Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


துப்பாக்கியுடன் கனடாவுக்குள் நுளையும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 27 Aug 2016 06:47 AM PDT

yu

yuகனடாவுக்குள் நுளையும் அமெரிக்கர்கள் தம்முடன் துப்பாக்கிகளை எடுத்துவந்தால், அவற்றை எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளிடம் முறையாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பதிவுசெய்யத்தவறும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்பதுடன், அவர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள நேரிடும் எனவும் கனேடிய எல்லைப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

துப்பாக்கிகளை பதிவு செய்பவர்களும், அவை கனடாவுக்குள் எடுத்துவரப்பட வேண்டியதன் காரணத்தினை, குறிப்பாக போட்டிகளில் கலந்துகொள்வதற்கா, பழுது பார்ப்பதற்கா அல்லது திருத்துவதற்கா போன்ற விபரங்களை அதிகாரிகளுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.yu

அவ்வாறான துப்பாக்கிகளுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், பயணத்தின் போது எடுத்துச் செல்லக்கூடிய முறையில் அவை பொதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கியை எடுத்துவருவதற்கான காரணம் சரியாக இல்லாதவிடத்து, அல்லது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதவிடத்து, அவற்றை திருப்பி எடுத்துச் செல்லுமாறான பணிப்பினை அதிகாரிகள் விடுக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளின் பாவனை தொடர்பிலான கனடாவின் சட்டதிட்டங்களை சரியாக அறிந்திராத அமெரிக்கர்கள், அதனை தமது நாட்டு நடைமுறைகளின்படி எடுத்துவருவதாகவும், இதனால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க கனேடிய எல்லைச் சாவடிகளில் கைப்பற்றப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு யூலை 31 வரையாக காலப்பகுதியில் 116 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பிலான கனேடிய சட்டதிட்டங்களை, கனடாவுக்குப் பயணிக்கும் அமெரிக்கர்களுக்கும் தெளிவுபடுத்தும் செயற்திட்டத்தினை கனேடிய எல்லைப் பாதுகாவல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

The post துப்பாக்கியுடன் கனடாவுக்குள் நுளையும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

Posted: 27 Aug 2016 06:41 AM PDT

uiy

uiyஒன்ராறியோவின் இடைநிலைப் பாடசாலைகளின் ஆசியரிகள் சங்கத்திற்கும் ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபைக்கும் இடையில் தற்காலிக இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

விடுமுறைகளின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னமும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த தற்காலிக இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் தொடர்ந்த பேச்சுக்களை அடுத்து ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபையுடன் ஒரு தற்காலிக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவின் இடைநிலைப் பாடசாலைகளின் ஆசியரிகள் கூட்டமைப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்துள்ளது.uiy

இதன் விளைவாக மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை வெள்ளிக்கிழமை மதியத்தில் இருந்து இடைநிறுத்துவதாகவும் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தங்களுக்கு உதவியாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் சங்கத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த இந்த தற்காலிக இணக்கப்பாடு தொடர்பிலான விபரங்கள் எவையும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

எனினும் இந்த விபரங்கள் எதிர்வரும் நாட்களில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

The post மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™