Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காப்பீடு பெறுவோர் எண்ணிக்கை கிடுகிடு... உயர்வு!:சென்னை வெள்ள பாதிப்பு எதிரொலி

Posted: 09 Oct 2016 08:10 AM PDT

சென்னையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் எதிரொலியாக, தங்களின் உடைமைகளை பாதுகாப்பதற்காக, காப்பீடு திட்டத்தில் சேருவோரின் எண்ணிக்கை, 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

சென்னையில், 2015 டிசம்பரில், 100 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, பலத்த மழை பெய்து, நகரமே வெள்ளக்காடானது; ஆயிரக் கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மக்கள் இழந்தனர். சொந்த ஊரிலேயே அகதிகளை போல, வீடு களை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு ...

அமராவதியில் ஆந்திராவின் புதிய தலைநகர் அமைவதில்...சிக்கல்!: மேதா பட்கர் தலைமையில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

Posted: 09 Oct 2016 08:19 AM PDT

ஆந்திராவில், அமராவதியை புதிய தலைநகராக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தலைநகருக்காக, தங்கள் நிலங்களை விட்டுக்கொடுக்க மறுத்து, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, பிரபல சமூக சேவகர் மேதா பட்கர் உள்ளிட்டோர் ஆதரவுக் குரல் எழுப்பி உள்ளதால், தலைநகர் அமைக்கும் திட்டம் முழுமை பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா பகுதிகளை பிரித்து, தனி மாநிலம் அமைக்க, அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்தி, மத்திய ...

இந்திய ராணுவ தாக்குதலில் லஷ்கர் அமைப்புக்கு... செம அடி!: 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' குறித்து பரபரப்பு தகவல்கள்

Posted: 09 Oct 2016 08:39 AM PDT

புதுடில்லி:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து, இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், அந்த அமைப்பை சேர்ந்த, 20 பயங்கரவாதிகள் பலியானதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப் பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில், துாண்டுத லாக செயல்பட்ட பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட, ...

சிறப்பு வாய்ந்த விஜயதசமி பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 09 Oct 2016 08:43 AM PDT

புதுடில்லி:பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி யுள்ள நிலையில், ''இந்தாண்டின் விஜயதசமி பண்டிகை சிறப்பு வாய்ந்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டில்லி, விஞ்ஞான் பவனில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:இந்தாண்டின் விஜயதசமி பண்டிகை, நாட்டுக்கு மிக சிறப்பான, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தீமையை நன்மை வென்றதைகுறிக்கும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப் படுகிறது. நாட்டு மக்க ளுக்கு, இனிய விஜயதசமி பண்டிகை வாழ்த்துக் களை கூறிக் கொள்கிறேன். ஜனசங்கத்தின் ...

மேட்டூர் அணையில் உயர்மட்ட குழு ஆய்வு அக்.17ல் அறிக்கை தாக்கல் என அறிவிப்பு

Posted: 09 Oct 2016 09:53 AM PDT

''கர்நாடகா மற்றும் தமிழக அணைகளை பார்வையிட்டு, நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து ஆய்வு செய்து, வரும், 17ல், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம்,'' என, மத்திய உயர்மட்ட குழுவின் தலைவர் ஜி.எஸ்.ஷா கூறினார்.

காவிரி பிரச்னையில், கர்நாடகா மற்றும் தமிழக அணைகளை ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ்.ஷா தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த உயர்மட்ட குழுவினர், இரண்டு நாட்களாக, கர்நாடகாவின் காவிரி படுகையில் ஆய்வு நடத்தினர்.இதையடுத்து, தமிழக காவிரி படுகையில் நேற்று ஆய்வு நடத்தினர்.காலை, 11:00 மணிக்கு, ...

தி.மு.க., இழுப்புக்கு முட்டுக்கட்டை தீவிர முயற்சியில் தே.மு.தி.க.,

Posted: 09 Oct 2016 09:58 AM PDT

தி.மு.க., ஆள் இழுப்புக்கு, முட்டுக்கட்டை போடுவது குறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு, தி.மு.க., முயன்றது; ஆனால், முடியவில்லை. இதனால், கோபம டைந்த தி.மு.க., தேர்தலுக்கு முன்பிருந்தே, அக்கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கியது.தேர்தலில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்துவிட, கட்சியினர், தாமாகவே, தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளை நோக்கி ஓடினர். தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகள் பலரும், மாற்று முகாம் தேடி ஓடிவிட்டனர். கட்சியில் இருந்து பலரும் வெளியேறும் நிலையிலும், ...

பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு

Posted: 09 Oct 2016 10:24 AM PDT

புதுடில்லி ; பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஆலோசனை வழங்கவும், தேவையான ஆய்வுகளை நடத்தி, பரிந்துரைகளை அளிக்கவும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் செயல்பட்டு வருகிறது.
20 மாதங்களாக...
மாதத்திற்கு ஒருமுறை கூடி, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான பரிந்துரைகளை, இந்த வாரியம் அளிக்கும். முன்னாள் வெளியுறவு செயலர் சியாம் சரண் தலைமையிலான இந்த வாரியத்தின் பதவிக்காலம், 2015, ஜனவரியுடன் முடிவடைந்தது. எனினும், 20 மாதங்களாக, இது, மாற்றியமைக்கப்படாமல் இருந்து வந்தது. ...

