Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்... வெறியாட்டம்!: இந்திய வீரரை கொன்று உடலை துண்டுகளாக்கி வீச்சு

Posted: 29 Oct 2016 08:09 AM PDT

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், 15 பாக்., வீரர்கள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த, பயங்கரவாதிகள், இந்திய வீரர் ஒருவரை கொடூரமாக கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, வீசி எறிந்து வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, செப்டம்பரில், பாகிஸ் தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்; இது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதற்கு பழிக்கு பழியாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த இந்திய ...

ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகை பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை

Posted: 29 Oct 2016 08:13 AM PDT

புதுடில்லி:''ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நிலுவைத் தொகைகளை யும், உடன் வழங்க வேண்டும்,'' என, காங்., துணைத்தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், கூறியிருப்ப தாவது:எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை மக்கள் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. உத்தரகண்ட் எல்லைப் பகுதியில், தீபாவளி பண்டிகையை, இந்தோ - திபெத் எல்லை பாது காப்பு படையினருடன், நீங்கள் கொண்டாடி யுள்ளீர்கள்.ஆனால், மத்திய அரசு, சிலவாரங்க ளாக எடுத்து வரும் ...

அதிரடி! ராணுவ தகவல் திருட்டை தடுக்க 'ஸ்மார்ட் போன்': 1.75 லட்சம் விமான படையினருக்கு வழங்க முடிவு

Posted: 29 Oct 2016 08:25 AM PDT

புதுடில்லி:ராணுவ ரகசியங்கள், தகவல்கள் திருடப்படுவதையும், ஒட்டு கேட்கப்படுவதை யும் தடுக்க, 1.75 லட்சம் வீரர்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்க, இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில், ராணுவ முகாம் மீது, பாக்., பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யில், நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது; பயங்கரவாத முகாம்களை அழித்து, 40க்கும் அதிகமான பயங்கரவாதிகளை கொன்றது. இதையடுத்து. இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவுடன், நேரடியாக மோதி வெற்றி ...

திருப்பம்! சமாஜ்வாதி கட்சியில் சண்டை முடிந்து சமாதானம்:தேர்தல் கருதி முலாயம் - அகிலேஷ் திடீர் பாசம்

Posted: 29 Oct 2016 08:34 AM PDT

உ.பி.,யில், அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வரும் சமாஜ்வாதி கட்சியில், சட்ட சபை தேர்தல் நேரத்தில் மோதலை குறைக்க, கட்சித் தலைவர் முலாயம் சிங் முடிவு செய் துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் அதிருப்தியை போக்க, முலாயமும், அகிலேஷும், கருத்து வேறுபாடு களை மறந்து, திடீர் பாசம் காட்ட துவங்கி யுள்ளனர்.

உ.பி., மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலை யில், முலாயம் சிங்கின் தம்பி சிவ்பால் யாதவுக்கும், ...

தமிழக திட்டங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்க... வாய்ப்பு!: உணவு பாதுகாப்பு சட்டம் அமலால் மத்திய அரசு திருப்தி

Posted: 29 Oct 2016 08:44 AM PDT

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய நிலையில், 'உதய்' மின் திட்டத்திலும் தமிழகம் இணைய உள்ளதால், மத்திய அரசிடம் இருந்து, பல திட்டங்களுக்கு தாராள நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 1.91 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம்தோறும், தலா, 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு, ஒவ்வொரு மாதமும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை.இதில், மத்திய தொகுப்பில் இருந்து, அந்தியோ தயா அன்னயோஜனா பிரிவில், கிலோ மூன்று ரூபாய் விலையில், 65 ஆயிரம் டன்; வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில்,கிலோ, 5.65 ரூபாய்க்கு, 1.05 லட்சம் டன்; வறுமை கோட்டுக்கு மேல் ...

ஜெ., கைரேகை: ஒப்புதல் வழங்கியது தேர்தல் கமிஷன்

Posted: 29 Oct 2016 10:06 AM PDT

சென்னை: அ.தி.மு.க., வேட்பாளர்களின் அங்கீகார கடிதத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைரேகை வைப்ப தற்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு நவ.,19ல் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., சார்பில் முறையே ரெங்கசாமி, செந்தில் பாலாஜி, ஏ.கே.போஸ் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன் தினம் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷன் விதிகளின்படி, அங்கீகரிக்கப் பட்ட மாநில கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது ...

