Tamil News | Online Tamil News |
- இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் அச்சம்
- கர்நாடகா 'மாஜி' முதல்வர் எடியூரப்பா தப்பினார்!: சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து விடுவிப்பு
- கடுமையான கோஷ்டி பூசலால் காங்., மேலிடம் தவிப்பு!:மூன்று மாநிலங்களில் கட்சியினர் போர்க்கொடி
- ஒடிசாவை நோக்கி சென்ற 'முதலை' புயல் திசை மாறியது!:ஆந்திரா பக்கம் நெருங்குவதால் அங்கு பதற்றம்;தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- மேட்டூர் அணை நீர் திறப்பு தொடர்கிறது: இருப்பு சரிந்தாலும் குறைக்க தயக்கம்?
- என்.எஸ்.ஜி.,யில் இந்தியா : நியூசிலாந்து முன்வந்தது
- உள்ளாட்சிகளின் நிர்வாகப் பொறுப்பு கைமாறியதால் மக்கள் நிம்மதி!: தனி அலுவலர் திறம்படச் செயல்படுவார் என நம்பிக்கை
- சமாஜ்வாதியில் தொடரும் குடுமிப்பிடி : அகிலேஷ் ஆதரவு அமைச்சர் திடீர் நீக்கம்
- நடுவர்மன்ற தீர்ப்பு இறுதியானது: காவிரி வழக்கில் மத்திய அரசு மனு
- ஜெ., - கருணாநிதி சுகவீனம் தேர்தல் நெருக்கடியில் கட்சிகள்
- நோய் பாதிப்பால் நடக்க முடியாதவர்களுக்கு நண்பனாகும் ரோபோ: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
| இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் அச்சம் Posted: 26 Oct 2016 10:55 AM PDT
ரோம் : இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. கட்டடங்கள் குலுங்கின : மத்திய இத்தாலி மற்றும் ரோம் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகளில் தஞ்சம் : |
| கர்நாடகா 'மாஜி' முதல்வர் எடியூரப்பா தப்பினார்!: சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து விடுவிப்பு Posted: 26 Oct 2016 07:32 AM PDT பெங்களூரு:கர்நாடகாவில், சுரங்க ஊழல் வழக்கில் இருந்து, முன்னாள் முதல்வரும், அம்மாநில, பா.ஜ., தலைவருமான, எடியூரப்பா உள்ளிட்ட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2008ல், பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பெல்லாரி பகுதியில் சுரங்க ஒதுக்கீடு செய்ததில், 40 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார் ஆகியோர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது; ... |
| கடுமையான கோஷ்டி பூசலால் காங்., மேலிடம் தவிப்பு!:மூன்று மாநிலங்களில் கட்சியினர் போர்க்கொடி Posted: 26 Oct 2016 07:44 AM PDT வடகிழக்கு மாநிலங்களில், கடும் பின்ன டைவை சந்தித்து வரும் காங்கிரஸ், பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், கட்சி நிர்வாகிகளின் கோஷ்டி பூசலால், தன் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப் பில் இருந்த கட்சி என்ற பெருமை, காங்கிரசுக்கு உண்டு. இதுமட்டுமல்லாது, பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரசின் ஆட்சிக் கொடி தான் பறந்தது. ஆனால், சமீபகாலமாக, காங்கிர சின் நிலைமை பரிதாபமாகி விட்டது. தென் மாநிலமான கர்நாடகாவைத் தவிர, பெரிய மாநிலங்கள் ஒன்றில் கூட காங்கிரஸ் ஆட்சி இல்லை. புதுச்சேரி,உத்தரகண்ட் போன்ற மிகச்சிறிய ... |
| Posted: 26 Oct 2016 07:48 AM PDT வங்க கடலிலிருந்து ஒடிசாவை நோக்கி மிரட்டிய, 'முதலை' புயல், திசை மாறி, ஆந்திர மாநிலம் நெல்லுாரை நோக்கி நகர்ந்து வருவ தால், அங்கு பதற்றம் நிலவுகிறது; சென்னை உட்பட, தமிழக கடலோர மாவட்டங்களுக்கு, மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்க கடலில், ஒரு வாரமாக சுழன்று கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'கியான்ட்' புயலாக மாறி, ஆந்திராவை குறி வைத்து நகர்கிறது. மியான்மர் வைத்துள்ள கியான்ட் என்ற பெயருக்கு, முதலை என்று பொருள். இந்த புயல், நேற்று முன்தின நிலவரப் படி, விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கோபால்பூர் இடையிலான பகுதியை கடக்கும் என, ... |
| மேட்டூர் அணை நீர் திறப்பு தொடர்கிறது: இருப்பு சரிந்தாலும் குறைக்க தயக்கம்? Posted: 26 Oct 2016 08:27 AM PDT மேட்டூர்: மேட்டூர் அணையில், நீர் இருப்பு வெகுவாக சரிந்த நிலையிலும், அதை குறைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில், கடந்த செப்., 17ல் டெல்டா சம்பா சாகுபடிக்கு, வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டார்.டெல்டா சாகுபடி : அதன்படி, செப்., 20ல், மேட்டூர் அணையில் இருந்து, வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி நீர், பாசனத்துக்கு திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணை நீர் இருப்பு நேற்று,18.64 டி.எம்.சி.,யாக சரிந்தது.குடிநீர் தேவைக்கு, 6 ... |
| என்.எஸ்.ஜி.,யில் இந்தியா : நியூசிலாந்து முன்வந்தது Posted: 26 Oct 2016 08:37 AM PDT புதுடில்லி: என்.எஸ்.ஜி., எனப்படும், அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராக உதவி செய்வதற்கு, நியூசிலாந்து முன்வந்துள்ளது. அணுசக்தியை ஆக்கப்பூர்வ மான பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள, என்.எஸ்.ஜி., குழுமத்தில் இணைவதற்கு இந்தியாவிண்ணப்பித்திருந்தது. இதில் உறுப்பினராவதன் மூலம், இந்த அமைப் பில் உள்ள, 48 நாடுகளுடன் அணுசக்தி தொடர் பான தொழில்நுட்பங்களை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.தென் கொரியாவின் சியோலில், ஜூனில் நடந்த, என்.எஸ்.ஜி., கூட்டத்தில், இந்தியாவின் முயற்சிக்கு, சீனா கடும் எதிர்ப்பு ... |
| Posted: 26 Oct 2016 08:49 AM PDT உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், அரசியல் இடையூறின்றி மக்கள் பணியாற்ற, அருமை யான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை, அவர்கள் திறம்படச் செய்வர் என்ற நிம்மதி, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 578 பேரூராட்சி, 15,524 ஊராட்சி, 388 ஊராட்சி ஒன்றியம், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், நேற்று முன்தினம் மாலையுடன், நிறைவு பெற்றது.உயர் நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தனி அதிகாரிகள் நியமிக்க, நேற்று முன்தினம், ... |
| சமாஜ்வாதியில் தொடரும் குடுமிப்பிடி : அகிலேஷ் ஆதரவு அமைச்சர் திடீர் நீக்கம் Posted: 26 Oct 2016 09:19 AM PDT லக்னோ: உ.பி.,யில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பூசல் தொடர்கிறது; முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான அமைச்சரை, கட்சியில் இருந்து நீக்கினார், கட்சியின், உ.பி., மாநில தலைவரான சிவ்பால் யாதவ். அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும், உ.பி.,யில், ஆளும் சமாஜ்வாதி தலைவர் முலாயமின் மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயமின் சகோதரர் சிவ்பால் யாதவ் இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, மாநில அமைச்சர் பதவியில் இருந்து, சிவ்பால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மூவரை நீக்கினார் அகிலேஷ். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகிலேஷுக்கு ... |
| நடுவர்மன்ற தீர்ப்பு இறுதியானது: காவிரி வழக்கில் மத்திய அரசு மனு Posted: 26 Oct 2016 10:17 AM PDT புதுடில்லி:'காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இறுதி யானது; சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கோர்ட்டை அணுக, சட்டத்தில் இடமில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்து உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த, காவிரி நடுவர் மன்றம், 2007ல், இறுதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது; தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும், விளக்கம் கோரி மனு தாக்கல் செய்தன.இந்த வழக்கு, அக்., 19ல், விசாரணைக்கு வந்த போது, 'மத்திய, மாநில அரசுகளின் சார்பில், பதில் மனு தாக்கல் செய்ய ... |
| ஜெ., - கருணாநிதி சுகவீனம் தேர்தல் நெருக்கடியில் கட்சிகள் Posted: 26 Oct 2016 10:33 AM PDT அ.தி.மு.க.,- - தி.மு.க., தலைவர்கள் சிகிச்சை யில் இருக்கும் நேரத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடப்பதால், நிர்வாகி களுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு, நவ., 19ல், தேர்தல் நடக்கிறது; வேட்புமனு தாக்கல், நேற்று துவங்கியது. எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில், தி.மு.க.,வும், அ.தி.மு.க., வும் உள்ளன. இந்நிலையில், ஏற்கனவே நடந்த தேர்தல் களுக்கு, வியூகம் வகுத்து கொடுத்த தலைவர்கள், தற்போது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல்வரும், அ.தி.மு.க., ... |
| நோய் பாதிப்பால் நடக்க முடியாதவர்களுக்கு நண்பனாகும் ரோபோ: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Posted: 26 Oct 2016 01:33 PM PDT பெய்ஜிங்: நடக்க முடியாதவர்களுக்கு நடப்பதற்கு உதவும் ரோபோ ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பக்கவாதம் மற்றும் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு நடக்க உதவி செய்யும் ரோபோ ஒன்றினை சீனாவின் பெய்காங் பல்கலை ஆராய்ச்சியாளர்களும் டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். அணிந்து கொள்ளக் கூடியது விஞ்ஞானிகளால் வடிவமைககப்பட்டு்ள்ள இந்த ரோபோவானது இயற்கையான முழங்கால் அசைவுகளை ஏற்படுத்தி நடக்க முடியாதவர்கள் யார் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 27,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |