Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி

Posted: 20 Oct 2016 11:04 AM PDT

புதுடில்லி : டில்லி ஒருநாள் போட்டி யில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பாண்ட்யாவின் கடைசிநேர போராட்டம் வீணானது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என, தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி, டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார்.
வில்லியம்சன் சதம்:
நியூசிலாந்து அணிக்கு ...

சிவகாசி பட்டாசு கடையில் வெடி விபத்து : 6 பெண்கள் உட்பட 8 பேர் பலி; 4 பேர் கவலைக்கிடம்

Posted: 20 Oct 2016 09:38 AM PDT

விருதுநகர்: சிவகாசி பட்டாசு கடையில், ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், அருகிலுள்ள ஸ்கேன் சென்டருக்கு தீ பரவி, ஆறு பெண்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்; 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். விபத்தில் லாரி உட்பட, 20 டூ - வீலர்கள் எரிந்து நாசமாகின.

சிவகாசி - விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள, ராகவேந்திரா பட்டாசு கடையில், நேற்று நண்பகல், 12:00 மணிக்கு, வெளியூர்களுக்கு அனுப்ப, பட்டாசுகளை ஊழியர்கள், மினி லாரியில்ஏற்றினர். அப்போது, பட்டாசு பெட்டி களில், தீ கிளம்பியது. அங்கிருந்தவர்களால் புகையை கட்டுப்பட்டுத்த முடியவில்லை. பட்டாசுகள் வெடித்து, புகை பூதாகரமாக கிளம்பியது. ...

'மாஜி' அதிகாரிகளுக்கு சலுகைகள் 'வாபஸ்'

Posted: 20 Oct 2016 10:05 AM PDT

புதுடில்லி: 'ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், தொடர்ந்து அனுபவித்து வரும், அரசு வாகனம் உட்பட அனைத்து சலுகைகளையும், திரும்ப பெற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மத்திய போலீஸ் படை பிரிவுகளான, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்
படை, சி.பி.ஐ., உட்பட பல அமைப்புகளில், உயரதிகாரிகளாக பணியாற்றுபவர்களுக்கு, வாகனம், சமையல்காரர், உதவிக்கு ஊழியர்கள் உட்பட பல சலுகைகளை, அரசு வழங்குகிறது. ஆனால்,ஓய்வு பெற்ற பின்னும், அரசு வாகனம் உட்பட அனைத்து சலுகை களையும், அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். ...

சிகிச்சை முடிந்து முதல்வர் ஜெ., வீடு திரும்புவார்...'10 நாளில்!':வேகமாக குணமடைந்து வருவதாக சொல்கிறார் ஹண்டே

Posted: 20 Oct 2016 10:21 AM PDT

சென்னை:''முதல்வர் ஜெயலலிதா, வேகமாக குணமடைந்து வருகிறார்; இன்னும், 10 நாட்களுக்குள், அவர் வீடு திரும்புவார்,'' என, எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹண்டே தெரிவித்தார்.

டாக்டரான ஹண்டே, தற்போது பா.ஜ.,வில் இருக்கிறார். அவர், நேற்று அப்பல்லோ மருத் துவமனை சென்று, முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
பின்னர், அவர் கூறியதாவது:
முன்னர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காரணத் தால்,எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்த போது,அவரை கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தற்போது,முதல்வர் உடல் நிலையை அறிவதற்காக வந்தேன். இங்கு ...

பட்டாசு வெடிவிபத்து எவ்வளவு நடந்தாலும் மாநில அரசு... தூக்கம்!:விதிமீறும் தொழிற்சாலைகளால் தொடர்கிறது உயிரிழப்பு

Posted: 20 Oct 2016 10:34 AM PDT

பட்டாசு ஆலை வெடி விபத்துகள் தொடர்ந்தும், விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகள் மீது, மத்திய அரசின் வெடி பொருட்கள் கட்டுப்பாட்டு துறையும், மாநில அரசு துறைகளும் நடவடிக்கை எடுக்காமல் துாங்கி வழிவதால், உயிர் இழப்புகள் தொடர்கின்றன.

நாட்டின் பட்டாசு உற்பத்தியில், 90 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பட்டாசு உற்பத்திக்கு பிரபலம். இங்கு, 750க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற தொழிற் சாலைகள் உள்ளன. இவற்றால், நேரடியாக, இரண்டு லட்சம் பேரும், மறைமுகமாக, மூன்று லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு, 4,000 கோடி ...

செந்தில் பாலாஜி, பழனிச்சாமிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 20 Oct 2016 10:37 AM PDT

சென்னை:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களான பழனிச்சாமி, செந்தில் பாலாஜியின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்டம், மணிமங்கலம் தாலுகா, அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., சார்பில் கே.சி.பழனிச்சாமி; அ.தி.மு.க., சார்பில் செந்தில் பாலாஜி போட்டி யிட்டனர். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, ஏராளமான புகார்கள் ...

காவிரி விஷயத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கட்சிகள் 'லாபி' இல்லாதபோது டில்லி படையெடுப்பு பயன் தருமா?

Posted: 20 Oct 2016 10:43 AM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், உரிய திட்டமிடலோ, புரிந்துணர்வோ இல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், கடமைக்காக டில்லிக்கு வந்து கோரிக்கை மனு அளிப்பதை பார்க்கும்போது, தும்பை விட்டு, வாலைப் பிடிக்கின்றனரோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் உச்சகட்டத்திற்கு சென்று, பெரும் அரசியல் கொந்தளிப்பு நிலவிய கட்டத்தில், ஒட்டுமொத்த கர்நாடகாவே டில்லியில் முகாமிட்டிருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், ஒரு துரும்பை துாக்கிப் போடக் கூட ஆளில்லை; காரணம், தமிழகத்திற்கான அரசியல், 'லாபி' செய்ய, டில்லியில் யாருமே ...

பேரிடர் மேலாண்மை குழு: தமிழக அரசு அமைப்பு

Posted: 20 Oct 2016 10:49 AM PDT

சென்னை:தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் தலைமையில், 20 பேர் அடங்கிய, பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்கான அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்தது.

கடந்த, 2015 நவம்பரில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை யால் ஏரிகள் நிரம்பின. செம்பரம் பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன;உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதி மன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்கள், தலைமை நீதிபதி, ...

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நவம்பரில் புதிய விதிகள் தாக்கல்

Posted: 20 Oct 2016 10:53 AM PDT

சென்னை:அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான இறுதி முடிவை, நவம்பருக்குள் தாக்கல் செய்வதாக, சென்னை உயர் நீதி மன்றத் தில், தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப் பட்டது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வசந்த குமார் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் மட்டுமே, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப் படுகின்றனர்; உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், தேர்வு குழுவை அமைத்து, அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்' என, கூறப் பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ...

கருணாநிதி நேர்காணல்: கட்சியில் கொந்தளிப்பு

Posted: 20 Oct 2016 10:58 AM PDT

'தஞ்சாவூர் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கு, 'சீட்' வழங்குவதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்துகிறார்' என, தஞ்சை மாவட்ட தி.மு.க.,வில் புகார் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இந்த தொகுதியில் களம் இறக்கப் பட்ட, டாக்டர் அஞ்சுகம் பூபதி இருக்க, மீண்டும் எதற்காக விருப்ப மனு, நேர்காணல் என, கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகி கூறியதாவது:
அஞ்சுகம் பூபதி, ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பல ரவுண்டு பிரசாரத்தை முடித்திருந்த நிலையில் தான், தேர்தல் ...

ஞாபகமறதிக்கு உடற்பயிற்சி சிறந்த மருந்து; கனடா மருத்துவர்கள் ஆய்வு

Posted: 20 Oct 2016 02:46 PM PDT

வான்கூவர்: ஞாபக மறதிக்கு உடற்பயிற்சி சிறந்த பலன் கொடுப்பதாக கனடா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தற்போது உலகில் பல கோடி பேருக்கு ஞாபக மறதி பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இப்பிரச்னை மூளையில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்க
ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், புகை போன்ற கெட்ட பழக்கங்கள் தவிர்த்தல் போன்றவை மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்க ...

'ஆல் பாஸ்' வேண்டாம்; நிபுணர் குழு பரிந்துரை

Posted: 20 Oct 2016 03:35 PM PDT

புதுடில்லி: புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, 'ஆல் பாஸ்' என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது.
குறைந்து வரும் திறமை:
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஆனால், இந்த முறையால், மாணவர்களின் திறமை குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
189 பக்க ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™