ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
- திருவாசகம்!
- அடிபம்புல தண்ணி அடிக்க மாட்டாராம்…!!
- நிலையாமை – கவிதை
- கவலையின்மையே பலத்தைத் தரும்
- காண்டாமிருகங்களை காப்பாற்ற சைக்கிள் சவாரி!
- குருவும், தேரையும்!
- ஆஸ்கர் விருது போட்டிக்கு, ஒன்பது தமிழ்ப் படங்கள்
- திரை விமர்சனம்: தேவி
- திரை விமர்சனம்: றெக்க
- திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்: கேரளாவுக்கு புது பெருமை
- சீனா பல்புகள் வெடித்ததில் 400 பேர் கண் பாதிப்பு
- இரட்டை சதம் அடித்தார் கோஹ்லி
- ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
- ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?
- பத்ரகாளி அம்மனுக்கு ரூ. 3.7 கோடியில் தங்கக் கிரீடம்: தெலங்கானா முதல்வர் நேர்த்திக் கடன்
- தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு
- புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து
- மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்
- மணி மணியாய் மனித உடம்பில்
- யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
- நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
- நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி
- அம் மா மரம் – சிறுகதை
- அறியாததை அறிந்து கொள்வோமே !
- ஒரே நாளில் வெளியான மூன்று படங்களும் ஹிட்!
- “ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம்
- கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-
- சி.சி.டி.வி. கேமராவில் எடுக்கப்பட்ட குறும்படம்!
- வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி
- தலைக்கனம் தலைக்குனிவைத் தரும்
- நகைச்சுவை
- நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?
- எங்கள் வீட்டில் சிறிய கொலு
| கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல் Posted: 09 Oct 2016 01:27 PM PDT கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல் ஈகரை உறவுகளுக்காக http://www.mediafire.com/file/r390lywt06euw98/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.பிடிஎ நன்றி |
| Posted: 09 Oct 2016 01:18 PM PDT - – உழி தரும் காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் இழி தரு காலம் எக்காலம் வருவது வந்ததற்பின் உழி தரு காலத்த உன் அடியேன் செய்த வல்வினையைக் கழி தரு காலமும் ஆய் அவை காத்து எம்மைக் காப்பவனே! – விளக்கம்: - காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம் உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க வல்ல காலத்தை ஆளும் இறைவா… என் கொடிய வினையை நீக்கி, அருளுக! – ———————- |
| அடிபம்புல தண்ணி அடிக்க மாட்டாராம்…!! Posted: 09 Oct 2016 01:17 PM PDT ![]() |
| Posted: 09 Oct 2016 01:15 PM PDT - சொந்த, பந்தங்கள் யாவும் அந்தந்த நேரத்து அடையாளங்கள் உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை! – வளர்பிறைக்கொரு காலம் தேய்பிறைக்கொரு காலம் உயர்வு தாழ்வென்பது பகலிரவு போலாகும்! – அரண்மனைகள், அந்தப்புரங்கள் கோட்டைக் கொத்தளங்கள் காலம் தின்று தீர்த்தது போக மிஞ்சியவை சுற்றுலாத் தலங்கள்! – இறவாப் புகழ் பெற்று இன்னமும் வாழ்பவர்கள் புகழ் போதைச் சேற்றில் புதையுண்டு போனவர்கள்! – தரை தட்டும் கப்பல்கள் கரைசேரும் கட்டுமரங்கள் யானைக்கும் அடி சறுக்கும் எறும்பு ஊர கல்லும் தேயும்! – எட்டுத் ... |
| Posted: 09 Oct 2016 01:13 PM PDT கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் "இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?" என்றார். "அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்" என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய ... |
