Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விடைபெறுகிறது ஐ.என்.எஸ்., விராட்

Posted: 23 Oct 2016 11:07 AM PDT

புதுடில்லி ; உலகின் மிகப் பழமையான, விமானந்தாங்கி போர்க்கப்பல், ஐ.என்.எஸ்., விராட், இந்திய கடற்படையில் இருந்து, இந்தாண்டு இறுதியில் விடைபெறுகிறது.
28 ஆண்டுகள் சேவை:
இந்திய கடற்படையில், 28 ஆண்டுகளாக சேவையாற்றிய, பிரம்மாண்ட போர்க்கப்பல், ஐ.என்.எஸ்., விராட்; இது, பிரிட்டனில், 27 ஆண்டுகள் திறம்பட சேவையாற்றிய பின், இந்திய கடற்படைக்கு வாங்கப்பட்டது. இந்த போர்க்கப்பல், இந்தாண்டு இறுதியில் இந்திய கடற்படையில் இருந்து விடைபெறுகிறது. இந்த கப்பலை தன்னிடம் ஒப்படைக்கும்படி, மத்திய அரசிடம், ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ...

சூடு பிடிக்கும் 'ஆன்லைன்' பட்டாசு விற்பனை

Posted: 23 Oct 2016 08:15 AM PDT

தீபாவளிக்கு, 'ஆன்லைன்' வழியிலான பட்டாசு விற்பனை, சூடுபிடித்து உள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வாங்க, மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், இணையதளம் வழியே முன்பதிவு செய்வது,ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இந்தஆண்டும்,ஆன்லைன் விற்பனை சூடுபிடித்து உள்ளது. போக்குவரத்து செலவு மற்றும் காலவிரயம் தவிர்க்கப்படுவதே இதற்கு காரணம்.
இது குறித்து, சிவகாசியை சேர்ந்த, தீபாவளி ஆன்லைன் பட்டாசு வியாபாரி
எம்.சங்கரநாராயணன் கூறியதாவது: ஆண்டுதோறும், ஆன்லைன் வழியே பட்டாசு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக, தீபாவளியின் போது, 20 ...

குடும்ப சண்டையால் உ.பி.,யில் ஆளும் சமாஜ்வாதி கட்சி...உடைகிறது?:சித்தப்பா உட்பட, 4 மந்திரிகள் பதவியை பறித்தார் அகிலேஷ்

Posted: 23 Oct 2016 09:28 AM PDT

லக்னோ:உத்திர பிரதேச மாநிலத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சி மேலிடத்தின் குடும்ப சண்டையால், அந்தக் கட்சி உடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தனக்கு எதிராக காய் நகர்த்தி வந்த, சித்தப்பா சிவ்பால் யாதவ் உட்பட நான்கு பேரை, மந்திரி பதவியிலிருந்து முதல்வர் அகிலேஷ் அதிரடி யாக நீக்கியுள்ளார்; அதற்கு பதிலடியாக, அகிலேஷ் ஆதரவாளரான ராம் கோபாலை, கட்சி தலைவர் முலாயம் சிங் நீக்கியுள்ளார்.உ.பி., மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் ...

'சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம்'

Posted: 23 Oct 2016 09:32 AM PDT

சென்னை:''சுற்றுச்சூழலை பாதுகாக்க, மக்களும், அரசும் ஒத்துழைப்பது அவசியம். இதுகுறித்து, பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம், ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தென் மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், இரண்டு நாட் களாக நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கு, சென்னை தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில் நேற்று முடிந்தது.பெரும் சவால்
நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சஞ்சய் கிஷன் ...

கறுப்பு பண முதலைகளை பிடிக்க அரசு... தீவிரம்!: நாடு முழுவதும் வருமான வரித்துறை சோதனை

Posted: 23 Oct 2016 09:35 AM PDT

புதுடில்லி:கறுப்புப் பணத்தை அரசுக்கு தெரி வித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அளிக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் முடிந்த நிலையில், கறுப்புப் பணத்துக்கு எதிரான நட வடிக்கைகளை, வருமான வரித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

'கறுப்புப் பணம் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவித்து, அபராதத் தொகை செலுத்தினால் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே ஒரு முறை வழங்கப்பட்ட வாய்ப்பு முடிந்த நிலை யில், இரண்டாவதாக வழங்கப்பட்ட வாய்ப்பு, செப்., 30ம் தேதியுடன் முடிந்தது. இந்த வாய்ப்பின்போது, 65 ஆயிரம் கோடி ரூபாய் ...

சர்வதேச மத்தியஸ்த மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை

Posted: 23 Oct 2016 09:55 AM PDT

புதுடில்லி:''வர்த்தக நிறுவனங்களின் பிரச்னை களுக்கு, சுமுக தீர்வு காணும் சர்வதேச மத்தி யஸ்த மையமாக நம் நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில், சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக நடந்த சர்வதேச மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆயிரத்துக் கும் அதிகமான தேவையற்ற, பழமையான சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன.அதற்காக, சட்டங்கள் ஒரே நாளில் தன்னிச்சையாக மாற்றப்பட மாட்டாது; மாற்றவும் முடியாது. வர்த்தக நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு ...

அனைத்து கட்சி கூட்டம்: தி.மு.க., ஏமாற்றம்!

Posted: 23 Oct 2016 10:07 AM PDT

காவிரி பிரச்னைக்காக, தி.மு.க., கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க, பிரதான கட்சிகள் முடிவு செய்துள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஸ்டாலின் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இருப்பினும், கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் டில்லி சென்று, பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 'காவிரி பிரச்னைக்கு, மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு' என, பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 'மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
சந்திப்பு
பார்லிமென்டை கூட்டி விவாதித்தே, ...

சுற்றுலாவை மேம்படுத்த 'விசா' விதிகளை தளர்த்த முடிவு

Posted: 23 Oct 2016 10:27 AM PDT

இந்துார்:சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க, 'விசா' விதிகளை தளர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரில், நடந்த சர்வதேச முதலீட் டாளர்கள் மாநாட்டில், வெளியுறவுஅமைச்சரும், பா.ஜ., மூத்த தலை வருமான சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:மத்தியில்,தே.ஜ.,கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின், மின்னணு முறை மூலம், விசா பெறும் திட் டத்தை அறிமுகப்படுத்தினோம்.முதல் கட்டமாக, 100 நாடுகளின் துாதரகங்களில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, 150 நாடு களுக்கு ...

கர்நாடகா பிடிவாதம் விவசாயிகள் கொந்தளிப்பு

Posted: 23 Oct 2016 10:31 AM PDT

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வாரமாகி யும், காவிரி நீர் திறக்க, கர்நாடக அரசு மறுத்து வருகிறது. அதனால், மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக தேவைக்காக, ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். இந்தாண்டு, ஜூன் முதல் செப்., வரை வழங்க வேண்டியதில், 81 டி.எம்.சி.,யை கர்நாடகா பாக்கி வைத்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு, தொடர்ந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி நீர் திறக்க, அக்., 18ல், உச்ச நீதிமன்றம் ...

'இந்தியாவுக்கு எப்போதும் ரஷ்யாவே உற்ற தோழன்'

Posted: 23 Oct 2016 10:33 AM PDT

புதுடில்லி:''நெருக்கடியான சமயங்களில், இந்தியாவுக்கு உற்ற தோழனாக ரஷ்யா திகழ் கிறது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய உதவியாளர் செர்கி செம்ஸோவ் கூறியுள்ளார்.

ரஷ்யாவில், 700க்கும் மேற்பட்ட சிவில் மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்க ளின் தாய் நிறுவனம், ரோஸ்டெக் ஸ்டேட் கார்ப்பரேஷன்; இதன் தலைமை நிர்வாகி, செர்கி செம்ஸோவ்; ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான உதவியாளர். இவர், செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி விபரம்:இந்தியாவின்நெருக்கடியான தருணங்களில், உற்ற தோழனாக ரஷ்யா திகழ்கிறது.இந்த விஷயத் தில், அமெரிக் ...

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டு சிறை

Posted: 23 Oct 2016 10:43 AM PDT

கலிபோர்னியா: அமெரிக்காவில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 1,503 ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவன் ஜான், 41; இவன், தன் மகளை, 2009 - 2013 வரை, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்போது, 23 வயதாகும் அந்தப் பெண், தந்தை தனக்கு செய்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார்; போலீசார், ஜானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பிரஸ்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.
தந்தைக்கு வருத்தம் கிடையாது :
வழக்கை விசாரித்த ...

ராகுலுக்கு தலைமை பொறுப்பு: நாராயணசாமி வலியுறுத்தல்

Posted: 23 Oct 2016 12:52 PM PDT

புதுடில்லி : காங்., துணை தலைவர் ராகுல், கட்சியை வலுப்படுத்த, கடுமையாக உழைத்து வருகிறார்; அவர் கட்சியின் தலைவராக, தக்க தருணம் வந்துள்ளது,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். காங்., கட்சியை சேர்ந்த நாராயணசாமி, புதுச்சேரி முதல்வராக உள்ளார்.
கடும் உழைப்பு :
டில்லி சென்றுள்ள நாராயணசாமி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:மத்திய, மாநில அளவில், காங்கிரசை வலுப்படுத்த, துணை தலைவர் ராகுல், கடுமையாக உழைத்து வருகிறார். அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள உ.பி., மாநிலம் முழுவதும் சமீபத்தில் சுற்றுப்பயணம் ...

தமிழக அமைச்சரவை இன்று மீண்டும் கூடுகிறது

Posted: 23 Oct 2016 02:29 PM PDT

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று(அக்.,24) நடக்கிறது.
ஓ.பி.எஸ்., தலைமையில்...
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது வசமிருந்த இலாகாக்களை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததோடு, அவர் தலைமையில் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளித்து, கவர்னர் உத்தரவிட்டார்.அதனால், அக்., 19ல், தமிழக அமைச்சரவை கூட்டம், பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இதில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகள் நியமித்தல், அங்கீகாரம் ...

தாக்குதல் குறித்து நான் பேசுவதில்லை: மனோகர் பரீக்கர்

Posted: 23 Oct 2016 03:22 PM PDT

பனாஜி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் நடவடிக்கை குறித்து இனி பேசப் போவதில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரீக்கர் தெரிவித்துள்ளார்.
கண்டனம் :
பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ்., கொள்கையே அடிப்படை எனவும், எல்லை தாண்டி, சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது முதல் முறை, காங்., ஆட்சியில் ராணுவம் நிகழ்த்தியதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்மீது கண்டனங்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™