Tamil News | Online Tamil News |
- எல்லை பாதுகாப்பை அதிகரிக்க ராஜ்நாத் சிங்...உத்தரவு!: ராணுவ உயரதிகாரிகளுடன் அவசர கூட்டம்
- 'உழைப்பு தான் உன்னை உயர்த்தும்' : வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
- தேர்தலுக்கு தடையில்லா மின்சாரம் : பணிகளை முடுக்கிவிட்ட வாரியம்
- அடுத்தாண்டு ஏப்ரல் முதல் ஜி.எஸ்.டி., அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்
- 'தூய்மை இந்தியா' திட்டம் வெற்றி பெற மக்கள் எண்ணம் மாற வேண்டும்: மோடி
- முதல்வர் ஜெ., உடல்நிலை புதிய தகவல் அம்பலம்
- 'கொஞ்சமா குடிச்சா உடம்புக்கு நல்லது'
- தி.மு.க.,- - நல்ல நேரம்; பா.ஜ., - ராகுகாலம்
- தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும்...எச்சரிக்கை! காவிரியில் 6 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி திறக்க உத்தரவு :செவ்வாய்க்குள் மேலாண்மை வாரியம் அமைக்கவும் 'அட்வைஸ்'
- காவிரி விவகாரம்: கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்
| எல்லை பாதுகாப்பை அதிகரிக்க ராஜ்நாத் சிங்...உத்தரவு!: ராணுவ உயரதிகாரிகளுடன் அவசர கூட்டம் Posted: 30 Sep 2016 09:24 AM PDT புதுடில்லி:பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும், குறிப்பாக, பாக்., எல்லையில் உள்ள மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன், அவர் ஆலோசனை நடத்தினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில் நடத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த, பயங்கரவாதிகள் முகாம்களை, இந்திய ராணுவம், அதிரடி தாக்குதல் நடத்தி, நேற்று முன் ... |
| 'உழைப்பு தான் உன்னை உயர்த்தும்' : வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை Posted: 30 Sep 2016 09:31 AM PDT சென்னை: 'கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும்' என, தன்னைச் சந்தித்து வாழ்த்து பெற வந்த வேட்பாளர்களிடம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகள் உள்ளன. அதில், 96 வார்டுகளில் போட்டியிடும், தி.மு.க., முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, 91, 106, 128, 135,165, 175, 195 ஆகிய, ஏழு வார்டுகள் ஒதுக்கப் பட்டுள்ளன. தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., வேட்பாளர்கள் கல்பனா முத்துவேல், கயல்விழி ஜெயக்குமார், விசாலாட்சி ... |
| தேர்தலுக்கு தடையில்லா மின்சாரம் : பணிகளை முடுக்கிவிட்ட வாரியம் Posted: 30 Sep 2016 09:46 AM PDT உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடி களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, தற்போது, மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் உள்ளது. இருப்பினும், மின் சாதனங்கள் பழுதால், மின்தடை ஏற்படுகிறது. சென்னை, கோவை போன்ற, முக்கிய நகரங்களில், இரவு, 10:00 மணிக்கு மேல், மின்தடை தொடர்கதை யாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல், இரு கட்டங்களாக நடப்பதால், ஓட்டுச்சாவடிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது. ... |
| அடுத்தாண்டு ஏப்ரல் முதல் ஜி.எஸ்.டி., அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் Posted: 30 Sep 2016 09:49 AM PDT புதுடில்லி: ''வரும் ஏப்., 1 முதல், ஜி.எஸ்.டி., அமல்படுத்த, அரசு தீவிரமாக உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். டில்லியில், நேற்று நடந்த, பார்லி., ஆலோசனை குழுவின் நான்காவது கூட்டத்தில், அவர் பேசிய தாவது: வரும் ஏப்., முதல், ஜி.எஸ்.டி., எனப் படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு சட்டத்தை அமல்படுத்துவதில், அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான பணிகள், வேகமாக நடந்து வருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் முதல் கூட்டம், திருப்தி கரமாக அமைந்தது. ஆண்டு மொத்த விற்பனை, 20 லட்சம் ரூபாய்க்கு கீழ்உள்ளவர் களுக்கு, இந்த வரி ... |
| 'தூய்மை இந்தியா' திட்டம் வெற்றி பெற மக்கள் எண்ணம் மாற வேண்டும்: மோடி Posted: 30 Sep 2016 09:54 AM PDT ''துாய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற, மக்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டில்லியில், 'இண்டோசன்' எனப்படும், இந்திய துப்புரவு மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: ஆங்கி லேயர்களிடமிருந்து, சத்யாகிரகம் விடுதலை பெற்று தந்தது. இப்போது, அசுத்தத்திலிருந்து இந்தியா விடுதலை பெற, 'ஸ்வாச்சகிரகம்' தேவை. கழிவு மற்றும் குப்பைக்கு எதிரான போராட்டத்தை, துாய்மை இந்தியா திட்ட ஆர்வலர்கள் துவங்க வேண்டும். செல்வமாகுமா குப்பை? : பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதால் ... |
| முதல்வர் ஜெ., உடல்நிலை புதிய தகவல் அம்பலம் Posted: 30 Sep 2016 10:20 AM PDT சென்னை:முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பாதிப்பு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில், முதல்வர் ஜெயலலிதா அனுமதிக் கப்பட்டார்; ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவர் வீடு திரும்பாதது, அ.தி.மு.க.,வினரிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.பதற்றம் நேற்று முன்தினம், முதல்வர் உடல்நிலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவின. இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் காணப் பட்டது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட ... |
| 'கொஞ்சமா குடிச்சா உடம்புக்கு நல்லது' Posted: 30 Sep 2016 10:25 AM PDT புதுடில்லி:'அளவாக குடித்தால், உடம்புக்கு கெடுதல் ஏற்படாது; ரெட் ஒயின் போன்றவை, உடல்நலத்துக்கு நல்லது என, மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நாடு முழுவதும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, டில்லி வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான, அஸ்வனி உபாத்யாயா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல வழக்குதொடர்ந்திருந்தார்.'மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, மாநிலங் களின் கடமை. மதுவால் தான் சாலை விபத்து களும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொலை உள்ளிட்ட சம்பவங்களும் நடக்கின்றன. அதனால், நாடு முழுவதும் பூரண ... |
| தி.மு.க.,- - நல்ல நேரம்; பா.ஜ., - ராகுகாலம் Posted: 30 Sep 2016 10:28 AM PDT கரூர்:உள்ளாட்சி தேர்தலில், வேட்பு மனு தாக்கல் செய்ய, தி.மு.க.,வினர் நல்ல நேரம் பார்த்த நிலையில், பா.ஜ., வேட்பாளர் ராகு காலத்தில், வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று மஹாளய அமாவாசை என்பதால், கரூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, அரசியல் கட்சி வேட்பாளர்கள் முதல், சுயேச்சை வரை, போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். காலை, 10:00 மணிக்கு, தி.மு.க., வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்ய, கரூர் நகராட்சி அலுவலகம் முன் குவிந்தனர்.காலை, 10:30 மணிக்குள், தி.மு.க., வேட்பாளர்கள் மூவர், மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட, தி.மு.க., வேட் பாளர்கள், மேள ... |
| Posted: 30 Sep 2016 10:43 AM PDT புதுடில்லி:பல உத்தரவுகள் பிறப்பித்தும், காவிரி யில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா வுக்கு, நேற்று கடும் எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட், 'அடுத்த ஆறு நாட்களுக்கு, காவிரியில் தமிழகத்திற்கு, வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, மீண்டும் உத்தரவிட்டது. அத்துடன், 'வரும், 4ம் தேதிக் குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, மத்திய அரசையும் அறிவுறுத்தியது. காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் இடம் பெற்ற, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, ... |
| காவிரி விவகாரம்: கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் Posted: 30 Sep 2016 02:38 PM PDT பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.காவிரியில் தமிழகத்துக்கு அக் 6-ம் தேதி வரை 6000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு இறுதி எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இன்று நடக்க உள்ள இக்கூட்டத்திற்கு மாநில எம்.பி.க்கள் கலந்து கொள்கினறனர். முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 01,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |