Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'தலையிடுங்க! பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் திடீர் கடிதம் :ஜெ.,வை டில்லிக்கு அழைத்து பேச வலியுறுத்தல்

Posted: 09 Sep 2016 09:33 AM PDT

காவிரியில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடகாவில் நேற்று, 'பந்த்' நடந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை யை திசை திருப்பும் வகையில், 'இந்தப் பிரச்னையில் பிரதமர் தலையிட வேண்டும்; இரு மாநில முதல்வர்களையும், டில்லிக்கு அழைத்து பேச வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, 'காவிரி யில், தமிழகத்துக்கு, 10 நாட்களுக்கு, வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் ...

உர மோசடியை தடுக்க மத்திய அரசு அதிரடி

Posted: 09 Sep 2016 09:37 AM PDT

யூரியா உள்ளிட்ட உரங்கள், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும்; இடை யில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், பல்வேறு புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது.

அதன்படி, பி.ஓ.எஸ்., எனப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகளை பயன்படுத்தவும், விற்பனை யாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.உரங்களுக்கு, மத்திய அரசு மானியம் அளிக்கிறது; அதன்படி நடப்பு நிதியாண்டில், இதற்காக, 70 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்டுள்ளது.அரசு மானியம் வீண்:நாட்டின் சராசரி யூரியா தேவை, 3.1 கோடி டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டில், ...

ஹனுமன் கோவிலில் ராகுல் வழிபாடு

Posted: 09 Sep 2016 09:47 AM PDT

அயோத்தி: அயோத்தியில் உள்ள, ஹனுமன் கார்கி கோவிலில், காங்., துணைத் தலைவர் ராகுல், வழிபாடு செய்தார்.

உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இதற்காக, மக்களிடம் ஆதரவை திரட்ட, பிரதான அரசியல் கட்சிகள், முதற்கட்ட நடவடிக்கைகளை துவங்கி விட்டன. காங்., துணைத் தலைவர்ராகுல், 'விவசாயிகள் யாத்திரை' என்ற பெயரில், 2.500 கி.மீ., துார பயணத்தை, இந்த வார ஆரம்பத்தில் துவக்கினார்.
யாத்திரையின், நான்காம் நாளன்று, அயோத்திக்கு சென்ற ராகுல், அங்குள்ள, ஹனுமன் கார்கி கோவிலுக்கு ...

ஜெ., வழக்கில் விரைவில் தீர்ப்பு?

Posted: 09 Sep 2016 09:50 AM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 1991 முதல், 96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த தாக, ஜெயலலிதா மீது, 1996ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கி, பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27ல் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, பெங்களூரு ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து, கடந்த ஆண்டு, மே 11ல் ...

திருப்பம்! காவிரி நதிநீர் பிரச்னையில் நடிகர்கள் தலையீடு:விவாதிக்க நாளை கூடுகிறதாம் சங்க செயற்குழு;ரஜினி உண்ணாவிதரம் இருக்க ரசிர்கள் கிடுக்கி; கன்னட படத்தில் நடிக்கும் சரத்குமாருக்கு சிக்கல்

Posted: 09 Sep 2016 09:56 AM PDT

காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்திற்கு எதிராக, கன்னட நடிகர், நடிகையர் போர்க்கொடி துாக்கியுள்ள நிலையில், திடீர் திருப்பமாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தினரும், கர்நாடகா வுக்கு எதிராக களம் இறங்குகின்றனர்.

காவிரி நீர் பிரச்னை குறித்து விவாதிக்க, நடிகர் சங்க செயற்குழு, நாளை கூடுகிறது. 'ரஜினி உண்ணாவிரதம் இருக்க வேண்டும்' என, ரசிகர்கள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்; கன்னட படத்தில் நடிக்கும் சரத்குமாருக்கு சிக்கல் எழுந்துள்ளது. காவிரியில் இருந்து பாசனத்திற்கு, 50 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடக்கோரி, உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு ...

மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்

Posted: 09 Sep 2016 10:03 AM PDT

புதுடில்லி:''அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
டில்லியில் நடந்த, தேசிய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது:
நாடு முழுவதும், டிஜிட்டல் மயமாக வேண்டும் என்பதற்காக, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கினார். அடுத்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிகிரி' சான்றிதழ்கள் உட்பட, அனைத்து சான்றிதழ்களும், டிஜிட்டல் முறையில் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது.
போலி ...

காரியம் சாதிக்கும் கர்நாடக விவசாயிகள்:வழக்கம் போல் வந்தது காய்கறிகள்

Posted: 09 Sep 2016 10:26 AM PDT

கர்நாடகாவில் நடந்த, 'பந்த்' காரணமாக, தமிழகத்தில் இருந்து, பெங்களூரு செல்லும் பஸ் மற்றும் வாகன போக்குவரத்துகள் பாதிக்கப் பட்டன. ஆனால், அங்கிருந்து, தமிழகத்திற்கு வழக்கம்போல் காய்கறிகள் கொண்டு வரப் பட்டன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட தேவைக்காக, கர்நாடகாவில் இருந்து, காய்கறிகள் எடுத்து வரப்படுகின்றன. சென்னை, கோயம்பேடு உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு, கர்நாடக விவசாயிகள் நேரடியாகவும், கமிஷன் ஏஜன்டுகள் மூலமாகவும், காய்கறிகளை அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், காவிரி பிரச்னை காரணமாக, கர்நாடக மாநிலத்தில், நேற்று முழு ...

'பாஸ்போர்ட் ரத்தானதால் இந்தியா வரவில்லை!''இ - மெயில்' மூலம் மல்லையா பதில்

Posted: 09 Sep 2016 10:35 AM PDT

புதுடில்லி:''இந்தியாவுக்கு வர விரும்புகிறேன்; ஆனால் என், 'பாஸ்போர்ட்' ரத்து செய்யப் பட்டுள்ளதால் அங்கு வர முடியவில்லை,'' என, டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிலில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தன்னுடைய, 'கிங்பிஷர்' நிறுவனத்தின், 'லோகோ'வை பயன்படுத்திக் கொள்ள, வெளி நாட்டு நிறுவனத்துடன் விஜய் மல்லையா ஒப்பந்தம் செய்தார். இதற்காக, இரண்டு லட்சம் டாலர் கொடுத்துள்ளார்.வெளிநாட்டு பணப் பரிமாற்ற கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறாமல், பணத்தை வெளிநாடுகளுக்கு ...

நவம்பரில் 3 தொகுதி தேர்தல் தேர்தல் கமிஷன் தகவல்

Posted: 09 Sep 2016 10:39 AM PDT

தமிழகத்தில், அடுத்த மாதம், 24க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம், காலியாக உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு தேர் தல் நடத்தப்பட உள்ளதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. அப்போது, கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி; தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில், நடத்தை விதிகளுக்கு புறம்பாக, வாக்காளர் களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.மேலும் வேட்பாளர்களின் வீடுகளில் இருந்து, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப் பட்டது. ...

ஜெயலலிதா, சித்தராமையா மீது கர்நாடகா கோர்ட்டில் வழக்கு

Posted: 09 Sep 2016 10:42 AM PDT

மாண்டியா:ஜெயலலிதா, சித்தராமையா மீது கர்நாடகா கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

காவிரி வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உட்பட, ஒன்பது பேர் மீது, மாண்டியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கர்நாடகா கொடுக்க வேண்டிய, 50 டி.எம்.சி., தண்ணீர் கேட்டு, சுப்ரீம்கோர்ட்டில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு, 'தமிழகத்துக்கு, வினாடிக்கு, 15 ...

சென்னையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

Posted: 09 Sep 2016 11:11 AM PDT

சென்னை : சென்னையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை - திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மயிலாப்பூர், சாந்தோம், காமராஜ் சாலை உள்ளிட்ட இடங்களில் கனமழையும் பெய்து ...

அணைகட்டும் முயற்சியை பா.ஜ., அனுமதிக்காது: தமிழிசை

Posted: 09 Sep 2016 12:04 PM PDT

கோவை : சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் முயற்சியை பா.ஜ., அனுமதிக்காது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்ததாவது: காவிரி பிரச்னையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கர்நாடக காங்., அரசு அரசியல் நடத்தி வருகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலத்திற்கும் காவிரி நீர் சொந்தமானது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முயற்சித்து வருகிறது. கேரள அரசின் அம்முயற்சியை பா.ஜ., என்றும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் ...

ஜாதி மறுப்பு திருமணமே தீர்வு: மத்திய அமைச்சர்

Posted: 09 Sep 2016 12:47 PM PDT

சென்னை : ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில் ஜாதி மறுப்பு திருமணமே சரியான தீர்வு என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்ததாவது: இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் ஜாதியை ஒழிக்க முன்வர வேண்டும். ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில் ஜாதி மறுப்பு திருமணமே சரியான தீர்வு. ஜாதி பிரச்னையை தூண்டும் அரசியல் தலைவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் உள்ள பிற மாநிலத்தினர் தாக்கப்படுவது ...

ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு மேகாலயா ஒப்புதல்

Posted: 09 Sep 2016 02:25 PM PDT

ஷில்லாங்: ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு, மேகாலயா மாநில சட்டசபை, நேற்று ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் அமலில் உள்ள, பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்
திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்தது. இம்மசோதா, பார்லி மென்டின் இரு சபைகளிலும், சமீபத்தில் நிறைவேறியது.
அரசியல் சட்டத்திருத்த மசோதாவுக்கு, 50 சதவீத மாநில சட்டசபைகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பின்னே, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற முடியும். எனவே, ஜி.எஸ்.டி., மசோதாவும், மாநில சட்டசபைகளின் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™