அரசின் கொள்கையை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை... பாயும்!: ஊழியர் சங்கங்களுக்கு மத்திய அமைச்சகம் கடும் எச்சரிக்கை

Posted: 09 Oct 2016 10:26 AM PDT

புதுடில்லி:'மத்திய அரசையோ, அதன் கொள்கை களையோ விமர்சித்தால், அரசு ஊழியர் சங்கங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என,மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை செயல்படுத்துவதற் கான மென்பொருளை தயாரிக்க, ஜி.எஸ்.டி.என்., என்றழைக்கப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் என்ற தனியார் நிறுவனம் அமைக் கப்பட்டு உள்ளது.இதில்,மத்திய அரசுக்கு, 24.5 சதவீதம்;அனைத்து மாநில அரசுகளுக்கும் மொத்தமாக, 24.5 சதவீதம் பங்கு உள்ளது. மீதமுள்ள, 51 சதவீத பங்கு, சில தனியார் நிதி ...

பொறுப்பு முதல்வர்: ஸ்டாலின் கோரிக்கை

Posted: 09 Oct 2016 10:32 AM PDT

சென்னை:''தமிழக அரசு நிர்வாகம், சீராக செயல் பட வேண்டும் என்றால், பொறுப்பு முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அமைச்சர் களை அழைத்து பேசியுள்ளார். அப்போது, காவிரி பிரச்னை குறித்து, அவர் விளக்கமாக கேட்டறிந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி படுகையில் உள்ள நீர் இருப்பு குறித்து அறிய, மத்திய நீர்பாசனத் துறையில் இருந்து, உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.இக்குழுவினர், தமிழகத்துக்கு வந்துள்ள நிலை யில், ...

மத்திய அரசின் 'உதய்' திட்டத்தில் சேர்ந்ததால் மஹாராஷ்டிராவுக்கு ரூ.9,725 கோடி லாபம்

Posted: 09 Oct 2016 10:37 AM PDT

'மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில், மஹாராஷ் டிர மின் வாரியம் இணைந்ததால், அம்மாநிலத் திற்கு, 9,725 கோடி ரூபாய், கூடுதல் வருவாய் கிடைக்கும்' என, கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உதய் என்ற, 'உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா' என்ற, எரிசக்தி வினியோக உறுதி திட்டத்தில், 16 மாநிலங் களும், யூனியன் பிரதேசங்களும் கையெழுத் திட்டுள்ளன. இவற்றில், 17வது மாநிலமாக, மஹாராஷ்டிரா இணைந்துள்ளது. உதய் திட்டத்தில் இணைந்த தால், அம்மாநிலத்துக்கு, 9,725 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. * உதய் திட்டப்படி, மாநில மின் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ...

குடும்ப வன்முறை சட்டம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted: 09 Oct 2016 01:25 PM PDT

புதுடில்லி : 'பெண்களுக்கு எதிராக குடும்பத்தில் நடக்கும் வன்முறையில், வயது மற்றும் பாலின பாகுபாடு இல்லாமல் அனைவரையும் விசாரிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது.
குடும்ப வன்முறை வழக்கு:
குடும்ப வன்முறை தொடர்பான ஒரு வழக்கில், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நரிமன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு: பெண்களுக்கு எதிராக, குறிப்பாக திருமணமான பெண்களுக்கு எதிராக குடும்பத்தில் நடக்கும் வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்காகவே, குடும்ப வன்முறை சட்டம் கொண்டு ...

விபத்தில் சிக்கிய ராணுவ வீரர்; உதவிக்கு வந்த காஷ்மீர் இளைஞர்

Posted: 09 Oct 2016 02:42 PM PDT

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அங்கு, விபத்தில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவரை, உள்ளூர் இளைஞர் மீட்ட சம்பவம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காஷ்மீரில் வன்முறை:
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு, 90-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கலவரத்தை தடுக்க, ஊரடங்கு உத்தரவு ...

திருநங்கையர் மசோதா சரியா? மக்கள் பரிந்துரை அளிக்கலாம்

Posted: 09 Oct 2016 03:58 PM PDT

புதுடில்லி : திருநங்கையர் உரிமை பாதுகாப்பு மசோதாவை ஆய்வு செய்து வரும், பார்லிமென்ட் குழு, பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை பெறத் திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களிடம் ஆலோசனை:
திருநங்கையர் என்ற வார்த்தைக்கான வரையறை, அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைதல், உரிமை பாதுகாப்பு ஆகிய ஷரத்துகளுடன், லோக்சபா மழைக்காலக் கூட்டத்தொடரில், மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை, சமூக நீதித்துறை மீதான, நிலைக்குழுவின் ஆய்வுக்கு, சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் பரிந்துரைத்தார். இந்நிலையில், திருநங்கையர் மசோதா தொடர்பாக, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™