Tamil News | Online Tamil News |
- உரிமை இல்லாத பத்திரத்தை பதிவு செய்ய சொல்லி...நெருக்கடி! : பத்திரப்பதிவு துறை சார் - பதிவாளர்கள் குமுறல்
- காங்கிரஸ் தலைவராவதில் ராகுலுக்கு... முட்டுக்கட்டை!:உட்கட்சி தேர்தலுக்கான அறிகுறி இல்லை
- சிறப்பு பஸ்களில் சென்னைக்கு முன்னுரிமை : தொழில் நகரங்களில் திணறல்
- முதல்வர் உடல்நிலை : பிரதமர் அலுவலகம் மகிழ்ச்சி
- 4 மாதமாக பலன் தராத தென் மேற்கு பருவ மழை...முடிந்தது!:தீபாவளிக்கு மறுநாள் முதல் துவங்குகிறது 'வட கிழக்கு'
- நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
- பாக்., தூதரக ஊழியர் உளவு பார்த்தது... அம்பலம்!:நாட்டை விட்டு வெளியேற்ற அரசு உத்தரவு
- ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
- ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது : வெங்கையா நாயுடு திட்டவட்டம்
- தொடரும் பாக்.ராணுவத்தின் அத்துமீறல்: காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ஓயாத தொல்லை
- கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்
- சீனப்பொருட்களை புறக்கணித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும்
| Posted: 27 Oct 2016 07:41 AM PDT உரிமை ஆவணம் இல்லாத பத்திரத்தை, பதிவு செய்ய மறுத்த, சார் - பதிவாளர், கட்டாய இட மாற்றம் செய்யப்பட்டதால், பதிவுத் துறையில் உச்சகட்ட மோதல் துவங்கி உள்ளது; 'சொத்தின் முந்தைய உரிமை ஆவணம் இல்லாமல், பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர்;சில இடங்களில், ஆவணம் கேட்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். எதை செய்தா லும்,எங்களை பணியிட மாற்றம் செய்கின்றனர்' என, சார் - பதிவாளர்கள் குமுறுகின்றனர்.தமிழகத்தில், சொத்து பரிமாற்ற ஆவணங் களை பதிவு செய்ய, சார் - பதிவாளர்களுக்கு, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. கூடுத லாக, 'பதிவுக்கு வரும் சொத்தின் முந் தைய உரிமை ... |
| காங்கிரஸ் தலைவராவதில் ராகுலுக்கு... முட்டுக்கட்டை!:உட்கட்சி தேர்தலுக்கான அறிகுறி இல்லை Posted: 27 Oct 2016 07:47 AM PDT காங்கிரசில், உட்கட்சித் தேர்தலை ஒரு ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்ற கெடு, விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அந்த தேர்தலை நடத்துவதற்கான அறிகுறி, இதுவரை தென்படவில்லை. இதனால், சோனியாவே, காங்., தலைவராக தொடரும் சூழ்நிலை உள்ளதால், ராகுலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. காங்கிரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவான செயற்குழு, கடந்தாண்டு செப்டம்பரில் கூடியபோது, உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பதற்கான காலக் கெடுவை, 2016, டிசம்பர் வரை நீட்டித்தது; அப்போது, காங்., தலைவர் சோனியாவின் பதவி காலமும், ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. ஒரு ... |
| சிறப்பு பஸ்களில் சென்னைக்கு முன்னுரிமை : தொழில் நகரங்களில் திணறல் Posted: 27 Oct 2016 08:06 AM PDT தீபாவளி சிறப்பு பஸ்களை இயக்குவதில், சென்னைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள தால், தொழில் நகர பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் தொழில் நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, ஐந்து லட்சம் பேர் செல்வர். ஆனால், சேலத்தில் இருந்து பெங்களூருக்கும், கோவையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கும் வழக்கமாக இயக்கப்பட்ட பஸ்களில், பாதி அளவு, சென்னைக்கு சிறப்பு பஸ்களாக அனுப்பப் பட்டுள்ளன. இதனால், தொழில் நகரங்களில் இருந்து, தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர் செல்வோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் ... |
| முதல்வர் உடல்நிலை : பிரதமர் அலுவலகம் மகிழ்ச்சி Posted: 27 Oct 2016 09:32 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, செப்டம்பர், 22ல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 35 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அவரை பார்ப்பதற்காக நேரில் வருகை தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,அவர் வராதது, அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது உடல்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் தொடர்ந்து தகவல் களை ... |
| Posted: 27 Oct 2016 09:42 AM PDT நான்கு மாதங்களாக தமிழகத்திற்கு பலன் தராத, தென்மேற்கு பருவ மழை, 'கியான்ட்' புயலுடன், முடிவுக்கு வந்துள்ளது. காற்றின் திசை மாறியுள்ளதால், தீபாவளிக்கு மறுநாள் முதல், வட கிழக்கு பருவமழை துவங்க உள்ளது. ஆண்டு தோறும், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழையும்; அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழை யும் பெய்யும். இந்த ஆண்டு,தென் மேற்கு பருவமழை, வழக்க மான தேதியை விட, ஏழு நாட்கள் தாமதமாக, ஜூன், 8ல், கேரளாவில் துவங்கியது. செப்., 28க்குப் பின், மழை பெய்யவில்லை; தென் மேற்கில் இருந்து காற்று மட்டும் வீசியது.தமிழகத்திற்கு ... |
| நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை Posted: 27 Oct 2016 09:56 AM PDT சென்னை: ''சட்டசபை குழுக்களை உடனடியாக அமைக்காவிட்டால்,சபாநாயகர் மீது,நம்பிக் கை யில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலின் தலைமையில் நேற்று தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலகம் வந்தனர். சட்டசபை குழுக்களை அமைக்க வலியுறுத்தி, சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தனர்.பின், ஸ்டாலின் கூறியதாவது: அரசியல் சட்டப்படி, சட்டசபை நடவடிக்கை களை மேற்கொள்ள, பல குழுக்கள் அமைக்கப் பட வேண்டும். உதாரணமாக, மதிப்பீட்டு குழு, அதற்கானஅறிகுறியும் தென்படவில்லை. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில், ... |
| பாக்., தூதரக ஊழியர் உளவு பார்த்தது... அம்பலம்!:நாட்டை விட்டு வெளியேற்ற அரசு உத்தரவு Posted: 27 Oct 2016 10:21 AM PDT புதுடில்லி:இந்தியா - பாக்., இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில், உளவு பார்த்ததாக, இந்தியாவுக்கான, பாக்., துாதரகத்தில் பணியாற்றிய ஒருவன் சிக்கினான். அவனை நாட்டை விட்டு வெளியேற்றும்படி, மத்திய அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. ராணுவ ரகசியங்கள் வைத்திருந்ததாக, டில்லியில், நேற்று முன்தினம் மாலை, மூன்று பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கும்பலின் தலைவனான, பாக்., துாதரக ஊழியர் மெஹ்மூத் அக்தர், உளவு பார்த்து வந்தது தெரிய வந்தது.முக்கிய ஆவணங்கள் இது குறித்து,டில்லி போலீஸ் இணை கமிஷனர், ஆர்.எஸ்.யாதவ் ... |
| ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை Posted: 27 Oct 2016 10:23 AM PDT புதுடில்லி:''அரசு அதிகாரிகள், சில நேரங்களில் விரைந்து முடிவெடுக்க வேண்டும்; அந்த முடிவு, நாட்டு நலன் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஐ.ஏ.எஸ்., தேர்தவில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சகங்களில், துணை செயலர்களாக பணியாற்றிய அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:நாட்டின் கட்டமைப்பில், ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நல்ல திட்டங்களை, அரசுக்கு பரிந்துரைப்பதிலும், அவற்றை மிக நேர்த்தியாக செயல்படுத்துவதிலும், அரசு அதிகாரிகளின் ... |
| ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது : வெங்கையா நாயுடு திட்டவட்டம் Posted: 27 Oct 2016 10:37 AM PDT புதுடில்லி: ''ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகை யில், புதிய சட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை,'' என, மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: நாட்டு நடப்புகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் மிக முக்கிய பணியை ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியில், ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. 125 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில், ஒரு லட்சத் திற்கும் அதிகமான செய்தித்தாள் நிறுவனங்கள், 800க்கும்மேற்பட்ட, 'டிவி' ... |
| தொடரும் பாக்.ராணுவத்தின் அத்துமீறல்: காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ஓயாத தொல்லை Posted: 27 Oct 2016 12:39 PM PDT ஸ்ரீநகர்: இந்தியா -பாக். சர்வதேச எல்லையில் இரவில் பாக். ராணுவம் பலமுனை தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் நள்ளிரவிலும் துப்பாக்கி சத்தம் கேட்கிறது. இந்தியா-பாக்.இடையே உறவு மிகவும் மோசமடைந்து வருகி்ன்றன. இந்த சூழ்நிலையில் நேற்று பாக். தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர் மெகமூத் அக்தர், 38 என்பவன் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து 48 மணி நேரத்தில் அவன் நாட்டை விட்டுவெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது. பல முனை தாக்குதல் இந்நிலையில் நேற்று இரவு ... |
| கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தல் Posted: 27 Oct 2016 01:51 PM PDT மும்பை: நாட்டில் கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த உதவுமாறு மத்திய ரிசர்வ் வங்கி நாட்டிலுள்ள மற்ற வங்கிகளை வலியுறுத்தி உள்ளது. சமூக விரோதிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் கள்ள நோட்டுகளை மற்ற நோட்டுகளுடன் சேர்த்து வைத்து விடுவதால் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. வங்கிகளுக்கு எச்சரிக்கை கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடக் கூடிய சமூக விரோதிகளை அடையாளம் காண வங்கிகள் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்த வேண்டும். கள்ளநோட்டுகளை கண்டறியாமல் அவற்றை மறுபடியும் ... |
| சீனப்பொருட்களை புறக்கணித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் Posted: 27 Oct 2016 02:56 PM PDT
புதுடில்லி: சீனப்பொருட்களை புறக்கணித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் என இந்தியாவுக்கு சீனா எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் சீனப் பட்டாசுகளுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. அதபோல் பொதுவாகவே இந்தியாவில் சீனப் பொருட்களை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பா.ஜ., அகில இந்திய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் வலைதளத்தில் ஒரு கருத்து வெளியிட்டு இருந்தார்.அதில், சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது. இந்திய பொருட்களையே வாங்க வேண்டும். இது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 28,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |