Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரயில்வேயை மேம்படுத்துவது எப்படி? ஊழியர்களுடன் ஆலோசிக்கிறார் மோடி

Posted: 02 Oct 2016 09:07 AM PDT

புதுடில்லி:ரயில்வே துறையை மேம்படுத்துவது குறித்து, ரயில்வே ஊழியர்களுடன், நவம்பர், 25 முதல், 27 வரை நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளார்.

ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக, பல்வேறு திட்டங்களை, புதிய முயற்சிகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. ரயில்வேக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை நிறுத்துவது உள் ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
'வீடியோ கான்பரன்ஸ்'
இந்நிலையில், 'ரயில்வே மேம்பாட்டு மாநாடு' என்ற பெயரில், ...

கறுப்புப்பண கணக்கு சரியா? ஆய்வு செய்ய சி.ஏ.ஜி., திட்டம்

Posted: 02 Oct 2016 09:11 AM PDT

புதுடில்லி:கணக்கில் வராத கறுப்புப்பணம் மற்றும் சொத்துக்களை, தாங்களாக முன்வந்து அறிவிக்கும், ஐ.டி.எஸ்., எனப்படும் திட்டத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் ஆய்வு செய்ய உள்ளது.

ஐ.டி.எஸ்., திட்டத்தில், கறுப்புப்பணம் மற்றும் சொத்துக்களை, அறிவித்து, தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான அவகாசம், சமீபத்தில் முடிந்தது. 64,275 பேர், இந்த வாய்ப்பை பயன் படுத்தி, 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக் களை அறிவித்தனர். இந்நிலையில், சி.ஏ.ஜி., மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில்,கூறியதாவது:ஐ.டி.எஸ்., ...

அ.தி.மு.க., அதிருப்திகள்: கொண்டாடும் தி.மு.க.,

Posted: 02 Oct 2016 09:15 AM PDT

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடும், அ.தி.மு.க.,வினர் மீது ஏகப்பட்ட புகார்கள் இருப்பதால் அவர்களை தோற்கடிக்க, கட்சியி னரே வரிந்து கட்டி நிற்பது, எதிர்க்கட்சியான தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என, ஆளும் அ.தி.மு.க., முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இருந்தா லும், சமீபத்தில் கட்சிக்கு வந்தவர்கள்; கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள்; குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என,
குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்பலர், அ.தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில் ...

பீஹாரில் புதிய மதுவிலக்கு சட்டம் அமல்! ஐகோர்ட் தடையை அடுத்து அதிரடி நடவடிக்கை

Posted: 02 Oct 2016 09:20 AM PDT

பாட்னா:பீஹாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கொண்டு வரப்பட்ட அரசாணைக்கு, பாட்னா ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், கடுமையான பிரிவுகளுடன் புதிய மதுவிலக்கு சட்டத்தை, நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது, அம்மாநில அரசு.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது; இங்கு, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில், ஏப்., 5ல் அரசாணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணையை எதிர்த்து, மது விற்பனையாளர்களும், தனி நபர்களும், பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த, பாட்னா ஐகோர்ட், ...

சுங்கச்சாவடிகளில் சில்லரை பிரச்னைக்கு தீர்வு

Posted: 02 Oct 2016 09:44 AM PDT

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், கட்டணங்களை மாற்றியமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்படும் தாமதத்தால், நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் நிலவுகிறது; இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்த கமிட்டி, 'சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதத்தால், டீசல், பெட்ரோல் போன்றவை பெருமளவு விரயமாவதுடன், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது' என, ...

பாரிஸ் ஒப்பந்தத்துக்கு இந்தியா ஒப்புதல்:விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்பு

Posted: 02 Oct 2016 09:48 AM PDT

புதுடில்லி:பருவநிலை மாறுபாடு பிரச்னை தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு, மத்திய அரசு, நேற்று முறைப்படி ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இந்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

உலகளாவிய பிரச்னையான பூமி வெப்ப மய மாதலை கட்டுப்படுத்த, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஆண்டு இறுதியில், இந்தியா உட்பட, 170க்கும் மேற் பட்ட நாடுகள், பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த, 55 நாடுகளா வது இதில் இணைய வேண்டும். 'மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ...

உள்ளாட்சி தேர்தல்: மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி! கூட்டம் அலைமோதும் என்பதால் சிறப்பு ஏற்பாடு

Posted: 02 Oct 2016 10:34 AM PDT

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பலர், இன்று, வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், கூட்டம் அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தல், வரும், 17, 19ம் தேதிகளில், இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான, வேட்புமனு தாக்கல், கடந்த மாதம், 26ல் துவங்கி நடந்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே, மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலை, அ.தி.மு.க., வெளியிட்டது. அதனால், அடுத்த நாளே, பெரும் பாலான மாநகராட்சிகளில், அ.தி.மு.க.,வினர் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். நகராட்சி கள் ...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குவியும் விண்ணப்பங்களால் அதிர்ச்சி

Posted: 02 Oct 2016 10:38 AM PDT

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தும் போதெல்லாம், பெயர் சேர்க்கக் கோரி, லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிவது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான, வாக்காளர் பட்டியலில், 5.82 கோடி பேர் இடம் பெற்றிருந்த னர். திருத்தப் பணிக்காக, செப்., 1ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது; அதில், சட்டசபை தேர்தலில் இருந்ததை விட, 60 ஆயிரத்து, 733 வாக்காளர்கள் குறைவு.
14.10 லட்சம் பேர் மனு
இதன் பின், திருத்தும் பணி, செப்., 1ல் துவங்கி, 30ம் தேதி நிறைவு பெற்றது. பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற ...

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சித்தராமையா அரசு உதாசீனம்!:நாளைக்குள் மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல்:இன்று நடக்கிறது கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம்

Posted: 02 Oct 2016 11:11 AM PDT

பெங்களூரு:காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை, கர்நாடக அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற் கான காலக்கெடு, நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்துக்கான பிரதிநிதியை அறிவிக்காதது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்துக்கும், இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு களை கர்நாடக அரசு நிறைவேற்றாத நிலையில், கடந்த, 30ம் ...

முதல்வர் ஜெ.,உடல் நிலையில் முன்னேற்றம் லண்டன் டாக்டர் ஆலோசனைப்படி சிகிச்சை

Posted: 02 Oct 2016 11:53 AM PDT

சென்னை:'முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது;

அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற்றுச் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது' என, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.முதல்வர் ஜெ., உடல் நிலை தொடர்பாக, சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையின் முதன்மை செயல் அதிகாரி, சுப்பையா விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்துமுன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. லண்டன், செயின்ட் தாமஸ் மருத்துமனையைச் சேர்ந்த, சர்வதேச மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பேல், செப்., 30ல், ...

காந்தி புத்தகங்களை தேடி படிக்கும் அமெரிக்கர்கள்

Posted: 02 Oct 2016 12:27 PM PDT

மும்பை : மகாத்மா காந்தியின் புத்தகங்களை, இணையத்தில் ஆர்வமுடன் தேடி படிப்பவர்களில், அமெரிக்கர்கள், இரண்டாம் இடத்திலுள்ளனர்.
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் எழுத்துக்கள், புத்தகங்களை, இணைய தளம் மூலம் படிக்கும் வசதியை, www.mkgandhi.org வழங்குகிறது. இந்த இணையதளம் மூலம், மகாத்மா பற்றிய புத்தகங்களை தேடி படிப்போர் பற்றிய ஆய்வறிக்கையை, இணையதள ஜாம்பவான், 'கூகுள்' வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்களுக்கு அடுத்தபடியாக, மகாத்மா காந்தியின் புத்தகங்களை அதிகமாக விரும்பிப் படிப்பது, அமெரிக்கர்கள் எனத் தெரிய வந்துள்ளது. ...

அனைவருக்கும் கழிப்பறை; குஜராத்திற்கு சான்றிதழ்

Posted: 02 Oct 2016 01:45 PM PDT

புதுடில்லி : குஜராத் மாநிலத்தில், 170 நகரங்களில், திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலம் ஒழிக்கப்பட்டு விட்டதாக, மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி, 2014ல், காந்தி ஜெயந்தி தினத்தன்று, துாய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும், பொது இடங்களில் மலம் கழிக்கும் அவலத்திற்கு முடிவுகட்டும் விதமாக, கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, போதிய கழிப்பறைகள் கட்டப்பட்ட நகரங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் ஒழிக்கப்பட்ட பகுதிகளாக, அறிவிக்கப்பட்டு வருகின்றன. ...

மோடியிடம் ஆலோசனை பெற இரோம் ஷர்மிளா விருப்பம்

Posted: 02 Oct 2016 03:55 PM PDT

புதுடில்லி : தேர்தலில் வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசனை பெற ‛இரும்புப் பெண்' இரோம் ஷர்மிளா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அதிக இடங்களில் வெற்றி பெற்றார். அவரைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்க ஆவலாக உள்ளேன். நல்ல ஆலோசனைகள் எப்போதும் எதிர்பார்க்கப்பட வேண்டும்.
ஒருவர் நண்பனோ அல்லது எதிரியோ அவரிடம் நல்ல கருத்துகள் இருந்தால் அதை அவரிடம் இருந்து தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™