Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


என்.எஸ்.ஜி.,யில் இந்தியாவுக்கு இடம்: பேச்சுக்கு சீனா தயார்

Posted: 10 Oct 2016 07:52 AM PDT

பீஜிங்: 'என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா

இணைவது தொடர்பாக பேச்சு நடத்த தயார்' என, சீனா அறிவித்து உள்ளது.
என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில், 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள், அணு மூலப்பொருட்கள் மற்றும் அணு உலை தொழில்நுட்பங்களை பரஸ்பரம் தங்களுக்குள் வினியோகம் செய்து கொள்கின்றன.
சீனா தயார்
இந்தியா, இந்த கூட்டமைப்பில் சேர முயற்சித்து வருகிறது. இதற்கு, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து
உள்ளிட்ட நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், சீனா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ...

'தயாராகுங்க' ஆயுத தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு; எல்லையில் நிலவும் பதற்றத்தால் அவசர முடிவு

Posted: 10 Oct 2016 09:12 AM PDT

புதுடில்லி: எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், 'கூடுதல் ஆயுதங்களுக்கு அவசர தேவை ஏற்பட்டால், அதை உடனடியாக தயாரித்து தருவதற்கு, தயாராக இருக்க வேண்டும்' என, ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்தியா - பாக்., இடையேயான உறவில், பதற்றம் நிலவி வரும் நிலையில், எந்த சூழ்நிலையை சமாளிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், ஆய்வு செய்து வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாம் ...

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்கா பாய்ச்சல் ..! மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு

Posted: 10 Oct 2016 09:19 AM PDT

லக்னோ:'இப்போது இல்லையேல் வேறு எப்போதும் இல்லை' என்ற முடிவுடன், உ.பி.,யில் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. காங்., துணைத் தலைவர் ராகுலின் பிரசாரத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால், அவரது சகோதரி பிரியங்கா, பிரசார களத்தில் அதிரடியாக குதிக்க திட்டமிட்டுள்ளார்.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.உ.பி.,யில், ௩௦ ஆண்டுகளுக்கும் ...

கானல் நீராகிறது காவிரி மேலாண்மை வாரியம்; இழுத்தடிக்க போகிறதா புதிய சட்ட சூழ்நிலை?

Posted: 10 Oct 2016 09:26 AM PDT

எல்லா பிடிமானங்களுமே கைநழுவிப் போய், புதிய சட்டச் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என, தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி விவகாரம் வெடிப்பதை போல் தான், இந்த ஆண்டும் வெடித்தது. காவிரி நீரில் தங்களுக்குள்ள பங்கை தரும்படி, தமிழக அரசு போராடத் துவங்கியது.
காய் நகர்த்தல்
மேலும் சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. காவிரி பிரச்னை தொடர்ந்து இழுபறியாக இருப்பதால், 'நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ...

ராசியில்லாத ராஜாக்கள் விஜயகாந்த் கல்தா?

Posted: 10 Oct 2016 09:31 AM PDT

கட்சிக்கு ராசியில்லாத நிர்வாகிகளின் பதவியைப் பறிக்க அல்லது மாற்றி அமைக்க, விஜயகாந்த் திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைபடியே, கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுக்கின்றனர். வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதும், ஜோதிடர் ஆலோசனைபடியே நடக்கிறது.
ஜோதிடர் சால்ஜாப்பு
அத்துடன், விஜயகாந்த் வீட்டில், அவ்வப்போது யாகங்களும்; பூஜைகளும் நடந்து வருகின்றன. இருப்பினும், சட்டசபை தேர்தலில், ...

ஸ்டாலினுக்கு பாடம் : தி.மு.க., - காங்., மோதல் தீவிரம்

Posted: 10 Oct 2016 09:42 AM PDT

தமிழகத்தில், தி.மு.க., - காங்., இடையேயான மோதல் முற்றுகிறது. ஜெ., நலம் விசாரிக்க, ராகுல், சென்னை வந்து சென்றதில் துவங்கிய மோதல், திருநாவுக்கரசரின் அதிரடி பேட்டி மூலம், பகிரங்கமாக வெடித்துள்ளது.

பொறுப்பு முதல்வர் விஷயத்தில், ஸ்டாலின் கருத்துக்கு உடன்பட முடியாது என, திருநாவுக்கரசர் மூக்கறுப்பு செய்துள்ளார். இதனால், தமிழகத்தில், காங்., திசை மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராகுல் திடீரென வந்தார்
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா, இரு வாரங்களாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்து உடல்நலம் ...

