Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சென்னையில் எனக்கு தோழிகள் அதிகம்: காளிதாஸ்

Posted:

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம், மீன் குழம்பும் மண் பானையும். சிவாஜி குடும்ப தயாரிப்பில் விரைவில் வெளிவர உள்ள இந்த படம் பற்றியும், தன்னை பற்றியும் காளிதாஸ் பேசுகிறார்.


மலையாள படங்களில் அறிமுகமாகாமல், தமிழில் அறிமுகமாவது ஏன்?
இரண்டு மாத குழந்தையாக இருக்கும்போதே, சென்னை ...

சமந்தா திடீர் விரக்தி!

Posted:

சமந்தாவுக்கு, சினிமா மீது திடீரென விரக்தி வந்து விட்டது போலிருக்கிறது. புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்காக யார் வந்தாலும், வந்த வேகத்தில், அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார். இத்தனைக்கும், இந்தாண்டில் அவர் நடித்த, தெறி, ஜனதா கரேஜ் போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. ஆனாலும், புதிய படங்களில் நடிக்க தயக்கம் காட்டுகிறார் ...

ஆப்ரிக்காவில் விஜய் சேதுபதி

Posted:

முன்பெல்லாம் இயக்குனர் இராம.நாராயணன் இயக்கத்தில், மாதத்துக்கு ஒரு படம் ரிலீசாகும். அந்த அளவுக்கு படுவேகமாக அடுத்தடுத்த படங்களை இயக்கி முடிப்பார் அவர். இப்போது, அதே வேகத்தை விஜய்சேதுபதியிடம் காண முடிகிறது. இவர் நடித்த படங்கள், மாதத்துக்கு ஒன்றாக, வரிசை கட்டி ரிலீசாகின்றன. தர்மதுரையை தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, ரெக்க, மெல்லிசை, ...

வில்லியாக சுனைனா?

Posted:

போதிய வாய்ப்பு கிடைக்காமல், இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த சுனைனாவுக்கு, தற்போது ஜீவாவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கவலை வேண்டாம் என்ற படத்தில் நடிக்கிறார். ஆனாலும், காஜல் அகர்வாலும் இந்த படத்தில் இருப்பதால், சுனைனாவுக்கு இதிலும் இரண்டாவது ஹீரோயின் ரோல் தான் என்கிறது கோலிவுட். விசாரித்தால், ஜீவாவை ...

மர்லின் மன்றோவாக சிவகார்த்திகேயன்!

Posted:

ரெமோ படம் வெளியாகும் வரை, அந்த படத்தை பற்றி, பரபரப்பாக ஏதாவது ஒரு செய்தி கசிந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த படத்தில், சிவகார்த்திகேயன், நர்ஸ் போல், வேடமிட்டு நடிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இப்போது, மேலும் ஒரு செய்தி கசிந்துள்ளது. ஹாலிவுட் நடிகை, மறைந்த மர்லின் மன்றோவின் ஒரு புகைப்படம், உலகம் முழுவதும் பிரபலம். அவரது உடை, ...

களை கட்டிய குத்தாட்டம்

Posted:

சேதுபதி படத்தின் வெற்றிக்கு பின், சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன் மீது, கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 'குடும்ப பாங்கான இல்லத்தரசி வேடங்களில் இனி ரம்யா, கொடி கட்டி பறப்பார்' என பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது இவரது கைவசம் ஒரு மலையாள படமும், ஒரு தமிழ் படமும் மட்டுமே உள்ளன. 30 வயதை ...

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்

Posted:


சிங்கம் படத்தின் 3 ஆம் பாகமான எஸ்-3 படத்தைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான்! இந்தப் படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என செய்திகள் வந்தன. இதையடுத்து டுவீட்டரில் படத்தின் தலைப்பு வெளியானது. படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என வைக்கப்பட்டுள்ளது. ...

தமிழ் டச்சுக்காக சென்னையில் படமாகும் தெலுங்குப்படம்

Posted:

மௌனகுரு என்ற படத்தை அகிரா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த வாரம் வெளியான அகிரா எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பாலிவுட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னும் பெயரிடப்படாத ...

சில நாட்களில்... 2.0 படப்பிடிப்பில் ரஜினிகாந்த்

Posted:

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'கபாலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து பல கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே '2.0' படப்பிடிப்பில் கலந்து கொள்வதை ரஜினிகாந்த் நிறுத்தியிருந்தார். அதன் பின் அவர் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என வதந்தி பரவியது.

ரஜினி அங்கு ...

ராதிகா ஆப்தேவை அழைத்த நடிகர் யார் ?

Posted:

'கபாலி' படம் வருவதற்கு முன்னால் வரை ராதிகா ஆப்தே யார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஹிந்தித் திரையுலகத்தில் அவர் மிகவும் பாப்புலர் ஆனவர், தைரியசாலி எனப் பெயரெடுத்தவர். எதைப் பற்றியும் ஒளிவு, மறைவில்லாமல் வெளிப்படையாக தனது கருத்துக்களைச் சொல்பவர் என ஊடகங்கள் அவரைப் பற்றிப் பாராட்டும். ...

லண்டன் - அயர்லாந்தில் 119 தியேட்டர்களில் ரிலீசாகும் 'ஒப்பம்'..!

Posted:

மோகன்லாலுக்கு கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கனல்' படத்தை அடுத்து, சுமார் ஒருவருட இடைவெளி விட்டு வெளியானாலும் ஒர்த்தான படம் தான் என்பதை சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'ஒப்பம்' நிரூபித்துள்ளது. குறிப்பாக உள்ளூர் மார்க்கெட்டில் 'ஒப்பம்' பிசினஸ் களைகட்டி வருகிறது.. இந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 கோடி ரூபாய் ...

காளிதாஸின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த நிவின்பாலி..!

Posted:

தமிழில் தனது மகன் காளிதாஸ் நடித்துள்ள படங்கள் ரிலீசாகும்போது ரிலீஸாகட்டும், அதற்காக அவரது மலையாள திரையுலக பிரவேசத்தை ஏன் நிறுத்திவைக்கவேண்டும் என நினைத்த நடிகர் ஜெயராம், அங்கே தனது மகனின் படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பையும் துவங்கி வைத்துவிட்டார். படத்தை இயக்குவது நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' ...

துல்கரின் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

நிவின்பாலி கதாநாயகனாக 'புதிய தீரங்கள்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த நடிகர் சித்தார்த் சிவா. பின்னர் இவர் இயக்குனராக மாறி, 'ஏய்ன்', '101 சோத்யங்கள்' என இரண்டு தேசிய விருது படங்களை எடுத்தார். அதையடுத்து தற்போது நிவின்பாலி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.. இந்தப்படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் ...

தெலுங்கு பிரேமம் பாடல்கள் வெளியீட்டு விழா

Posted:

மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான பிரேமம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சண்டூ மொன்டேடி இயக்கத்தில் நாகசைதன்யா நாயகனாக நடித்துள்ள பிரேமம் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ஷ்ருதிஹாசன், மடோனா செபஸ்டியன் என மூவர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேமம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(செப்டம்பர் 20) மாலை ...

ஜாகுவார் படத்தின் புரமோஷனில் ராம் சரண்

Posted:

முன்னாள் இந்திய பிரதமர் தேவகௌடாவின் பேரனும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமார் கன்னட திரை உலகில் நாயகனாக அறிமுகமாகின்றார். நிகில் நடிக்கும் ஜாகுவார் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 6ல் திரைக்கு வரவுள்ளது. ராம் சரணும் நிகிலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஜாகுவார் படத்தின் டீசரை ...

பவன் கல்யாணின் “காட்டமராய்டு” படப்பிடிப்புகள் ஆரம்பம்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சர்தார் கபார் சிங் படத்திற்கு பின்னர் இரன்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் எஸ் பாஸ், காட்டமராய்டு எனும் இரு படங்களில் இயக்குனர் டாலி இயக்கும் காட்டமராய்டு படத்தின் படப்பிடிப்புகள் முதலில் துவங்கியுள்ளன. செகெந்திராபாத்தில் காட்டமராய்டு படத்தின் ...

தெலுங்கில் அறிமுகமாகும் ஹரிஷ் கல்யான்

Posted:

வில் அம்பு படத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் இப்போது தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இயக்குநர் பட்டாபி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பரபரப்பான காதல் கதையான இதில் ஒரு நாயகனாக சாய் ரோனக்கும், மற்றொரு நாயகனாக ஹரிஷூம், நாயகியாக பிரபல மாடல் பூஜா தோஷியும் ...

'இருமுகன்' வசூல் 100 கோடி?

Posted:

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'இருமுகன்' படத்தின் வசூல் 100 கோடியைத் தொடப் போவதாக நேற்றிலிருந்து ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தப்படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியானது. படம் பற்றி பல எதிர் விமர்சனங்களும் வந்தாலும், போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாத காரணத்தாலும், கமர்ஷியலாக படம் ரசிகர்களைக் கவர்ந்ததாலும் ...

'பிரேமம்' தெலுங்கு டிரைலர் ரிலீஸ், ஸ்ருதிஹாசன் சிக்குவாரா ?

Posted:

'பிரேமம்' படத்தின் தெலுங்கு டீசர் வெளியான போது ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை, ஒரிஜனல் 'பிரேமம்' பட நாயகி சாய்பல்லவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பல மீம்ஸ்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். டீசர் வெளியான சில நாட்களுக்கு அப்படிப்பட்ட மீம்ஸ்கள்தான் கேரளா முதல் ஆந்திரா வரை பரபரப்பாகப் பேசப்பட்டன. ஒரு கட்டத்தில் மலையாளப் படத்துடன் ...

மாயமான மதன் வழக்கு : கமிஷனருக்கு கோர்ட் கண்டிப்பு

Posted:

தமிழ் சினிமாவில் பிரபல விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். இவர் சில மாதங்களுக்கு முன்னர் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதி அடைகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதுஒருபுறம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™