Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டி.சி.எஸ்.,: டாடா நிறுவன ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கு; தலா ரூ.3.71 லட்சம்

Posted: 13 Oct 2016 10:06 AM PDT

புதுடில்லி: டி.சி.எஸ்., நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகளில் அந்நிறுவனத்தின் வளர்ச்சி 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. லாபத்தில் ஊழியர்களுக்கு பங்காக ஒவ்வொரு ஊழியருக்கும் 3.71 லட்சம் ரூபாய் வழங்குகிறது.

இந்தியாவின் அதிக ஊழியர்களை கொண்ட தனியார் துறை நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டி.சி.எஸ்.,), 2016-17 ம் நிதியாண்டிற்கான 2 வது காலாண்டு (ஜுலை - செப்.,) அறிக்கையை இன்று(13ம் தேதி) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் படி இந்நிறுவனம் தனது நிகர லாபத்தை 8.4 சதவீதமாக (ரூ.6,586 கோடி) உயர்த்தியுள்ளது.
இது குறித்து டி.சி.எஸ்., நிறுவன நிர்வாக இயக்குநர் ...

கறுப்பு பணம் யாருடையது: சந்திரபாபு - ஜெகன் குடுமிப்பிடி

Posted: 13 Oct 2016 09:57 AM PDT

அமராவதி: கறுப்புப் பணத்தை தாமாக முன் வந்து தெரிவிக்கும் திட்டத்தில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கணக்கு காண்பித்துள்ளது தொடர்பாக, ஆந்திர முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டில் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரிவித்து, அபராதம் செலுத்தி, உரிமையாக்கிக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில், 65 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிவந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டது.இதில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே, 10 ஆயிரம் ...

இணையதள முடக்கத்தில் இந்தியா முதலிடம்

Posted: 13 Oct 2016 10:00 AM PDT

புதுடில்லி: உலகளவில் இணையதள பயன் பாட்டுக்கு அதிகளவில் தடை விதித்து, 6,000 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளதாக,

ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'சென்டர் பார் டெக்னாலஜி இன்னோ வேஷன்' என்னும் நிறுவனம், 2015, ஜூலை
முதல், 2016 ஜூலை வரை, உலகளவில் இணைய தள பயன்பாட்டுக்கு தடை விதித்த நாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வுநடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டில்,18 நாடுகளில், 81 சந்தர்ப்பங்க ளில், இணையதள ...

ஜெ., உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்களை பிடிக்க...வேட்டை!:சமூக வலைதளங்களை கண்காணிக்கிறது தமிழக போலீஸ்:புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட 48 பேருக்கு வலை

Posted: 13 Oct 2016 10:21 AM PDT

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க, சமூக வலைதளங்களை, தமிழக போலீஸ் கண்காணித்து வருகிறது.

இதற்கான சிறப்புக் குழு, ஏற்கனவே நான்கு பேரை கைது செய்துள்ள நிலையில், புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட, 48 பேரை பிடிக்கும் வேட்டையும் தீவிரமாகி உள்ளது.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா வின் உடல்நிலை குறித்து, சமூக வலைதளங் களில், விஷமிகள் சிலர் வதந்தி பரப்பி வரு
கின்றனர். வதந்தி பரப்புவோரை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவின்,சைபர் கிரைம் போலீசார் ...

புதுமை!: முன்னதாகவே துவங்குது பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

Posted: 13 Oct 2016 10:27 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றும் வகையில், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரை முன்னதாகவே கூட்டுவதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரும், நவம்பர், 16 முதல், ஒரு மாதத்துக்கு பார்லி., கூட்டத்தை நடத்த, பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.பார்லிமென்ட் கூட்டத் தொடர், பட்ஜெட், மழை காலம், குளிர் காலம் என, மூன்று கூட்டத் தொடர்களாக நடக்கும். பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட் டுடன் இணைத்துள்ளது. மேலும் ஏப்ரல், ...

பொது சிவில் சட்டம் கூடாது: முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

Posted: 13 Oct 2016 10:32 AM PDT

புதுடில்லி:''பொது சிவில் சட்டம், இந்தியாவுக்கு உகந்தது அல்ல; பல்வேறு கலாசாரங்களையும் மதிக்க வேண்டும்,'' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் வாரிய தலைவர் வாலி ரெஹ்மானி தெரிவித்தார்.

முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. 'ஆண், பெண் பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள தலாக் முறையானது, ஒரு மதத்துக்கு தேவையில்லாத நடைமுறை' என, சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பதில் மனுவில், மத்திய அரசு தெரிவித்திருந்தது.இது தொடர்பாக விசாரித்த ...

அனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 13 Oct 2016 10:36 AM PDT

சென்னை:''காவிரி விவகாரத்தில், தமிழக அரசு, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்றால், அடுத்தகட்டம் குறித்து விவாதிக்கப் படும்,'' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், விவசாய சங்க பிரதி நிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், நடந்தது.பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகாவை கண்டித்தும், மத்திய அரசின் போக்கை எதிர்த் தும், விவசாய சங்கத்தினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதற்கு, தி.மு.க., ஆதர வளிக்க வேண்டும் என்றனர்; அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, போராட்டத்துக்கு ...

மூன்றாண்டு தடை செல்லாது தேர்தலில் போட்டியிட அனுமதி

Posted: 13 Oct 2016 10:42 AM PDT

சென்னை:தேர்தலில் போட்டியிட தடை விதித்து,மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, அரசிதழில் வெளியிடப்படாததால், மீண்டும் போட்டியிட, பஞ்சாயத்து தலைவிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அருகே யுள்ளது, தணிகைபோளூர் கிராமம். இங்கு, 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், கிராம பஞ்சாயத்து தலைவராக, சரளாதேவி தேர்ந் தெடுக்கப்பட்டார். தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாததால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு செய்து, மாநில தேர்தல் ஆணையம், 2013 அக்டோபரில் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் ...

அமைச்சர்கள் வருகை: அரசு வட்டாரம் சுறுசுறுப்பு

Posted: 13 Oct 2016 10:46 AM PDT

சென்னை:அனைத்து அமைச்சர்களும், நேற்று தலைமைச் செயலகம் வந்தனர்; தங்கள் அலுவலக பணிகளை கவனித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா,உடல் நல குறைவால், செப்., 22 இரவு,சென்னை,அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்; தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதிக நாட்கள், மருத்துவமனையில் தங்கவேண்டிஇருப்பதால், அவர் கவனித்து வந்த துறைகள், அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.முதல்வரை பார்ப்பதற்காக, அமைச்சர்கள் அனை வரும்,மருத்துவமனைக்கு சென்று விடுவதால், அரசு பணி கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தலைமைச் செயலகம் சென்று, ...

'எய்ம்ஸ்' டாக்டர்கள் குழு ஜெ.,வுக்கு மீண்டும் சிகிச்சை

Posted: 13 Oct 2016 10:49 AM PDT

சென்னை:'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர் கள், நேற்று மீண்டும் சென்னை வந்து,முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல், செப்., 30ல் சென்னை வந்தார்.அவரது சிகிச்சைக்கு பின், முதல்வர் உடல் நலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக,மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, அக்., 2ல் டாக்டர் ரிச்சர்ட் பேல், லண்டன் திரும்பினார்.கடந்த, 5ம் தேதி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை யைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ...

டிரம்புக்கு அடுத்த சிக்கல்; 5 பெண்கள் பாலியல் புகார்

Posted: 13 Oct 2016 11:03 AM PDT

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மீது, ஐந்து பெண்கள், பாலியல் புகார் தெரிவித்துள்ளதால், அவருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்கிறது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி, 68ம், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70ம், போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதால், இருவரும், தீவிர பிரசாரம் செய்து ...

ஜாட் வன்முறை: சி.பி.ஐ., வழக்கு

Posted: 13 Oct 2016 12:51 PM PDT

சண்டிகர்: ஹரியானாவில், ஜாட் சமூக மக்கள் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, வன்முறை நடந்தது தொடர்பாக, சி.பி.ஐ., மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்
ஹரியானாவில், முதல்வர், மனோகர்லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு, ஜாட் சமூக மக்கள், தங்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க கோரி, பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினர். இதில், பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன; பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன.
சி.பி.ஐ., வழக்கு ...

இந்தியாவுடன் கைகோர்க்க விரும்புகிறது: சீன தூதரக அமைச்சர் செங்

Posted: 13 Oct 2016 01:21 PM PDT

டில்லி: டில்லியில் சீன புத்தகம் வௌியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீன நாட்டின் தூதரக அமைச்சர் செங் குவாங் ஜோங் , இந்தியாவுடன் சீனா கைகோர்க்க விரும்புவதாக பேசினார்.
இந்தியாவின் பாரம்பரிய சின்னம் யானையையும் சீனாவின் பாரம்பரிய சின்னம் டிராகனையும் குறிப்பிட்டு, இந்த இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்டு வரும் உறவுகளால் எதிர்காலத்தில் யானையும், டிராகனும் கைகோர்த்துக் கொள்ளும் என்று செங் குறிப்பிட்டார்.
பழமையான நாகரீகங்கள் கொண்டவை:
சீனாவும், இந்தியாவும் பழமையான நாகரீகங்கள் மற்றும் ...

ஆங்கில அகராதியில் ‛‛அய்யோ''

Posted: 13 Oct 2016 02:28 PM PDT

புதுடில்லி: உலகின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் ‛‛ அய்யோ'' என்ற தமிழ் வார்த்தை புதிதாக இடம் பெற்றுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தால் வெளியிடப்படும் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி (Oxford English Dictonary), ஆங்கிலம் கற்கும் அனைவருக்கும் இந்த புத்தகம் பெறும் வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதற்கு இந்த புத்தகத்தில் ஏராளமான ஆங்கில வார்த்தைகளும், அதற்கான சரியான விளக்கங்களும் இருப்பதால் தான் என கூறப்படுகிறது.
தமிழ் வார்த்தை
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு மொழி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™