Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Posted: 14 Aug 2016 06:52 PM PDT

download (1)

download (1)காய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய் தான்.

அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடைய வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது.

நன்கு செரிமானம் ஆகக்கூடியது, சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது மட்டுமல்லாமல், இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள், வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது, அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது.

மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் 'பி'ஆகியவை அமைந்துள்ளன, விட்டமின் 'சி'யும் சிறிதளவு உண்டு.

சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளின் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும்.

வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு.

இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

The post வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Rouge Park பகுதியில் விபத்து சம்பவம்

Posted: 14 Aug 2016 08:44 AM PDT

o

oRouge Park இல் இன்று அதிகாலை இடம்பெற்ற மோசமான விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் Steeles Avenue மற்றம் Reesor வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவசர மருத்துவப் பிரிவினர், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், இருவர் சிறிய காயங்களுக்கு ஆளான நிலையில் அண்மையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை காவல்த்துறையினர் இன்னமும் வெளியிடவில்லை.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

The post Rouge Park பகுதியில் விபத்து சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

டாக்காவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொரன்ரோ மாணவன்

Posted: 14 Aug 2016 08:39 AM PDT

jh

jhவங்காளதேச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ரொரன்ரோ பல்கலைக்கழக மாணவன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வங்காள தேசத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றின் தொடர்பிலேயே குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தடுத்து வைப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை ஆறு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியினை வங்காள தேச அதிகாரிகள் டாக்கா நீதிமன்றில் நேற்றைய நாள் கோரிய போது நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டாக்காவில் கடந்த மாதம் முதலாம் திகதி உணவகம் ஒன்றினுள் நுளைந்த ஆயுததாரிகள் அங்கிருந்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததுடன், அவர்களில் பலரைச் சுட்டுக்கொண்றிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் டாக்கா காவல்த்துறையினரால் மேற்கொள்ள்பபட்ட நடவடிக்கையை அடுத்த குறித்த துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பணயக்கைதிகள் மீட்கப்பட்டிருந்தனர்.jh
எனினும் இந்த சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ரொரன்ரோ பல்கலைகழகத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் அந்த மாணவன் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படவில்லை.

22 வயதான தஹ்மிட் ஹாசிப் கான் எனப்படும் குறித்த அந்த மாணவன் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர் என்பதுடன், ரொரன்ரோ பல்கலைக்கழத்தில் உலகளாவிய சுகாதரத் துறை தொடர்பிலான கற்கை நெறியில் பயின்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக டாக்கா சென்றிருந்த அவர், வேறெந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் அவரின் உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்து வருகின்றனர்.

The post டாக்காவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொரன்ரோ மாணவன் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™