Tamil News | Online Tamil News |
- மகனுடன் ஏற்பட்ட மோதல் விஷயத்தில் முலாயம்... சமாளிப்பு!:கட்சியிலும், குடும்பத்திலும் பிரச்னை இல்லையாம்
- வெளிநாட்டு பல்கலை கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு
- 'இயற்கை ஆதாரங்கள் பழங்குடியினர் சொத்து'
- 14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி
- 92 வயது தி.மு.க., தலைவர் கருணாநிதி... சுகவீனம்!:கட்சியினர் சந்திக்க வர வேண்டாம் என குடும்பத்தினர் தடை;அறிவாலயத்தில் பிற கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
- இலவச 'காஸ்' இணைப்பு திட்டத்திற்கு முழுக்கு?
- காங்., - த.மா.கா., பங்கேற்பு; மற்ற கட்சிகள் புறக்கணிப்பு:தி.மு.க., நடத்திய அனைத்து கட்சி கூட்டம்
- ரூ.85,000 கோடி கடன் 'ஸ்வாகா' பட்டியலில் 57 பேர்
- வதந்திக்கு இடமளிக்க கூடாது: தி.மு.க.,வினர் வழக்கில் உத்தரவு
- மலேஷியாவில் தீ விபத்து: 3 இந்தியர்கள் பலி
- கார்பன் டை ஆக்சைடு அதிகம்; சுற்றுச்சூழலுக்கு அபாயம்
| Posted: 25 Oct 2016 09:15 AM PDT லக்னோ:''குடும்பத்திலும், கட்சியிலும் எந்தப் பிரச்னையும் இல்லை; நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். தொண்டர்களும் ஒற்றுமையாக உள்ளனர்,'' என கூறியுள்ள, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக் கும் வகையில், மகன் அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட மோதலை, சமாளித்துள்ளார். சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சித் தலைவர் முலாயமின் மகனும், முதல்வரு மான அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயமின் சகோதரர் சிவ்பால் யாதவ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதல், ... |
| வெளிநாட்டு பல்கலை கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு Posted: 25 Oct 2016 09:42 AM PDT 'நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. டில்லியில், நேற்று நடந்த, மத்திய அரசின் கல்வி வாரிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:தமிழகம் ஏற்காது தமிழகத்தில், மீன்வளம், விவசாயம், கல்வி, சட்டம், இசை, கலை, விளையாட்டு என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல்கலைக் கழகங்கள் உள்ளன. எனவே, அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகை யிலான, பல்நோக்கு முனைப்புடன் ... |
| 'இயற்கை ஆதாரங்கள் பழங்குடியினர் சொத்து' Posted: 25 Oct 2016 09:50 AM PDT புதுடில்லி: ''இயற்கை ஆதாரங்கள், பழங்குடி யினரின் சொத்து; அவர்களுடைய உரிமையை பறிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார். முதல்முறையாக நடைபெறும் பழங்குடியினர் திருவிழாவை, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: மலைப் பகுதிகளில் உள்ள இயற்கை ஆதாரங்க ளையே பழங்குடியின மக்கள் பயன்படுத்துகின்ற னர்; அவை,அந்த மக்களின் சொத்து.அந்த உரிமையை பறிக்கும் வகையில்செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் ... |
| 14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி Posted: 25 Oct 2016 09:57 AM PDT ஐதராபாத்: ஆந்திராவில், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய, லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அதிகாரி சேர்த் துள்ள சொத்துக்களை பார்த்து, மலைத்து போய் விட்டனர். முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி உள்ள, ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், வினுகோண்டா வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர், பூர்ணசந்திர ராவ், 55. லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரில் அவரது வீட்டில், ஆந்திரா லஞ்ச ஒழிப்பு போலீசார், திடீர் சோதனை நடத்தினர்.அந்தசோதனையில், பூர்ணசந்திர ராவ், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில்,14 ... |
| Posted: 25 Oct 2016 09:58 AM PDT தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 10 நாட்களாக, காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை காரணமாக, உடம்பில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனை டாக்டர்கள், வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 92 ஆகும் அவரை, கட்சியினர் யாரும் சந்திக்க வர வேண்டாம் என, குடும்பத்தினர் அறிவுறுத்தி யுள்ளனர்; அறிவாலயத்தில் பிற கட்சி தலைவர் களுடன், பொருளாளர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.கடந்த ஓரிரு வாரமாக, கருணாநிதி, கட்சி அலுவலகமான அறிவாலயம் செல்லவில்லை. இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்த நேர் காணல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. மூன்று தொகுதி ... |
| இலவச 'காஸ்' இணைப்பு திட்டத்திற்கு முழுக்கு? Posted: 25 Oct 2016 10:04 AM PDT ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் பெயரில் இலவச சமையல், 'காஸ்' இணைப்பு வழங்கும் திட்டம், போதிய ஏற்பாடுகள் செய்யாததால், தோல்வியடையும் நிலையை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள, ஐந்து கோடி ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் பெயரில், சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். உயர்ந்த நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள, 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டம், மிகவும் மந்த நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயாமல், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் ... |
| காங்., - த.மா.கா., பங்கேற்பு; மற்ற கட்சிகள் புறக்கணிப்பு:தி.மு.க., நடத்திய அனைத்து கட்சி கூட்டம் Posted: 25 Oct 2016 10:28 AM PDT காவிரி பிரச்னை தொடர்பாக, தி.மு.க., நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை, பிரதான கட்சிகள் புறக்கணித்தன; காங்கிரஸ், த.மா.கா., பங்கேற்றன. காவிரி நதி நீர் பங்கீட்டில், கர்நாடக அரசின் போக்கு மற்றும் மத்திய அரசின் போக்கை கண்டித்து, தி.மு.க., சார்பில், அனைத்து கட்சிக் கூட்டம், நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ளுமாறு, தமிழக கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், பிரதான கட்சிகளான, பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் மக்கள் நல கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை; ஆனால்,காங்கிரஸ், த.மா.கா., உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்றன. கடைசி ... |
| ரூ.85,000 கோடி கடன் 'ஸ்வாகா' பட்டியலில் 57 பேர் Posted: 25 Oct 2016 10:33 AM PDT புதுடில்லி:'வங்கிகளில், ரூ. 5௦௦ கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத, 57 பேரின் பாக்கித் தொகை, 85 ஆயிரம் கோடி ரூபாய் என, சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.ஐ.எல்., எனப்படும், பொதுநல வழக்கு மையம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், '2015ல், தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய, 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. வங்கிகளிடம் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் பற்றியவிபரங்களை வெளியிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, 500 கோடி ரூபாய்க்கு மேல், கடனை ... |
| வதந்திக்கு இடமளிக்க கூடாது: தி.மு.க.,வினர் வழக்கில் உத்தரவு Posted: 25 Oct 2016 10:48 AM PDT சென்னை:'மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வரின் உடல் நிலை குறித்து, வதந்தி பரப்பவும், வதந்திக்கு இடமளிக்கவும் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர்கள் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜிவ் காந்தி தாக்கல் செய்த மனு:முதல்வரின் உடல் நிலை குறித்து, முகநுால் மற்றும் 'டுவிட்டரில்' பதிவிட்டதாக, எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடு பற்றிய மக்களின் உணர்வுகளையும், முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிடாதது குறித்தும், முகநுாலில் பதிவு ... |
| மலேஷியாவில் தீ விபத்து: 3 இந்தியர்கள் பலி Posted: 25 Oct 2016 11:45 AM PDT கோலாலம்பூர்: மலேஷியாவில், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மூன்று இந்தியர்கள் உட்பட, ஆறு பேர் உடல் கருகி பலியாயினர். தீ விபத்து: தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர், குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அங்குள்ள ஜோஹர் பஹ்ரூவில், சுல்தான் ஷா பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில், அவசர சிகிச்சை பிரிவில், நேற்று காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டது; அடுத்தடுத்த தளங்களுக்கும், தீ வேகமாக ... |
| கார்பன் டை ஆக்சைடு அதிகம்; சுற்றுச்சூழலுக்கு அபாயம் Posted: 25 Oct 2016 03:27 PM PDT ஓஸ்லோ: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், 'கார்பன் டை ஆக்சைடு' ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக, உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. 44 மடங்கு : சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும், உலக வானிலை ஆராய்ச்சி நிறுவன தலைமை செயலர் பெட்ரி டெலஸ் கூறியதாவது:தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன் இருந்த, 'கார்பன் டை ஆக்சைடு' அளவுடன் ஒப்பிடும் போது, தற்போதைய அளவு, 44 மடங்காக உள்ளது. அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து, அதிகளவில் 'கார்பன் டை ஆக்சைடு' வெளியாகிறது. இதனால், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 26,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |