Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கர்நாடக காங்., அரசு... பணியுமா? சம்பா பயிரை காப்பாற்ற காவிரி தண்ணீர் வருமா?

Posted: 05 Sep 2016 10:03 AM PDT

'தமிழகத்திற்கு, உடனடியாக, தினமும், 15 ஆயிரம் கன அடி வீதம், 10 நாட்களுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முந்தைய உத்தரவுகளை, கர்நாடகா இதுவரை மதித்து நடந்திராத நிலையில், இந்த உத்தரவுக்கு பணியுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து, சம்பா பயிர்களை காப்பாற்றுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. காங்., அரசுதண்ணீர் திறக்க ...

'பிரிவினைவாதிகளின் செயல்பாட்டை ஏற்க முடியாது!'

Posted: 05 Sep 2016 10:27 AM PDT

ஸ்ரீநகர்: ''பேச்சுக்கு வர மறுக்கும் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களின் செயல்பாடு ஏற்கக் கூடியதாக இல்லை; இது, காஷ்மீர் மக்களின் தனித்தன்மைக்கு எதிரானது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப் பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் நிலவும் பதற்ற நிலையை தணிப்பதற்காக, அனைத்துக் கட்சிக் குழு அங்கு சென்றுள்ளது.
ஹூரியத் நிராகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தக் குழுவில், 20 கட்சிகளைச் சேர்ந்த, 26 பேர் இடம் பெற்றுள்ளனர். முதல் நாளான நேற்று முன்தினம், ...

'பாக்.,கை தனிமைப்படுத்தி தண்டிக்க வேண்டும்!': 'ஜி20' மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 05 Sep 2016 10:16 AM PDT

ஹாங்க்சு,: ''தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு நாடு, பயங்கரவாதத்தை துாண்டி விடுகிறது; இந்த அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ள அந்த நாட்டை தனிமைப்படுத்தி தண்டிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சீனாவில், 'ஜி20' எனப்படும், பொருளாதாரத்தில் வலுவான, 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இறுதி நாளான நேற்று, இந்தக் கூட்டத்தில், அண்டை நாடான பாக்., பெயரைக் குறிப்பிடாமல், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தனிமைப்படுத்த வேண்டும்
தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு நாடு, பயங்கரவாதத்தை துாண்டி வருகிறது. இதனால், தெற்காசியாவில் ...

டில்லி முதல்வர் - கவர்னர் மோதல் உச்சக்கட்டம் யாருக்கு அதிகாரம்? சுப்ரீம் கோர்ட்டில் 9ல் விசாரணை துவக்கம்

Posted: 05 Sep 2016 10:09 AM PDT

புதுடில்லி,:'டில்லி ஒரு யூனியன் பிரதேசம்; துணை நிலை ஆளுனர் தான் அதன் நிர்வாகத் தலைவர்' என்ற டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை, 9ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

டில்லி முதல்வர் - கவர்னர் இடையிலான போட்டியில், யாருக்கு அதிகாரம் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யவுள்ளதால், டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. துவக்கம் முதலே, ஆம் ஆத்மி அரசுக்கும், டில்லி துணை நிலை ஆளுனர் ...

சசிகலா புஷ்பா தேடும் சட்ட பாதுகாப்பு: பின்னணியில் சாமி; கடுப்பில் அ.தி.மு.க.,

Posted: 05 Sep 2016 10:31 AM PDT

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., சசிகலா புஷ்பாவை, பின்னால் இருந்து இயக்குவது, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி என்ற தகவல் கிடைத்து, அ.தி.மு.க., தலைமை கடும் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க., - எம்.பி., சிவாவுடன் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும்படி, போயஸ் தோட்டத்தில் வைத்து, முதல்வர் ஜெயலலிதா தன்னை அடித்ததாக, ராஜ்யசபாவில் புகார் கூறினார். இதையடுத்து, அவரது டில்லி வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தனக்கும் பாதுகாப்பு கேட்டு, ...

பிரதமரை சந்திக்க நடிகர் ரஜினி ஆர்வம் : நதிநீர் இணைப்பை வலியுறுத்த திட்டம்

Posted: 05 Sep 2016 09:44 AM PDT

நதிநீர் இணைப்பு உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு நலன்களுக்காக, விரைவில் நடிகர் ரஜினி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சில நாட்களுக்கு முன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். கிட்டதட்ட, நான்கு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, 'தமிழகத்தின் எதிர்கால நலனை முன்னிட்டு, மக்கள் சக்தியை பின்புலமாகக் கொண்ட நீங்கள், அரசியலுக்கு வருவது அவசியம்; காலத்தின் கட்டாயம்' என்ற ரீதியில், நிறைய விஷயங்களை பொன்ராஜ், ரஜினியிடம் அழுத்தம் திருத்தமாக ...

குற்றங்களை தீட்டும் புழல் சிறை: கைதிகளுக்கு தாராளமாய் கிடைக்கும் தடை செய்யப்பட்ட பொருட்கள்

Posted: 05 Sep 2016 10:50 AM PDT

சிறையில், அலைபேசி, கஞ்சா போன்ற பொருட்கள் அவ்வப்போது கைப்பற்றப்பட்டாலும், சில அதிகாரிகளின் சலுகையால், அவை கைதிகளுக்கு தாராளமாக கிடைத்து வருகின்றன. இதனால், வெளியில் நடக்கும் குற்றச் சம்வங்களுக்கான திட்டங்கள், சிறைக்குள் தீட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறை, மொத்தம், 220 ஏக்கர் பரப்பளவில் விசாரணை, தண்டனை, மகளிர், சிறுவர் சிறை, தீவிரவாதிகளை அடைக்க உயர் பாதுகாப்பு, 'செல்' மற்றும் மருத்துவமனை, நுாலகம், உணவகம் ஆகியவற்றுடன் தமிழகத்தின் மிகப்பெரிய சிறையாக, மூன்றடுக்கு பாதுகாப்புடன் அமைந்துள்ளது.ஆனாலும், சிறைக்குள் அலைபேசி, ...

