Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பத்திரம் வெளியிட்டு நிதி திரட்டலாம்:நகராட்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி

Posted: 16 Oct 2016 08:20 AM PDT

மாநில அரசுகளைப் போல நகராட்சிகளும், கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்ட, மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது.

இதற்கான வழிமுறைகளை உருவாக்கும் கூட்டம், டில்லியில், வரும், 24ல் நடக்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்ட, மாநில அரசுகள் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இதன்படி, பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட, ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வகுத்து உள்ளது.
அதே வழியில், நகராட்சிகளும் நிதி திரட்டி
கொள்வதற்கான அனுமதி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, உயர் ...

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய குழு அறிக்கை இன்று தாக்கல்: காவிரி நீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

Posted: 16 Oct 2016 08:24 AM PDT

காவிரி விவகாரத்தில், தமிழகம்,கர்நாடகாவில் ஆய்வு நடத்திய, உயர் மட்ட தொழில் நுட்பக் குழுவினர், உச்ச நீதிமன்றத்தில், இன்று ஆய்வு அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.

இதனால், காவிரியில் தண்ணீர் கிடைக்குமா என, தமிழக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தின் பாசனம் உள்ளிட்ட தேவைகளுக் காக, ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். செப்டம்பர் வரை, 134 டி.எம்.சி., வழங்கி இருக்க வேண்டும்; ஆனால், 81 டி.எம்.சி., பாக்கி வைத்துள்ளது.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தண்ணீர் தர மறுப்பதால், சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. ...

இடைத்தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க., முடிவு

Posted: 16 Oct 2016 09:33 AM PDT

விரைவில் நடைபெற உள்ள, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டி யிட, தே.மு.தி.க., முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில், அரவக்குறிச்சி,தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலி யாக உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற, அ.தி.மு.க., - தி.மு.க., தீவிரம் காட்டுகின்றன. போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படும் நிலையில், தே.மு.தி.க.,வும் களத்தில் குதிக்கிறது.

இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சட்டசபை தேர்தல் தோல்வி க்கு பின், தே.மு.தி.க.,விலிருந்து, பலர் ...

ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கம் கெடு முடிவதால் அரசுக்கு நெருக்கடி

Posted: 16 Oct 2016 09:35 AM PDT

தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை,அமல்படுத்துவது குறித்த அறிவிக் கை வெளியிடுவதற்கான காலக்கெடு, அக்., 31ல் முடிவதால், அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

வீடு, மனை விற்பனையில் நடக்கும் முறை கேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக் கையை, மார்ச், 26ல், வெளியிட்டது. இதன்படி, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிக்கையை, ஆறு மாதங்களுக்குள் மாநில அரசுகள் வெளியிட வேண்டும். அந்த ஆறு மாத அவகாசம், வரும், 31ல், முடிகிறது. ஆனாலும், இன்னும் அறிவிக்கை வரவில்லை. ...

பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி சாட்டை! பயங்கரவாதத்தின் தாயகம் என கடும் விமர்சனம்

Posted: 16 Oct 2016 09:50 AM PDT

பெனாலிம்:''பயங்கரவாதத்தின் தாயகமாக இந்தியாவின் அண்டை நாடு உள்ளது;பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, ஆயுத உதவி, பயிற்சி மற்றும் அரசியல் ஆதரவு கிடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, பாகிஸ்தான் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித் தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு, கோவா மாநிலத்தில் நடந்தது.இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் மிக்கைல் டெமர், தென் ஆப்ரிக்க அதிபர் ஜேகப் ஜூமா பங்கேற்றனர்.
ஆயுத ...

'ஹிந்து மதத்தின் ரசிகன் நான்' டொனால்டு டிரம்ப் பெருமிதம்

Posted: 16 Oct 2016 09:52 AM PDT

வாஷிங்டன்:''அமெரிக்க அதிபராக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கா - இந்தியா மிக நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்கும்,'' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல் நடக் கிறது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி யின் வேட்பாளராக, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளிண் டனின் மனைவியுமான ஹிலாரி, 68ம்; குடியரசு கட்சி சார்பில்,தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70ம், போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்குவதால், இருவரும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு ...

தாஜ்மஹால் பொலிவிழக்க காரணம் என்ன?

Posted: 16 Oct 2016 09:57 AM PDT

புதுடில்லி:'வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப் பட்டுள்ள, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அதன் நிறத்தை இழந்து வருவதற்கு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படு வதே முக்கியகாரணம்' என,இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ள உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது தாஜ்மஹால்.
விஞ்ஞானிகள் ஆய்வு:
வெள்ளை பளிங்கு கற்களால் கட்டுப்பட்டுள்ள
தாஜ்மஹால், தன் நிறத்தை, படிப்படியாக இழந்து வருகிறது. தாஜ்மஹாலின் இழந்த ...

70 லட்சம் வேலைகள் 'பணால்:' ஆய்வறிக்கையில் பகீர்

Posted: 16 Oct 2016 10:09 AM PDT

புதுடில்லி:'இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2050ல், 70 லட்சம் வேலைகள் குறைந்து விடும் ஆபத்து உள்ளது' என, ஆய்வறிக்கையில், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளா தார பாதிப்புகளால், சில ஆண்டுகளாகவே, வர்த் தகம் மற்றும் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட் டுள்ளன.இதனால், வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த, 'பிரஹார்' என்ற ஆய்வு அமைப்பு, இந்தியாவில் வேலை வாய்ப்பு தொடர்பாக, ஆய்வு நடத்தியது; அதன் விபரம்:இந்தியாவில், 2011ல், ஒன்பது லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன; இது, 2013ல், 4.19 ...

ரூ.200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

Posted: 16 Oct 2016 12:13 PM PDT

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி
தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் வட பகுதியில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பூடான் நாடு வழியாக, அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கிராக்கி
பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, மருந்துகள் தயாரிக்க, சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால், பாம்பு விஷத்துக்கு, ...

இரண்டே நாட்களில் துவங்குது பருவமழை மகிழ்ச்சி! தமிழக விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்குமா?

Posted: 16 Oct 2016 12:25 PM PDT

'வடகிழக்கு பருவ மழை, இன்னும் இரண்டு நாட்களில் துவங்கலாம்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்குமா என, தவம் கிடக்கும் தமிழக விவசாயிகளின் வயிற் றில், பருவ மழை பால் வார்க்குமா என்ற, எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழையை தரும், தென் மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்து விட்டது. இந்த பருவ மழை காலத்தில், பல மாநிலங்களில், திருப்தி கரமான அளவுக்கு மழை பெய்திருந்தாலும், தமிழகத்தில் பெரிய அளவில் பெய்யவில்லை. அடுத்து, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™