Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சென்னை-28 2 பாடல்களை மலேசியாவில் வெளியிடும் சூர்யா

Posted:

வெங்கட் பிரபு இயக்கி வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. அதில் நடித்த ஜெய், மிர்சி சிவா, விஜயலட்சுமி, பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா ஆகியோர் மீண்டும் நடிக்கிறார்கள். முதல் பாகத்துக்கு இசை அமைத்த யுவன் ஷங்கர் ராஜா 2ம் பாகத்துக்கும் இசை அமைத்திருக்கிறார். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு ...

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்துள்ள படம்

Posted:

எம்ஜேடி புரொடக்ஷன்ஸ் சார்பாக மணிகண்டன் தயாரிக்கும் புதிய திரைப்படமான "திரைக்கு வராத கதை" படத்தில் ஒரு காட்சியில் கூட ஆண்கள் இல்லை. முழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ளனர்.

பிலிம் இண்ஸ்டிட்யூட் மாணவிகள் சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை ...

சிரஞ்சீவியின் “கைதி நம்பர் 150” ரிலீஸை உறுதி செய்த ராம் சரண்

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் அவரது 150வது திரைப்படம் "கைதி நம்பர் 150". விஜய் நடிப்பில் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹிட்டான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் தான் கைதி நம்பர் 150. இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகிறார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ...

கல்யாண் ராம் நடிக்கும் ஐஎஸ்எம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

என்.டி.ஆர் குடும்ப வாரிசு நடிகரான கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‛ஐஎஸ்எம்'. இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ஐஎஸ்எம் படத்தில் நாயகனாக நடிக்கும் கல்யாண் ராம், என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அப்படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ஐஎஸ்எம், படத்தின் திரையிடும் ...

'பவர் பாண்டி' படப்பிடிப்பு : பரபரப்பில் தனுஷ்

Posted:

நடிகராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக, பாடகராக அவதாரம் எடுத்த தனுஷ் அதிகாரப்பூர்வ இயக்குனராக மாறிய படம் 'பவர் பாண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தது. சென்னையில் முதல் கட்டப் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்ததை அடுத்து இரண்டாவது கட்டப் படப்பிடிப்பை தற்போது ...

'பிரேமம்' படத்தில் ஐஸ் விற்றவர் பிரபுதேவாவுக்கு டப்பிங் பேசிய அதிசயம்..!

Posted:

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் உருவாகியுள்ள படம் தேவி.. இயக்குனர் ஏ.எல்.விஜய் இந்தப்படத்தின் மூலம் தனது எல்லையை இன்னும் சற்றே விரிவுபடுத்தியுள்ளார்.. மும்மொழிகளில் ஒரே நேரத்தில் உருவானாலும் மலையாளத்திலும் இந்தப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.. படத்தில் பிரபுதேவாவுக்கான மலையாள ...

'புலிமுருகன்' இயக்குனருக்கு கமாலினி முகர்ஜி வைத்த கோரிக்கை..!

Posted:

இந்த வருடம் 'இறைவி' படஹ்தின் மூலம் மீண்டும் லைம்ளைட்டிற்கு வந்த கமாலினி முகர்ஜிக்கு அடுத்ததாக மிகப்பெரிய உற்சாக டானிக்காக வெளியாக இருக்கிறது மலையாளத்தில் வெளியாகவுள்ள 'புலி முருகன்' படம்.. இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக மைனா என்கிற காட்டு கிராமத்தை சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். மோகன்லாலுக்கு 'புலி'யுடன் சண்டை போடுவது ...

பிர்யதர்ஷனை கண்ணீர் விடவைத்த லிசியின் வார்த்தைகள்..!

Posted:

கசப்பான நிகழ்வு தான்.. ஆனால் இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் தங்களது திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தே விட்டார்கள்.. பிரியதர்ஷனி பொருத்தவர அவரது சினிமா வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறார்... அதிலிருந்து மீண்டு வந்து திரும்பவும் வெற்றிகளை குவித்தும் இருக்கிறார்..இதோ இப்போது ...

'லேலம்' பார்ட்-2வில் நடிக்கிறார் சுரேஷ்கோபி..!

Posted:

1997ல் ஆக்ஷன் ஹீரோ சுரேஷ்கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளியான எவர்கிரீன் ஆக்ஷன் படம்தான் 'லேலம்'. கமர்ஷியல் ஆக்ஷன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்படும் ஜோஷிதான் இந்தப்படத்தை இயக்கினார். இந்தப்படம் வெளியானபோது 'படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகளை மிஸ் பண்ணிவிடாதீர்கள்' என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள்.. இந்தபடஹ்தில் நம்ம ...

மீண்டும் சிக்ஸ்பேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து ஜூனியர் என்.டி.ஆர் ஜனதா கேரேஜ் எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தைக் கொடுத்தார். இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவான ஜனதா கேரேஜ் படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் டெம்பர் எனும் ...

பேட்மிட்டன் பிரபலமாக நடிக்கும் சுதீர் பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவரும் நடிகருமான சுதீர் பாபு தெலுங்கு படங்களில் ஹீரோவாகவும் ஹிந்தியில் வில்லனாகவும் என்ட்ரி கொடுத்தவர். ஹிந்தியில் வெளியான பாஹி படத்தில் வில்லனாக நடித்த சுதீர் பாபு, மேலும் ஒரு ஹிந்தி படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பேட்மிட்டன் விளையாட்டு வீரர் புலேலா ...

மேலும் ஒரு தெலுங்கு படத்தில் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோனிற்கு மொழிகளைக் கடந்து ரசிகர்கள் ஏராளம். தமிழில் வடகறி படத்தில் நடிகர் ஜெய்யுடன் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன், தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்கும் தீஹா படத்தில் நடித்துள்ளார். இப்படம் தவிர மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். குண்டூர் டாக்கீஸ் படத்தின் ...

மீண்டும் சல்மானுடன் ஜோடி? - ஐஸ்வர்யா ராய் பதில்...!

Posted:

கிசுகிசுக்களுக்குப் பெயர் போனது ஹிந்தித் திரையுலகம். அங்கிருந்து கிளம்பும் கிசுகிசுக்களை யாராலும் 'கன்ட்ரோல்' செய்யவே முடியாது. அந்தக் கிசுகிசுவில் சம்பந்தப்படும் நட்சத்திரங்கள் கூட அதைப் பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் தங்களுக்கு 'பப்ளிசிட்டி'தான் அதிகம் கிடைக்கிறது என்றே நினைப்பார்கள். இருந்தாலும் அதையும் ...

சிவநாகம் - கன்னட டப்பிங் படம் தமிழில் வெளியாகுமா?

Posted:

'அம்மன், அருந்ததி' படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் ரம்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க கன்னடத்தில் உருவாகியுள்ள படம் 'நாகரஹவு'. இந்தப் படத்தில் மறைந்த விஷ்ணுவர்தனை கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் உருவாக்கி படத்தில் இணைத்துள்ளார்கள். இந்தப் படத்தை தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து ...

சல்மான் உடனான நட்பு பற்றி அஜய் கருத்து

Posted:

பாலிவுட்டில் ஒரேகாலக்கட்டத்து நடிகர்கள் சல்மான்கானும், அஜய் தேவ்கனும். இருவரும் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளனர். அதேசமயம் இருவருக்குள்ளும் அவ்வளவாக புரிதல் கிடையாது. இதனிடையே, தற்போது அஜய், சிவாய் படத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளுடன் படத்தின் புரொமோஷன் வேலைகளும் ...

'பாகுபலி 2' - வெளிநாட்டு உரிமையில் திடீர் மாற்றம் ?

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் அமெரிக்க மார்க்கெட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு, தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. அமெரிக்கா, அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழ் ரசிகர்களும் இந்தப் படத்தைப் பார்த்து ரசித்ததால் ...

அமீர் கான் மிகவும் திறமையான நடிகர் -அமிதாப் பச்சன்

Posted:

ஹிந்தி திரையுலகில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் அமீர்கானும் ஒருவர். இவர் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் "டங்கல் " படத்தில் மல்யுத்த வீரராக மாவீரர் போகத்தாக நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் விஜய் கிருஷ்ணா இயக்கத்தில் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ‛தக் ஆப் இந்துஸ்தான் எனும் படத்தில் ...

‛கத்தி' ரீ-மேக்கில் நான் நடிக்கவில்லை-அக்ஷய்

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் அக்ஷய் குமாரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் அக்ஷய் நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம். தற்போது அவர் கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் அக்ஷய் ‛பைவ் படத்தில் நடிக்கவில்லை என்று செய்தி வெளியான நிலையில் தற்போது கத்தி ஹிந்தி ரீ-மேக்கான ‛இக்கா' ...

பாக்., நடிகர்களுக்கு தடை: ‛ரயீஸ்' ரிலீஸ் தேதி மாற்றம்?

Posted:

யூரி தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியாவில் பாகிஸ்தான் நடிகர்கள், கலைஞர்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. இதனால் பாலிவுட்டில் பணியாற்றிய அந்தப்படத்தின் கலைஞர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளதோடு, அவர்கள் நடித்த படங்களை பாலிவுட்டில் திரையிடவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே ஷாரூக்கான் நடித்துள்ள ரயீஸ் படத்தில் ...

மூன்றே நாளில் ரூ.66 கோடி: பட்டையை கிளப்பும் ‛தோனி' வசூல்

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு, ‛எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் உருவாகி, அதில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார், நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகின் பல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™