Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் சிறை தண்டனை

Posted: 14 Oct 2016 12:09 PM PDT

புதுடில்லி: ''தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்றால், அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்,'' என, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் எச்சரித்து உள்ளார்.
அதிக விலை:
இதுகுறித்து டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவை, அதிகபட்ச விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு, தியேட்டர்கள், விமான நிலையங்கள், மால்கள் போன்றவற்றில் விற்கப்படுகின்றன. இது தொடர்பாக, நுகர்வோர் அளித்த ஒரு புகாரில், அபராதம் விதித்து, தேசிய நுகர்வோர் குறைதீர் ...

காலண்டரிலும் சீனாவின் ஆதிக்கம்: கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

Posted: 14 Oct 2016 08:33 AM PDT

சேலம்: 'சீனாவின் தங்கம், வெள்ளி உலோகங்கள் பூசப்பட்ட, 'பெட்பாயில்' காலண்டர் வருகையால், தமிழக காலண்டர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீன காலண்டரை, தமிழக அரசு தடை செய்ய வேண்டும்' என, பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு பிறக்க, இரண்டு மாதங் களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிரின்டிங் பிரஸ்களில், 2017ம் ஆண்டு காலண்டர் தயாரிப் புக்கான ஆர்டர்கள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் தயார் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி பூசப்பட்ட பெட்பாயில் தினசரி காலண்டர்கள் தற்போது ...

'பிரிக்ஸ்' மாநாட்டை சீர்குலைக்க பாக்., பயங்கரவாதிகள்... சதி!: அசம்பாவிதம் தடுக்க கோவாவில் உச்சகட்ட பாதுகாப்பு

Posted: 14 Oct 2016 08:36 AM PDT

புதுடில்லி:கோவாவில் இன்று துவங்கும், 'பிரிக்ஸ்' மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், அங்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட, பாக்., பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதைத் தொடர்ந்து,அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு, முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகர் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில் இன்று துவங்குகிறது.இந்த இரண்டு நாள் மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ...

சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள உ.பி.,யில் பா.ஜ.,முற்றுகை!: பிரம்மாண்ட யாத்திரைக்கு அமைச்சர்கள் தயார்

Posted: 14 Oct 2016 08:44 AM PDT

'உ.பி., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும்' என்ற லட்சியத் துடன், முழு வீச்சில் தயாராகியுள்ளது, பா.ஜ., மேலிடம்; இங்கு, அடுத்த மாதம் துவங்கவுள்ள யாத்திரை யில், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள் என, மிகப்பெரிய பட்டாளமே களமிறங்குகிறது.

உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், உ.பி.,யில் தற்போது, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது.
தீவிர பிரசாரம்
இங்கு, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன், ...

ராணுவம் பேசாது; செயலில் காட்டும்: பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 14 Oct 2016 09:52 AM PDT

போபால்: ''ராணுவம் பேசாது; தன் வீரத்தை செயலில் செய்து காட்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் கூறினார்.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமை யிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில், ராணுவ வீரர்கள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில், அதை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நாம் அமைதியாக துாங்குவது தான், ராணுவத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது குறித்து அவர்கள் எந்த புகாரும் கூறுவதில்லை. அதே நேரத்தில், விழித்திருக்க வேண்டிய நேரத்தில்,நாம் துாங்கினால்,அதை ராணுவத்தினர் மன்னிக்க மாட்டர். நாம் ...

தி.மு.க.,வின் தானைத் தலைவராக ஸ்டாலின்...வேகம்!:நிதியமைச்சரை திடீரென சந்தித்து பரபரப்பு:கட்சி பத்திரிகையிலும் முதன்மை பெற முஸ்தீபு!

Posted: 14 Oct 2016 09:52 AM PDT

தி.மு.க.,வின் தானைத் தலைவராக ஸ்டாலினை முன்னிலைப்படுத்த, திடீர் வேகம் காட்டப்படுகிறது. சென்னை கோட்டையில், நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, திடீர் பரபரப்பு ஏற்படுத்திய அவர், கட்சிப் பத்திரி கையிலும், முதன்மை பெற முஸ்தீபு காட்டுவ தாக கூறப்படுகிறது.

இரு வாரங்களுக்கு மேலாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கட்சி அலுவலகத்திற்கு வராமல், வீட்டிலேயே நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அது சம்பந்தமான எந்த செய்திகளும், கட்சி யின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையில் வெளிவருவதில்லை.
ஆனால், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் நிகழ்வுகளும், படங்களும் பிரதான ...

'வசூலை ஒப்படைங்க:' விஜயகாந்த் உத்தரவு

Posted: 14 Oct 2016 10:32 AM PDT

'உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு கட்டண வசூலை, ஒப்படைக்க வேண்டும்' என, தே.மு.தி.க., தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, விஜயகாந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின், உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. 11 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இதில், பல்வேறு அதிரடி உத்தர வுகளை, கட்சித் தலைவர் விஜயகாந்த் பிறப் பித்ததால், பல தேர்தல் பொறுப்பாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலையொட்டி, ...

நீர் திறப்பு குறைப்பு; அசராத கர்நாடகா அரசு

Posted: 14 Oct 2016 10:36 AM PDT

காவிரி வழக்கு, வரும், 18ல், விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதை பற்றி கவலைப் படாமல், நீர் திறப்பை, கர்நாடகா திடீரென குறைத்து உள்ளது.தமிழக தேவைக்காக, கர்நாடக அணைகளில் இருந்து, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், முறைப்படி நீரை வழங்காமல், கர்நாடகா முரண்டு பிடித்து வருகிறது. இது தொடர் பான வழக்கு, வரும், 18ல், மீண்டும் விசாரணைக்கு வரஉள்ளது. இந்நிலையில், நான்கு அணைகளில் இருந்து, நீர் திறப்பை கர்நாடக அரசு திடீரென குறைத்துள்ளது. ஹேரங்கி அணையில் இருந்து, நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. ...

உறவினர்களுக்கு வேலை அமைச்சர் பதவி காலி

Posted: 14 Oct 2016 10:52 AM PDT

திருவனந்தபுரம்:கேரளாவில், விதிமுறையை மீறி, உறவினர்களுக்கு அரசு பணி வழங்கி சர்ச்சையில் சிக்கிய, கேரள அமைச்சர் ஜெயராஜன், 66, பதவியை, நேற்று ராஜினாமா செய்தார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, தொழில்துறை அமைச்சராக இருந்தவர், ஜெயராஜன்.இவர், அரசுநிறுவனங்களின் உயர் பதவிகளில்,உறவினர்களை நியமனம் செய்த தாக புகார் எழுந்தது; கட்சி நிர்வாகிகளின் உறவினர் களுக்கும், விதிமுறைமீறி, அரசு பணி வழங்கப் பட்டது.இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ...

பஞ்சாபில் காங்., உடன் கைகோர்க்கும் சித்து

Posted: 14 Oct 2016 11:15 AM PDT

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடு வது தொடர்பாக, அக்கட்சி தலைமையுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, பேச்சு நடத்தி வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையில், அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 2017ல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகர்களில்
ஒருவராக இருந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர், சித்து, ஜூலை, 18ல், ராஜ்யசபா எம்.பி., பதவியை, ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.பின், ஆம் ஆத்மியில் இணைவதற்காக, ...

ரஷ்யாவிடமிருந்து ரூ 39,000 கோடி செலவில் நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது.

Posted: 14 Oct 2016 01:10 PM PDT

டில்லி: நாட்டின் கூடுதல் பாதுகாப்புக்காக ரஷ்யாவிமிடமிருந்து அதி நவீன ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
ரூ 39,000 கோடி செலவில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா 5 புதிய நவீன ஏவுகணைத் தொகுப்புகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நாட்டுடனான ஒப்பந்தம் ஒன்றில் பிரதமர் மோடி கையெழுத்திட உள்ளார்.
அதிக திறன் படைத்தவை
இந்த 5 நவீன ஏவுகணைத் தொகுப்புகள் அதிக திறன் படைத்தவை. 300 க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கும் சக்தி கொண்ட இவற்றால் ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட எதிரிகள் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். மிக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™