Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிரடி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான்... ரகசிய உத்தரவு!: இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரம்

Posted: 07 Oct 2016 09:21 AM PDT

புதுடில்லி:பாக்., எல்லைக்குள் புகுந்து, பயங்கர வாதிகள் முகாம் மீது, இந்திய ராணுவம் தாக்கு தல் நடத்தியதை தொடர்ந்து, கடும் ஆத்திரத்தில் உள்ள பாக்., தரப்பு, இந்தியாவை பழிவாங்கும் வகையில், மிகப் பெரிய தாக்குதல் நடத்தும்படி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத ...

தேவையற்ற நடைமுறை 'தலாக்': சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Posted: 07 Oct 2016 09:30 AM PDT

புதுடில்லி: 'மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை, ஒரு மதத்தில் தேவையில்லாத நடைமுறையாகும்' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் இந்தப் பிரிவுகளில் கோர்ட் தலையிட முடியாது' என, முஸ்லிம் தனிநபர் வாரியம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 'தலாக் முறை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதா என்பது குறித்து முடிவு ...

ராணுவ தாக்குதலை விமர்சித்த ராகுலுக்கு எதிர்ப்பு : பா.ஜ., தலைவர் அமித் ஷா கண்டனம்

Posted: 07 Oct 2016 09:37 AM PDT

புதுடில்லி: ''ராணுவ நடவடிக்கையை அரசியலாக்கக் கூடாது என்பதில், பா.ஜ.,வும், மத்திய அரசும் உறுதியாக உள்ளன; அதே நேரத் தில், காங்., துணைத் தலைவர் ராகுல், வரம்பு மீறி, அரசை விமர்சனம் செய்கிறார்,'' என, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கடுமையாக சாடினார்.

சந்தேகம் :
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை, இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தனர். இது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் சந்தேகங்கள் எழுப்பினர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் பேரணியில் பேசிய, காங்கிரஸ் ...

பீஹாரில் தொடரும் மதுவிலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 07 Oct 2016 09:43 AM PDT

புதுடில்லி: பீஹாரில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் அரசாணைக்கு,பாட்னா ஐகோர்ட் தடை விதித்திருந்தது. இந்த தடையை அமல் படுத்த, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதனால், அங்கு பூரண மதுவிலக்கு தொடர்கிறது.

ஐகோர்ட்டில் வழக்கு : பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா
தளம் கூட்டணி அரசு உள்ளது. இங்கு, பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, ஏப்., 5ல், வெளியிடப் பட்ட அரசாணையை எதிர்த்து, மது விற்பனையாளர் கள் உள்ளிட்டோர் பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டது. ...

பயணிகளின் மொபைல் போனுக்கு இன்சூரன்ஸ் : ரயில்வே அதிரடி தொடர்கிறது

Posted: 07 Oct 2016 09:52 AM PDT

புதுடில்லி: ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்பவர்களுக்கு, 92 பைசாவில், 10 லட்சம் ரூபாய் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றதால், பயணிகளின் மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களுக்கு, இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை, விரைவில் அறிமுகம் செய்ய, ரயில்வே தீர்மானித்துள்ளது.

பயண காப்பீடு :
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, ரயில் களில் பயணிப்போருக்காக, 92 பைசாவில் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம், செப்., 1ல், அமலுக்கு வந்தது. இதன்படி, ஆன்லைன் டிக் கெட் முன்பதிவில், விருப்பத் தேர்வாக இருக்கும். இந்த பயணக் காப்பீடுதிட்டத்தில், ...

தமிழக கவர்னருடன் தலைமை செயலர், அமைச்சர்கள்... ஆலோசனை!: காவிரி விவகாரம் குறித்து பேசியதாக அறிக்கை வெளியீடு

Posted: 07 Oct 2016 10:34 AM PDT

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, அரசு தலைமைச் செயலர் மற்றும் அமைச்சர் கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

காவிரி விவகாரம் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து விவாதித்ததாக, கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா, உடல் நிலை பாதிக்கப்பட்டு,செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நீண்ட நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப் படுகிறது என, அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம், நேற்று முன் தினம் இரவு அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு தலைமைச் செயலர் ராமமோகன ராவ், நேற்று மதியம், 2:00 மணிக்கு கவர்னர் ...

அ.தி.மு.க.,வுக்கு 2 நாள் கெடு: உண்ணாவிரதத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

Posted: 07 Oct 2016 10:40 AM PDT

தஞ்சாவூர்:''அ.தி.மு.க., அரசு, அனைத்துக் கட்சி தலைவர்களுடன், பிரதமரை சந்திக்க தவறும்பட்சத்தில், தி.மு.க., சார்பில், அதை செய்வோம்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தஞ்சாவூர், தபால் நிலையம் முன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், உண்ணாவிரத போராட்டம், நேற்று நடந்தது.போராட்ட முடிவில், ஸ்டாலின் பேசியதாவது: காவிரி பிரச்னையை மையமாக வைத்து, டெல்டா விவசாய மக்கள், பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டது; தமிழக அரசு, விவசாயிகளின் ...

