Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மத்திய அரசின் நினைவூட்டலுக்கு செவி சாய்க்காத தமிழக அரசு:கனிம அறக்கட்டளை துவங்காமல் இழுத்தடிப்பு

Posted: 20 Sep 2016 08:35 AM PDT

'கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள் நடக்கும் மாவட்டங்களில், வளர்ச்சி மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கனிம அறக்கட்டளையை துவங்க வேண்டும்' என, மத்திய அரசு பல நினைவூட்டல்களை அனுப்பியும் அவற்றை துவக்காமல், தமிழகம் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்கள் இழுத்தடிப்பு செய்து வருகின்றன.

அடிப்படை வசதிகள்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள் நடக்கின்றன. 'இந்தப் பணிகளால் பாதிக்கப்படும் மக்களுக் கான நிவாரணம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட அளவிலான கனிம அறக்கட்டளையை உருவாக்க வேண்டும்' என, மத்திய ...

பெண்ணுக்கு 30 கத்திக்குத்து வேடிக்கை பார்த்த மக்கள்

Posted: 20 Sep 2016 08:44 AM PDT

புதுடில்லி:டில்லி நகர சாலையில், பட்டப் பகலில், 21 வயது இளம்பெண்ணை, 30க்கும் மேற்பட்ட முறை, கத்தியால் குத்திக்கொன்ற நபரை, பொதுமக்கள் பிடிக்காமல் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி மாநகரின், பரபரப்புமிக்க புராரி பகுதியில் நேற்று, பள்ளி ஆசிரியை கருணா, 21, நடந்து சென்றார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுரேந்தர், 34, கருணாவை வழிமறித்து நிறுத்தினான்.
கல்லால் தாக்குதல்
அவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கருணாவை சரமாரியாக ...

பெருமை! 'ஸ்மார்ட் சிட்டி'யாகிறது 'சங்கத் தமிழ்' மதுரை: சேலம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களும் தேர்வு

Posted: 20 Sep 2016 09:09 AM PDT

மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், நகரங்களை தேர்வு செய்யும் மூன்றாவது கட்ட போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலுார் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக, 'ஸ்மார்ட் சிட்டி' திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள், வளர்ந்த நாடுகளில் உள்ள, அனைத்து வசதிகளும் உடைய, 'ஹைடெக்' நகரங்களை போல் மாற்றப்படும்; இதற்காக, பல லட்சம் கோடி ரூபாய் செலவிட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ...

சமாஜ்வாதியில் எந்த குழப்பமும் இல்லை : அடித்துச் சொல்கிறார் முதல்வர் அகிலேஷ்

Posted: 20 Sep 2016 09:40 AM PDT

லக்னோ: ''சமாஜ்வாதி கட்சி, ஒரு குடும்பம். அதில் எந்த குழப்பமும் இல்லை; கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு விட்டன,'' என, அக்கட்சியைச் சேர்ந்த, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவ்பால் சிங் யாதவ், மாநில அமைச்ச ராக உள்ளார். சிவ்பாலிடம் இருந்து முக்கிய துறைகளை, அகிலேஷ் பறித்ததால், கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநில தலைவர் பதவியிலிருந்து அகிலேஷ் யாதவ், அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு ...

'ஆதார்' எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க... கெடு! 30க்குள் பதியவில்லை எனில் காஸ் மானியம் 'கட்!'

Posted: 20 Sep 2016 10:16 AM PDT

வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கை யாளர்கள், இம்மாத இறுதிக்குள், வங்கி மற்றும் காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண் அடங்கிய அட்டை நகல் தராவிட்டால், மானியம் நிறுத்தப் படும்;அட்டை நகல் கொடுத்தால் தான் மானியம் கொடுப்பது தொடரும்.

மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தின் கீழ், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள், சந்தை விலையில் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியம், அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களில், 1.67 கோடி, ...

தே.மு.தி.க., உள்ளாட்சி தேர்தல் கூட்டம் நிர்வாகிகள் காட்டம்; விஜயகாந்த் ஓட்டம்

Posted: 20 Sep 2016 10:20 AM PDT

தே.மு.தி.க., சார்பில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை, கோயம்பேட்டில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இதில், கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், ஐந்து நிமிடத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியேறி னார்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது:விஜயகாந்த் வருவதற்கு முன், மாநில நிர்வாகி கள் பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகியோர், ஆலோசனை கூட்டத்தை துவங்கி விட்டனர். தன் வீட்டில் இருந்தபடியே, 'கேமரா' மூலம் நிர்வாகிகள் பேசியதை, விஜயகாந்த் பார்த்தார். ' உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க ...

தி.மு.க., - த.மா.கா., கூட்டணி பேச்சால்: தமிழக காங்கிரசில் திடீர் குழப்பம்

Posted: 20 Sep 2016 10:25 AM PDT

தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., சேருமானால், அதில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற புது குழப்பம், தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக, திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட பின், கூட்டணியில் நீடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவர் சந்தித்து பேசினார். அதே நேரத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, த.மா.கா., தலைவர் வாசன் சந்தித்து, கூட்டணி குறித்து பேசினார்.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற்றால், உள்ளாட்சி தேர்தலுக்கான ஒதுக்கீட்டில், காங்கிரசின் பங்கு குறைய வாய்ப்புள்ளது. அதனால், கூட்டணியில் ...

தமிழகத்திற்கு 6,000 கன அடி நீர் தர வேண்டும்:கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 20 Sep 2016 10:36 AM PDT

'தமிழகத்தின் சம்பா சாகுபடியை காப்பாற்றும் வகையில், வரும், 27ம் தேதி வரை, காவிரியில், வினாடிக்கு, 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர், அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, கர்நாடகா சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், தன் வாதத்தின் போது கூறியதாவது:வினாடிக்கு, 3,000 கன அடி வீதம், இம்மாத இறுதி வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற,காவிரி கண்காணிப்பு ...

சவுதி விமானத்தில் அலாரத்தை பைலட் அழுத்தியதால் பரபரப்பு

Posted: 20 Sep 2016 10:41 AM PDT

மணிலா: சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, 'அலாரத்தை' பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் மணிலா நகருக்கு, நேற்று காலை, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. மணிலாவை விமானம் நெருங்கிய போது, மணிலா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, சவுதி விமானத்திலிருந்து, அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் அலாரத்தின் சத்தம் கேட்டது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சவுதி விமானம் ...

கட்சிக்கு வேட்டு வைத்தவர்களுக்கு மீண்டும் சீட்டா? :தலைவர் பதவியை கவிழ்த்தவர்கள் முயற்சி

Posted: 20 Sep 2016 11:12 AM PDT

அ.தி.மு.க.,விற்கு, மண்டல குழு தலைவர் பதவி கிடைக்கவிடாமல், ஓட்டுகளை மாற்றிப் போட்டு, ஐந்து ஆண்டுகள் மாநகராட்சி கவுன்சிலர்களாக, 'குப்பை' கொட்டிய கறுப்பு ஆடுகள், மீண்டும் சீட் வாங்கி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முயன்று வருகின்றன.

சென்னை மாநகராட்சி, கடந்த, 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனால், 15 மண்டலங்களில், 200 வார்டுகள் அமைந்தன. அந்த தேர்தலில் மாநகராட்சியை, அ.தி.மு.க., கைப்பற்றியது.அம்பத்துார், விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சியின், 7வது மண்டலமானது. அ.தி.மு.க., கவுன்சிலர்களின் ஓட்டு ஆதரவில், 15 மண்டலங்களில், 14ல் ...

பகுஜன் எம்.எல்.ஏ., பதவி பறிப்பு

Posted: 20 Sep 2016 12:12 PM PDT

லக்னோ: உ.பி.,யில், பகுஜன் சமாஜ் கட்சியின் அதிருப்தி தலைவர், சுவாமி பிரசாத் மவுரியாவின், எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டது.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் எதிர்க்கட்சியாக உள்ளது; இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், 'பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தேர்தலில் போட்டியிட பணம் பெற்று, 'சீட்' வழங்குகிறார்' என, அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சுவாமி பிரசாத் மவுரியா, குற்றஞ்சாட்டினார். பிற்படுத்தப்பட்ட சமூக தலைவரான அவர், பகுஜன் சமாஜ் ...

பெண்கள் கமிஷன் தலைவருக்கு எதிராக எப்.ஐ.ஆர்.,

Posted: 20 Sep 2016 01:04 PM PDT

புதுடில்லி: ஊழியர்களை நியமித்ததில், முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டி, டில்லி பெண்கள் கமிஷன் தலைவர், ஸ்வாதி மலிவாலுக்கு எதிராக, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், முதல் தகவலறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், பெண்கள் கமிஷன் அலுவலக பணியாளர்களை நியமிப்பதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவர், பர்கா சுக்லா சிங் புகார் அளித்தார். அதில், 'டில்லி பெண்கள் கமிஷன் அலுவலகத்தில், முக்கிய பதவிகளுக்கு, ஆம் ஆத்மியைச் சேர்ந்த ...

தலைவராக பதவியேற்க ராகுலுக்கு தயக்கம் இல்லை: திக்விஜய் சிங்

Posted: 20 Sep 2016 02:38 PM PDT

ஐதராபாத் : காங்., கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்பதில் ராகுலுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
காங்., கட்சியின் தலைமைப் பொறுப்பு ராகுலுக்கு வழங்கப்படலாம் என கட்சியினர் கூறிவரும் போதிலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சி வெளியிடவில்லை. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து தெரிவித்த காங்., பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவராக பதவியேற்க, ராகுலுக்கு எந்த தயக்கமும் இல்லை; ...

‛பாக்.,கை தனிமைப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்'

Posted: 20 Sep 2016 03:35 PM PDT

புதுடில்லி : பயங்கரவாதத்தை தூண்டுவிடும் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
டில்லி மத்திய அரசு அலுவலக வளாகத்துக்கு, பண்டிட் தீனதயாள் அந்யோதயா பவன் எனப் பெயர் மாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; சமரசத்துக்கும் இடமில்லை.
இந்தியாவுக்கு எதிராக செயல்பட பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, நிதியுதவி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™