Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கொழுப்பை கரைக்கும் ஸ்ட்ராபெர்ரி!

Posted: 01 Sep 2016 03:10 AM PDT

download (1)

download (1)நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ட்ராபெரியில் விட்டமின் C, A, K , தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், டோக்கோபெரால் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

நன்மைகள்

ஆன்டி - ஆக்சிடன்டுகள் ஸ்ட்ராபெரியில் இருப்பதால், இவை தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.download (1)

ரத்த அணுக்களை உற்பத்தி செய்து புற்றுநோய் வரமால் பாதுகாக்கிறது.

ஸ்ட்ராபெரியில் பல அமிலங்கள் இருப்பதால் இந்த பழத்தினை ஜூஸ் செய்து குடித்தால், பற்களில் உள்ள கரைகள் எடுத்து வெள்ளையாக மாற்றுகிறது.

பெண்களின் அழகை பாதுகாக்கவும் இந்த பழம் பயன்படுகிறது.

சருமத்தின் நிறத்தினை மாற்றி பொலிவுடன் வைக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கிருமி தொற்று நோய்கள் உண்டாவதை தடுக்கிறது.

செரிமான மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து, இதயத்தின் செயல் திறனையும் கூட்டுகிறது.

The post கொழுப்பை கரைக்கும் ஸ்ட்ராபெர்ரி! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பப்பாளி செய்யும் மாயாஜாலம்

Posted: 01 Sep 2016 03:07 AM PDT

download

downloadஎளிதில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கியமானது பப்பாளி பழம். விலையும் மிக குறைவுதான்.

இதன் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது.

பப்பாளியில் விட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.vn

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும்.

நாள்பட்ட காயங்கள், தொற்றுகளைக் கொண்டவர்கள் பப்பாளிப் பழத்தை மசித்துப் பூசிவந்தால் சருமம் புத்துணர்வையும் பளபளப்பையும் பெறும்.

The post பப்பாளி செய்யும் மாயாஜாலம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™