Tamil News | Online Tamil News |
- ஸ்மார்ட் சிட்டி'களில் ரயில் நிலையங்களை மேம்படுத்த...அதிரடி!:அமைச்சகங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
- இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு முறையால் தி.மு.க.,வில்...சலசலப்பு!:கண்துடைப்பு நேர்காணல் என உடன்பிறப்புகள் கடுப்பு
- மூன்றாவது சக்தி பா.ஜ., : நிரூபிக்க அமித் ஷா உத்தரவு
- ஜெ., உடல்நிலையில் முன்னேற்றம் : நேரில் பார்த்த கவர்னர் மகிழ்ச்சி
- கோர்ட்டால் ஜப்தி செய்யப்பட்டிருந்த 450 அரசு பஸ்கள்...ரிலீஸ்!:தீபாவளியை ஒட்டி விடுவித்துக் கொள்ள உத்தரவு
- பா.ஜ.,விலிருந்து மேனகா மகன் வருண்...நீக்கம்?:ஆயுத ரகசியங்களை வெளியிட்டதாக புகார்
- பிரசாரம் தொடங்குவதில் தயக்கம் நல்ல நாளுக்காக காத்திருப்பு
- அமைச்சரவை கூட்டங்களில் மொபைல் போனுக்கு தடை
- நாட்டின் முதல் ரயில்வே பல்கலை வதோதராவில் அமைக்க திட்டம்
- அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் அமைக்க மத்திய அரசு தீவிரம்
- இந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்
- பாக்.,கலைஞர்களுக்கு தடை: சுப்ரமணியன் சுவாமி ஆதரவு
| ஸ்மார்ட் சிட்டி'களில் ரயில் நிலையங்களை மேம்படுத்த...அதிரடி!:அமைச்சகங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து Posted: 22 Oct 2016 06:16 AM PDT புதுடில்லி:'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் இடம் பெற்றுள்ள நகரங்களில், ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த, மத்திய நகர்ப்புற அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் திட்டங்களில், முக்கிய இடம் பிடித்திருப்பது, சீர்மிகு நகர திட்டமான, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, வளர்ந்த நாடுகளில் உள்ள ஸ்மார்ட் சிட்டிகள் போல, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, மேம்படுத்த வேண்டும் என்பது, பிரதமர் ... |
| Posted: 22 Oct 2016 07:25 AM PDT வேட்பாளர்களை முடிவு செய்து விட்டு, கண்துடைப்புக்காக நேர்காணல் நடத்தியது ஏன் என, தி.மு.க.,வில் திடீர் குமுறல் கிளம்பி உள்ளது. தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு, நவ., 19ல் தேர்தல் அறிவிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, வேட்பாளர் தேர்வில், தி.மு.க., இறங்கியது. இதற்காக, கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம், நேர்காணலும் நடத்தப்பட்டது. தி.மு.க., பொருளா ளர் ஸ்டாலின் தலைமை யில் நடந்த நேர் காணலில், கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்ட, தி.மு.க.,வினர் பங்கேற்றனர். வழக்கம் போல, விருப்ப மனு ... |
| மூன்றாவது சக்தி பா.ஜ., : நிரூபிக்க அமித் ஷா உத்தரவு Posted: 22 Oct 2016 07:48 AM PDT 'இடைத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தவிர, பிரதான கட்சிகள் போட்டியிடாததால், மூன்றா வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை, தமிழக பா.ஜ., பெற வேண்டும்' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட, அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்து உள்ளன. பா.ஜ., - பா.ம.க., களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளன. இதனால், நான்கு முனைப் போட்டி அமைய வாய்ப்புள்ளது. இந்த கட்சிகளில், தி.மு.க., - அ.தி.மு.க.,வை எதிர்த்து, பா.ஜ., களமிறங்கிஉள்ளதால், தேர்தல் முடிவில் குறிப்பிடத்தக்க ஓட்டுகளை பெற்று, மூன்றாவது பெரிய ... |
| ஜெ., உடல்நிலையில் முன்னேற்றம் : நேரில் பார்த்த கவர்னர் மகிழ்ச்சி Posted: 22 Oct 2016 09:53 AM PDT சென்னை : முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால், செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு, லண்டன் மற்றும் சிங்கப்பூர் டாக்டர் களும், டில்லி எய்ம்ஸ் டாக்டர்களும், சிகிச்சை அளித்து வருகின்றனர். இம்மாதம், 1ம் தேதி, கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார். அதைத் தொடர்ந்து, முதல்வர் கவனித்து வந்த துறைகள், நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டன. இரண்டாவது முறையாக, கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவ மனை சென்றார். காலை, 11:25 மணிக்கு ... |
| Posted: 22 Oct 2016 09:58 AM PDT சென்னை:விபத்து இழப்பீடு வழங்காததால், ஜப்தி செய்யப்பட்ட, 450 அரசு பஸ்களை, தீபாவளியை ஒட்டி உடனடியாக விடுவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துக் கழக பஸ்கள், விபத்துகளில் சிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடு கேட்டு, மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதி மன்றங்களில் வழக்குகள் தொடர்வர். அவற்றை விசாரிக்கும் நீதிபதிகள், உரிய இழப்பீடு வழங்கும்படி, போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிடுவது வழக்கம். உத்தரவுக்கு பிறகும், இழப்பீடு வழங்காமல் போக்குவரத்துக் கழகங்கள் இழுத்தடிப்பது உண்டு. அதனால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் ... |
| பா.ஜ.,விலிருந்து மேனகா மகன் வருண்...நீக்கம்?:ஆயுத ரகசியங்களை வெளியிட்டதாக புகார் Posted: 22 Oct 2016 10:02 AM PDT மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், பா.ஜ., - எம்.பி.,யுமான, வருண், சூழ்ச்சி வலையில் சிக்கியதாகவும், அது, வெளி யில் தெரியாமல் இருக்க, ராணுவ ஆயுதங்கள் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங் களை கசியச் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால், அவரை கைகழுவ, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உ.பி., மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து, பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, எம்.பி., ஆனவர், வருண்; இவர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரன்; மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா வின் மகன்; முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ... |
| பிரசாரம் தொடங்குவதில் தயக்கம் நல்ல நாளுக்காக காத்திருப்பு Posted: 22 Oct 2016 10:29 AM PDT தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முன்று தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை, அ.தி.மு.க., மற்றும்- தி.மு.க., அறிவித்து விட்டது. ஆனாலும், நல்ல நாளை எதிர்பார்த்து, இரு கட்சியினரும் பிரசாரத்தை துவக்குவதில் காலம் கடத்தி வருகின்றனர்.தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிக்கான தேர்தல், நவ., 19ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல், வரும், 26 முதல் துவங்குகிறது.நவ., 2 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என,அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், மூன்று தொகுதிகளுக்குமான ... |
| அமைச்சரவை கூட்டங்களில் மொபைல் போனுக்கு தடை Posted: 22 Oct 2016 10:39 AM PDT புதுடில்லி:தகவல் கசிவை தடுக்கும் நோக்கில், அமைச்சரவை கூட்டங்களின்போது, மொபைல் போன்களை எடுத்து வர வேண்டாமென, மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை செயலகம், சமீபத்தில், அமைச்சர்களுக்கும், அவர்களின் தனிச் செயலர்களுக்கும் அனுப்பிய கடித விபரம்: அமைச்சரவை கூட்டம் நடக்கும் இடங்களிலும், அமைச்சரவை குழுக்களின் கூட்டங்களிலும், மொபைல் போன், எடுத்துவர, அனுமதி அளிக்கப் படாது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு, தனிச் செயலர்கள் தகவல் தெரிவிக்கும்படி அறி வுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ... |
| நாட்டின் முதல் ரயில்வே பல்கலை வதோதராவில் அமைக்க திட்டம் Posted: 22 Oct 2016 10:42 AM PDT வதோதரா:குஜராத் மாநிலம் வதோதராவில், நாட்டின் முதல் ரயில்வே பல்கலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வதோதரா விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி, துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு, விமான போக்குவரத்தை அதிகரிப்பது மிகவும் அவசியம். தற்போது, நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களின் மூலம், வேகமான வளர்ச்சியை அடைய முடியாது. இதற்கு முன், மத்தியில் ஆட்சி செய்த காங்., ... |
| அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் அமைக்க மத்திய அரசு தீவிரம் Posted: 22 Oct 2016 11:53 AM PDT
டில்லி: இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் அமைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசின் 2022க்குள் 100 சதவிகித தூய்மை திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் அனைத்து ரயில்களிலும் பயோ டாயலட் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு 1,155 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக ரயில்வே போர்டு சேர்மன் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார். அனைத்து ரயில்களிலும் சென்ற புதனன்று டில்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 2019ம் ஆண்டிற்குள் ... |
| இந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன் Posted: 22 Oct 2016 02:44 PM PDT டில்லி: இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் திறன் குறைந்து வருவதாக வேலைவாய்ப்பு நிறுவனமான மேன்பவர் குரூப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 லட்சம் பேர் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் தங்கள் விவரங்களை பதிந்து வரும் நிலையிலும் இந்தியாவில் உள்ள 48 சதவிகித நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கேற்ற தகுதியான, திறமையான வேலையாட்கள் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றன. உலக அளவில் 40 சதவிகித நிறுவனங்களுக்கு இந்த நிலை இருந்நாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இது எட்டு சதவிகிதம் அதிகமாக உள்ளது. ... |
| பாக்.,கலைஞர்களுக்கு தடை: சுப்ரமணியன் சுவாமி ஆதரவு Posted: 22 Oct 2016 02:45 PM PDT
நியூயார்க்:பாகிஸ்தான் கலைஞர்களை இங்கு பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் இந்திய மக்களின் கோபத்தை தணித்துவிட முடியாது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில், இந்த கோரிக்கைக்கு பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார். போர் சாத்தியக்கூறுகள்: அமெரிக்கா சென்றுள்ள சுப்ரமணியன் சுவாமி நியூயார்க்கில் அங்குள்ள மாணவர்கள் ஏற்பாடு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 23,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |