Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சுபா எழுதிய நிலா மயக்கம் தெளிவான மின்னூல்

Posted: 20 Sep 2016 10:17 AM PDT

சுபா எழுதிய நிலா மயக்கம் தெளிவான மின்னூல்  http://www.mediafire.com/download/xxc5tdgam5bp6a1/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE.பிடிஎ ஈகரை உறவுகளுக்காக  நன்றி  ஸ்ரீனிவாசன்

விட்டுவிடுங்கள்

Posted: 20 Sep 2016 10:03 AM PDT

நொடிப்பொழுதும் சுமந்தே திரிந்து நொந்து போன பெண்களுக்கு ஒலிம்பிக்கில் எடை பெரிதல்ல... துன்பங்களைச் சிறகுகளாக்கி பறக்கத் துடிக்கின்றவர்களுக்கு சிறகுப்பந்து எட்டாக்கனியல்ல.. விட்டுவிடுங்கள் அவர்களை எல்லோரும் சாதனையாளர்களாவார்கள்.. பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த சாக்‌ஷி ,சிந்துவை பாராட்டி மகிழ்கின்றோம்.. உடலை மறந்து திறமையைப்பாராட்டிக்கொண்டே இருக்கும் ஆண்களை வணங்குகின்றோம்..

சிறகென

Posted: 20 Sep 2016 09:59 AM PDT

பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென மிதந்திருக்கலாம்..


கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி

Posted: 20 Sep 2016 09:57 AM PDT

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி சொல்லில் அடங்காது ஓங்கி நிற்கின்ற சர்ரியலிசக் கவியே "கடதபற"வல்லினமே "சூரியனுக்கு பின்பக்கம் " காணச்சென்றாயோ "அன்று வேறு கிழமை" என்றாய் இன்று கிழமைகளற்று மறைந்தாய். "கடற்கரையில் சிலமரங்களை" "பென்சில் படங்களாய்"த் தந்தாய்-அவை "ஞானக்கூத்தன் கவிதைகளாய் "மலர்ந்தன . ஒட்டக்கூத்தன் வழி வந்தவனோ.. ரெங்கநாதன் ஞானக்கூத்தனானாய். மரபில் தாலாட்டி வளர்ந்தவனே மண்ணில் புதுக்கவிதையாய்த் தழைந்தவனே மரபுக்கும் புதுக்கவிதைக்கும் ...

”க” இலக்கிய சந்திப்பு

Posted: 20 Sep 2016 09:49 AM PDT

க- ஓரெழுத்து அகராதி            உயிரின் முதலும்           மெய்யின் முதலும்           புணர்ந்து பிறந்த            காதலின் வடிவம்           உயிர் மெய்யின் உருவம்.      க- இதயத்திலிருந்து பிறக்கும்         வல்லினத்தின் முதல்         ஓசையின் வடிவம்      க-கல் என்பதன் முதன்மை       "கல்"மலையின் சிறுதுளி       "கல்"மனித வளர்ச்சியின் வேர்.     க-தமிழனின் உயர்வை      உலகுக்கு உணர்த்திய    கலாமின் முதலெழுத்து க-தமிழனின் வண்ணம் கூறும்   உழைப்பின் நிறம் கூறும்  தமிழ்ச்சொல்லின் ...

மாதவம் செய்தவர்கள்

Posted: 20 Sep 2016 09:39 AM PDT

படிக்கும் பருவத்தில் பள்ளியில் பதற்றமாய் இருக்கும் வழியின்றி அருவருப்பின் உச்சத்தில் சென்று மீள்வோம்.. பணியிடத்தில் அதற்கென்று இடமே பார்த்திராத பொழுது மறைவிடங்கள் நாடுவோம்.. பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது பரிதவித்து அடக்கியிருப்போம்... அதற்காக உள்ளே எதுவும் இறக்காது ஆற்றுப்படுத்துவோம்...வயிறை... நகரங்கள் கிராமங்கள் எல்லாமே மாறுதலின்றி ஒரே நிலைதான்....என்ன கிராமங்கள் மறைவிடம் கொடுக்கும்... காலங்கள் மாறவில்லை முப்பது வருடங்களாகியும் என் ...

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Posted: 20 Sep 2016 08:36 AM PDT

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் புதுடில்லி: டில்லி நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் 30 முறை குத்தி கொல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. டில்லியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கருணா (21). இன்று காலை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புராரி வடக்கு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்பவன், கருணாவை கத்தியால் சராமரியாக தாக்க துவங்கினான். கருணா உயிரிழக்கும் வரை சுரேந்தர் கடுமையாக கத்தியால் ...

கருத்துக் படங்கள் --ரசிக்க

Posted: 20 Sep 2016 07:26 AM PDT

கருத்துக் படங்கள் --ரசிக்க









நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 20 Sep 2016 07:14 AM PDT

தரவிறக்கம் செய்ய: Dropbox https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0 Gdrive https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0 பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன் பதிவிறக்கம் இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!

Posted: 20 Sep 2016 07:04 AM PDT

– வாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு… செல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்! – – இன்பா வினோத் – ————————————— – @kanagu_v ஒரு காலத்துல ஸ்கூல்ல 'ஆஃப் டே' கட்டடிச்சுட்டு படிச்சாலும் வேலை கிடைச்சுது. இப்பல்லாம் படிச்சு 'கட் ஆஃப்' எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை. – ——————————————- @aruntwitz லவ் பண்றவனோட சேர்ந்து, குழந்தைக்குப் பேர் வைச்சா அது லவ் மேரேஜ். லவ் பண்றவனோட பேரை குழந்தைக்கு வைச்சா, அது அரேஞ்சுடு மேரேஜ். – ——————————————– – மீளவே முடியாது என்று நினைத்திருந்த ...

தமிழகம் அடையும் பயன் என்ன?

Posted: 20 Sep 2016 06:51 AM PDT

தமிழகம் அடையும் பயன் என்ன? தமிழர் உரிமைகளை பாதுகாக்க நம்முடைய கட்சிகள் கவனமளிக்க வேண்டும் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி சென்னை மாகாணத்திலும், அவர்களின் கண்காணிப்பின் கீழ் மைசூரில் மகாராஜா ஆட்சியும் நடந்தபோது, 1860-களில் காவிரி நீர் பயன்பாட்டுச் சிக்கல் இரு ஆட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டது. அவரவர் உரிமையை விட்டுக்கொடுக்காமல், 1892-ல் 'மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம் - 1892' போடப்பட்டது. அதன் பிறகு, 1914 தொடங்கி பத்தாண்டுகள் இருதரப்பும் பேச்சு நடத்தி உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்தான் ...

காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.

Posted: 20 Sep 2016 06:27 AM PDT

காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி... இனியாவது மவுனம் கலைக்குமா மோடி அரசு? சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து இன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து கள்ள மவுனம் சாதித்து வரும் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை ...

பாராலிம்பிக் நிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்தும் வரலாற்று பேறுபெற்ற தங்கமகன் மாரியப்பன்

Posted: 20 Sep 2016 01:04 AM PDT

பாராலிம்பிக் நிறைவு விழாவில்  தேசிய கொடி ஏந்தும் வரலாற்று பேறுபெற்ற  தங்கமகன் மாரியப்பன் ரியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் தமிழக வீரர் மாரியப்பன். சரித்திரம்   படைத்த  இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.என்னுடைய இந்த வெற்றிக்கு  காரணம் பயிற்சியாளர் சத்யநாராயணா மற்றும் என் தாயின் அரவணைப்பு மட்டுமே என நெகிழ்கிறார் மாரியப்பனின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™