Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சென்னையிலும் ஊடுருவினர் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திடுக்!:பெரியமேட்டில் பதுங்கியிருந்த மூன்று பேர் சுற்றிவளைப்பு; கடையநல்லூரில் பிடிபட்டவன் ஈராக்கில் பயிற்சி பெற்றது அம்பலம்

Posted: 06 Oct 2016 10:30 AM PDT

சென்னையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு டன் தொடர்புடைய, மூன்று பேர் ஊடுருவியுள்ள 'திடுக்' தகவல் வெளியாகி உள்ளது.

பெரியமேட்டில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் மூவரை, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். அத்துடன், என்.ஐ.ஏ., விசாரணையில், கடைய நல்லுாரில் பிடிபட்டவன், ஈராக்கில் பயிற்சி பெற்ற தகவலும் அம்பலமாகி உள்ளது.கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில இளைஞர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட, சதி திட்டம் தீட்டி வருவதாகவும், அவர்கள், தென் மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ...

சர்வதேச நாடுகள் கண்டனத்தால் பாகிஸ்தான்... பம்மியது!: 'அடக்கி வாசிக்கும்படி' ராணுவத்துக்கு உத்தரவு

Posted: 06 Oct 2016 10:37 AM PDT

இஸ்லாமாபாத்:''பயங்கரவாதத்துக்கு அரணாக செயல்படுவதை நிறுத்தாவிட்டால், உலகின் மற்ற நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுவோம்,'' என, பாகிஸ்தான் ராணுவத்தை, அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, பாக்., ஆக்கிர மிப்பு காஷ்மீரில் இருந்த, பயங்கரவாத முகாம்களை, இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கி அழித்தது. இதற்கிடையில், பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை, சர்வதேச நாடுகளில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான ...

டில்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு:மக்கள் நலனில் அக்கறை செலுத்த அறிவுரை

Posted: 06 Oct 2016 10:41 AM PDT

புதுடில்லி:'டில்லி மக்களின் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதில், மாநில அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையி லான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், இரண்டு மாதங்களுக்கு மேலாக டெங்கு, சிக் குன் குனியா நோய் தாக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெத்தனம்
இந்நிலையில், 'டில்லி மக்களின் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது குறித்து, துணை நிலை ...

'காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கவில்லை'

Posted: 06 Oct 2016 10:44 AM PDT

''காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழக விவசாயி களுக்கு எதிராக, மத்திய அரசு செயல்பட வில்லை,'' என, மத்திய வேளாண் அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராதா மோகன் சிங் தெரிவித்தார்.

'காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டிருந்தது. ஆனால், சமீபத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியமில்லை' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையி லான மத்திய அரசுக்கு எதிராக, தமிழக விவசாயி கள் ...

பாக்., படகு கரை ஒதுங்கியதால் குஜராத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 06 Oct 2016 10:46 AM PDT

ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில், மர்ம படகு கரை ஒதுங்கியதை அடுத்து, மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், நம் நாட்டிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில்,முதல்வர் விஜய் ரூபானி தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தின் அரபிக் கடல் பகுதியில், நேற்று முன்தினம் மர்ம படகு கரை ...

அமித் ஷாவிடம் முறையிட தமிழக பா.ஜ., முடிவு

Posted: 06 Oct 2016 10:50 AM PDT

காவிரியில், தமிழக உரிமை குறித்த ஆய்வு அறிக்கையை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ.,வினர், 9ல் கொடுக்கின்றனர்.

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதையடுத்து, பா.ஜ.,வுக்கு எதிராக விவசாயிகள் திரும்பியதால், தமிழக பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில், காவிரி பிரச்னை, பா.ஜ.,வுக்கு பின்னடைவை யும் ஏற்படுத்தி உள்ளது.இதனால், அவப்பெயரை துடைக்கும் முயற்சியில், தமிழக பா.ஜ., களமிறங்கி உள்ளது. அதற்காக, காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, நிபுணர்களை ...

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Posted: 06 Oct 2016 10:53 AM PDT

சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விசாரணையை, 18ம் தேதிக்கு, தள்ளிவைத்து உள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பா ணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, டிசம்பருக் குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட் டார். இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் ...

ரேஷன் கடைகளில் 'ஆதார்' விபரம் ; இதுவரை 4 கோடி பேர் பதிவு

Posted: 06 Oct 2016 10:56 AM PDT

ரேஷன் கடைகளில், நான்கு கோடி பேர், 'ஆதார்' விபரம் பதிவு செய்துள்ளதால், விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை, கிழிந்து, கந்தல் கோலத்தில் இருப்பதால், 'ஸ்மார்ட்' கார்டு வடிவில், புதிய ரேஷன் கார்டு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவியை, உணவு வழங்கல் துறை வழங்கியுள்ளது. அதன்மூலம், 'ஆதார்' அட்டை, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை, ரேஷன் ஊழியர்கள் பதிவு செய்கின்றனர்.நேற்று வரை, 1.95 கோடி ரேஷன் கார்டுகள், 1.51 கோடி மொபைல் போன் எண்கள், 4.04 ...

ஜெயலலிதா அதிக நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுரை

Posted: 06 Oct 2016 12:26 PM PDT

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதா கவும் அவர் அதிக நாட்களுக்கு மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறை பாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக அவ்வப் போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கைகள் அளிக்கப்பட்டு வருகிறது.அறிக்கை ...

மேத்யூ புயல் எதிரொலி: புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி: ஒபாமா அறிவிப்பு

Posted: 06 Oct 2016 12:33 PM PDT

புளோரிடா: 'மேத்யூ' புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கவிருக்கிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
"மேத்யூ' புயல்:
வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய "மேத்யூ' புயல் லத்தீன் அமெரிக்க நாடான ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. இப்புயலுக்கு இதுவரை 140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் மேத்யூ புயல், அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை நேரத்தில் புளோரிடாவை தாக்க ...

குப்பைகள் மறுசுழற்சி மூலம் ஆண்டுக்கு ரூ 10 லட்சம் கோடி கிடைக்கும் : நிதின் காட்காரி

Posted: 06 Oct 2016 01:27 PM PDT

டில்லி: இந்தியாவில் குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தினால் ஆண்டொன்றுக்கு ரூ 10 லட்சம் கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய பொருளாதார மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் காட்காரி அறிவித்துள்ளார்.

தலைநகர் டில்லியில் நடந்தபொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நிதின் காட்காரி இத்தகவலை தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக மதுராவில் இயங்கிவரும் நாட்டிலேயே மிகப்பெரிய கழிவுநீர் சுத்திரிகரிப்பு நிலையத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மதுரா சுத்திரகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் இந்திய ஆயில் நிறுவனத்திற்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™