Tamil News | Online Tamil News |
- 4 பாக்., ராணுவ முகாம்கள் அழிப்பு: பழி தீர்த்தது இந்திய ராணுவம்
- வாஸ்துவுக்கு அமைச்சர்? தெலுங்கானாவில் கூத்து
- ஹிலாரிக்கு எதிரான 'இ - மெயில்' விவகாரத்தில்...திருப்பம்!: மீண்டும் விசாரணை நடத்த எப்.பி.ஐ., அதிரடி முடிவு
- உ.பி., முதல்வர் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு
- வட கிழக்கு பருவமழை துவங்கியதால் தமிழக விவசாயிகள்... உற்சாகம்!:'எல் நினோ' முடிவதால் வெள்ள பாதிப்பு இருக்காது என தகவல்;மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கான நீர் திறப்பும் குறைப்பு
- முதல்வருக்கு தொடர்கிறது சிகிச்சை மீண்டும் வந்தார் லண்டன் டாக்டர்
- கருணாநிதிக்கு என்ன பிரச்னை
- சவுதி விமான தாக்குதல்: ஏமனில் 60 பேர் பலி
- வேட்பாளர்களை அறிவித்தது தே.மு.தி.க., 3 தொகுதி தேர்தலில் 5 முனை போட்டி
- தீபாவளி மது விற்பனை ரூ.360 கோடி கடைகளை குறைத்தும் அசரவில்லை
- 'தீபாவளி பண்டிகை ராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பு':ரேடியோ உரையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்
- ஜம்மு-காஷ்மீரில் பள்ளி கட்டடங்களுக்கு தீ
- பார்லி., தேர்தலில் தோல்வி; ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா
- தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
| 4 பாக்., ராணுவ முகாம்கள் அழிப்பு: பழி தீர்த்தது இந்திய ராணுவம் Posted: 30 Oct 2016 08:20 AM PDT புதுடில்லி:பாக்., பயங்கரவாதிகள், நம் ராணுவ வீரரை கொன்று, உடலை பல துண்டுகளாக சிதைத்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, நம் வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில், நான்கு பாக்., ராணுவ முகாம்கள் முற்றிலும் அழிக்கப் பட்டன; இந்த தாக்குதலில், பாக்., தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. கோர தாண்டவம் சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவிய, பாக்., பயங்கரவாதி கள், மன்தீப் சிங் என்ற ராணுவ வீரரை கொன்று, அவர் உடலை பல துண்டுகளாக வெட்டி, கோர தாண்டவம் ஆடினர். அச்சம்பவத்துக்கு, கடுமையான ... |
| வாஸ்துவுக்கு அமைச்சர்? தெலுங்கானாவில் கூத்து Posted: 30 Oct 2016 08:23 AM PDT ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில், எந்த புதிய சாலை மற்றும் கட்டடங்கள் கட்டுவ தானாலும், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா, 50, ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.முதல்வராக பதவியேற்ற பின், சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு, வாஸ்து ஆலோச னைகளை பெறுவதற்காக, வாஸ்துசாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை, அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் உள்ளதேஜா இல்லாமல், அரசின் ஆலோசனை ... |
| Posted: 30 Oct 2016 08:33 AM PDT வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, தனிப்பட்ட, 'இ - மெயில்' முகவரியை, அரசு பணிக்கு பயன்படுத்தியது குறித்து, மீண்டும் விசாரணை நடத்த, எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், எப்.பி.ஐ.,யின் இந்த அதிரடி முடிவு, ஹிலாரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல் நடக்கவுள்ளது; இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, ... |
| உ.பி., முதல்வர் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு Posted: 30 Oct 2016 08:35 AM PDT
எடவா : உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற, 'ஜனதா தர்பார்' என்ற மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில், கூட்டநெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். குறை கேட்கும் நிகழ்ச்சி: உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு, 2017ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், எடவாவில் நடந்த மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில், முதல்வர் அகிலேஷ் பங்கேற்று, மனுக்களை பெற்றார். பலர் காயம்: அப்போது ஒரே நேரத்தில், முதல்வரை நோக்கி, பலர் முன்னேறிச் ... |
| Posted: 30 Oct 2016 10:21 AM PDT வட கிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், முழு அளவில் சம்பா சாகுபடி செய்ய முடியும் என, தமிழக விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், 'எல் நினோ' முடிவதால், கடந்த ஆண்டை போல, தமிழகத்தில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு இருக்காது என, பருவநிலை கணிப்பாளர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர். மழை துவங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்திற்கான நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் தென் மேற்கு பருவ மழை, ஜூன் முதல் செப்டம்பர் வரையும்; வட கிழக்கு பருவ மழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் பெய்யும். தென் மேற்கு பருவ மழை, வழக்கம் போல இந்த ஆண்டும், ... |
| முதல்வருக்கு தொடர்கிறது சிகிச்சை மீண்டும் வந்தார் லண்டன் டாக்டர் Posted: 30 Oct 2016 10:26 AM PDT சென்னை:சென்னை அப்பல்லோ மருத்துவ மனைக்கு, லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே, நேற்று வந்தார். அவர், முதல்வர் ஜெயலலிதாவுக்கான புதிய சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், செப்., 22 முதல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 38 நாட்களாக அவருக்கு சிகிச்சை தொடர்கிறது. அப்பல்லோ டாக்டர்கள் குழுவும், லண்டன் டாக்டர் ஜான்ரிச்சர்டு பீலே மற்றும் டில்லி எய்ம்ஸ் டாக்டர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவக் குழுவினர் அளிக்கும் தீவிர சிகிச்சைக்கு ... |