மதுரை போலீசாரின் 160 கேள்விகளுக்கு ஐந்தரை மணி நேரம் சசிகலா புஷ்பா பதில்:கையெழுத்திட மறுப்பு

Posted: 07 Oct 2016 10:48 AM PDT

மதுரை:முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், போலி கையெழுத்திட்டதாக சசிகலா புஷ்பா எம்.பி., மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று, அவர் மதுரை புதுார் போலீசார் முன் ஆஜராகி, ஐந்தரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்த ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா உள்ளிட்டோர் மீது அவரது வீட்டில் பணிபுரிந்த பானுமதி, சகோதரி ஜான்சிராணி புகாரில் துாத்துக்குடி போலீசார், பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில், முன்ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை ...

காவிரி உயர்மட்ட குழு நாளை தமிழகம் வருகை

Posted: 07 Oct 2016 10:56 AM PDT

காவிரி நீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உயர்மட்ட குழுவை, மத்திய அரசு நியமித்துள்ளது.

மத்திய நீர்வளத் துறை கமிஷனர் சி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஆய்வு பணி
தமிழகம் சார்பில், பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் இடம் பெற்றுள்ளனர். இக் குழுவினர், நேற்று கர்நாடக மாநிலம், பெங்களூரு வில் ஆலோசனை நடத்தினர். பின், அங்குள்ள ஹேமாவதி,ஹேரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., ...

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை சந்தித்தார் ராகுல்

Posted: 07 Oct 2016 11:00 AM PDT

சென்னை:முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் தலை வர் ராகுல், அப்பல்லோ மருத்துவ மனைக்கு வந்து சென்றது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், செப்., 22ல் சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நேற்று வருவதாக, தகவல் வெளியானது; போலீசார் குவிக்கப்பட்டனர். டில்லியில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்ட ராகுல், காலை, 11:30 மணிக்கு, சென்னை விமான ...

ஆன்லைனில் ஆர்.டி.ஐ., தகவல் வெளியிட மத்திய அரசு உத்தரவு

Posted: 07 Oct 2016 12:24 PM PDT

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்:
ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அரசுத் துறை செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இந்த சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. எனினும், சில அரசுத் துறை அதிகாரிகள், ...

மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிட தற்காலிக தடை

Posted: 07 Oct 2016 12:42 PM PDT

புதுடில்லி: மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்பனை செய்வதற்கும், பயிரிடுவதற்கும், 10 நாட்களுக்கு தடை விதிப்பதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
பொதுநல வழக்கு :
'மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள், எவ்வித பரி சோதனையும் செய்யப்படாமல், விற்பனை செய்யப்படுகின்றன; அதை பல்வேறு பகுதிகளில் பயிரிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 'இதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக தடை:
இதை விசாரித்த தலைமை நீதிபதி ...

உலகின் தட்பவெப்பநிலை மாறுதல் குறித்து அமெரிக்க டி.வி., நிறுவனம் பிரதமர் மோடியிடம் பேட்டி

Posted: 07 Oct 2016 01:13 PM PDT

டில்லி: அமெரிக்க டி.வி., நிறுவனம் நடத்தும் உலகின் தட்பவெப்பநிலை மாறுதல் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்காக பிரதமர் மோடி டில்லியில் பேட்டியளித்தார்

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்தின் தொகுப்பாளர் டேவிட்லெட்டர்மேன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தற்போது இந்தியாவிலும் உலகின் மற்றபகுதிகளிலும் பெரும் பிரச்னையாக கருதப்படும் குளோபல் வார்மிங் எனப்படும் தட்பவெப்பநிலை மாறுதல் குறித்த நிகழ்ச்சிககாக அவரை பேட்டி எடுத்தார். உரையாடலில் நம் நாட்டில் மின்உற்பத்திக்காக சுற்றுப்புறம் மாசு அடைவது பற்றி ...

'விசா' தர பாகிஸ்தான் மறுப்பு; சுஷ்மா உதவ உறுதி

Posted: 07 Oct 2016 02:18 PM PDT

ஜெய்ப்பூர்: திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், மணமகளுக்கு, பாக்., அரசு, 'விசா' வழங்க மறுத்து வருவதால், தமக்கு உதவும்படி, இந்திய அரசிடம் மணமகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விசா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

எல்லை கடந்து திருமணம்:
ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., அரசு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் நடந்த தாக்குதல் மற்றும் இந்திய ராணுவத்தின் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' காரணமாக, இந்திய - பாக்., எல்லைப் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™