Tamil Star |
| கனேடிய இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்பு Posted: 20 Aug 2016 08:40 AM PDT
ஜோர்ஜியன் பே நீர் சுத்திகரிப்பு பகுதியில் அவரது சடலம் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். நோவா ஸ்கோட்ஷியாவைச் சேர்ந்த 19 வயதான ஆன்ரூ ஃபிட்ஸ்கெரால்ட் என்ற கனேடிய இராணுவ வீரர் சுமார் ஒருவார காலமாக காணமல் போனதை அடுத்து, கனேடிய இராணுவத்தினர், ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்த்துறையினர் ஆகியோர் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையிலேயே ஜோர்ஜியன் பே நீர் சுத்திகரிப்பு பகுதியில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போயிருந்த குறித்த அந்த இராணுவ வீரர், கடந்த சனிக்கிழமையே இறுதியாக காணப்பட்டதாகவும், இறுதியாக காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நீர்த்தேக்கத்தின் கரையில் அவரது உடல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு, பட்டமளிப்பினை கொண்டாவுதற்காக வெளியே சென்றிருந்த அந்த இளம் இராணுவ வீரர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதேவேளை தேடுதலின் போது இவ்வாறான ஒரு முடிவினை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும், எனினும் துண்பகரமான ஒரு விடையே தமக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள அந்த பிராந்திய காவல்த்துறை அதிகாரி, அவரது இறப்பில் சதிச்செயல்கள் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். The post கனேடிய இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மில்ரனில் தீ சம்பவம் – 12 பேர் இடம்பெயர்வு Posted: 20 Aug 2016 08:20 AM PDT
Swindale Drive பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றள்ளது. இது தொடர்பில் காவல்த்துறையினர் தெரிவிக்கையில், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்த போது ஒரு வீட்டின் கூரையின் வெளியில் தீச்சுவாலை எரிவதைக் காணமுடிந்ததாகவும், அதன் பின்னரே ஏனைய நான்கு வீடுகளுக்கும் தீ பரவிக்கொண்டதாகவும் தெரிவித்தள்ளனர். இந்த நிலையில் குறித்த அந்த வரிசையில் அமைந்திருந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும், எவருக்கும் காயம் ஏற்பட்டதாக முறைப்பாடு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் இடர்ப்பாட்டுக்கான குழு ஒன்று உதவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. The post மில்ரனில் தீ சம்பவம் – 12 பேர் இடம்பெயர்வு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனேடிய இராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மில்ரனில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ சம்பவம் காரணமாக 12பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், கனடா செஞ்சிலுவைச் சங்கத்தினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.