| Posted: 30 Oct 2016 10:30 AM PDT சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தேறி வருகிறது; அவரது குடும்ப உறுப்பினர்களிடம், அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும், தொலைபேசியி லும் நலம் விசாரித்து வருகின்றனர். கருணாநிதிக்கு ஏற்பட்ட காய்ச்சலை தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாக, கை, கால்களில் சிவந்த நிறத்தில், அக்கி போன்றகொப்பளங்கள் தோன்றின.இதனால், அவருக்கு வீட்டிலேயே, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொப்பளங்கள் ஆறி வருகின்றன.இதற்கிடையில், அவரது மகன் அழகிரி நேரில் சந்தித்து நலம்விசாரித்தார். அத்துடன், ... |
| சவுதி விமான தாக்குதல்: ஏமனில் 60 பேர் பலி Posted: 30 Oct 2016 10:32 AM PDT
சனா : ஏமன் நாட்டில், சிறை வளாகத்தில், சவுதி கூட்டுப்படைகள், விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், 60 கைதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை: மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில், அதிபர் மன்சூர் ஹாதியின் படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த ஹவுதி போராளிகள், தலைநகர் சனாவை, 2014ல் கைப்பற்றினர். இங்கு, அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது. இதில், அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. ... |
| வேட்பாளர்களை அறிவித்தது தே.மு.தி.க., 3 தொகுதி தேர்தலில் 5 முனை போட்டி Posted: 30 Oct 2016 10:38 AM PDT மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான தேர்த லில், தே.மு.தி.க.,வும் களமிறங்கியுள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் களை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். இதனால், மூன்று தொகுதிகளிலும், ஐந்து முனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில், அடுத்த மாதம், 19ல், தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., கட்சிகள் அறிவித்து விட்டன. ஆனால், விஜயகாந்த் கட்சியான, தே.மு.தி.க., சார்பில், வேட்பாளர்களை களம் இறக்குவதில், ... |
| தீபாவளி மது விற்பனை ரூ.360 கோடி கடைகளை குறைத்தும் அசரவில்லை Posted: 30 Oct 2016 10:42 AM PDT தமிழகத்தில்,தீபாவளிக்கு,360 கோடி ரூபாய்க்கு, 'டாஸ்மாக்' மது விற்பனை நடந்து உள்ளது. 500 கடைகள் குறைந்தாலும், முந்தைய தீபாவளியை விட, 25 கோடி ரூபாய் கூடுதலாக விற்றுள்ளது.தமிழகத்தில், 6,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில், தினசரி, 80 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடக்கிறது. ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில், 100 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். |
| 'தீபாவளி பண்டிகை ராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பு':ரேடியோ உரையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம் Posted: 30 Oct 2016 11:29 AM PDT புதுடில்லி:''நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, பல்வேறு தியாகங்களை செய்யும் நம் ராணுவ வீரர்களுக்கு, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை அர்ப்பணிக்கிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் ரேடியோ மூலம், 'மன் கி பாத்' என்ற பெயரில் உரையாற்றி வருகிறார். இந்த உரையின், 25வது நிகழ்ச்சி, நேற்று ஒலிபரப்பானது; அந்த உரையில் பிரதமர் கூறியுள்ளதாவது:சில மாதங்களாக, நம் ராணுவ வீரர்கள், நம் பாதுகாப்புக்காக பல்வேறு தியாகங்களை அதிக அளவில் செய்து வருகின்றனர்; சிலர், தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.இந்த தியாகத்துக்கு ... |
| ஜம்மு-காஷ்மீரில் பள்ளி கட்டடங்களுக்கு தீ Posted: 30 Oct 2016 12:04 PM PDT ஸ்ரீநகர் ; ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மூன்று பள்ளி கட்டடங்கள், அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வன்முறை: ஜம்மு --- காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஜூலை 9 முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு, 90க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் இன்னும் முழு அளவில் செயல்படவில்லை. 3 பள்ளிகளுக்கு ... |
| பார்லி., தேர்தலில் தோல்வி; ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா Posted: 30 Oct 2016 12:43 PM PDT
ரேக்ஜாவிக் : ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து பார்லிமென்ட்டுக்கு நடந்த தேர்தலில் அடைந்த தோல்வியை ஏற்று தற்போதைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இழுபறி : ஐஸ்லாந்து பார்லிமென்ட் தேர்தல், இரு தினங்களுக்கு முன் நடந்தது. இதில், ஆளும் சுதந்திர கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பசுமை கட்சிக்கு இடையே கடும் போட்டி இருந்தது. இணையதள சுதந்திரம், நேரடி ஜனநாயகத்தை வலியுறுத்தி, பைரேட்ஸ் கட்சியும் போட்டியிட்டது. மொத்தம் 63 பார்லி., சீட்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பைரேட்ஸ் கட்சி 10 இடங்களிலும், எதிர்க்கட்சியான பசுமை கட்சி 21 ... |
| தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி Posted: 30 Oct 2016 01:56 PM PDT
திருவனந்தபுரம் : கேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும் நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது. ஒருங்கிணைக்க முடிவு: கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 15 ஆயிரம் பள்ளிகளை, 'IT@School' என்ற திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் களஞ்சிய இணையதளமான, 'விக்கிபீடியா'வை போல், 'ஸ்கூல் விக்கி' என்ற பெயரில் இணையதளம் ஏற்படுத்தி, அதில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான தகவல்களை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 31,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |