Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நாடு முழுவதும் டாக்டர்களுக்கு பற்றாக்குறை! கிராமப்புற மக்கள் கடும் தவிப்பு

Posted: 03 Sep 2016 06:09 AM PDT

புதுடில்லி:இந்தியாவில், ஐந்து லட்சம் டாக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

1,674 பேருக்கு, ஒரு டாக்டர் என்ற விகிதாச்சார அளவிலேயே இருப்பதால், கிராமப்புறங்களில் உள்ள மக்கள், சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் சூழல் நிலவுகிறது.மக்கள்தொகைக்கு ஏற்ப, அரசு மற்றும் தனியார் டாக்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த, கடந்த, 10 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன; இருந்தாலும், எதிர்பார்த்த அளவு, டாக்டர்கள் எண்ணிக்கை உயரவில்லை. குறிப்பாக அரசு மருத்துவமனை களில், போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் பல ...

தமிழக உள்ளாட்சி தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம்! சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததால் மும்முரம்

Posted: 03 Sep 2016 06:37 AM PDT

ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த, சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததை அடுத்து, தமிழக கட்சிகள் அனைத்தும், அடுத்து நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், தீவிர கவனம் செலுத்த துவங்கி உள்ளன.

தமிழகத்தில், மே மாதம் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற, அ.தி.மு.க., அரசு, உள்ளாட்சி தேர்தலையும் உடனே நடத்த முடிவெடுத்துள் ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் களை, நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி, சட்ட மசோதாவையும் நிறைவேற்றி யது. இதற்கு, எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த சட்டசபை கூட்டத் தொடர் ...

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு வியூகம் 3 ஜாதிகளுக்கு தி.மு.க., முக்கியத்துவம்

Posted: 03 Sep 2016 06:58 AM PDT

உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளை கைப்பற்ற, ஜாதி ரீதியில் வேட்பா ளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு தென் மாவட்டங்களில், முக்குலத்தோர் சமுதா யத்தை சேர்ந்தவர்களும், மேற்கு மாவட்டங் களில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்களும், அதிக அளவில் ஓட்டளித்த தால், அக்கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.இதனால், உள்ளாட்சி தேர்தலில், எப்படியும் ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும் என, தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக, ஜாதி ரீதியில், வேட்பாளர்களை நிறுத்த ...

ரோசய்யாவுக்கு 'குட்பை:' ஜெ.,வுக்கு 'செக்'

Posted: 03 Sep 2016 07:47 AM PDT

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'செக்' வைப்பதற் காகவே, கவர்னராக இருந்த ரோசய்யாவுக்கு, மத்திய அரசு, பதவி நீட்டிப்பு வழங்கவில்லை என்ற தகவல், பா.ஜ., வட்டாரத்தில் பேசப்படு கிறது.

அந்த வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ.,வைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.,வுடன், எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகவே விரும்பி யது. 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., விரும்பியது; ஆனால், ஜெயலலிதா விரும்பவில்லை.
ஒரு இடத்தில் மட்டுமே : மாற்று அணி ஏற்படுத்தி, தமிழகத்தில் போட்டியிட்ட பா.ஜ., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது; இருந்தபோதும், நாடு முழுவதும் கூடுதல் இடங்களில் ...

மல்லையாவின் ரூ.6,630 கோடி சொத்துக்கள் முடக்கம்!அமலாக்கத்துறையின் பிடி இறுகுகிறது

Posted: 03 Sep 2016 09:51 AM PDT

புதுடில்லி:சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, 6,630 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக் கத்துறை முடக்கியது.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல மதுபானத் தொழிலதிபர் விஜய் மல்லையா, 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' விமான சேவை நிறுவனம் துவங்க, பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார். வங்கிகள், சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்ததை அடுத்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு மல்லையா தப்பியோடி னார்.இது தொடர்பான வழக்குகளில், கோர்ட்டில் ஆஜராகும்படி, அவருக்கு,பலமுறை,'நோட்டீஸ்' ...

இலவச 'லேப்டாப்' வினியோகத்தில் ரூ.242 கோடி முறையற்ற செலவு

Posted: 03 Sep 2016 09:56 AM PDT

சென்னை:'தகுதியற்ற மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்கிய வகையில், தமிழக அரசு, 242 கோடி ரூபாய் முறையற்ற செலவு செய்துள்ளது' என, மத்திய தணிக்கை துறை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல் பாட்டில் உள்ளது. 2013 - 14ல், மத்திய தணிக்கை அறிக்கையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு, இலவச, லேப்டாப் வழங்குவதை தவிர்த்திருக்கலாம்' என, சுட்டிக்காட்டப்பட்டது.சிறப்பு திட்ட செயலாக்கத் துறை முதன்மை செயலரும், 'சுயநிதிப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ...

தீர்மானப்படி நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 03 Sep 2016 09:58 AM PDT

சென்னை: 'தமிழக சட்டசபையில் நிறைவேற் றப்பட்ட தீர்மானத் தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத் திற்கு உத்தரவிட வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: சிறுவாணி நதியின் குறுக்கே, அட்டப்பாடி பள்ளத் தாக்கில் அணை கட்டும் திட்டத்திற்காக, கேரள அரசு
சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள, தமிழகத்தின் கருத்தை பெறாமல், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள, வல்லுனர்மதிப்பீட்டுக்குழு, ...

கறுப்பு பண வேட்டை: மூன்று மடங்கு சிக்கியது

Posted: 03 Sep 2016 10:00 AM PDT

புதுடில்லி:கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின், முதல் ஏழு மாதங்களில் நடத் தப்பட்ட வருவான வரித் துறை சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் நகை களின் மதிப்பு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒடுக்க மத்திய அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வருமான வரித்துறை தீவிர சோத னைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு டன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின், முதல் ஏழு மாதங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் பறிமுதல், மூன்று மடங்காக உயர்ந்துள் ளது.வருமான வரித்துறை புள்ளி விபரங்களின் படி, 2015ல்,ஜனவரி முதல் ...

ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா வீட்டில் சி.பி.ஐ., 'ரெய்டு'! சூடுபிடிக்கிறது ரூ.1,500 கோடி நில மோசடி விவகாரம்

Posted: 03 Sep 2016 10:26 AM PDT

சண்டிகர்:ஹரியானாவில், 1,500 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில், அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடாவின் வீடு உட்பட, 20 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ஹரியானாவில், பா.ஜ.,வை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். இம் மாநிலத்தில், 2004ல், காங்., கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக பதவி வகித்த போது, குர்கான் மாவட்டத்தின் சில கிராமங்க ளில், மாதிரி தொழில் நகரம் அமைக்க, 912 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக, மாநில அரசு அறிவிப்பாணை வெளி யிட்டது. 400 ஏக்கர் நிலம்இதை, கிராமவாசிகளிடம் ...

பேச்சுவார்த்தைக்கு வாருங்களேன்: பிரிவினைவாத அமைப்புகளுக்கு மெகபூபா அழைப்பு

Posted: 03 Sep 2016 01:08 PM PDT

ஸ்ரீநகர்: காஷ்மீர் வன்முறை சம்பவங்களுக்கு தீர்வு காண மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சர்வ கட்சியினர் அடங்கிய குழுவுடன் பிரிவினைவாத அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்து வருமாறு முதல்வர் மெகபூபா முப்தி அழைப்புவிடுத்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் புர்கான்வானி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்த அங்கு கடந்த 57 நாட்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில்உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட அனைத்துக்கட்சி பார்லி., ...

'உடல் எடையை குறையுங்கள்' ராணுவ வீரர்களுக்கு திடீர் உத்தரவு

Posted: 03 Sep 2016 01:10 PM PDT

புதுடில்லி: 'ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள், உடல் எடையை குறைக்க வேண்டும்' என, ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவின் தலைவர்களுக்கு, ராணுவ அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உடல் எடை அதிகரிப்பால், வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் போர் பயிற்சியில்
ஈடுபட முடிவதில்லை. உடற்பயிற்சி இல்லாததால், பலவித நோய்கள் ஏற்பட்டு, இறுதியில் அவர்களின் ஆயுள் காலமும் குறைகிறது.
சராசரியை விட அதிக உடல் எடை உடைய வீரர்கள் மற்றும் அதிகாரிகள், தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டின் மூலம், ...

ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும்: ரகுராம் ராஜன்

Posted: 03 Sep 2016 02:48 PM PDT

புது டில்லி:இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கியமான முடிவுகளை சுதந்திரமாக எடுக்கும் வகையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்று அதன் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தினார்.
அதேபோல், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பொறுப்பு வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் இன்றுடன் (செப். 4) நிறைவுக்கு வருகிறது.
இந்நிலையில் டில்லியில் அமைந்துள்ள புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், மாணவர்களிடையே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™