| காண்டாமிருகங்களை காப்பாற்ற சைக்கிள் சவாரி! Posted: 09 Oct 2016 01:12 PM PDT - படத்தில் உள்ளவர்கள், சைக்கிளில் சர்க்கஸ் வித்தை காட்டுகின்றனர் என்று நினைக்க வேண்டாம். புத்தி கெட்ட மனிதர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த தான், இந்த சைக்கிள் சவாரி! ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள், உலகிலேயே நம் நாட்டின் அசாம் மாநிலத்தில் மட்டும் தான் இருக்கின்றன. இதை, வேட்டையாடி கொன்று விடுகின்றனர். கடந்த, 15 ஆண்டுகளில், 200 காண்டாமிருகங்கள் கொல்லப் பட்டுள்ளன. இதை எதிர்த்து, இயற்கை ஆர்வலர் பசந்த் தாஸ் என்பவர், குழந்தைகளை உட்கார வைத்து, சைக்கிள் சவாரி செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். – —————————————– — ... |
| Posted: 09 Oct 2016 01:11 PM PDT - குரு என்ற சொல்லுக்கு, அறியாமையை நீக்குபவர் என்பது பொருள். குருநாதர்கள், சாதுர்மாஸ்ய காலம் எ னும் மழைக் காலத்தில், தங்கள் பயணத்தை நிறுத்தி, ஒரே இடத்தில் தங்கி, ஞானோபதேசம் செய்வதுடன், வேத – உபநிடதங்கள் குறித்து விளக்க உரை நிகழ்த்துவது வழக்கம். – மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி, தான் கைப்பற்றிய பகைவரின் கோட்டைகளை அவ்வப்போது, பழுது பார்த்து செப்பனிடுவார். ஒரு சமயம், சாம்காட் எனும் கோட்டையை செப்பனிட்ட போது, அதை பார்வையிடச் சென்றார், சிவாஜி. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்வதைப் ... |
| ஆஸ்கர் விருது போட்டிக்கு, ஒன்பது தமிழ்ப் படங்கள் Posted: 09 Oct 2016 01:09 PM PDT - இதுவரை, எந்தவொரு இந்திய படத்துக்கும், ஆஸ்கர் விருது கிடைத்ததில்லை. அத்துடன், இப்போட்டிக்கு, தமிழ் சினிமாவில், தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ் மற்றும் ஹேராம் போன்ற படங்கள் பரிந்துரைக்கப்பட்டும், விருது கிடைக்க வில்லை. இந்நிலையில், தற்போது, வெற்றிமாறன் இயக்கிய, விசாரணை படமும், ஆஸ்கர் விருது போட்டி பட பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இப்படத்தோடு, ஆஸ்கர் விருது போட்டிக்கு, ஒன்பது தமிழ்ப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ———————————— – — சினிமா ... |
| Posted: 09 Oct 2016 01:09 PM PDT - பேயிடம் ஒப்பந்தம் போட்டு தன் மனைவியை மீட்க போராடும் ஒரு கணவனின் கதைதான் 'தேவி'. நாகரிகமான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது மும்பையில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமாரின் (பிரபுதேவா) லட்சியம். சிக்கலான சூழலில், மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் தேவியை (தமன்னா) திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. வேண்டா வெறுப்போடு மணம் முடித்து தமன்னாவுடன் மும்பை செல்லும் பிரபுதேவா, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறுகிறார். வீட்டில் நுழைந்ததும் தமன்னாவிடம் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. ... |
| Posted: 09 Oct 2016 01:07 PM PDT - – மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார். மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) – செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் ... |
| திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்: கேரளாவுக்கு புது பெருமை Posted: 09 Oct 2016 01:06 PM PDT - கோப்புப் படம் ——– கிராமப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட, கேரளா தயாராகி வருகிறது. கேரள மாநில அரசு சார்பில், கிராமப் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் சுசித்வா திட்டத்தின் கீழ், 941 கிராமப் பஞ்சாயத்துகளில் மொத்தம், 1 லட்சத்து, 75 ஆயிரத்து, 84 கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது. திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத, சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து இத்திட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமாக ... |
| சீனா பல்புகள் வெடித்ததில் 400 பேர் கண் பாதிப்பு Posted: 09 Oct 2016 09:37 AM PDT - ராஜ்நந்தன்கான்: சட்டீஸ்கர் மாநிலம், ராஜ்நந்தன்கான் பகுதியில் கோயில் திருவிழா நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. - இவை அனைத்தும் சீன பல்புகள். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக 6 பல்புகள் வெடித்து சிதறின. பல்புகளில் இருந்து வெளியேறிய கேஸ் காரணமாக விழாவில் கூடி இருந்த 400 பேரின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது – —————————————— |
| Posted: 09 Oct 2016 09:22 AM PDT - - இந்துார்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இந்துாரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (103), ரகானே (79) அவுட்டாகாமல் ... |
| ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் Posted: 09 Oct 2016 09:20 AM PDT ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் புத்தகம் PDF வடிவில் கிடைக்குமா? |
| ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Posted: 09 Oct 2016 09:18 AM PDT - ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும். விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில் பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் செல்லக்கூடாது. பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை ... |
| பத்ரகாளி அம்மனுக்கு ரூ. 3.7 கோடியில் தங்கக் கிரீடம்: தெலங்கானா முதல்வர் நேர்த்திக் கடன் Posted: 09 Oct 2016 08:58 AM PDT தெலங்கானா தனி மாநிலமாக உருவானதற்கு நேர்த்திக் கடனாக, வாரங்கல்லில் உள்ள பத்ரகாளியம்மனுக்கு ரூ. 3.7 கோடி மதிப்பிலான தங்கக் கிரீடத்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஞாயிற்றுக்கிழமை செலுத்தவுள்ளார். ஆந்திரத்திலிருந்து தெலங்கானாவை பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) தலைவர் கே.சந்திரசேகர ராவ் நீண்டகாலமாக பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தார். தனி மாநிலம் அமைந்தால், வாரங்கல்லில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு தங்கக் கிரீடத்தை காணிக்கையாகச் ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Posted: 09 Oct 2016 08:19 AM PDT - சென்னை உடல்நிலை கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த 22 ம் தேதி மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப் பட்டார். நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் இருந்ததால் மருத்துவர்கள் அதற்கேற்ப சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார் என்றும், ... |
| புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து Posted: 09 Oct 2016 07:29 AM PDT - வாஷிங்டன்: – புகைப்பிடித்தல் மற்றும் மதுவிற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடு வதற்கு உதவும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். – அடிமையாவதற்கு காரணம் – உலககெங்கும் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல விதமான நோய்களுக்கு ஆளாவதால் பலர் குறைந்த வயதிலேயே மரணம் அடைகின்றனர். மூளையில் ஹைபோதாலமஸ் பகுதியில் உற்பத்தியயாகும் வாசோபிரசின் என்ற நியூரோபெப்டைடின் காரணமாக இத்தகைய கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடுகிறது. – அமெரிக்க தேசிய மது ஒழிப்பு ... |
| Posted: 09 Oct 2016 06:20 AM PDT ஸ்ரீ குருவே நம: 13. மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம் (ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது) உலகில் எங்கும் அஞ்ஞானமாகிய இருள் மூடியிருந்த அந்த காலத்தில் , ஞானமாகிய சுடர் ஒளிர்ந்து பிரகாசித்ததால் நமது நாடு பாரதம் என்னும் பெயர் பெற்றது. பாரதம் என்னும் சொல்லிற்கு , 'ஒளிரும் ப்ரகாசம் (shining brightness) என்று பொருள். அஞ்ஞானம்(அறியாமை) என்றால் உண்மை அல்லாத ஒன்றை உண்மை என்று தவறாகப் புரிந்து கொள்ளுதல். ஞானம்(அறிவுடைமை) என்பது உண்மையை உண்மை என்றும், உண்மை அல்லாததை உண்மை அல்லாதது என்றும் அறிந்து கொள்ளுதல். ... |
| Posted: 09 Oct 2016 05:53 AM PDT மணி மணியாய் மனித உடம்பில் : 1. கண்டா மணி – தைராய்டு சுரப்பி - Thyroid Glands 2. ரசமணி - பாராதைராய்டு சுரப்பி- Para Thyroid Glands 3. சிகாமணி -பிட்யூட்டரி சுரப்பி – Pituitary Glands 4. சிரோன்மணி - பினியல் சுரப்பி – Pineal Glands 5. பாலாமணி - தைமஸ் சுரப்பி – Thymes Glands |
| யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை Posted: 09 Oct 2016 04:24 AM PDT வணக்கம் உறவுகளே, யூதயூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - செர்கி நிலாஸ் பதிவிறக்க இங்கே சொடுக்கவும் |
| Posted: 09 Oct 2016 03:52 AM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் ) நன்றே நவிலும் கொன்றை வேந்தன் (ஔவையார் அருளியது) "தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி" நூல். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். பதப்பொருள்: அன்னை – தன்னைப் பெற்றெடுத்தத் தாய். பிதா – தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை. முன் – காலத்தாலும் இடத்தாலும் முதலாவதாக இருத்திக்கொளல். அறி – அறிந்து , அறிகின்ற, அறியும். தெய்வம் – வினை விநாசகர்; ... |
| நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Posted: 09 Oct 2016 03:46 AM PDT - காட்டில் இருந்த ஒரு குடிசையில், ஒரு பெண்ணின் மடியில் தலைவைத்து ஒருவர் படுத்துக் கிடந்தார். கடும் நோயாளியான அவரும் அந்தப் பெண்ணும் கிழிசலான ஆடைகளை அணிந்திருந்தார்கள். பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி, அவள் புடைவையை நனைத்தது. அப்போது குடிசை வாயிலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டு, கணவர் தலையை மெதுவாக கீழே வைத்து விட்டு அந்தப் பெண் வாசலுக்குப் போனாள் அங்கே… ஆங்கிரஸ முனிவர் நின்றுகொண்டிருந்தார். வந்த பெண் அவரை வணங்கி எழுந்தாள். ஆங்கிரஸர் அவளுக்கு ஆசிகூற "அம்மா! யார் நீ? உன்னைப் பார்த்தால் ... |
| Posted: 09 Oct 2016 03:21 AM PDT - "டேய், இரண்டு கொத்து மாவிலை பறிச்சிண்டு வாடா, வாசல் நிலைப்படியில தோரணம் கட்டணும்'' என்றாள் அம்மா. ஏதோ வீட்டில் சின்ன விசேஷம். ஓடிச்சென்று, காம்பவுண்ட் சுவரில் ஏறி, கைக்கெட்டிய கிளைகளிலிருந்து மாவிலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன். - அக்கம்பக்கத்துலேயும், எங்கள் வீட்டிலேயும் வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, சங்கராந்தி எல்லா நாட்களுக்கும் தோரணம் அந்த மாமரத்து இலைகள்தான். - மரத்துக்கு சுமார் என்ன வயதிருக்கும்? தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அந்த மரம் அங்கே உள்ளது. எனக்கு நினைவு ... |
| Posted: 09 Oct 2016 03:15 AM PDT அறியாததை அறிந்து கொள்வோமே ! சென்னை சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது. மதராஸ் முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது. கோடம்பாக்கம் கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த ... |
| ஒரே நாளில் வெளியான மூன்று படங்களும் ஹிட்! Posted: 09 Oct 2016 02:33 AM PDT - சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய் சேதுபதி நடித்த றெக்க, விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி என மூன்று முக்கியமான படங்கள் நேற்று வெளியாகின. வசூல் அளவில் மற்ற இரண்டு படங்களை விடவும் ரெமோ முந்திக்கொண்டது. அதிக திரையரங்குகளில் வெளியானதும் ஒரு முக்கிய காரணம். அதேசமயம் றெக்க, தேவி ஆகிய இரு படங்களுக்கும் நல்ல விமரிசனங்களும் ரசிகர்களும் ஆதரவும் கிடைத்துள்ளன. முதல்முறையாக ஒரு பக்கா மசாலா படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தன்னுடைய பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லமுடியும். ... |
| “ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம் Posted: 09 Oct 2016 02:31 AM PDT - நான்கு நபர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஓடு ராஜா ஓடு.' நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. "ஜோக்கர்' படத்துக்குப் பின் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். ஆனந்த்சாமி, லெட்சுமி பிரியா, சாருஹாசன், நாசர், ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எல்.வி.பிரசாத் அகாதெமியின் பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இருவரும் ... |
| கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்- Posted: 09 Oct 2016 02:13 AM PDT இந்தப் படத்தில் என்ன புதுமை அல்லது தவறு? இந்தப் படத்தில் உள்ள தவறு என்ன? இங்கே எத்தனை சதுரங்கள் மொத்தமாக உள்ளன? |
| சி.சி.டி.வி. கேமராவில் எடுக்கப்பட்ட குறும்படம்! Posted: 09 Oct 2016 01:20 AM PDT - எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஓர் எழுத்தாளராகவே நடித்திருக்கும் குறும்படம் "செல்வம் பூனை'. ""முழுக்க முழுக்க சி.சி.டி.வி. கேமராவைக்கொண்டு எடுக்கப்பட்ட முதல் குறும்படம் இது'' என்று கூறிய இயக்குநர் பா.அய்யனார், மேலும் கூறியதாவது... "நான் இதுவரை செல்போன் கேமரா, வெப் கேமரா, பென் கேமரா, ஹெலிகாப்டர் கேமரா என 15 விதமான கேமராக்களில் 17 குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். அதனால், இம்முறை இன்னும் வித்தியாசமாக சி.சி.டி.வி. கேமராவில் படம் பிடிக்கலாம் என்று தோன்றியது. ஒரே இடத்தில் பதிக்கப்பட்ட சி.சி.டி.வி. ... |
| வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி Posted: 09 Oct 2016 01:11 AM PDT காபூல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்கன் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு எல்லைப் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தந்த் கோரி மாகாணம் அருகே சென்ற போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுதொடர்பாக ஆப்கன் பாதுகாப்பு ... |
| Posted: 09 Oct 2016 12:50 AM PDT "தலைக்கனம் தலைக்குனிவைத் தரும்..." 'தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்' என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார். அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம்... வீதியில் அவரைக் கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்... ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுது விடுவது கூட உண்டு... ஒரு ... |
| Posted: 08 Oct 2016 10:40 PM PDT நகைச்சுவை நன்றி முகநூல் ரமணியன் |
| நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Posted: 08 Oct 2016 08:25 PM PDT - நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, ... |
| Posted: 08 Oct 2016 08:21 PM PDT எங்கள் வீட்டில் சிறிய கொலு T.N.Balasubramanian wrote:ayyasamy ram wrote:இனிய காலை வணக்கம் ரமணியன் - வீட்டில் கொலு வைப்பதுண்டா..? - மேற்கோள் செய்த பதிவு: 1223822 உங்கள் வீட்டு கொலுவா ? நன்றாக இருக்கிறது . நாங்கள் திருச்சியில் இருந்தவரை வீட்டு கொலு பெரிதாக வைத்தோம் . நிர்மாண பகுதிக்கு மாறியப் பிறகு , கொலு சிறிதாக மாறிவிட்டது . மண் பொம்மைகள் உடைந்தால் அச்சான்யமாக கருதப்படும் என்பதால் முக்கியமான சிலதை வைத்துக் கொண்டு மற்றதை கொடுத்து விட்டோம் . போட்டோ தனியாக போடுகிறேன். ரமணியன் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
