோக்ஸ்

Posted: 09 Nov 2016 06:49 PM PST

காடுகள் அமைத்து சாலையோர சிற்றுண்டி விடுதிகள், பூங்காக்கள் வைத்தார். நீச்சல் குளங்கள் வெட்டி, ஜிம் அமைத்து அடுக்குமாடி வீடுகள் கட்டினார்". "என்னடா இது?" ""நியூ ஹிஸ்டரி!" ஏ.நாகராஜன், – —————————————– * "லண்டன் போய் சுத்தி பார்க்கலாம்னு இருக்கேன்" ""சுத்தியை பார்க்கவா லண்டன் வரை போகிறாய்?" சீ.பிரவீன், – ——————————————– – "நாங்க அண்ணன் தம்பி மூணு பேர். மூணு பேரும் பஸ் கண்டக்டரா இருக்கோம்!" "அப்போ "ரைட்' சகோதரர்கள்னு சொல்லுங்க!" – நெ.இராமன், – ——————————————— "பெரிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™