எய்ம்ஸ் நிபுணர் ஆலோசனைப்படி முதல்வர் ஜெ.,க்கு தொடருது சிகிச்சை

Posted: 10 Oct 2016 09:55 AM PDT

சென்னை:'முதல்வர் ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகள் குறித்து, எய்ம்ஸ் நிபுணர் கில்நானி, இரு நாட்கள் தங்கி ஆலோசனை அளித்தார். சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவுடன், அவசர சிகிச்சை டாக்டர்களும் இணைந்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என, அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, செப்., 22 முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து, அரசியல் கட்சி தலைவர்கள், மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
பினராயி விஜயன்
நேற்று, புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண் பேடி; கேரள ...

தேர்வே எழுதாமல் முதலிடம் பிடித்த மாணவி: பீஹார் மாநில கல்வித்துறையின் அவலம்

Posted: 10 Oct 2016 10:14 AM PDT

பாட்னா: பீஹாரில், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய், தேர்வே எழுதவில்லை என, தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாநில முதல் மாணவி :
பீஹாரில், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், மே மாதம் நடந்த, பிளஸ் 2 தேர்வில், ரூபி ராய் என்ற மாணவி, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சாதாரண விஷயங்களை கூட, ரூபி ராய், தப்பும் தவறுமாக கூறியதை பார்த்த நிருபர்கள், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். ...

உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகுமா?

Posted: 10 Oct 2016 10:12 AM PDT

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 17, 19ம் தேதிகளில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது; போட்டியிட, 4.97 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிச., 31க்குள் தேர்தல் நடத்திமுடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சிரமம்
இந்நிலையில், வட கிழக்கு பருவமழை வரும், 20ல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் ...

'கிறுகிறுக்க' வைக்கும் அமெரிக்க தேர்தல்! முந்துகிறார் ஹிலாரி கிளின்டன் விரட்டுகிறார் டொனால்டு டிரம்ப்

Posted: 10 Oct 2016 10:56 AM PDT

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் 58வது அதிபர் தேர்தல் வரும் நவ., 8ல் நடக்க உள்ளது.இதில், ஹிலாரி கிளின்டனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவருக்கு டொனால்டு டிரம்ப் கடும் போட்டி கொடுத்து வருகிறார்.

அமெரிக்க அதிபராக ஒருவர் இரு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். ஜனநாயக கட்சி சார்பில் இரு முறை அதிபரான ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 2017, ஜன. 20ல் முடிவடைகிறது.
புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முதல்கட்ட தேர்தல் நடைமுறை கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் வரை நடைபெற்றது. இதில் கட்சிகள் சார்பில் அதிபர் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி ஜனநாயக ...

கார் உற்பத்தியில் உலக நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்

Posted: 10 Oct 2016 11:50 AM PDT

டில்லி: கார்கள் உற்பத்தியில் இந்தாண்டு இந்தியா உலக நாடுகள் மத்தியில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தனது நேரடி போட்டி நாடான தென்கொரியாவை இந்தியாஆறாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கார் உற்பத்தியில் உலக அளவில் முதல் நான்கு இடங்களில் உள்ளன
25.7 லட்சம் கார்கள்
2016ல் மட்டும் இன்றைய தேதி வரை இந்தியாவில் மொத்தம் 25.7 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் நேரடி போட்டி நாடான தென்கொரியாவில் ஹுன்டாய் கியா கம்பெனி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ...

அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி

Posted: 10 Oct 2016 12:22 PM PDT

விஜயவாடா: 'அடுத்த தசரா பண்டிகைக்குள், உலகத்தரம் வாய்ந்த தலைநகரமாக, அமராவதி தயாராகி விடும்' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
புதிய தலைநகர் :
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா என, இரு மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருந்த ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாக மாறியது. இதையடுத்து, ஆந்திராவுக்கான புதிய தலைநகரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விஜயவாடா அருகேயுள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச அரசு ...

பர்ஹான் வானியை புகழ்ந்து நவாஸ் ஷெரிப் மீண்டும் பேச்சு

Posted: 10 Oct 2016 01:23 PM PDT

இஸ்லாமாபாத்: 'இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி, சுதந்திர போராட்ட வீரன்' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு:
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஜூலை, 9 முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு, 90-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; ஆயிரக் கணக்கானோர் ...

ராணுவ வீரர்களின் வீரத்திற்கு சான்றிதழ் தேவையில்லை: பாரிக்கர்

Posted: 10 Oct 2016 02:27 PM PDT

பனாஜி : ராணுவ வீரர்களின் வீரத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் சான்றிதழ் தரத் தேவையில்லை என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பதிலடி:
யூரி பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த இந்திய ராணுவ வீரர்கள், ‛சர்ஜிக்கல் அட்டாக்' நடத்தி பயங்கரவாதிகள் பலரை கொன்றதோடு, அவர்களின் 7 முகாம்களையும் அழித்தனர். இத்தாக்குதல் குறித்து மத்திய அரசு சான்றுகளை வெளியிட வேண்டும் என காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின.
மோடி அரசின் தைரிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™