தீபாவளி தினமான நேற்று 50 இடங்களில் மாசு ஆய்வு

Posted: 29 Oct 2016 10:12 AM PDT

சென்னையில் ஐந்து இடங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட இடங் களில், பட்டாசால் ஏற்பட்ட மாசு குறித்து, நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்த, அரசு துறைகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றன. பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், உயர்நீதி மன்றம் பல்வேறு நிபந்த னைகளை விதித்துள்ளது. இதனை பின்பற்றும்படி, பொதுமக்களையும், பட்டாசு விற்பனையாளர்களை யும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ...

ஒரே ராக்கெட்டில் 82 செயற்கை கோள்கள் புதிய சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

Posted: 29 Oct 2016 10:17 AM PDT

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கை கோள்கள் ஏவுவதில் உலக சாதனை படைக்க உள்ளது.உலகிலேயே முதன் முறையாக, 82 செயற்கை கோள்களை, ஒரே ராக்கெட்டில் அனுப்ப உள்ளது.

இஸ்ரோவின் வணிக நிறுவனமான, ஆன்ட்ரி க்ஸ் கார்பரேஷன் சார்பில், பல்கலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படு கின்றன. சர்வதேச அளவில், ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள், மற்ற நாடுகளின் ராக்கெட் ஏவு நிறுவனங்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளன. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் முதன் முறையாக, 82 செயற்கை கோள்கள், ஒரே ராக்கெட்டில் விண் ணில் ...

கொல்லிமலையில் 58.4 சதவீதம் குழந்தை திருமணம் ஆய்வில் பகீர் தகவல்: தடுக்க விழிப்புண்வு அவசியம்

Posted: 29 Oct 2016 10:26 AM PDT

நாமக்கல்:'நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலையில், 58.4 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அவற்றை தடுக்க போதிய விழிப்புணர்வு, கல்வி மற்றும் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும், 15 வயது குழந்தை திருமணமங்கள் நடந்து வருகின்றன. அதனால், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் தங்களது சுகாதாரம், கல்வி வாய்ப்பு பெறும் உரிமகைள் மற்றும் குழந்தை பயருவத்தின் இயல்பான தன்மையை இழக்கின்றனர். தற்போது, இவற்றை தடுக்கவில்லை என்றால், வரும், 2030ம் ஆண்டுக்குள், 15.4 கோடி பெண் குழந்தைகள், குழந்தை திருமணத்தால் ...

தென்கொரிய அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Oct 2016 11:58 AM PDT

சியோல்: தென்கொரிய அதிபர் பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் தலைநகர் சியோலில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

தென்கொரிய நாட்டின் பெண் அதிபர் பார்க் கைன் ஹை தனது பழைய தோழி சோய் சூன் சில்லுடன் நெருக்கமான நட்பின் காரணமாக அரசின் பல முக்கிய பொறுப்புக்களை தனது தோழிக்கு தந்ததன் காரணமாகவும், ஆட்சிகளில் நடக்கும் ஊழல்களாலும் அதிருப்தி அடைந்த மக்கள் அவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
யார் நாட்டின் அதிபர்
கடந்த சில நாட்களாக நாட்டின் பல் வேறு பகுதிகளில் மக்கள் அதிபர் பார்க் ...

கால்சென்டர்கள் ரூ.500 கோடி மோசடி:போலீஸ் கமிஷனர் தகவல்

Posted: 29 Oct 2016 03:28 PM PDT

தானே:அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி 200 கால்சென்டர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தானே போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
ரூ.500 கோடி மோசடி:
தானே மிரா ரோட்டில் போலி கால்சென்டர்கள் நடத்தி அமெரிக்க பிரஜைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் போல் பேசி, ரூ.500 கோடி வரையில் மோசடி அரங்கேறியது. இதில் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சாகர் தாக்கர் வளைகுடா நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்.விசாரணையில், அவரை பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™