காற்றாலை சீசன் இம்மாதத்துடன் முடிவு : மின் தேவையை பூர்த்தி செய்ய நெருக்கடி

Posted: 05 Sep 2016 08:17 AM PDT

காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்குநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 7,616 மெகாவாட் திறன் உடைய, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன்; அப்போது, காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தமிழ்நாடு மின் வாரியம், ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தை சராசரியாக, மூன்று அல்லது நான்கு ரூபாய் என்ற
விலையில் கொள்முதல் செய்கிறது. நடப்பு சீசனில், காற்றாலைகளில் அதிக அளவில் மின்சாரம் கிடைத்தது. ஆகஸ்ட், 16ல், 9.73 கோடி யூனிட் காற்றாலை ...

கட்சி மாறி வந்தவர்களுக்கு பதவி : தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளிப்பு

Posted: 05 Sep 2016 09:32 AM PDT

தே.மு.தி.க.,விலிருந்து வந்த மூன்று முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, கட்சியில் பதவிகள் வழங்கி இருப்பது, தி.மு.க.,வில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்திய, தே.மு.தி.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணங்களுக்கு மாறாக, அக்கட்சி தலைமை, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது.
தேர்தல் நெருக்கம் : இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, அப்போதைய எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர், 'மக்கள் தே.மு.தி.க.,' என்ற இயக்கத்தை உருவாக்கி, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தனர். ...

'கறுப்பு பணத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கணும்'

Posted: 05 Sep 2016 10:18 AM PDT

புதுடில்லி: 'வெளிநாடுகளுக்கு கறுப்புப் பணம் செல்கிறதா என்பதை கண்காணிக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, கறுப்புப் பணம் தொடர்பாக விசாரிக்கும் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு அமைப்பு, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி., கறுப்புப் பண புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா, ரிசர்வ் வங்கிக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கவும், ...

தீராத உடல்வலி பிரச்னைக்கு யோகா மற்றும் அக்குபன்சர் மூலம் நிரந்தர தீர்வு: அமெரிக்க நிபுணர்கள் கருத்து

Posted: 05 Sep 2016 11:33 AM PDT

வாஷிங்டன்: தீராத உடல் வலி பிரச்னைகளுக்கு யோகா மற்றும் அக்பன்சர் மூலம் நிரந்தர தீர்வினை காண முடியும் என அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அதிக பணிச்சுமை, மன அழுத்தம், உடல் உழைப்பு போன்றவற்றால் பெரும்பாலனாவர்களுக்கு பல்வேறு உடல் வலிப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றிற்கு மிதமான யோகா பயிற்சி மற்றும் அக்பன்சர் சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வை கொடுக்க முடியும் என அமெரிக்க தேசிய சுகாதார கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றும் ரிச்சார்டு எல் நான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ...

இலங்கை தூதருக்கு மலேசியாவில் அடி ,உதை: விமானநிலையத்தில் பரபரப்பு

Posted: 05 Sep 2016 12:33 PM PDT

கோலாலம்பூர்: மலேசியாவில் இலங்கை தூதருக்கு அடி உதை விழுந்தது. இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்திற்கு கடந்த ஞாயிறன்று ,மலேசியாவிற்கான இலங்கை தூதர் இப்ராஹிம் அன்சார், வந்திறங்கினார். அப்போது அங்கிருந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.இதில் அவரது முகம் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. நொடிப்பொழுதில் நடந்த இந்தசம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவானது.

உடன் மலேசிய போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த வாரம் மலேசியாவில் நடந்த ...

'தலாக்' எதிர்த்த வழக்கு; அரசு பதிலளிக்க அவகாசம்

Posted: 05 Sep 2016 01:19 PM PDT

புதுடில்லி: முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை, 'தலாக்' என்று கூறி, விவாகரத்து அளிக்கும் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க, மத்திய அரசுக்கு, நான்கு வார கால அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்.
முஸ்லிம்களின் விவாகரத்து முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது. 'சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய சட்ட விதிகளில் மாற்றம் செய்ய, கோர்ட்களுக்கு அதிகாரம் இல்லை' என, ...

வட கொரியா ஏவுகணை சோதனை; தென் கொரியா கண்டனம்

Posted: 05 Sep 2016 03:41 PM PDT

சியோல்: சீனாவில், 'ஜி20' நாடுகள் மாநாடு நடந்து வரும் நிலையில், வட கொரியா, நேற்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது, உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும், 'ஜி20' மாநாடு, சீனாவின் ஹாங்க்சு நகரில் நடந்து வருகிறது. நேற்று, தென் கொரிய அதிபர் பார்க் ஜியுன் ஹை மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்து பேசினர். வட கொரியா நேற்று, கண்டம் விட்டு கண்டம் பாயும், மூன்று ஏவுகணைகளை கடலில் ஏவி, சோதனையில் ஈடுபட்டது. இந்த செயலுக்கு, தென் கொரியா கண்டனம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™