Tamil News | Online Tamil News |
- கோர்ட் சுமைக்கு அரசே காரணம் : பிரதமர் மோடி வேதனை
- உ.பி., சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய பிரியங்கா சம்மதம்
- போபால் சிறையிலிருந்து தப்பிய எட்டு 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! சென்ட்ரல் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 2 பேரும் பலி
- சமூக வலைதளத்தில் குவியும் ரேஷன் புகார்
- தொழிலுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் சரிவு ..! விவசாய துறை சீர்திருத்தங்கள் முற்றிலும் புறக்கணிப்பு
- ஜெ., கருணாநிதி உடல் நிலை பாதிப்புக்கு காரணம் என்ன?
- தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்
- கேபிள் 'டிவி' சந்தாதாரர்கள் டி.டி.எச்.,க்கு மாறும் அபாயம்! 'டிராய்' கிடுக்கிப்பிடியால் அரசுக்கு பல கோடி நஷ்டமாகும்
- பா.ஜ.,- - பா.ம.க.,வை விட அதிக ஓட்டு; மூன்று தொகுதிகளில் விஜயகாந்த் 'ரூட்'
- 50 ஆண்டு பொன்விழா: இன்று அரியானா செல்கிறார் பிரதமர் மோடி
- பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
- ஆஸ்திரேலியாவில் இந்தியரை கொன்றவன் மன நோயாளி
- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மறுசீரமைப்புக்கு ரூ.1,093 கோடி
- வங்கதேசத்தில் இந்து கோயில்கள் சேதம்
| கோர்ட் சுமைக்கு அரசே காரணம் : பிரதமர் மோடி வேதனை Posted: 31 Oct 2016 09:33 AM PDT புதுடில்லி: ''அதிக வழக்குகளை அரசு தான் தொடர்கிறது; கோர்ட்டுகளின் சுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளை துவங்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆராய வேண்டும் டில்லி ஐகோர்ட்டின், பொன் விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:அதிக வழக்குகள் தொடரப்படுவதால், கோர்ட்டுகளின் வேலைப் பளு அதிகரிக்கிறது. சரியான புள்ளிவிபரங்கள் இல்லை என்றாலும், கோர்ட்டு களில் உள்ள வழக்குகளில், 46 சதவீத வழக்குகள் அரசால் தொடரப்பட்டவை. கோர்ட்டுகளின் சுமையை குறைக்கும் வகையில், இந்த வழக்குகளை தொடர்வதற்கு முன், ... |
| உ.பி., சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய பிரியங்கா சம்மதம் Posted: 31 Oct 2016 09:40 AM PDT உ.பி., சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்வதற்கு, பிரியங்கா சம்மதம் தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கான தீவிர ஏற்பாடுகளில், காங்., தலைவர்கள் களமிறங்கி உள்ளனர். தேசிய அரசியலில், திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியதாக கருதப்படும், உ.பி., சட்டசபை தேர்தல், இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்றியும், போதிய வெற்றியை, காங்., துணைத் தலைவர் ராகுலால் பெற முடியவில்லை.மூன்றாவது இடம் : உ.பி., அரசியலில், நான்காவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ், எப்படியாவது மூன்றாவது இடத்திற்காவது முன்னேறி, பலத்தை காட்ட வேண்டுமென்பதில் ... |
| Posted: 31 Oct 2016 10:13 AM PDT போபால்:மத்திய பிரதேச மாநிலம், போபால் மத்திய சிறையில், காவலரை கொன்று தப்பியோடிய, தடை செய்யப்பட்ட, 'சிமி' எனப்படும், இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த, எட்டு பயங்கரவாதிகள், போலீசார் நடத்திய, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர்; இவர்களில், இரண்டு பேர், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள். இஸ்லாமிய மாணவர்களின் நலனுக்கான துவங்கப்பட்டது, 'சிமி' அமைப்பு. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், 2001ல், தடை செய்யப்பட்டது. அதன் பிறகும், இந்த அமைப்பினர் மாறவில்லை.பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட, இந்த ... |
| சமூக வலைதளத்தில் குவியும் ரேஷன் புகார் Posted: 31 Oct 2016 10:14 AM PDT சமூக வலைதளங்களில், ரேஷன் கார்டு தொடர்பாக, இளைஞர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்க துவங்கிஉள்ளனர். ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்கள் தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் வசதியை, உணவு வழங்கல் துறை துவக்கியுள்ளது. இதையடுத்து, அவற்றின் மூலமாக, உணவுத் துறைஅதிகாரிகளிடம், இளைஞர்கள் கேள்விகள் கேட்ட வண்ணம் உள்ளனர். அதன் விபரம்: ● புதிய ரேஷன் கார்டுக்கு, 2013ல் விண்ணப்பித்தேன்; இதுவரை, வழங்கவில்லை; என்ன செய்ய வேண்டும்? ● ரேஷன் கடைகளில், காலி பணியிடங்களை ... |
| Posted: 31 Oct 2016 10:19 AM PDT வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகம், எளிதில் தொழில் செய்யக்கூடிய மாநிலங்கள் பட்டியலில், மிக மோசமான வகையில் சரிவை சந்தித்துள்ளது. விவசாயப் பொருள் விற்பனை நடவடிக்கை, விவசாயிகளுக்கு உகந்த சீர்திருத்தங்கள் ஆகிய குறியீடுகளில், தமிழகத்தின் செயல்பாடு மோசமாக உள்ளது. உலக வங்கியும், 'டிப்' எனப்படும், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையும், நம் நாட்டில், தொழில் நிறுவனங்கள் எளிதில் தொழில் செய்யக்கூடிய மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்து, பட்டியல் வெளியிட்டு உள்ளன. இப்பட்டியலில், ஆந்திராவும், தெலுங்கானாவும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. இதுவரை, ... |
| ஜெ., கருணாநிதி உடல் நிலை பாதிப்புக்கு காரணம் என்ன? Posted: 31 Oct 2016 10:21 AM PDT மும்பை,:'தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோரின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம், ஒரு சிலர் வைத்துள்ள சூனியமே' என, பிரபல ஜோதிடர் கூறியதாக, லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 35 நாட்களுக்கு மேலாக சிகிக்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய உடல்நலக் குறைவு குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சூனியம்வைக்கப்பட்டுள்ளதாக, பிரபல வெளிநாட்டு ... |
| தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம் Posted: 31 Oct 2016 10:42 AM PDT ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் ... |
| Posted: 31 Oct 2016 10:46 AM PDT 'டிசம்பர் இறுதிக்குள், 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒளிபரப்பிற்கு, கேபிள் ஆபரேட்டர்கள் மாற வேண்டும்' என, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 40 லட்சம் சந்தாதாரர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒரு சில தனியார் நிறுவனங்கள், கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதுடன், பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வந்தன. பொதுமக்கள், மாதக் கட்டணமாக, 150 முதல், 250 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.கட்டாயமக்கியது |
| பா.ஜ.,- - பா.ம.க.,வை விட அதிக ஓட்டு; மூன்று தொகுதிகளில் விஜயகாந்த் 'ரூட்' Posted: 31 Oct 2016 10:53 AM PDT மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுவதன் பின்னணி தெரிய வந்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ல் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், அ.தி.மு..க, - -தி.மு.க., - -பா.ஜ.,- - பா.ம.க., கட்சி கள் போட்டியிட முடிவெடுத்து, வேட்பாளர்களை அறிவித்தன. நீண்ட யோசனைக்கு பின் தேர்தலில் போட்டியிட, தே.மு.தி.க.,வும் முடிவெடுத்தது; வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது,இத்தேர்தலில், ... |
| 50 ஆண்டு பொன்விழா: இன்று அரியானா செல்கிறார் பிரதமர் மோடி Posted: 31 Oct 2016 11:38 AM PDT புதுடில்லி: அரியானா மாநிலம் உருவானதன் 50 -ம் ஆண்டு தினத்தையொட்டி இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க அரியானா செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார். அரியானாவில் பா.ஜ.வைச் சேர்ந்த மனோகர்லால் கட்டார் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-ம் ஆண்டு பொன்விழா இன்று(நவ.,1) கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்று விழாவை துவக்கிவைக்க பிரதமர் மோடி இன்று அரியானா செல்கிறார். அப்போது அரியானாவில் படித்து வேலையில்லாத 30 ஆயிரம் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டம், ‛சுவர்ண ... |
| பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு Posted: 31 Oct 2016 01:00 PM PDT புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த வேண்டும். கடும் நடவடிக்கை : மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளைத் தவிர, பள்ளியின் மற்ற ... |
| ஆஸ்திரேலியாவில் இந்தியரை கொன்றவன் மன நோயாளி Posted: 31 Oct 2016 02:30 PM PDT மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனரான மன்மீத் அலிஷேரைக் கொன்றவன், மனநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. எரித்துக் கொலை: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் மன்மீத் அலிஷேர், 29; பஞ்சாப் பாடகரான இவர், சமீபத்தில் எரித்துக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவனை கைது செய்து தகுந்த நடவடிக்கை ... |
| ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மறுசீரமைப்புக்கு ரூ.1,093 கோடி Posted: 31 Oct 2016 03:11 PM PDT
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடந்த கலவரங்கள் மற்றும் பல காரணங்களால் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்களை சீரமைக்க மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.1,093 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது. பிரதமரின் மறுசீரமைப்பு திட்டம் பிரதமர் மோடியின் மறுசீரமைப்பு திட்டத்தின் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சேதமடைந்த பொது சொத்துக்களான மருத்துவமனைகள், பள்ளிகள், சமுதாய கூடங்கள் போன்றவற்றை சீரமைக்கவும், மாநிலத்தில் விவசாயத்தை சீரான நிலைக்கு கொண்டு வரவும் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் ஒரு ... |
| வங்கதேசத்தில் இந்து கோயில்கள் சேதம் Posted: 31 Oct 2016 04:00 PM PDT டாக்கா : வங்கதேசத்தில் 15க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பேஸ்புக் பதிவு: வங்கதேசத்திலுள்ள ஹரின்பெர் கிராமத்தை சேர்ந்த ரஸ்ராஜ் தாஸ் என்பவர் முஸ்லீம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாசிர்நகரில் நூற்றுக்கணக்கான மதரசா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 01,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |