Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'விசாரிக்காதீங்க!' கர்நாடகாவின் புதிய மனுவை எதிர்த்து தமிழகம் மேல் முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் காவிரி நதி நீர் வழக்கு விசாரணை தமிழகத்திற்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கலாம் என எதிர்பார்ப்பு

Posted: 26 Sep 2016 10:03 AM PDT

'காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை திருத்தக் கோரி, கர்நாடகா தாக்கல் செய்துள்ள மனுவை, விசாரிக்கக் கூடாது' என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

காவிரி நதி நீர் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழகத்திற்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி, தமிழகம் தொடர்ந்த வழக்கில், இம்மாதம், 5, 12 மற்றும் 20ம் தேதிகளில், சுப்ரீம் கோர்ட், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.இந்த ...

பாகிஸ்தானுக்கு அஹிம்சை வழியில் துவங்கியது... பதிலடி! சிந்து நதி ஒப்பந்தத்தில் மோடி அரசு அதிரடி முடிவு

Posted: 26 Sep 2016 10:05 AM PDT

புதுடில்லி,: யூரி ராணுவ முகாமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, அஹிம்சை வழியில் தகுந்த பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது.

65 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட, சிந்து நதி ஒப்பந்தத்தில் உள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்த, பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாக்., பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, 'பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்' என, பல்வேறு எதிர்க்கட்சிகள், அமைப்புகள் ...

மது கட்டுப்பாடு: கேரள சுற்றுலா வீழ்ச்சி

Posted: 26 Sep 2016 10:07 AM PDT

கொச்சி: கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மது கட்டுப்பாட்டால், அம்மாநில சுற்றுலா துறைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். மாநிலத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளால், அதிக வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில், உம்மன் சாண்டி தலைமையிலான, முந்தைய, காங்., ஆட்சியின் போது, மாநிலத்தில், மது விற்பனையை குறைப்பதற்காக, சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டு வந்த, 'பார்'கள் மூடப்பட்டன. இதனால், உள்ளூர் மற்றும் ...

ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையத்தை சாடும் ஸ்டாலின்

Posted: 26 Sep 2016 10:15 AM PDT

சென்னை:''உள்ளாட்சி தேர்தலை, நியாயமாக; முறையாக நடத்த, அரசுக்கு விருப்பம் இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தப்படும் தேதியை அறிவித்திருக்கும் மாநில தேர்தல் ஆணையம், அறிவிப்பு வெளியிட்ட மறுநாளில் இருந்தே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கூறியுள்ளது.இதிலிருந்து, இந்த தேர்தலை, நியாயமாக; முறையாக நடத்த, அரசுக்கு விருப்பம் இல்லை. ஆளுங்கட்சியினுடைய தலையீடு;அராஜகம், அட்டூழியமெல்லாம், இந்த தேர்தலில் நடப்பதற்கு, ...

'விவசாய உற்பத்திக்கு ஆராய்ச்சி' : பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 26 Sep 2016 10:18 AM PDT

புதுடில்லி: ''நிலம் மற்றும் நீரின் அளவு குறைந்து வரும் நிலையில், விவசாயத்தில் கூடுதல் உற்பத்தியை ஏற்படுத்தும் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
புதிய ஆராய்ச்சி : மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின்,
75வது ஆண்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது.
மழையின் அளவும் குறைந்து வருகிறது
இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:ஆராய்ச்சி, அனைவருக்கும் பயன்படுவதாக, அனைத்துதரப்பினரையும் ...

மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு?: அ.தி.மு.க.,வில் கடும் விவாதம்

Posted: 26 Sep 2016 10:22 AM PDT

மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு என்ற விவாதம், அ.தி.மு.க.,வில் களை கட்டிஉள்ளது.

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் முறை, இந்த தேர்தலில் அமல்படுத்தப்படுகிறது.
கட்சி வெளியிடும்
அ.தி.மு.க., சார்பில், மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவு வெளியான பின்பே, மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர் பட்டியலை கட்சி வெளியிடும்.கடந்த சட்டசபை ...

போட்டியிட தயக்கம் தே.மு.தி.க., அதிர்ச்சி

Posted: 26 Sep 2016 10:27 AM PDT

தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கு, 21ம் தேதி முதல், அக்கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 30ம் தேதிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும் என, தே.மு.தி.க., தலைமை அறிவித்தது.
'பம்ம' துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த, 20ம் தேதி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தெற்கு மாவட்ட செயலர் ...

'பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்!' ஐ.நா., சபையில் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

Posted: 26 Sep 2016 10:44 AM PDT

நியூயார்க்,:பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டோர், சுதந்திரமாக உலவக்கூடிய நாடுகள், நம்மிடையே உள்ளன; பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகளை, தனிமைப்படுத்த வேண்டும்,'' என, ஐ.நா., பொதுச் சபையில், பாகிஸ்தானுக்கு, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில், நேற்று, சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:
மனித உரிமை மீறல்
மனித உரிமை மீறப்படுவதாக, பிறரை குற்றஞ்சாட்டுவோர், தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். தங்கள் நாட்டில், எத்தகைய மனித உரிமை மீறல்களில் ...

ஜெ., கேட்டுக் கொண்டால் ராஜினாமா சசிகலா புஷ்பா

Posted: 26 Sep 2016 10:50 AM PDT

துாத்துக்குடி,:''முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்வேன்,'' என, சசிகலா புஷ்பா எம்.பி., தெரிவித்தார்.

அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று, துாத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் நடந்தது. அதில், கலந்து கொண்ட பின், சசிகலா புஷ்பா எம்.பி., அளித்த பேட்டி:
துரோகம்
சென்னை மேயர் பதவியை, தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்து, அவர்களை உயர்த்தியிருக்கலாம். நாடார் சமுதாயத்திடம் இருந்த, துாத்துக்குடி மேயர் பதவியை, தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்து, நாடார் ...

காவிரி பிரச்னைக்கு தீர்வு இஸ்ரேல் புது யோசனை

Posted: 26 Sep 2016 10:58 AM PDT

பெங்களூரு:காவிரி நதிநீரை பங்கிடுவது குறித்து, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே, நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்னைக்கு மிகச் சுலபமான யோசனையை அளித்துள்ளது, இஸ்ரேல்.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், சமீபத்தில் ஒரு கண்காட்சி நடந்தது; இதில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் துாதர் உட்பட, பல நிபுணர்கள் பங்கேற்றனர்; அப்போது அவர்கள் கூறியதாவது:மிகவும் வறண்ட பூமியாக இருந்த இஸ்ரேல், தற்போது பசுமையாக காட்சி அளிக்கிறது;தண்ணீருக்கு தட்டுப்பாடும் இல்லை. இதற்கு காரணம், சொட்டுநீர் பாசன ...

இந்துக்களை புகழும் டொனால்டு டிரம்ப்

Posted: 26 Sep 2016 11:28 AM PDT

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ''அமெரிக்க கலாசார வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது,'' என, புகழ்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., ௮ல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும், 70, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரியும், 68, போட்டியிடுகின்றனர். வெற்றியை தீர்மானிப்பதில், அமெரிக்க குடியுரிமையும், ஓட்டுரிமையும் பெற்ற இந்தியர்களின் ஓட்டுகள் முக்கிய பங்காற்றும் என்பதால், இருவரும், அங்கு வசிக்கும் இந்தியர்களை ...

சமண துறவி சிதையை எரிக்க ரூ.11 கோடி ஏலம்

Posted: 26 Sep 2016 12:41 PM PDT

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் காலமான, சமணத் துறவியின் சிதையை தீயிட்டு எரிப்பதற்கான வாய்ப்பு, 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
புகழ் பெற்ற சமணத் துறவிகளின் சிதையை எரிப்பதற்கும், இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை பெறுவதற்கும், ஏலம் விடப்படுவது வழக்கம். மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், சமீபத்தில், 97, வயதான சமணத் துறவி, பிரேம்சுர்ஜி சுவாஜி, காலமானார். அவரது சிதையை எரிப்பதற்கான வாய்ப்பை வழங்க, ஏலம் விடப்பட்டது. மூன்று மணி நேரம் நடந்த இந்த ஏலத்தின் இறுதியில், 11 கோடி ரூபாய்க்கு, கூட்டாக ஏலம் கேட்ட ஐந்து பேருக்கு, ...

ஐ.நா.,வில் சுஷ்மா பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Posted: 26 Sep 2016 02:15 PM PDT

புதுடில்லி: ஐ.நா. பொதுச்சபையில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமசை்சர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், மனித உரிமை மீறப்படுவதாக, பிறரை குற்றஞ்சாட்டுவோர், தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். பாகிஸ்தானில் உள்ள பலுாச் இன மக்கள் மீது, மிக மோசமான முறையில், கொடூரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.காஷ்மீரை அபகரிக்க வேண்டும் என்ற கனவை, பாக்., கைவிட வேண்டும். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™