Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'எல்லா புகழும் மோடிக்கே':அமைச்சர் பரீக்கர் பெருமிதம்

Posted: 12 Oct 2016 08:17 AM PDT

மும்பை:''பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பெருமை, ராணுவத்திற்கே சேரும்; அதே நேரத்தில், இந்த தாக்குதலை நடத்துவது குறித்து முடிவெடுத்த தில், மிகப்பெரிய பங்கு, பிரதமர் மோடியையே சேரும்; என் பங்கு மிகவும் சிறியது தான்,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாம் மீது, பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதி கள் முகாம்களை, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.இது தொடர்பாக, ...

இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதால் பாக்.,வயிற்றெரிச்சல்!:'சார்க்'கில் சீனாவை சேர்க்க குள்ளநரி திட்டம்

Posted: 12 Oct 2016 09:16 AM PDT

இஸ்லாமாபாத்:இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதை தடுக்கும் வகையில், சீனா உள்ளிட்ட நாடுகளையும் சேர்த்து, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

சார்க் அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, நேபாளம்,மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர் களாக உள்ளன.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாக்., பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என, ...

இணையதள 'டெண்டர்' முறை மின் வாரியத்தில் அடுத்தடுத்து அமல்

Posted: 12 Oct 2016 09:36 AM PDT

நீண்ட இழுபறிக்கு பின், மின் வாரியத்தின் உபகரணங்கள் பிரிவு, இணையதள, 'டெண்டர்' முறைக்கு மாறிஉள்ளது.தனியாரிடம் இருந்து நிலக்கரி, உபகரணம் உள்ளிட்டவற்றை, டெண்டர் மூலம் மின் வாரியம் வாங்குகிறது. கட்டுமான பணிகளையும், தனியார் மூலம்

மேற்கொள்கிறது.
மவுனம் :
தற்போதுள்ள டெண்டர் நடைமுறை காரண மாக, அதிக நிறுவனங்கள் பங்கேற்பதில்லை. நேரில் விண்ணப்பம் கொடுக்கும் பழைய
நடைமுறையை மாற்ற வேண்டும் என, நிறுவனங் கள் வலியுறுத்தின. இதையடுத்து, இணையதள டெண்டர் முறைக்கு மாற, மின் வாரிய உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், அதை செயல்படுத்த, ...

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி...வேண்டாம்!:காங்., மேலிடத்துக்கு தமிழக நிர்வாகிகள் நெருக்கடி

Posted: 12 Oct 2016 09:43 AM PDT

'உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம்; தனித்து போட்டியிடு வோம்' என, டில்லி மேலிடத்திற்கு, தமிழக காங்., நிர்வாகிகள் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக, திருநாவுக்கரசர் தலைமையில், சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக, மாவட்ட தலைவர்கள் போர்க்குரல் எழுப்பினர்.சென்னை, சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், அவர் பேசுகை யில், ''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பற்றி பேச, இந்த ஆலோசனைக் கூட்டம் ...

தவிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் : தனி அதிகாரி நியமனம் எப்போது?

Posted: 12 Oct 2016 09:50 AM PDT

உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டதை அடுத்து, 'செக் பவர்' அதிகாரத்தை, ஊராட்சிகளுக்கு மீண்டும் அரசு நிர்வாகம் வழங்காததால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் முடங்கிக் கிடப்பதாக, ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம், வரும், 24ல் முடி வடைகிறது. இப்பதவிகளை நிரப்ப, வரும், 17, 19ல் தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்ததால்,தமிழகம் முழு வதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதற்கிடையில், தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் ...

47 சதவீதம் குழந்தை திருமணங்களே! : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted: 12 Oct 2016 10:10 AM PDT

புதுடில்லி: நம் நாட்டில்,குழந்தை திருமணத்தை தடுக்க, வலிமையான சட்டம் அமலில் உள்ள போதும், 47 சதவீத பெண்களுக்கு, 18 வயதாகும் முன்பே திருமணம் நடப்பதாக, அதிர்ச்சித் தகவல் அம்பலமாகி உள்ளது.

'குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற பெயரில் செயல்படும் அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் விபரம்: இந்தியாவில், 18 வயதுக்கு முன், சிறுமியருக்கு திருமணம் செய்வது, தண்டனைக்குரிய குற்றம். சிறுவயதில் திருமணம் நடப்பதால், கர்ப்ப காலத்தில் சிரமம் ஏற்பட்டு, சிறுமியர் உயிரிழக் கும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. பாதி யில் பள்ளிப் படிப்பை விட வேண்டிய நிர்ப்பந்த மும் ...

கட்சியினரை தக்க வைக்க விஜயகாந்த் கடைசி முயற்சி

Posted: 12 Oct 2016 10:30 AM PDT

கரைந்து வரும் கட்சியை காப்பாற்ற, கடைசி முயற்சியாக, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்ததும், அதில் இருந்து தே.மு.தி.க., விலகியது; ஆனாலும், அக்கட்சியினரின் வெளியேற்றம் நிற்க வில்லை. உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை நிறுத்தியது; பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதிலும் அதிருப்தி ஏற்பட்டு, பலர் வெளியேறினர்.
தக்க வைக்க முயற்சி
இந்நிலையில்,கட்சியினரை ...

கேரளாவில் அரசு பதவிகளில் உறவினர்கள் நியமனம் பற்றி விசாரணை

Posted: 12 Oct 2016 10:37 AM PDT

திருவனந்தபுரம்:கேரளாவில், பொதுத்துறை நிறுவனங்களின் உயர் பதவிகளில், ஆளும் கட்சித் தலைவர்களின் உறவினர்கள், நியமிக் கப்பட்டுள்ளது பற்றி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு, விசாரிக்க முடிவு செய்துள்ளது.

கேரளாவில், பினராயி விஜயன் தலைமையி லான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வரு கிறது. மாநில அரசுக்கு சொந்தமான, பொதுத் துறை நிறுவனங்களின், உயர் பதவிகளில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களின் உறவினர்கள், நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
உறவினர்கள் நியமனம்குறிப்பாக, கேரள மாநில தொழில் ...

வாகனங்களை கழுவ 10 கோடி லி., காவிரி நதிநீரை பயன்படுத்தியது அம்பலம்

Posted: 12 Oct 2016 10:50 AM PDT

பெங்களூரு: ஆயுத பூஜைக்கு வாகனங்களை கழுவ மட்டும், 10 கோடி லி., தண்ணீர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதில், காவிரி நதி நீர் தான் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு, வாகனங்களை தண்ணீரால் கழுவுவது வழக்கம். பெங்களூரில், 59.57 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில்,இரு சக்கரம் ,கார்கள் எண்ணிக்கை மட்டும், 53.66 லட்சமாகும். கடந்த திங்கட்கிழமை ஆயுதபூஜையன்று, பெங்களூரில் மட்டும், 45 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. இதற்கு, 10 கோடி லி., தண்ணீர்பயன்படுத்தப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் பயன்படுத்தியவர்கள் தான் அதிகம் ...

பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்

Posted: 12 Oct 2016 11:36 AM PDT

புதுடில்லி : 'மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம் ஏற்பட்டால், அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஊனம் ஏற்பட்டால்...
இதுகுறித்து, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியின் போது, ஒருவருக்கு ஊனம் ஏற்பட்டால், அதற்காக அவரை பணியில் இருந்து நீக்கவோ அல்லது பதவி குறைப்போ செய்யக் கூடாது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
பணியில் தொடர ...

பூமியை அச்சுறுத்தும் சிறுகோள்கள்! பூமியின் முடிவு நெருங்கிவிட்டதாக பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்

Posted: 12 Oct 2016 01:32 PM PDT

வாஷிங்டன்: பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே ஆயிரக்கணக்கில் குறுங்கோள்கள் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு பெரிய மலையளவு கூட இருக்கும். அவை பூமி மீது மோதினால் கற்பனைக்கு எட்டாத அழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியை காக்க நாசா முயற்சி
நாசா சமீபத்தில் இந்த வகையான சிறுகோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி ...

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு அனுமதி

Posted: 12 Oct 2016 03:55 PM PDT

புதுடில்லி: சென்னை விமான நிலைய விரிவாக்கத்தின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இரு கட்டங்களாக..
சென்னை மீனம்பாக்கத்தில், 1,300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விமான நிலையத்தில், ஆண்டுக்கு, 1.40 கோடி பயணிகளை கையாளும் வசதி உள்ளது. இதை, மூன்று கோடியாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ரூ.2,500 கோடியில் திட்டம்
முதல் கட்டப் பணிகள், நான்கு ஆண்டுகளுக்கு முன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™