Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சுற்றும் உலகு

Posted: 26 Sep 2016 09:41 AM PDT

அந்தப் பள்ளியில் ஆண்டாய்வு நடந்துகொண்டிருந்தது. மாவட்டக் கல்வி அதிகாரி அவர்கள் வகுப்புகளை மேற்பார்வை செய்துகொண்டு இருந்தார். பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். மாவட்டக் கல்வி அதிகாரி, 10ம் வகுப்பில் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று, "வணக்கம் ஐயா!" என்றனர். தமிழாசிரியரும், " வணக்கம்! வாருங்கள் ஐயா!" என்று வரவேற்றார். மாவட்டக் கல்வி அதிகாரி அனைவருக்கும் வணக்கம் சொன்னார். " என்ன பாடம் நடத்துகிறீர்கள்?" என்று தமிழாசிரியரை அதிகாரி கேட்டார். " ...

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே

Posted: 26 Sep 2016 09:03 AM PDT

— உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா…. (உள்ளம் உருகுதய்யா) பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா) பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா (உள்ளம் உருகுதய்யா) ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா (உள்ளம் உருகுதய்யா) கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா பாவியென்று ...

படித்ததில் இடித்தது

Posted: 26 Sep 2016 08:10 AM PDT

. "ஆமை புகுந்த  வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் . ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ' ஆமை ஒரு வீட்டிற்குள் ...

நகைச்சுவை

Posted: 26 Sep 2016 07:46 AM PDT

நகைச்சுவை நன்றி முகநூல் ரமணியன்

ஹைக்கூ-JKB

Posted: 26 Sep 2016 07:35 AM PDT

அள்ளி கொடுக்கும்  அட்சய பாத்திரம்  ஏழையின் வறுமை  ---------------------------------------------------  பால் நிலவு  இருந்தும் குடிக்கமுடியவில்லை  தவிப்பில் கைக்குழந்தை  ----------------------------------------------------  கை நிறைய பணம் இருந்தும்  ஒரு ரூபாய் போடும்  மனதின் பிச்சைக்காரன்  ----------------------------------------------------  அன்னம் பாடும் வாய்க்கு  அண்ணம் போட  வழியில்லை  ----------------------------------------------------  தெருவெல்லாம் தேவதை  தேடுகிறாள்  காதல் ...

என் காதலும் தலைசாயும்

Posted: 26 Sep 2016 07:25 AM PDT

என் காதலும் தலைசாயும்  என் உயிரும் உன்னிடத்தில்  உன் உயிரும் என்னிடத்தில்  என் காதலும் கலவரத்தில்  மறையுதே ஓரிடத்தில்  என் நெஞ்சில் பனி துளியாய்  உன் காதலும் படருதே...!  உன் பெயர் சொல்லியே  என் காலமும் நகருதே...!  மனதை கலைத்து  என் நெஞ்சில்  தேன்துளி தெளித்தவளே...!  உயிரை துளைத்து  என் காதல் விதையில்  விஷத்துளி தெளித்தவளே...!  உன் பேச்சு பட்டு  நானும் மறைகிறேன்...!  உன் மூச்சு பட்டு  நாளும் உறைகிறேன்...!  என்னோடு நீ இருந்தால்  என் காதலும் அலைபாயும்...!  என்னோடு ...

அரசியல்............

Posted: 26 Sep 2016 07:04 AM PDT

சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற.... அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......

மெகா இட்லி!

Posted: 26 Sep 2016 06:33 AM PDT

- இட்லி எந்த அளவில் இருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், தோசை அளவிலான இட்லியை பார்த்து இருக்கிறீர்களா? பாலக்காட்டிலிருந்து கோவை செல்லும் சாலையில் உள்ளது ராமசேரி எனும் ஊர்; இங்கு பாக்யலட்சுமி என்ற பெண், இட்லி கடை வைத்துள்ளார். இவர், ஒரு பெரிய பானையில் தண்ணீர் ஊற்றி, அதன் வாயை துணியால் கட்டி. தண்ணீர் கொதிக்கும் போது, இட்லி மாவை, துணியில், தோசை அளவிற்கு ஊற்றுகிறார். சிறிது நேரத்தில், மெகா சைஸ் இட்லி தயார். இந்த இட்லிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். – ———————————————— —ஜோல்னா ...

பல்வேறு மருத்துவக் குணம் கொண்டது சுக்கு;

Posted: 26 Sep 2016 05:53 AM PDT

அஜீரணத்தால், தலைவலி ஏற்பட்டால், சுக்கு – 10 கிராம், மிளகு – 5 கிராம் மற்றும் வெள்ளை பூண்டு – 5 கிராம் எடுத்து, பசும்பால் விட்டு, மை போல் அரைத்து, நெற்றியின் இரு பக்கங்களிலும் போட்டுக் கொள்ள, தலைவலி உடனே நீங்கும். – ஒரு துண்டு சுக்கு, ஒரு குண்டு மணி அளவு அதிமதுரம் இரண்டையும் சேர்த்து வாயில் அடக்கி, ஊறலை மட்டும் விழுங்கினால், குரல் கம்மல் நீங்கும். – சுக்கு துண்டை, தோல் நீக்காமல் வாயில் போட்டு மென்று வர, பல் வலி குறையும். – தலைவலி மற்றும் தலைச்சுற்றலை போக்க, சுக்கு கஷாயம் அருந்தலாம். – சுக்கு, ...

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்: ஸ்காட்சாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

Posted: 26 Sep 2016 05:20 AM PDT

- விண்ணில் சீறிப் பாயும் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்| படம்: ம.பிரபு. ------------------------------------- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்காட்சாட்டை தொடர்ந்து மற்ற 7 செயற்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி35 ராக்கெட் ஏவப்பட்டது. ஸ்காட்சாட் ...

ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு

Posted: 25 Sep 2016 11:02 PM PDT

அரியலூர் அருகே லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது. ஜெயங்கொண்டம் - உடையார்பாளையம் சாலையில் கட்சிப்பெருமாள் கிராமத்தில் லாரி மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மினி லாரியில் வந்துகொண்டிருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 25 Sep 2016 10:27 PM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

மாக்சிம் கார்க்கி - தாய்

Posted: 25 Sep 2016 08:28 PM PDT

மாக்சிம் கார்க்கி - தாய் நூல் அறிமுகம் - http://www.eegarai.net/t128795-டொபிக் நூல் தரவிறக்கம் - https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9d/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf

இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் ‘குரங்கு பொம்மை’

Posted: 25 Sep 2016 07:13 PM PDT

- விதார்த் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தை இயக்குபவர் நித்திலன் என்ற அறிமுக இயக்குநர். "மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக் கொண்டே இருக்கும். இந்தக் கருத்தை வைத்து 'குரங்கு பொம்மை' என்ற இப்படத்தை இயக்கி இருக்கிறேன். இதில் விதார்த்துக்கு தந்தையாக இயக்குநர் பாரதிராஜா நடிக்கிறார். இதில் தந்தை, மகனுக்கு இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்," என்கிறார் நித்திலன். – —————————————- தமிழ்முரசு

ஏணிப்படியில் மாந்தர்கள்

Posted: 25 Sep 2016 07:10 PM PDT

சிவன் சாரின் "ஏணிப்படியில் மாந்தர்கள்" புத்தகத்தின்
மின்னூல் கிடைக்குமா நண்பர்களே !

அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தின் இசைவட்டு வெளியீடு

Posted: 25 Sep 2016 07:01 PM PDT

- அருள்மிகு வேல்மருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தின் இரண்டாவது மகா குடமுழுக்கை முன்னிட்டு நிதி திரட்டும் வகையில் 'சிவஞானமுனீஸ்­ரர்' என்னும் தலைப்பில் பக்திப்பாடல்களைக் கொண்ட இசைவட்டு ஒன்ற வெளியிடப்பட்டது. – பிஜிபி கல்யாண மண்டபத்தில் 18.9.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு திரு ஜோதி மாணிக்கத்தின் தலைமையில் இந்த இசைவட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது. – முன்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மாணிக்கவிநாயகம் ஆகியோருடன் வேல்முருகன் திருவனந்தபுரம் சகோதரிகள்,கிருஷ்ணராஜ் ஆகியோர் பாடிய ...

சிந்தனையாளர் முத்துக்கள்

Posted: 25 Sep 2016 05:34 PM PDT


-
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.

————————————–
பில் பிரைசன்
நுாலாசிரியர்

நன்றி- தினமலர்

தினந்தோறும் அமாவாசை

Posted: 25 Sep 2016 05:32 PM PDT

செப்., 30 மகாளய அமாவாசை ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைகளை விட, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையே முக்கியமானது. நம் முன்னோர் ஒட்டுமொத்தமாக பூமிக்கு வரும் நாள் இது. இந்நாளில், திருவாரூர் அருகிலுள்ள, செதலபதி முக்தீஸ்வரர் கோவிலில், தர்ப்பணம் செய்வது சிறப்பானது. மேலும், இங்கே, தினமும் அமாவாசை தர்ப்பணம் நடைபெறும். ராமபிரானின் வனவாச காலத்தில், அவரது தந்தை தசரதர் இறந்து விட்டார். அவரால், தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியவில்லை. அதனால், வனவாசத்திற்கு பின், சிரார்த்தம் செய்வதற்காக, ...

கொஞ்சிப் பேசிட வேணாம்

Posted: 25 Sep 2016 05:29 PM PDT

— இசை : நிவாஸ் பிரசன்னா பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி படம் : சேதுபதி – —————————– – கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தால் மழச் சாரல் வீசுதடி – நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேக்குதடி அட தொலைவில இருந்தா தானே பெரும் காதல் கூடுதடி – தூரமே தூரமாய் போகும் நேரம் கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பார்த்தால் மழச் சாரல் வீசுதடா – நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேக்குதடா அட தொலைவில இருந்தா ...

நல்ல தலைவன் யார்?

Posted: 25 Sep 2016 05:28 PM PDT

தன் நாட்டிற்கு வருகை புரிந்த மகான் ஒருவரிடம் தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ? என மன்னன் கேட்டான். மகான் உடனே அதற்குப் பதில் சொல்லாமல் களிமண், பஞ்சு. சர்க்கரை மூன்றையும் கொண்டு வரச் சொல்லி தனித் தனியாக ஒவ்வொன்றையும் தண்ணீர் உள்ள கண்ணாடிக் குவளைகளில் போட்டார். களிமண்ணோடு இருந்த தண்ணீர் கலங்கிச் சேறானது. பஞ்சு முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது. ஆனால் தண்ணீரின் தன்மையில் எந்தப் பாதிப்பும் இல்லை. சர்க்கரை தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டது. தண்ணீரையும் ...

நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!

Posted: 25 Sep 2016 05:23 PM PDT

நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர் சிலர். நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன. இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும் எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக் கொள்கிறோம்; இது அவசியமில்லை. ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர் விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம் சரணடைந்து விட்டோம் என்றே பொருள். இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது. ஒவ்வொருவரையும், ...

அக்டோபர் 17 மற்றும் 19-ல் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்:

Posted: 25 Sep 2016 05:22 PM PDT

சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை இன்று மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார். தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைகளில் தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் நகராட்சி ...

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, சீனா

Posted: 25 Sep 2016 05:14 PM PDT

பீஜிங் - 30 கால்பந்து மைதான அளவிலானதும், உலகின் மிகப்பெரியதுமான ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. ரேடியோ தொலைநோக்கி விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் 1994–ம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை வந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™